Monday, July 27, 2009

வெற்றிக்கான இரண்டு மந்திரங்கள்...!!!!!!!!!!!!

ஓம். ரீம். ஐஸ் க்ரீம். !! இதுதான் அந்த இரண்டு மந்திரங்கள்.

இதனை தினமும் இரவு பதினோரு மணியில் இருந்து பண்ணிரண்டு மணிவரை இடைவிடாமல் ஜெபித்துவந்தால் வாழ்க்கை வளம்பெறும். இளமை திரும்பும். நீண்ட ஆயுள் கிடைக்கும்..!!!

என்ன நக்கலா !! அப்படீங்கறீங்களா ? அடப்போங்க சார்...!!! எத்தனை பதிவு எழுதினாலும் நாடு திருந்தமாட்டேங்குதே ? பாலியல் வன்முறை நடக்குது...கத்தரிக்காய் கிலோ இருவது ரூபாய் விக்குது. பஸ்ல நடத்துனர் டிக்கெட் சில்லறை தராம ஏமாத்துறார்...!!!

சரி நம்ம உண்மையிலேயே மேட்டருக்கு போவோம்..அங்க சுத்தி இங்க சுத்தி வந்துட்டாண்டா மேட்டருக்கு..!!! என்று டென்ஷன் ஆகவேண்டாம்...இந்தாருங்கள் மூன்று மந்திரங்கள்..!!

1. Take it Easy... !!!
2. One At a Time... !!!


தமிழ் பதிவில் ஆங்கிலத்தில் ஏன் மந்திரம் என்று குழம்பவேண்டாம். சோ எங் பக் என்ற என்னுடைய சவுத் கொரிய ரசிகைக்காக ஆங்கிலத்தில் எழுதியிருக்கிறேன்..!!!

முதல் மந்திரத்தை பார்ப்போம்..!!

Take It Easy !!



அடிக்கடி இதை சொல்லுங்கள்...நன்பரிடத்தில்...பணியிடத்தில்...

கடுமையான பணிச்சூழல் அதிகரித்து, மண்டை காய்ந்துகொண்டிருக்கும்போதுகூட.....உங்களுக்கு நீங்களே கூட சொல்லிக்கொள்ளலாம்..!! டேக் இட் ஈஸி...எவ்ளோ ஈஸியான மந்திரம் பாருங்க...

எப்போதெல்லாம் எதாவது ப்ரச்சனை உங்களை சூழ்கிறதோ, அப்போது எதிரில் இருப்பவரிடமும் சொல்லலாம்..மனைவியிடம் கூட அடிக்கடி சொல்லலாம்...உங்கள் பிள்ளையிடம் சொல்லலாம்..

இடுக்கண் வருங்கால் நகுக, என்று அய்யன் திருவள்ளுவர் சொன்னதும் இதுவும் கிட்டத்தட்ட ஒன்று. இப்போதெல்லாம் இடுக்கண் வந்தால் நகுத்தீர்கள் என்றால் சென்னையென்றால் கீழ்ப்பாக்கம், பெங்களூரென்றால் நிம்ஹான்ஸ். நகுத்தல் என்றால் கன்னட மொழியிலும் சிரித்தல். தெரியுமா ?

பிரச்சினைகள் உங்களை சூழும்போது மனதுக்குள் இதனை சொல்லுங்கள். டேக் இட் ஈஸி. எல்லாவற்றையும் சமாளிக்க முடியும் நம்மால். நமக்கு அதற்கான தகுதியும் திறமையும் இருக்கிறது. டேக் இட் ஈஸி. டேக் இட் ஈஸி. எளிதாக எடுத்துக்கொள்வேன். கோபப்படமாட்டேன். வெற்றியாளன் நான். டேக் இட் ஈஸி...

எங்கே ஒருமுறை சொல்லுங்கள்...டேக் இட் ஈஸி...!!!

One At a Time !!



முதலில் பல பிரச்சினைகளைக்கு காரணம், நாம் பல விஷயங்களை இழுத்துப்போட்டுக்கொண்டு, எல்லாவறையும் ஒரே நேரத்தில் செய்துமுடிக்கவேண்டும் என்று கொலைவெறியோடு அலைவது..ஒரு சிலர், இது போன்று பல செயல்களை, பணிகளை ஒரே நேரத்தில் செய்யும் அசகாய திறமையை வளர்த்துக்கொண்டு கலக்குவார்கள். ஆனால் அந்த திறமை குறைவாக கொண்டிருப்பவர்கள், அதையும் செய்யமுடியாமல், இதையும் செய்யமுடியாமல், குடும்ப வாழ்க்கையிலும் மொக்கை, பணியிலும் டொங்கு, பிஸினஸிலும் ஊற்றல் என்று மண்டையை பிய்த்துகொண்டு அலைவார்கள்...!!!

ஒரு வேலையை செய்துகொண்டிருக்கும்போது, அய்யோ, இன்னொரு வேலை இருக்கிறதே, அதை செய்யவில்லையே என்று டென்ஷன் ஆவது...

ப்ரயாரட்டைஸ் செய்யுங்க...மனைவிக்கு ஒரு காபி தந்துவிட்டு, அப்புறம் வாஷிங் மெஷினில் துணி போடுங்க. காபி பாத்திரத்தை அடுப்பில் வைத்துவிட்டு வாஷிங் மெஷினுக்கு போனால் காபி கொதித்து கீழே கொட்டும். இந்த நேரத்தில் ஒரு தொலைபேசி அழைப்பு வந்தால் இன்னும் டென்ஷன் ஆகும்...தொலைபேசி அழைப்புக்கு பதில் சொல்லிக்கொண்டே காபி பாத்திரத்தை எடுக்க போனீர்கள் என்றால் குழந்தை திடீரென அழும். பாத்ரூமில் லைட் எரிந்து கரண்ட் வேஸ்ட் ஆகும். யாராவது அந்த நேரத்தில் வீட்டு பெல் அடித்தால் டோட்டல் டேமேஜ். இது ஒரு உதாரணம். அடியேனின் சொந்த வாழ்க்கையை இதில் கோர்த்து பார்த்து குஜால் ஆகவேண்டாம்...

எது முதலில். எதற்கு ப்ரயாரிட்டி. அதை சரியாக கணித்து செயல்படுவதில் உங்களுக்கு வெற்றி...வாஷிங் மெஷின். தொலைபேசி அழைப்பு. அப்புறம் பார்க்கலாம். அழும் குழந்தையை எடுங்கள். கேஸ் ஸ்டவ்வை நிறுத்துங்கள். கதவை திறந்து பதில் சொல்லுங்கள். குழந்தையோடு காபியை மனைவிக்கு கொடுத்துவிட்டு, வாஷிங் மெஷின் போங்கள். இது எவ்வளவு எளிமையாக இருக்கிறது ?

எங்கே மீண்டும் ஒரு முறை சொல்லுங்கள் ஓன் அட் எ டைம்...!!!

இதை கடைபிடித்தால் ஒரு மண்டலம் அதாவது 48 நாளில் கிடைக்காத வெளிநாட்டு பயண ஆசை பூர்த்தியாகும், தடைப்பட்டிருந்த செவ்வாய் தோஷ திருமணம் நடைபெறும், வெகுநாட்களாக வீட்டில் இருக்கும் மகனுக்கு வேலை கிடைக்கும்...!!!


மூன்றாவது மந்திரம் கூட ஒன்று உண்டு. அது எனக்கு பின்னூட்டம் அளித்தாலோ அல்லது ஓட்டு போட்டாலோ சொல்லப்படும்..!!!

Saturday, July 25, 2009

மனைவியின் எடை குறைய எளிய வழிகள்

இன்று வலைமேயும்போது ஈழநேசன் என்ற தளத்தில் எடை குறைய எளிய வழிகள் என்ற கட்டுரையை பார்த்தேன்...!!!



உங்களுடன் பகிர்ந்துகொள்ளவே இந்த லிங்கு...!!!

ஆமாம் பின்ன...மனைவியிடம் நேரடியாக இதை பகிர்ந்துகொண்டு எவன் உருட்டுகட்டை அடிவாங்குறது ? அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் !!!!!!!!

அப்படி தப்பித்தவறி பகிர்ந்துகொண்டு உடல் நலம் குன்றியவர்கள் தொடர்புகொள்ள வேண்டிய முகவரி : டாக்டர் புருனோ. சென்னை.

Friday, July 24, 2009

பவா செல்லத்துரை - யோகி ராம் சுரத்குமார் . கிழிந்து தொங்கும் பாலகுமாரன்



இன்றைக்கு காலவெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்டுவிட்ட, தான் தமிழ் இலக்கியத்தின் மிகப்பெரிய ஆளுமை என்று தன்னைத்தானே தற்பெருமைச்சேற்றில் மூழ்கடித்துக்கொண்ட பாலகுமாரனை பற்றிய பதிவு இது...


சிலசமயம் சில எழுத்துக்கள் என்னை ஆச்சர்யம், கோபம், அதிர்ச்சி என்று கலவையான உணர்வுகளை நோக்கி சுனாமிபோல இழுத்துக்கொண்டு சென்றுவிடும்...

அப்படிப்பட்ட பதிவு இந்த பதிவு..எனக்கென்னமோ இரண்டாம் பாகமான இதனை படித்துவிட்டு, முதல் பாகத்தை படிக்கலாம்போல உள்ளது...



பதிவை போட்டவுடனே...டேய் இவரை கூடவா இதுவரை நீ வாசிக்கவில்லை என்று யாராவது பின்னூட்டமிடும் அபாயத்தினூடே பயணித்தே இந்த சிறு அறிமுகத்தை (அட..எனக்கு நானே) எழுதிக்கொள்கிறேன்...!!!!

Tuesday, July 21, 2009

வரவனையான் ஊட்டிவிடும் பிரபலம் யார் ?



போட்டோ கமெண்ட் : முஸ்தப்பா முஸ்தப்பா.....!!!!

இப்போ...!!!

வரவணையான் ஊட்டிவிடும் பிரபலம் யார் ? பின்னூட்டத்தில் சொல்லவும்...இந்த பதிவுக்கு பின்னூட்டம் மறைக்கப்படும். சரியான பதில் சொல்பவருக்கு தகுந்த பரிசு வழங்கப்படும்.

க்ளூ : அதெல்லாம் ஒன்னும் கொடுக்க முடியாது...!!

அன்புள்ள நர்சிம்...

கொஞ்ச நாளைக்கு முன்னாலயே உங்களுக்கு இந்த லெட்டர் எழுதனும்னு நெனைச்சேன்...ஆனா இப்ப தான் நேரம் கிடைச்சது...

வலையுலகில் எனக்கு பிடிச்ச எழுத்தாளர்கள் அப்படீன்னு எடுத்துக்கிட்டா....தேசிகன், லக்கி, அடுத்தபடியா நீங்கதான்...

குழப்பமா எழுதுனா தான் அது எழுத்து, மீதி எல்லாம் ஊறுன உளுந்து அப்படீன்னு நினைக்கிற இந்த காலத்துல, தெளிவான நடையில, என்னை மாதிரி தற்குறிக்கும் புரியற மாதிரி நீங்க எழுதுறது தான் உங்களை ரொம்ப பிடிச்சதுக்கு காரணம்...



ஆமாம்...ஏதோ கேள்விப்பட்டேன்...உங்க பேருல எவனோ பின்னூட்டம் போட்டு உங்க பேரை 'கெடுத்துட்டான்' அப்படீன்னு திரட்டிகள்ல இனிமே இணைக்கமாட்டேன் அப்படீன்னு சொல்லிட்டீங்களாமே ?

ஏம்பா...

யாரோ செய்த அந்த செயல் எப்படி உங்களை, உங்கள் எழுத்தை, உங்கள் முடிவுகளை மாற்றலாம் ?

எழுத்துலகில் மட்டுமா, அல்லது இப்படித்தான் நிஜ வாழ்க்கையிலும் இருக்கீங்களா ?

பார் எக்ஸாம்பிள்...

நீங்க 100 பேர் வேலை செய்யுற ஒரு கம்பெனியில மேனேஜரா இருக்கீங்க...நல்லா வேலை செய்யற ஒருத்தருக்கு பதவி உயர்வு தர்றீங்க...

ஆனா அது புடிக்காத பொறாமை புடிச்ச பயபுள்ளைக ரெண்டு பேர், உங்க காதுல விழற மாதிரி, பாருடா...அந்த பயல் ஆயில் அடிச்சதால அவனுக்கு மட்டும் பதவி உயர்வு என்று பேசுறாங்க...

இப்ப நீங்க என்ன செய்வீங்க...

1. அவங்களை உடனே கண்டிப்பீங்க...அவங்களோட எண்ணம் தவறுன்னு புரியவைப்பீங்க..
2. அய்யோ அப்படி பேசுறானுங்களே...அப்படீன்னு அந்த நல்லா வேலை செய்யற, நியாயமா பதவி உயர்வு கிடைக்கவேண்டிய நபரோட பதவி உயர்வை பறிச்சுடறீங்க...
3. இப்படி பேசிட்டாங்களே...கவரிமான் பரம்பரையாச்சே நான்..என்று வேலையை விட்டு நின்னுடறீங்க..

தல..மேனேஜ்மெண்ட் ராஜாவான நீங்க இதுல முதல் ஆப்ஷனை தானே நீங்க எடுப்பீங்க...

அதே நேரம் உங்களை பற்றி தெரிந்த, அதே அலுவலகத்தில் வேலை பார்க்கும் மற்றவர்கள், இந்த புறணியை கண்டுக்கிடுவாங்கன்னு நினைச்சீங்களா...அப்கோர்ஸ் நாட்...அவங்களுக்கு உங்களை நல்லா தெரியுமாதலால், இதனை புறந்தள்ளிடுவாங்கதானே ?

கார்க்கி தளத்தில், பரிசல் தளத்தில், உங்களை படிக்க லிங்க் தந்திருக்காங்க...எனக்கும் அப்படி லிங்க் தர தெரியும், அல்லது narsim.in அப்படீன்னு நேரடியா உங்க தளத்தின் முகவரியை போட்டு உங்க தளத்துக்கு வரவும் தெரியும்...

சாருவும், ஜெயமோகனும் என்ன திரட்டிகள்ல இணைச்சு வெச்சா எழுதறாங்க ? அவங்க வாசகர்கள் அவர்களை நேரடியா போய் படிக்கலையா ? அது மாதிரி உங்களை படிக்க தெரியும் தல எனக்கு...இருந்தாலும், திரட்டிகள் மூலமாத்தான் நீங்க அறிமுகம். அந்த திரட்டியை விட்டு போறேன் என்று நீங்கள் சொன்னதும் இந்த மடலை எழுத தோனுச்சு எனக்கு...

தமிழ் கூறும் நல்லுலகம் இருக்கும் வரை, புறணி பேசுதலும், பொறாமையும், அடுத்துக்கெடுத்தலும் இருந்துக்கிட்டே தான் இருக்கும் நர்சிம். இதனை புறந்தள்ளி தொடர்ந்து நடைபோடுறதில் தானே உங்கள் நெஞ்சுரம் வெளிச்சமாகும் ?

வெகுஜன இதழ்களில் உங்கள் படைப்புகள் வரும்போதே தெரியலையா, உங்களால் ரசனையாக எழுத முடியுது என்று ? யாரோ எவரோ செய்யும் சிறிய அவதூறுகளை புறந்தள்ளி, மீண்டும் திரட்டிகளில் நீங்கள் நடைபோடுவதை காண ஆவலாயிருக்கும் நன்பனின் மடல்...!!!

Monday, July 20, 2009

யூ.ஏ.இ தமிழ்ச்சங்கத்தின் அறிவிப்பு !!!



இது நன்பர் ரமேஷ் அவர்களின் மின் அஞ்சலோட சிக்னேச்சருங்க...இவருக்கு எதையாவது இழுத்துப்போட்டுக்கிட்டு செய்யலைன்னா தூக்கம் வராது. எதையாவது யாருக்காவது செய்துக்கிட்டே இருக்கனும், நம்மால நாலு பேருக்காவது பயன் கிடைக்கனும் என்று எப்போதும் நினைப்பவர்..

அவர் இணைந்திருக்கும் யூ.ஏ.இ தமிழ்ச்சங்கத்தோட இணைய தளத்தை பற்றி வலையுலகில் அறிமுகப்படுத்தறது தான் இந்த பதிவின் நோக்கம்...!!!

யூ.ஏ.இ தமிழ்சங்கத்தின் இணையதளத்தின் சுட்டி http://www.uaetamilsangam.com/

யூ ஏ இ வேலைவாய்ப்புகள் http://www.uaetamilsangam.com/jobsinuaeweb.asp
குழந்தைகளுக்கான பக்கம் http://www.uaetamilsangam.com/utschilddict.asp
திருமண தகவல் மையம் : http://www.uaetamilsangam.com/utsmembersarea.asp

இவங்க ஆன்லைன் ஆக்டிவிட்டீஸ் சிலது

1) ஆன்லைன் க்விஸ் , மாசம் ரெண்டு பேருக்கு பரிசு
2) லைபரரி புக்ஸ்
3) தமிழ் படங்களுக்கான லைபரரி
4) தங்கம் விலை பற்றி தகவல்
5) தமிழக செய்திகள்

ரமேஷை தொடர்புகொள்ள ramesh@uaetamilsangam.com

இம்சையை கூட்டுபவைகளை அண் இன்ஸ்ட்டால் செய்ய..

சில ப்ரொக்ராம்கள் நிரந்தரமாக நமது கணினியில் உட்கார்ந்து மொக்கை போட்டுக்கொண்டிருக்கும். அண் இன்ஸ்ட்டால் செய்ய போனாலோ முடியவே முடியாது.

ஒரு கட்டத்தில் வெறுத்துப்போய், நீ உன் வேலையை பார்த்துக்கிட்டுரு, நான் என் வேலையை பார்த்துக்கறேன் என்று விட்டுவிடுவீர்கள்..

அதுவும் உங்கள் கணிணியிலேயே தங்கிவிடும்...

அது ச்சும்மா இருந்தா பரவாயில்லை. வைரஸாக இருந்து தொலைந்தால் ? அவ்வப்போது கணிணி ரீபூட் ஆவது, ஆமையை விட மெதுவாக நகருவது, வாடிப்பட்டியில் இருப்பவருக்கு இமெயில் அனுப்பினால் பஸ்ஸ்டாண்டு வரைக்கும் கூட போகாமல் திரும்பி வந்துவிடுவது என்று ஆயிரத்தெட்டு தொல்லை கொடுக்கும்...

இதுக்கெல்லாம் சூனியம் வைப்பதுபோல நம்ம பில்பூனைகள் அய்யா (பில்கேட்ஸ்ங்க) ஒரு தீர்வை தந்துள்ளார்...



http://support.microsoft.com/default.aspx?scid=kb;[LN];290301

மேற்கானும் இந்த சுட்டியில் இருந்து தரவிறக்கம் செய்யும் இலவச மென்பொருளை உங்கள் கணினியில் நிறுவி, அதனை திறந்து, தேவை இல்லாத ஐட்டங்களை எல்லாம் டெட்டால், ப்ராஸோ ஊற்றி கழுவி, உங்க கணினியை பளபளப்பாக மாற்றவும்...

உங்கள் நீண்டகால தொல்லைகளை க்ளிக் செய்து, ரிமூவ் என்ற பட்டனை மட்டும் அமுக்கவும். க்ளியர் ஆல் என்ற பட்டனை அமுக்கினால் எல்லாமே பூடும். ஜாக்கிரதை...!!!!

Thursday, July 16, 2009

கூகிளையே கலாய்த்த பிரபல பதிவர் சக்திவேல்



பிரபல வறுவல்..மன்னிக்க..பதிவர் சக்திவேல் குறித்து அனைவரும் அறிவோம். இப்போதெல்லாம் எந்த திரட்டியை திறந்தாலும் அந்த திரட்டியில் முதன்மையான பதிவராக முன்னனியில் நிற்கும் திரு சக்திபேல் இன்றைக்கு கூகிள் நிறுவனத்தை நோக்கி தன்னுடைய அறச்சீற்றமானதொரு கேள்விக்கணையை தொடுத்துள்ளார்.

இதுக்கு மேல புண்ணூட்டத்தில் மட்டுமே பேசப்படும். வயிறு குலுங்கவைக்கும் ஒரு புண்ணூட்டத்துக்கு சிறப்பு பரிசு வழங்கப்படும்...

Monday, July 13, 2009

சுவாரஸ்ய வலைப்பதிவு விருது...!!!

சண்டை எல்லாம் கொஞ்சம் ஓய்ந்தமாதிரி இருக்குல்ல...

சுவாரஸ்ய விருதுகள் பற்றி தெரியுமா உங்களுக்கு ?

இது ஒரு தொடர் விருது வழங்கும் விழா...

நான் நல்ல வலைப்பதிவு எழுத்தாளர் என்று கருதும் ஆறு பேருக்கு கொடுக்கபோறேன்..

நீங்க ஆறு பேருக்கு கொடுக்கலாம்...விருதை வலைப்பதிவில் போட்டுக்கலாம்...

கடைசியா எனக்கும் இதே விருது உங்கள் யார் கையாலயாவது கெடைக்கும் என்ற நம்பிக்கையில்..

இந்தாங்க...!!

எவ்ளோ அழகா எழுதறார். கூகிள் விளம்பரங்களை பற்றி இவர் எளிமையா போட்ட ரெண்டு பதிவே போதும்...இவரை பற்றி சொல்ல..தமிழில் தொழில்நுட்பம் இவருடைய நெஞ்சத்தில் இருந்து இன்னும் இன்னும் வரவேண்டும்...
பயபுள்ள பெட்னாவை கவர் செய்த விதம் என்ன, அங்கே நடந்த நிகழ்வை கொச்சைப்படுத்த ஒரு பத்திரிக்கையாளை நோக்கி அறச்சீற்றம் கொண்டதென்ன, ஆஹா. எழிலாய் பழமைபேசும் இவருக்கு கண்டிப்பாக ஒரு விருது...
பொதுவாக எழுத்தில் அரிதாக கைவருவது நகைச்சுவை உணர்ச்சி. அது குடுகுடுப்பையாரிடம் இயல்பாகவே வந்து அமர்ந்துவிட்டது. மொக்கையான மாலைப்பொழுதுகளில் குடுகுடுப்பையாரின் பக்கங்களை புரட்டிக்கொண்டிருந்தால் வெடிச்சிரிப்பு க்யாரண்டி. இந்தாய்யா விருது...
அமித்து குட்டிப்பொண்ணோட லூட்டிகளும், அவர்களோட அனுபவங்களும், நாமே அமித்து குட்டி கூட விளையாடுவதை போன்று தோன்றும்...வாழ்க்கையை அமித்து பாப்பாவின் ஊடாக கற்று, விளையாடி, வாழ்ந்துவரும் அவர்களுக்கு இந்தாங்க விருது...
ஜாலியாக பொழுதுபோகும் இன்னொரு வலைப்பக்கம் இது. இந்த ஆளும் காமெடியில் பின்னுவான். சடை இல்லை. காமெடி. சில சமயம் ஸ்பெல்லிங் மிஸ்டேக் கூட நம்மை சிரிக்கவைக்கும்...இந்தா புடி விருது...
ஒருமுறை சந்தித்தபோது சொன்னார். ஒரு அம்பது பதிவு ரெடி பண்ணிட்டு அப்புறம் ஒவ்வொன்னா போட்டு எப்படி கலக்கறேன் பாரு, என்று. சகோதரி பட்டாம்பூச்சி, இன்னும் 50 பதிவை தொடவில்லை என்றாலும், ஒபாமா பதிவு, 32 கேள்விபதில் என்று தொடர்ந்து எழுதுகிறார். அவரை உற்சாகப்படுத்தும் விதமாக இந்த விருது...!!!
இந்த படத்தை ரைட் க்ளிக் செய்து, காப்பி செய்து உங்கள் வலைப்பதிவில் போட்டுக்கோங்க. நீங்க சுவாரஸ்யமானவராக கருதும் வலைப்பதிவரை அறிமுகம் செய்யுங்க...அவர்களை உற்சாகப்படுத்த இது ஒரு நல்ல டானிக்.






விருது பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்...!!!




அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்......!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!



எப்படி இருந்த நான்...
(போஸ் :கல்கி விஜயகுமார்...)















இப்படி
ஆய்ட்டேன்...
(போஸ் : மம்மி பகவான்...)



அம்மா பகவான் படத்துல தேன் வழியுதாம்...!!! அட பதர்களே ? படத்தில் எப்படிடா தேன் வழியும் ? எல்லாம் இந்த அல்லேலூயா கும்பல் கத்துக்கொடுத்தது...

இயேசு சிலையில் இருந்து கண்ணீர் வழியுதுன்னு சொன்ன வெளிநாட்டு சரக்கை, உள்நாட்டு டாஸ்மாக்ல கொண்டுவந்துட்டது எதோ ஒரு வீணாப்போனது....

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்..................




..............................



பொன்னர் சங்கர் படத்தில் பிரசாந்த் இரட்டை வேடத்தில், பொன்னராகவும், சங்கராகவும் நடிக்கிறார்.

கிரகலட்சுமியிடம் இருந்து தப்பிச்ச உனக்கு இப்படி ஒரு கெரகமா ?

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்............

..............................

விடுதலை சிறுத்தைகள் ஆயுதம் ஏந்தா விடுதலை புலிகள்...!!! திருமா...





















வடிவேலு : இன்னுமா நம்மள இந்த ஊரு நம்புது ?
பூச்சுபாண்டி : அது அவனுங்களோட தல விதி...

Friday, July 10, 2009

இளையராஜாவும் நானும்...!!!





..

..

..

..

..

நீயொரு காதல் சங்கீதம்னும் அடிச்சு ஆடின நீ கலைஞன். !!!...உன்னுடைய சில பாடல்களுக்கு பத்து பதினைஞ்சு விருதுகள் தரலாம். நாலு வரி எழுதத்தெரியலைன்னாலும் நாலு பேரை எரிச்சலைடையாமல் எழுதுவதே எனக்கு விருது...

Thursday, July 09, 2009

மெகா சீரியலுக்கு கதை எழுதுவது எப்படி ?



ஒரு படத்தில் மெகா சீரியலுக்கு மட்டும் தான் கதை எழுதுவான் இந்த மகாதேவன் என்று விவேக் துடிக்க, பான் பராக் போட்ட சேட்ஜி ஒருத்தர், 'பொம்ளே மன்ஸ புரிஞ்சு எல்தனும்' என்று அட்வான்ஸ் கொடுத்துவிட்டு போக, அதில் பல லேடீஸ் கையில் அடிவாங்கி காமெடி செய்வார் விவேக்.

மெகா சீரியலுக்கு கதை எழுதுவது என்பது அவ்வளவு கடினம் இல்லை, எல்லோரும் எழுதலாம், என்பதை இந்த பதிவின் மூலம் உப்பு புளி ப்ராஸோ போட்டு பளபளவென விளக்குகிறேன்..

முதலில் புதிய சீரியல் தயாரிப்பாளர்கள், டைரக்டர்களுக்கு கொஞ்சம் அட்வைஸ் மழை பொழிந்துவிட்டு, அதன் பின் கடைசியாக கதை பற்றி பார்க்கலாம்...



முதலில் உங்களுக்கு தேவை கதை என்று சீரியசாக எதிர்பார்க்கவேண்டாம். மார்க்கெட் இழந்த, மார்க்கட்டு இழக்காத, ஒரு பழம் பெரும், பேரிளம், நடிகை. சினிமாவில் சூப்பர் ஸ்டார் ரஜினி கால்ஷீட் கிடைப்பது போன்றது இது...

அதன் பிறகு தேவை, பெரிய சேனலில் ஒரு ப்ரம் டைம் ஸ்லாட். அதாவது மக்கள் டிவி பார்க்க உட்காரும் நேரமான மாலை நேரத்திலோ, அல்லது லேடீஸ் வேலையை முடித்துவிட்டு டிவி முன் உட்காரும் மதிய நேரத்தையோ கணக்கிட்டு, அந்த நேரத்தில் உங்கள் சீரியல் வரும்படி லாபி செய்துவிட்டால் போதுமானது...

மிக மிக முக்கியமானது டி.ஆர்.பி ரேட்டிங். அந்த ரேட்டிங் போடும் கம்பேனிக்கு கொஞ்சம் அமவுண்டு தட்டிவிட்டு, உங்கள் சீரியலுக்கு நல்ல ரேட்டிங் வருமாறு காட்டிவிட்டீர்கள் என்றால் உங்கள் சீரியல் எப்போதும் டாப் டென்னில் இருக்குமாறு பார்த்துக்கொள்வார்கள். விளம்பரதாரர்களும் உங்களை மொய்ப்பார்கள்...

இதை எல்லாம் செய்து முடித்த தயாரிப்பாளரே இந்த கதை என்ற மேட்டரை கடைசீயாக தேடுவார்கள். இனிமேதான் உங்க வேலை ஆரம்பிக்குது. ஆனால் கொஞ்சம் புது சீரியல் டைரக்டர்களுக்கும் டிப்ஸ் தந்திட்டு வந்திடறேனே...




சினிமாவைப்போல அந்த ஹீரோவுக்கு அப்படி எழுதனும், இந்த ஹீரோவுக்கு இப்படி எழுதனும் என்றெல்லாம் யாரும் உங்களை ப்ரஷர் செய்யமாட்டார்கள். இன்னைய தேதிக்கு ஒரே சீரியல் ஆக்டர் பத்து நாடகத்தில் நடிக்கிறார். ஏழெட்டு டிவி சானல் இருப்பது யாருக்கு லாபமோ இல்லையோ, இவர்களுக்கு நல்ல லாபம்.

ஒரு சீரியலுக்கும் இன்னொரு சீரியலுக்கும் உடல் அமைப்பை பட்டினி கிடந்து மாற்றி, பாடி லாங்குவேஜ் மாற்றி மேக்கப் போட்டு எல்லாம் கஷ்டப்படவேண்டாம். ஒரு சீரியலில் வில்லனை, இன்னொரு சீரியலில் கதாநாயகனாக ஆக்கலாம்.

பெரிய வித்யாசம் காட்டவேண்டும் என்றால், ஒரு மூக்குக்கண்ணாடியை மாட்டிவிட்டுவிட்டீர்கள் என்றால் போதும். இல்லை ஒரு சீரியலில் டி ஷர்ட், இன்னொரு சீரியலில் புல் ஹாண்ட் ஷர்ட் போட்டால் கூட நம் வீட்டு லேடீஸ் அதை நுணுக்கமாக புரிந்துகொண்டு பார்ப்பார்கள்...

சீரியலில் வரும் மெயின் ஆக்டர் பத்து நாள் லீவு என்றால் கவலையே படவேண்டாம். துணை கேரக்டரில் நடிக்கும் நடிகர்களை இப்படி அப்படி பேசவைத்து, அவர் நடித்த பழைய காட்சிகளை தூக்கி, அவர் காரில் வந்து இறங்குவது மாதிரி, ஆட்டோவில் போவது மாதிரி காட்டிவிட்டீர்கள் என்றாலே போதும். அவரே நடிப்பது மாதிரி தோற்றப்பாடு வந்துவிடும்...

ஹீரோயினுக்கு தம்பி பொண்டாட்டியாக நடிக்கும் நடிகை, திடீர் திருமணமாகி பாரின் ட்ரிப் போய்விட்டால் கூட கவலையே வேண்டாம். இயல்பாக வேறு நடிகை ஒருவரை நடிக்கவைத்து, அவருக்கு ரெண்டு டயலாக் இப்படி அப்படி கொடுத்து விட்டீர்கள் என்றால் டாப் டக்கர். அதாவது நம்ம லேடீஸ்க்கு இது தெரிந்தாலும் கண்டுக்கிடமாட்டாங்க...

பொதுவாக, சீரியலில் வரும் அப்பா கேரக்டர்கள் மிக மொக்கையாக காட்டப்படவேண்டும். ஒன்று குடிகாரனாக, அல்லது ரவுடியாக, அல்லது மனைவியின் வார்த்தை எதிர்த்து ஒரு வார்த்தை பேசாத டங்கனாக இருத்தல் அவசியம். இது சைக்காலஜிக்கலாக லேடீசை கவர உதவும்..

நேரத்தை ஓட்டவேண்டும் என்றால் பெரிதாக கஷ்டப்படவேண்டியதில்லை. வாரத்தின் ஆரம்பத்தில் யாரையாவது காணாமல் போக வைங்க. அப்புறம் வியாழன் வரைக்கும் அவரை ஆட்டோவில், பஸ்ஸில், ட்ரை சைக்கிளில் தேடுவது போல காட்சிகளை அமைத்துவிட்டீர்கள் என்றா போதும்..

வெள்ளிக்கிழமை வாக்கில் தேடப்படும் நபர் இடதுபுறம் திரும்ப, தேடும் நபர் வலதுபுறம் திரும்ப, அப்படியே இயக்கம் இலுப்பைக்குடி இருட்டுவாயன் என்று டைட்டில் கார்ட் காட்டி சஸ்பென்ஸாக முடித்துவிட்டீர்கள் என்றால், பல் போன கிழவி கூட வெத்திலை பாக்கு குத்தி தின்றுகொண்டு மண்டே வரும் அடுத்த பாகத்துக்காக உயிரை கையில் பிடித்துக்கொண்டு காத்திருக்கும்..

டைட்டில் சாங் என்பது மிக மிக முக்கியமானது...சித்தீதீதீ என்று அழைத்தே மக்களை தன்வசப்படுத்திய சித்தியை மறந்துவிடவேண்டாம். அதுபோல லல்லாலா ஓ ஓ ஓ என்று ராகமாக முடியும்படி ஒரு டைட்டில் சாங்கை ஒரு டொங்கு இசையமைப்பாளரை பிடித்தாவது அமவுண்ட் தட்டி தயாரிப்பது மிக முக்கியம்...



டி.ஆர்.பி ரேட்டிங் குறைகிறது, மூன்று வருடமாக ஓட்டும் சீரியல் தொங்குகிறது என்றால் கவலையே இல்லை. மக்கள் வெகுவாக ரசித்த ஒரு சில கேரக்டர்களை, கொஞ்சம் உங்களோடு ராசியில்லாததால் சாவடித்து, அந்த கேரக்டரை முன்பே முடித்து வைத்திருந்திருப்பீர்களே, அவர்கள் மீண்டும் அழைத்து, அவர்கள் உயிராக வருவது போல காட்டினால் கண்டுகொள்ளமாட்டார்கள் மக்கள்.

அந்த கேரக்டரை ரசித்த கிழவி ப்ராணணை விட்டிருக்கலாம். அந்த கேரக்டரை ரசித்த லேடீஸ் கல்யாணமாகி பாரின் கிளம்பியிருக்கலாம். என்று பல லாம்கள், தொடர்ந்து ஒரு வருடத்துக்கு மேல் ஒரே சீரியலை பார்ப்பவர்கள் ரொம்ப கம்மி. அதனால் நீங்கள் என்ன ராவடி செய்தாலும் அதை கண்டுக்கிடமாட்டார்கள்...

உங்களுக்கும் அரிதாரம் புசுற ஆசையிருந்தா அதுக்கும் பிரச்சினையில்லை. சினிமா மாதிரி ஒரு சீன்ல வர்ர தொல்லை கூட இல்லை. நல்ல கேரக்டரா நீங்களே டிசைன் பண்ணி அதுல நீங்களே நடிக்கலாம்...பொதுவுடமை பேசலாம். புரச்சியாளரா நடிக்கலாம்...

டப்பிங் பேசறதுக்கு ரொம்ப கஷ்டப்பட தேவையில்லை...டப்பிங் த்யேட்டர்ல தொடர்ந்து டப்பிங் பேசுற லேடீஸ், யாருக்கு வேண்டுமானாலும் கொரல் உடுவாங்க. கையில காசு வாயில தோசை. கொரலை யாருமே கண்டுக்கிடமாட்டாங்க. நோ ப்ராப்ளம்ஸ்..

ஒரு பாப்பா படுக்கையில் மூச்சா போவதில் ஆரம்பித்து, அவள் கிழவியாகி கட்டையில் போகும்வரை நாடகத்தை நடத்திப்போகலாம். டி.ஆர்.பி ரேட்டிங்கும், சானலின் ஆசீர்வாதமும் மட்டும் இருந்தால் போதும். மே மாசம் முடிக்கிறேன் என்று பத்திரிக்கையில் பேட்டியில் சொன்னீங்களே என்று கிறுக்கு வலைப்பதிவு பத்திரிக்கையாளர் யாராவது குறுக்கு கேள்வி கேட்டால், எந்த வருஷம்னு சொன்னனா ? எந்த நூற்றாண்டுன்னு சொன்னனா ? என்று மடக்கிவிடலாம்...

கடைசியாக...கதை..

அதுக்கு ஒன்னும் பெரிசா அலட்டிக்காதீங்க சார்...

வீட்ல சண்டை சச்சரவு, உப்புமாவில் உப்பில்லை, மூன்றாவது தெருக்காரன் நாலாவது தெருவில் சின்ன வீடு வைத்திருக்கிறான், அந்த சின்னவூட்டுக்கு ரெண்டு புள்ளைங்க, கள்ளக்காதல், சொத்து தகராறு, தரும அடி, குடும்ப தகறாறு, ஒன் சைட் லவ், வெட்டிட்டு ஜெயிலுக்கு போறது, கல்யாணத்துல பிரச்சினை என்று எவ்ளோ தினத்தந்தி டெய்லி மேட்டர் உங்களுக்கு தெரியும் ? அதை எல்லாம் அப்படியே ஒரு லைன் இடைவெளி விட்டு ஒருலைன் எழுதுங்க சார். அது தான் கதை.

உண்மையான டிவி சீரியல் கதை ரைட்டர்கள் கோச்சுக்கமாட்டாங்கன்ற நம்பிக்கைல மொக்கைய போட்டுட்டேன். நீங்க ஓட்ட போடுங்க சார்...

Wednesday, July 08, 2009

ஒளிவட்டம் சுமக்கும் வலைப்பதிவர்கள்



சமீபத்தில் ஒளிவட்டம் சுமக்கும் அரசு ஊழியர்கள் என்ற பதிவை பார்த்தேன்..

நீங்களோ நானோ, அல்லது எல்லோருமோ, ஒரு வகையில் அரசு ஊழியர்களால் பாதிக்கப்பட்டிருப்போம்...

இதற்கு அரசு ஊழியர்களின் பிள்ளைகள் கூட விதிவிலக்கல்ல...இந்தியாவில் வாழ்ந்துகொண்டு, வாழ்க்கையில் ஒரு முறை கூட லஞ்சம் கொடுக்காதவரை சல்லடை போட்டு தேடினாலும் கிடைக்கமாட்டார்.

இந்தியன் தாத்தா ஒரு விதிவிலக்கு. இருந்தாலும், அது ஒரு திரைப்படம் என்பது உங்களுக்கு தெரியும்.

இருந்தாலும் பிச்சைப்பாத்திரம் எழுதும் எதுவும் எனக்கு பிடிக்காது, இதுவும் எரிச்சலைத்தான் கொடுக்கும் என்ற மிகுந்த நம்பிக்கையில் திட்டி ஒரு பின்னூட்டம் போட்டுவிட்டு இடத்தை காலிசெய்துவிட்டேன்.

இருந்தாலும், ஒரு உண்மை உரைத்தது. அதனால் இந்த பதிவு.

சுயதொழில் செய்யும் ஒரு சில வலைப்பதிவர்களை தவிர, ஒரு பத்து சதவீதம் இருக்குமா ?, மீதி தொண்ணூறு சதவீதம் பேர், வலைப்பதிவுகளை அலுவலகத்தில் வைத்து பார்க்கிறீர்கள்.

ஒரு நிறுவனத்தில் கூலிக்கு நின்று, சம்பளம் பெறும் நாம், நிறுவனத்திற்கு உழைப்பதை விட்டுவிட்டு, சொந்த மின்னஞ்சலை திறந்து பார்ப்பது கூட குற்றம். இதுல வலைப்பதிவில் வேறு மொக்கை. என்னையும் சேர்த்துத்தான் சொல்கிறேன்.

நானும் திருடன். நீரும் திருடன். இதில் அவன் சரியில்லை, ஆட்டுக்குட்டி சரியில்லை என்று என்ன நொள்ளை நொட்டை ? முதலில் உன் முதுகில் உள்ள அழுக்கை சொறி. அதன் பின் அடுத்தவன் முதுகில் உள்ள அழுக்கை சொறியலாம். என்ன நான் சொல்றது ?

இந்த பதிவுக்கு அலுவலகத்தில் இருந்து பார்க்கும் யாரும் பின்னூட்டம் போடாதீங்க என்று சத்தியமாக நான் சொல்லமாட்டேன். ஹி ஹி...முடிஞ்சா ஓட்டு போடு, இல்லன்னா நெகட்டிவ் ஓட்டுபோடு...!!

Tuesday, July 07, 2009

சொந்த செலவில் சுண்ணாம்பு தடவிக்கொள்வது எப்படி ?


ஸ்பெல்லிங் மிஸ்டேக் சுட்டி 1 > பதிவர் சக்கரை






படம் > லிசா ரே.

சொர்ணமால்யாவும் காஞ்சீபுரமும்..



தட்ஸ்தமிழ் நீயூஸ் ஒன்று

காஞ்சிபுரம்: காஞ்சி சங்கர மடம் சங்கராச்சாரியார் ஜெயேந்திரருக்கு ஆகஸ்ட் 7ம் தேதி 75வது பிறந்த நாள் வருகிறது. இதையொட்டி ஜெயேந்திரரும், விஜயேந்திரரும் சதுர்மாஸ்ய விரதத்தை இன்று தொடங்கினர்.

செப்டம்பர் 4-ம் தேதி வரை நடைபெறும் இவ்விரதத்தை ஜெயேந்திரர் மற்றும் விஜயேந்திரர் ஆகியோர் அனுசரிப்பார்கள்.

வியாச பூஜையுடன் விரதம் தொடங்கியது. விரத காலத்தில் அத்வைத வேதாந்த சதஸ், வேதவித்வத் சதஸ், வேதபாராயணம் வேதபாஷ்ய சதஸ், அக்னி ஹோத்ரம், பஞ்சங்க சதஸ் நடைபெறும். மாலை வேளையில் சிறப்பு இன்னிசை கச்சேரிகள், உபன்யாசங்கள் நடக்கின்றன.

10-ம் தேதி முதல் 12-ம் தேதி வரை அக்னி ஹோத்ர சதஸும், 27-ம் தேதி முதல் 29-ம் தேதி வரை பஞ்சங்க சதஸும் நடக்கின்றன.

ஆகஸ்ட் 7-ம் தேதி ஜயேந்திரர் ஜெயந்தி விழாவும், 13-ம் தேதி ஜன்மாஷ்டமியும், 23-ம் தேதி விநாயக சதுர்த்தியும், 28-ம் தேதி சாஸ்த்ர பரிஷா, வேதபாஷ்ய பரிஷா, வித்வத் சதஸ், அத்வைத வேதாந்த சதஸும், செப்டம்பர் 4-ம் தேதி விஸ்வரூப தரிசனமும் நடைபெறும்.

இம்மாதம் 9-ம் தேதி முதல் 31-ம் தேதி வரை மாலை வேளைகளில் வி.ராதாகிருஷ்ண சாஸ்திரி, ஸ்ரீ பகவத் பாத சரிதம் தொடர் உபன்யாசம் நிகழ்த்துகிறார்.

படம் நன்றி / விகடன்...

எனக்கு பிடிச்ச படங்கள் சில..



ஏழுமாசத்துக்கு என்ன செய்யனுமோ அதை மட்டும் செய்யுங்க மேடம்...



யூண்டாய் ஈக்குவஸ் கார்...சியோல் இன்ச்சான் ஏர்ப்போட் போற வழியில் எடுத்தது...இந்த காரை பற்றி மேல் விவரம் இருந்தா தாங்களேன்...

ஸ்டிக்கர் ஒட்டிய ஆப்பிள் ? கேர்புல்...!!!



நம்மாளுகளுக்கு பாரின் சரக்கு, பாரின் மொழி, பாரின் பிகர் என்று பாரின் பொருட்கள் மேல் அவ்ளோ க்ரேஸ்.

அதை சரியா பயன்படுத்தும் வியாபாரிகள் கூட்டம், சாதாரண ஆப்பிள் ஆரஞ்சு மற்றும் சாதாரண மாங்கா பழத்துல லோக்கல் ரவுண்டு ஸ்டிக்கர் ஒன்றை ஒட்டி அதிக விலைக்கு விற்கிறார்கள்..

நம்ம ஆளுகளும் கண்ணை மூடிட்டு அதை வாங்கிட்டு வந்து, ஹை, பாரின் பொருள், க்வாலிட்டியா தான் இருக்கும் என்று தின்கிறார்கள்...

உங்கள் பாக்கெட் மட்டும் இந்த போலி ஸ்டிக்கரால் காலியானா பரவாயில்லை. கார்பைடு கல்லை போட்டு பழுக்கவைத்த மாம்பழங்களையும் இந்த ஸ்டிக்கர் ஒட்டி க்வாலிட்டி ப்ராடக்ட் ஆக்குகிறார்கள் கோயம்பேட்டில்...

சோ..கேர்புல். ஜட்டி போட்டிருப்பதெல்லாம் குழந்தையும் அல்ல, ஸ்டிக்கர் ஒட்டினதெல்லாம் நல்ல புரூட்டும் அல்ல...



வெளிநாட்டு பொருள் மேட்டர் பதிவில் எதுக்கு மலைக்கா அரோரா என்று மலைப்பவர்களுக்கு...மலைக்கா என்ன தமிழச்சியா ? ஆரியர் தானே ? ஆறிப்போனாலும் இந்த ஆரியர் திராவிடர் மேட்டர் இல்லைன்னா நமக்கு பொழப்பு ஓடாதே ? மருத்துவர் மறுபடி வன்னிய ஜாதி அரசியலை கையில் எடுத்துட்ட மாதிரி, இன்னும் பிரபாகரன் பெயரை சொல்லி பிழைப்பை நடத்தும் வைக்கோ, நெடுமாறன் மற்றும் வெளிநாட்டு புலிமுகவர்கள் மாதிரி நாமளும் இதை வெச்சே ஓட்டவேண்டியதுதான்...

Monday, July 06, 2009

பேச்சை குறைப்போம்...செயலில் இறங்குவோம்..!!!


பெங்களூர்: பெங்களூர் எலஹங்காவில் உள்ள இலங்கைத் தமிழ் அகதிகள் குழந்தைகளுக்கான பள்ளியில் போதிய அளவில் ஆசிரியர்கள் இல்லாததால் படிப்பு பாதிக்கப்பட்டுள்ளது.

இந்தப் பள்ளிக்கு உடனடியாக 6 ஆசிரியர்களும், வாரம் முழுவதும் ஒவ்வொரு மாணவ, மாணவிக்கும் 16 கூடுதல் உணவும் தேவைப்படுகிறதாம்.

தற்போது இலங்கையில் போர் முடிந்துள்ள நிலையில் இப்பள்ளியில் படிக்கும் மாணவ, மாணவிகளின் நிலையை மேம்படுத்த பள்ளி நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. இதற்காக பெங்களூரைச் சேர்ந்த பெரும் தொழில் நிறுவனங்களின் பேராதரவைப் பெறவும் யோசித்து வருகிறது.

ஆசிரியர்களுக்கும், சாப்பாட்டுக்கும் ஸ்பான்சர்களைப் பெறவும் அது உத்தேசித்துள்ளது.

தற்போது இங்கு பணியாற்றும் ஆசிரியர்கள் ஒன்றாவது முதல் பத்தாவது வகுப்பு வரை எடுக்க வேண்டியுள்ளது. இங்கு மொத்தம் 210 பேர் படிக்கின்றனர். இது 250 ஆக உயரும நிலை உள்ளது.

இதுகுறித்து பள்ளி நிர்வாக அதிகாரி லட்சுமி கோபிநாத் கூருகையில், பன்னாட்டு நிறுவனங்கள், பெரிய பெரிய நிறுவனங்கள் ஆசிரியர்களுக்கு ஸ்பான்சர் செய்தால் நரமாக இறுக்கும். அது இங்குள்ள ஆசிரியர்களுக்கு ஊக்கம் தருவதாக அமையும்.

எங்களுக்கு தற்போது கணிதம், இயற்பியல், வேதியியல், கம்ப்யூ்ட்டர் அறிவியல், சமூக அறிவியல், ஆங்கிலம் ஆகிய படிப்புகளுக்கு ஆசிரியர்கள் தேவைப்படுகிறாரக்ள்.

இங்குள்ள மாணவ, மாணவியர் தாய் மொழியில் (தமிழ்) படிக்க விரும்புகிறார்கள். அது நல்லதுதான். அதேசமயம், ஆங்கில அறிவையும் மேம்படுத்த வேண்டியது அவசியம். இதற்காக ஆங்கிலப் புலமை மிக்க ஆசிரியர்கள் தேவைப்படுகிறார்கள்.

முழு நேர ஆசிரியர்கள் கிடைத்தால் நலமாக இருக்கும். ஆனால் அவர்களை பிடிப்பதுதான் சிரமமாக உள்ளது. அதேசமயம், பகுதி நேர ஆசிரியர்கள் கிடைத்தாலும் அவர்களையும் வரவேற்கிறோம்.

இதுதவிர பாடங்களைப் படிக்க மாணவர்களுக்கு உதவ தொண்டர்களும் தேவைப்படுகிறார்கள்.

கர்நாடக அரசின் அக்ஷய பாத்திரம் திட்டம் எங்களுக்கு உதவிகரமாக உள்ளது. திங்கள் முதல் வெள்ளி வரை மதிய உணவு இதன் மூலம் கிடைத்து விடுகிறது. இருப்பினும் வாரம் முழுவதும் மூன்று வேளை உணவு தர வேண்டியுள்ளது. ஒவ்வொரு மாணவ, மாணவியருக்கும் வாரத்திற்கு 21 வேளை உணவு தர வேண்டியுள்ளது.

ஆனால் இதில் சிரமம் உள்ளது. ஸ்பான்சர்கள் யாரேனும் ஒவ்வொரு மாணவன் அல்லது மாணவிக்கு காலை அல்லது இரவு நேர உணவை ஸ்பான்சர் செய்ய முன்வந்தால் பெரும் நிம்மதியாக இருக்கும் என்றார் அவர்.

அதேபோல, பள்ளிக் கட்டடம் புதுப்பிக்கப்பட வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. பள்ளிக்குத் தேவையான இடம் உள்ளபோதிலும் போதிய கட்டடம் இல்லை. தற்போதுள்ள கட்டடம் மிகவும் பழமையாக உள்ளது. குளியலறைகள், ஜன்னல், கதவுகள் உள்ளிட்டவற்றை புதுப்பிக்க வேண்டியுள்ளது. குடிநீர்க் குழாய்கள் பழுது பார்க்கப்பட வேண்டியுள்ளது.

இவ்வளவு சிக்கல்கள் உள்ளபோதிலும் மின்சாரம் கிடைப்பதில் இதுவரை எந்த சிக்கலும் இல்லை. அதேபோல பெங்களூர் குடிநீர் வாரியம், எந்தவிதக் கட்டணமும் வசூலிக்காமல் தொடர்ந்து தண்ணீர் சப்ளை செய்வதாக லட்சுமி கோபிநாத் நன்றியுடன் கூறுகிறார்.

இந்தப் பள்ளிக்கு சிஸ்கோ நிறுவனம் கம்ப்யூட்டர்களை தானமாக அளித்துள்ளது. பள்ளிச் சுவர்களுக்கு கோல்ட்மேன் சாக்ஸ் நிறுவனம் இலவசமாக பெயின்ட்டிங் செய்து தந்துள்ளது.

இலங்கையில் உள்ள தமிழர்களுக்கு நேரடியாக உதவி செய்ய முடியாத வருத்தத்தில் உள்ளவர்கள் அந்தத் தமிழ் மக்களின் வாரிசுகளுக்கு உதவ முன்வரலாம்.

அப்படி முன்வர உதவுவோர் லட்சுமி கோபிநாத்தை 9902421091 என்ற மொபைல் போன் எண்ணில் தொடர்பு கொண்டு விவரங்களை அறியலாம்.

நன்றி தட்ஸ் தமிழ்...இதுபோல இன்னும் பல செய்திகளை உலகுக்கு தெரியப்படுத்துங்கள்...!!!

Friends...!! Its Time to get into Action...!!!!

Friday, July 03, 2009

நிறவெறிநாட்டில் வெள்ளையழகி..

இது ஒரு கவிதை, இது ஒரு கவிதை, இது ஒரு கவிதை...!!!

கருப்பன் நான்...
வாழ்வது நிறவெறி நாட்டில்..
வெள்ளை அழகி...

..

..

..

..

..

..

..

..

..

..

..

..

..

..

..

கீழே...
..

..

..

..

குப்பை அள்ளுகிறாள்..........




..

கருப்பன் நான்...
வாழ்வது நிறவெறி நாட்டில்..
வெள்ளை அழகி...
கீழே..
குப்பை அள்ளுகிறாள்..........


அவளுக்கே என் ஓட்டு.......அப்ப உங்க ஓட்டு ??