Wednesday, August 27, 2008

இலைக்காரனை கண்டறிந்தேன்...!!!

பல சமயம் காமெடியாகவும், சில சமயம் உண்மையிலேயே எரிச்சலை மூட்டும் வகையிலும் எழுதும் இலைக்காரன் யார் என்று நீண்ட நாட்களாக தேடிவந்தேன்...

கையில் வெண்னையை வைத்துக்கொண்டு நெய்க்கு அலைந்தமாதிரி...

தி.மு.கவையும் அதன் தலைவரையும் கடுமையாக விமர்சித்தும், பா.ம.க விலகினால் வரவேற்றும், மீண்டும் திரும்பி தி.மு.க கூட்டனிக்கு வந்தால் மறுபடி திட்டியும், ஜெ எப்படா ஆட்சிக்கு வருவார் என்று உண்மையான ஆற்றாமையில் எழுதும்...

நன்பர் நல்ல தந்தி தான் அவர்...

அவரது பதிவுகளை வாசிக்க இங்கே செல்லவும்...!!!

Tuesday, August 26, 2008

தமிழ்மணம் பூங்கா வருமா வராதா ?

மாதக்கணக்கில் தமிழ்மணத்தில் பதிவை இணைக்கும்போது பூங்காவில் அதனை இணைக்குமாறு க்ளிக்கி வருகிறேன்...ஆனால் பூங்காவைத்தான் இன்னும் வரக்கானோம்...

பூங்கா வராது என்றால் ஏன் அதை கேட்டுக்கொண்டிருக்கவேண்டும் ? அந்த வரிகளை நீக்கிவிடலாமே ?

டெஸ்டிங் துறையில் இருக்கும் என்னைப்போன்றவர்கள் ஒரு குறையை எவ்வளவு நாள் பார்த்துக்கொண்டிருப்பது :))))

Wednesday, August 20, 2008

மதன் அவர்கள் செய்துள்ள காமெடி !!!!

எஸ்.கோபாலன், நங்கநல்லூர்.
அரிசிக்கு ஏன் அரிசி என்று பெயர் வந்தது?


பல சர்வதேச மொழிகளில் அரிசிக்கு ஒரே மாதிரி ஒலிக்கும் பெயர்தான். பிரெஞ்சு மொழியில் ரைஸ் (Riz), இத்தாலியில் ரைஸோ, ஜெர்மனியில் ரெய்ஸ், ரஷ்யாவில் ரைஸ் (Ris). ஆங்கிலத்தில் Rice. தமிழிலும் அதே ஒலியோடு அரிசி! எல்லாவற்றுக்கும் மூலம் சம்ஸ்கிருதம். அதில் - ரையி!

மதன் சொல்கிறார், எல்லாவற்றும் மூலம் "செத்த" மொழியான சம்ஸ்க்ருதம் என்று !!! இவருக்கு எப்படி தெரிந்தது எல்லாவற்றுக்கும் மூலம் சம்ஸ்கிருதம் என்று ? கால இயந்திரம் உருவாக்கி பயணித்து பார்த்துவிட்டு வந்தாரா ? ஒருவேளை "இந்த உண்மையை" ஆப்ரிக்காவில் ஏதாவது பழங்குடியினர் இவருக்கு "சம்ஸ்கிருதத்திலேயே" லெட்டர் போட்டு தெரிவித்திருப்பார்களோ ?

எதால் சிரிப்பது என்று தெரியாமல் புத்தகத்தை மூடிவிட்டேன் !!!!