Monday, November 06, 2006

ஆதலினால் காதல் செய்தேன்.. பாகம் 3

பாகம்1 பாகம்2
புரண்டு புரண்டு படுத்தேன்...தூக்கம் என்பது சிறிதும் இல்லை...ஏதேதோ எண்ணங்கள் வந்து அலைகழித்தன...

இந்த காதலை என்னவென்று சொல்வது....இதில் விழுந்துவிட்டால் உலகம் உறைந்துவிடுகிறதே...

எப்படா விடியும் என்று இருந்தது......அறை நன்பர்களை படுத்தி எடுத்துவிட்டேன்....

மூன்று வாரம் முன்பு வந்த குமுதம் வார இதழை பத்தாவது முறையாக படிக்க ஆரம்பித்தேன்...லைட்டை நிறுத்தி தொலைடா சனியனே... - இது கார்த்தி....டேய்....எங்க இருந்துடா வந்து தொலைஞ்ச நீ - இது கோயிந்து... டேய்...ஒவர் சீன் உடம்பு தாங்காதுடா - போதும்...இத்தோட நிறுத்திக்க...இது மணிவண்ணன்....

உன் டார்ச்சருக்கு அளவே இல்லையாடா என்று இளமாறன் கடைசியாக அலறும் போது மணி காலை 4:00 - நான் காலை தூக்கி இளமாறன் மீது போட்டதோடு நிறுத்தி இருக்கவேண்டும்....சும்மா ஆட்டிக்கிட்டே இருந்தால்....

அறையைவிட்டு வெளியே வந்தேன்...இரவு ஆரம்பமாகும்போது ஒரு பாக்கெட் ஆக இருந்த சிகரெட்டுகள் - தீர்ந்து ஒன்றாக மாறும்போது - ஒரு பாதி சிகரெட்டை அனைத்து வைத்திருந்தேன்...அதை எடுத்து - சிறிது நாற்றமெடுத்தது - பற்றவைத்தேன்...

என்னவளும் இப்படி கஷ்டப்படுவாளா...அவளுக்கு தூக்கம் வந்திருக்குமா...என்று மனதில் நினைத்தபோது....ஏன் அவள் வீட்டு பக்கம் போக கூடாது என்று தோன்றியது....

சட்டை அணியவேண்டும் என்று கூட தோன்றவில்லை - அப்படியே வெறும் உடம்போடு - கிளம்பினேன்...

தெரு நாய்கள் சன்னமாக குரைக்கும் ஓசை தொலைவில் கேட்டது...

ஊஊஊஊஊஊஊ - எங்கோ ஒரு சிறு நரி ஊளையிடும் சப்தம் வேறு...

இந்தமாதிரி விடிந்தும் விடியாத குளிர் இரவு நேரங்களில் - திருட்டு தொழில் செய்பவன் கூட வெளியே வரமாட்டான் என்று எண்ணமிட்டபடி....

அவளது வீட்டருகில் நான்....

இதயம் படக் படக் என்று அடித்துக்கொண்டது....இதயம் துடிக்கும் சத்தம் என் காதில் கேட்டது....

அவள் வீடு ரோடு ஓரத்தில் அமைந்திருந்தது...வாசல் இடது புறம்....முன்பாக சிறு முற்றம்...ஒரு தின்னை...அங்கே வாசலுக்கு முன்பாக ஒரு சிறிய ஸ்டோர் ரூம்...அதன் சன்னல் ரோட்டை பார்த்த மாதிரி இருந்தது....

நான் சென்றபோது ஒரு சிறு விளக்கு எரிந்துகொண்டிருந்தது அந்த சிறிய அறையில்.....

சன்னல் சிறிது திறந்த நிலையில் இருந்தது...ரோட்டின் ஓரத்தில் இருந்ததால் மெல்ல பார்வையை உள்ளே செலுத்தினேன்....

ஆ...இதென்ன...என்னவள் உள்ளே அமர்ந்திருக்கிறாள்...ஒரு சிறிய மேசை...அதன் எதிரே ஒரு சிறிய மர நாற்க்காலி...அதில் அமர்ந்து ஏதோ எழுதிக்கொண்டு இருக்கிறாள்...

மெதுவாக சன்னலை திறந்து பார்த்தேன்...

சீரியசாக சில வினாடிகள் சிந்திக்கிறாள்...பிறது இரண்டு வரி எழுதுகிறாள்...அப்படியே மேசைமீது சாய்ந்து இரண்டு நிமிட தூக்கம்...மீண்டும் எழுகிறாள்...இரட்டை சடையை முன்னால் தள்ளிவிட்டு மீண்டும் எழுதுகிறாள்...

எப்படியும் அந்த கடிதம் எனக்குதான் எழுதுகிறாள் என்று தெரியும்.....

திடீர் திருப்பமாக வாசல் கதவு திறக்கும் ஓசை...

க்ரீச்....

கீல் விட்டுப்போன பழைய கதவுகூட காதலுக்கு உதவி செய்யும்போல..பட்டென குனிந்துகொள்கிறேன்...காரணம் வாசலில் இருந்து பார்த்தால் நான் நிற்க்கும் இடம் தெருவிளக்கு ஒளியில் தெளிவாக தெரியும்...

திவ்யாவின் அப்பா....

என்னம்மா - புக்கை வச்சிட்டு தூங்க கூடாது...இன்னும் அங்கிட்டு என்ன செய்யுற.... ( திருச்சி பாஷை)

இந்தா வந்திடேன்ப்பா...அடுத்த வாரம் பரீட்சை...அதுதான்...

ஹி ஹி...அட...பரீட்சைக்கு நம்ம ஆளு எப்படி லட்டெர் எல்லாம் எழுதி அருமையா பிரிப்பேர் செய்யுறா என்று மனதுக்குள் சிரித்தபடி....

சுவர் ஓரமாக - நிழலில் நடந்து வீடு வந்து சேர்கிறேன்...

எனக்கு தெரியாது அப்போது...என்னவள் உயிரை உருக்கி எழுதிய கடிதங்கள் எல்லாம் தீயின் கொடு நாக்குக்கு இரையாகப்போகிறது என்று...

----காதல் பயணம் தொடரும் ----

19 comments:

Anonymous said...

எல்லா உண்மைகளும் வெளியே வருமா, எப்படி வசதி சார் ?

ரவி said...

நன்பா, நீ பேசாம இந்த கதையை படிக்காமே இருக்கறது நல்லது..நான் அங்க அங்க புனித பிம்பமாட்டம் ஏதாவது ரீல் உடுவேன்..அதெல்லாம் வந்து நீ கவுத்திரகூடாது பாரு ?

Anonymous said...

is this your story ?

ரவி said...

அனானி, நீங்களே ஸ்டோரின்னு சொல்லிட்டீங்க ? கதைதான்...

Anonymous said...

//அனானி, நீங்களே ஸ்டோரின்னு சொல்லிட்டீங்க ? கதைதான்...///

இதுக்கு பெயர்தான் "கதை விடுவது"

:))))))))

Santhosh said...

நல்லா இருக்கு ரவி. அடுத்த பாகம் எப்பொழுது போடப்போறீங்க.

ரவி said...

///இதுக்கு பெயர்தான் "கதை விடுவது"///

ஆரம்பிச்சிட்டீங்களா ?

Boston Bala said...

சூடாக செல்கிறதே... சீக்கிரம் தொடருங்க ப்ளீஸ்

ரவி said...

வாங்க பாலா...நீங்களே நல்லாருக்குன்னு சொல்லிட்டீங்கள்ள....இந்த பயலுக ஒத்துக்கமாட்டாங்க பாருங்க...!!!

கருத்துக்கு நன்றி !!!

மங்கை said...

ஆஹா ரவி இப்ப தான் பார்த்தேன்...

அடுத்த பதுவ நானே போட்றவா..

:-)))) நடத்துங்க... நடத்துங்க

ரவி said...

வாங்க மங்கை...வருகைக்கு நன்றி...மேற்க்கொண்டு படிச்சு கருத்து சொல்லுங்க...!!!

ஷைலஜா said...

ரவி! செயற்கைப்பூச்செல்லாம் இல்லாத இயற்கையான நடையில் எழுதறது, சிலருக்குதான் வரும் உங்களுக்கு வருகிறது. தொடர்ந்து படிக்க ஆவலும் ஏற்படுகிறது.மொத்தமும் படிச்சி பெரிய்ய மடல் போடப்போறேன்!
ஷைலஜா

ஷைலஜா said...

ரவி! செயற்கைப்பூச்செல்லாம் இல்லாத இயற்கையான நடையில் எழுதறது, சிலருக்குதான் வரும் உங்களுக்கு வருகிறது. தொடர்ந்து படிக்க ஆவலும் ஏற்படுகிறது.மொத்தமும் படிச்சி பெரிய்ய மடல் போடப்போறேன்!
ஷைலஜா

ரவி said...

நன்றி ஷைலஜா !!!

PKS said...

// உன் டார்ச்சருக்கு அளவே இல்லையாடா என்று இளமாறன் கடைசியாக அலறும் போது மணி காலை 4:00 - நான் காலை தூக்கி இளமாறன் மீது போட்டதோடு நிறுத்தி இருக்கவேண்டும்....சும்மா ஆட்டிக்கிட்டே இருந்தால்....//

You have a natural sense of humor. Keep it up.

ரவி said...

நன்றி பி.கே.எஸ்.

Dr.Srishiv said...

செந்தழலுக்கு வணக்கம்,
அருமையான ஓட்டத்துடன் நடையுடன் செல்கின்றது இம்சையின் காதல் ;), முடிந்தால் நம்ம காதல்வலை ஒரு நடை பாருங்க எப்படி போயிருக்குன்னு, :), பதிவிற்கு வருகை தந்தமைக்கு நன்றி, இன்னும் தொடருங்கள் படிக்கக்காத்திருக்கின்றேன்..
ஸ்ரீஷிவ்...:)

senthil.c.kumaran@gmail.com (செந்தில் குமரன்) said...

நகைச்சுவை உணர்வுகள் எல்லாம் நல்லாவே வெளிப்படுது எழுத்துல கடைசியா ஒரு சஸ்பென்ஸ் வேற என்ன மாதிரி போகப் போகுதுன்னு தெரியுது. எப்படி கொண்டு போகப் போறீங்கன்னு தான் பார்க்கணும்.

ரவி said...

Arumayaa Irukku da