Friday, July 24, 2009

பவா செல்லத்துரை - யோகி ராம் சுரத்குமார் . கிழிந்து தொங்கும் பாலகுமாரன்இன்றைக்கு காலவெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்டுவிட்ட, தான் தமிழ் இலக்கியத்தின் மிகப்பெரிய ஆளுமை என்று தன்னைத்தானே தற்பெருமைச்சேற்றில் மூழ்கடித்துக்கொண்ட பாலகுமாரனை பற்றிய பதிவு இது...


சிலசமயம் சில எழுத்துக்கள் என்னை ஆச்சர்யம், கோபம், அதிர்ச்சி என்று கலவையான உணர்வுகளை நோக்கி சுனாமிபோல இழுத்துக்கொண்டு சென்றுவிடும்...

அப்படிப்பட்ட பதிவு இந்த பதிவு..எனக்கென்னமோ இரண்டாம் பாகமான இதனை படித்துவிட்டு, முதல் பாகத்தை படிக்கலாம்போல உள்ளது...பதிவை போட்டவுடனே...டேய் இவரை கூடவா இதுவரை நீ வாசிக்கவில்லை என்று யாராவது பின்னூட்டமிடும் அபாயத்தினூடே பயணித்தே இந்த சிறு அறிமுகத்தை (அட..எனக்கு நானே) எழுதிக்கொள்கிறேன்...!!!!

17 comments:

செந்தழல் ரவி said...

kayamai

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

பதிவு; தகவல்; பவா செல்லத்துரை பற்றிய அறிமுகம் நன்றி!
பாலகுமாரனைப் படித்தபடியால்; உண்மை முகம்....ஆச்சரியமே!!!

சப்ராஸ் அபூ பக்கர் said...

///சிலசமயம் சில எழுத்துக்கள் என்னை ஆச்சர்யம், கோபம், அதிர்ச்சி என்று கலவையான உணர்வுகளை நோக்கி சுனாமிபோல இழுத்துக்கொண்டு சென்றுவிடும்...////

ஓஹோ..... ரொம்ப கவனம்க.....

கிருஷ்ணமூர்த்தி said...

அனேகமாக எல்லாப் படைப்பாளிகளுமே, தன்னுடைய படைப்பாற்றலைக் கண்டு கர்வம் உள்ளவர்களாகவே இருந்திருக்கிறார்கள். அந்த கர்வம் வெளிப்படாமல் அல்லது வெளிக்காட்டிக் கொள்ளாமல் இருக்க முடிந்தவர்கள் வெகு சிலரே.
அதனால், இந்த விஷயம் என்னை ஆச்சரியப்படுத்தவில்லை. பவா செல்லதுரையைப் பற்றி ஒரு அறிமுகம் கிடைத்ததே, அது தான், புதிது!

little boy said...

பவா ஒரு எழுத்தாளரை என் மற்றுருவருடன் ஒப்பிட வேண்டும் . உண்மையிலேயே பாலகுமாரனுக்கு எழுத்தில் ஒரு ஆளுமை உண்டு என்பதில் சந்தேகமே இல்லை

குப்பன்_யாஹூ said...

நான் முழுதும் முரண் படுகிறேன் உங்கள் எழுத்தில், இந்த பதிவில் இருந்து.

பாலகுமாரன் ஒரு பொழுதும் சுய விளம்பரமோ, அகங்காரமோ கொண்டது இல்லை.

என் போன்ற சாமானியனுக்கு தமிழ் மீது ஆர்வம் கொண்டு வர செய்தவர்கள் பாரதியார், பாலகுமாரன், சுஜாதா, வண்ண நிலவன், கனிமொழி அக்கா, சல்மா போன்றோர்.

என் வாழ்நாள் முழுதும் நான் பாலகுமாரனுக்கு நன்றி கடன் பட்டு உள்ளேன்.
உங்களை மாதிரி தான் நானும் பாலகுமாரன் எழுத்துக்கள் முழுதும் படித்து இல்லை.

ஆனால் ஒரு நாற்பது சிறுகதை, நாவல், ௫௦ காடுறை டோக்குப்புகள், கேள்வி பதில்கள் படித்து இருப்பேன்,

இன்னமும் பாலாவை படித்து கொண்டு இருக்கிறேன், படிப்பேன்.

குப்பன்_யாஹூ

குப்பன்_யாஹூ said...

I have been following Bava's blogs for some time (may be 3months). He keeps the post comment option open in all his posts. But in this Balakumaran post, he disabled the post comment option.
I do not know why (is it technical probs or intentionally).

Arangaperumal said...

இதான் உண்மை... இவரின் " விழலுக்கு இறைத்த நீர் " 15 வருடங்களுக்கு முன் படித்தேன். அதன் பிறகு நான் பாலகுமாரன் நூல்களை படிப்பதே இல்லை. இவரின் மிகப் பெரிய முயற்சியான " உடையார்" - தஞ்சை கோயிலை கட்டிய வரலாறு படிக்க வேண்டும் என நினைத்தேன்(எங்க ஊர் கோயிலுல)... அவர் ஒரு எழுத்தாளர் என நான் நம்புவதே இல்லை. மயிலாப்பூர் கற்பகாம்பள் கோயிலுக்கு பிரதோஷம் அன்று அவரை பார்ப்பேன்...

ஆனாலும் இது புதுசு..

செந்தழல் ரவி said...

அரங்கபெருமாள்...

இவருடைய அட்வைஸ் மழையான நாவல்கள் எனக்கு எரிச்சலை மூட்டியது.

தாடி என்றாலே ஓடி போய்விடுவேன்..

இவருக்கும் ஒரு ரசிகர் கூட்டம் உண்டு என்பதை மறுக்கமுடியாது..

Arangaperumal said...

என்ன ரவி!!!, புண்ணாக்கு விக்கிறவனும்தான் தொழிலதிபர் - இது கவுண்டமனி ஒரு படத்தில் பேசும் வசனம்.

செந்தழல் ரவி said...

ஹி ஹி. ஆமாம். திரு அரங்கபெருமாள் அவர்களே...

குறைந்தபட்சம் ராஜேஷ்குமாரிடம் இருந்த கமர்ஷியல் நேர்மை அவரிடம் இல்லாமல்போனது.

செந்தழல் ரவி said...

பைதவே நானும் தஞ்சையில் இருந்து வந்தவந்தான்...!!!

செந்தழல் ரவி said...

குப்பன் யாஹூ

உங்களது தனிப்பட்ட கருத்தை நான் மதிக்கிறேன், ஏற்கிறேன்.

இது என்னுடைய கருத்துமட்டுமே !!!

செந்தழல் ரவி said...

நன்றி கிருஷணமூர்த்தி..!!!

பவாவை உங்களுக்கு அறிமுகம் செய்ததில் எனக்கும் மகிழ்ச்சி...!!!

செந்தழல் ரவி said...

லிட்டில் பாய்...

உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி...!!!!!!!!!!

செந்தழல் ரவி said...

வருகைக்கு நன்றி யோகன்..!!!

Arangaperumal said...

//பைதவே நானும் தஞ்சையில் இருந்து வந்தவந்தான்...!!!//

ஓ! அப்படியா? அப்போ, "உடையார்" படிக்கவும்