Monday, July 20, 2009

இம்சையை கூட்டுபவைகளை அண் இன்ஸ்ட்டால் செய்ய..

சில ப்ரொக்ராம்கள் நிரந்தரமாக நமது கணினியில் உட்கார்ந்து மொக்கை போட்டுக்கொண்டிருக்கும். அண் இன்ஸ்ட்டால் செய்ய போனாலோ முடியவே முடியாது.

ஒரு கட்டத்தில் வெறுத்துப்போய், நீ உன் வேலையை பார்த்துக்கிட்டுரு, நான் என் வேலையை பார்த்துக்கறேன் என்று விட்டுவிடுவீர்கள்..

அதுவும் உங்கள் கணிணியிலேயே தங்கிவிடும்...

அது ச்சும்மா இருந்தா பரவாயில்லை. வைரஸாக இருந்து தொலைந்தால் ? அவ்வப்போது கணிணி ரீபூட் ஆவது, ஆமையை விட மெதுவாக நகருவது, வாடிப்பட்டியில் இருப்பவருக்கு இமெயில் அனுப்பினால் பஸ்ஸ்டாண்டு வரைக்கும் கூட போகாமல் திரும்பி வந்துவிடுவது என்று ஆயிரத்தெட்டு தொல்லை கொடுக்கும்...

இதுக்கெல்லாம் சூனியம் வைப்பதுபோல நம்ம பில்பூனைகள் அய்யா (பில்கேட்ஸ்ங்க) ஒரு தீர்வை தந்துள்ளார்...http://support.microsoft.com/default.aspx?scid=kb;[LN];290301

மேற்கானும் இந்த சுட்டியில் இருந்து தரவிறக்கம் செய்யும் இலவச மென்பொருளை உங்கள் கணினியில் நிறுவி, அதனை திறந்து, தேவை இல்லாத ஐட்டங்களை எல்லாம் டெட்டால், ப்ராஸோ ஊற்றி கழுவி, உங்க கணினியை பளபளப்பாக மாற்றவும்...

உங்கள் நீண்டகால தொல்லைகளை க்ளிக் செய்து, ரிமூவ் என்ற பட்டனை மட்டும் அமுக்கவும். க்ளியர் ஆல் என்ற பட்டனை அமுக்கினால் எல்லாமே பூடும். ஜாக்கிரதை...!!!!

14 comments:

பிரபலப் பதிவர் நாமக்கல் சிபி said...

தேவையான ஆணி, தேவையில்லாத ஆணின்னு எப்படி தெரிஞ்சிக்கிறது?

வந்தியத்தேவன் said...

பிரபல பதிவரின் கேள்வி தான் என்கேள்வியும்.
ட்விட்டரில் ரம்யா என்ற பெயருடன் பலர் உங்களைத் தொடர்கிறார்கள் போல் தெரிகிறது ஹிஹிஹிஹ்

செந்தழல் ரவி said...

பார்த்து புடுங்கும்போதே தெரிந்துவிடும் சிபியாரே.........

செந்தழல் ரவி said...

வந்தி...யார் அந்த ரம் ?

குடந்தை அன்புமணி said...

நல்ல தகவல். நான் என்னமோ நினைச்சிக்கிட்டு இங்க வந்தேன். ஹி...ஹி...

சந்ரு said...

நல்ல தகவல் நண்பரே....
உங்கள் இம்சையினை குறைக்க ஏதாச்சும் வழி சொல்லுங்க முதல்ல.

செந்தழல் ரவி said...

என்னோட இம்சையை குறைக்க வழியேயில்ல சந்ரு

சந்ரு said...

உங்க இம்சைதானே எங்களை சிரிக்க வைத்துக்கொண்டு இருக்கிறது...

செந்தழல் ரவி ரசிகையர் மன்றம் said...

அத்தான்!!!!!!!! இது என்ன கோராமை? யார் அந்த ரம்யா? இது அநியாயம். அக்கிரமம்.

இதைத் தட்டிக் கேட்க யாருமே இல்லையா? இந்த அபலையின் குரல் உங்கள் காதுகளில் விழ வில்லையா?

என்னை மட்டும் கைவிட்டு விடாதீர்கள். உயிரையே விட்டு விடுவேன் அத்தான். உயிரையே விட்டு விடுவேன்.

வந்தியத்தேவன் said...

//செந்தழல் ரவி said...
வந்தி...யார் அந்த ரம் ?//
உங்கள் ட்விட்டரில் following இல் சில ரம்யாக்கள் படங்களுடனும் சிலர் படம் இல்லாமலும் இருக்கிறார்கள். எப்படி உங்களுக்கு மட்டும் இப்படி ரசிகைகள் கிடைக்கிறார்கள்.

கும்மாச்சி said...

புதுவிதமாகத்தான் டிப்ஸ் குடுக்கிறிங்க,

செந்தழல் ரவி said...

ஏதேது ? பெரிய ஆப்ப ரெடி பண்ணுறீங்க போல...

ஊர்சுற்றி said...

நான் விஸ்டா வச்சிருக்கேன். ஏதோ VB ஸ்கிரிப்ட் எரர் வருதுங்கண்ணே!

செந்தழல் ரவி said...

ஊர் சுற்றி,

ஸ்க்ரீன் ஷாட் அனுப்ப முடியுமா ?

விஸ்டாவில் பல பிரச்சினைகளை சந்தித்து மீண்டிருக்கேன்...