Monday, September 14, 2009

Force India F1 மற்றும் டென்னிஸ்



தமிழக ஊடகங்களில் காணகிடைக்கவில்லை. அதனால் நான் எழுதவேண்டியதா போச்சு. இரண்டு ஸ்போர்ட்ஸ் செய்திகள். 1. போர்ஸ் இண்டியா நேற்றைய இட்டாலியன் க்ரான்ப்ரிக்ஸில் நான்காவது இடத்தில் நிறைவு செய்துள்ளது. மொத்தம் பதிமூன்று புள்ளிகளுடன் ஒன்பதாம் இடத்தில் போர்ஸ் இண்டியா. ட்ரைவர் இருபத்தாறு வயது ஆட்ரியன் சுடில், ஜெர்மனிக்காரர். நிறைய எதிர்ப்பார்ப்புகளை உருவாக்கிவருகிறது போர்ஸ் இண்டியா F1 டீம். நிறுவனர் விஜய் மல்லைய்யா மெருமைப்பட இன்னும் பல விஷயங்கள் நடதேறியிருக்கிறது. 2. யூ.எஸ் ஓப்பன் டென்னிஸில் ரபேல் நடாலை குமுறிவிட்டார் டெல்பெட்ரோ. 6- என்ற நேர் செட்களில் நடாலை வீழ்த்தினார். நடால் எப்பவும் கொஞ்சம் பெரிய டவுசராக போட்டு விளையாடுவார். இந்த ஆட்டத்தில் ஆரம்பத்திலேயே என்னடா டவுசர் சின்னதாக இருக்கிறது, கிழிந்துவிடுமோ என்று நினைத்தேன். ஆனால் இப்படி கிழியும் என்று எதிர்பார்க்கவில்லை. ஏற்கனவே ஆறுமுறை ரோஜரிடம் நேரடியாக தோற்றவர்தான் டெல் பெட்ரோ. ஆனால் மறுபடி ஒருவாய்ப்பு அவருக்கு, ரோஜருக்கோ, பதினைந்தாவது க்ரான்ஸ்லாம் வரலாற்று கனவு. பார்ப்போம் ஆட்டம் எப்படி அமைகிறது என்று. என்னைப்பொறுத்தவரை, நடாலை வீழ்த்த யாராலும் முடியாது என்று நினைப்பேன். ஆனால் வல்லவனுக்கு வல்லவன் வையகத்துள் உண்டு என்பது டைம் டு டைம் நிரூபணமாகிக்கொண்டே இருக்கிறது.




நடுவரை முறைத்துக்கொண்ட வில்லிய்ம்ஸும் குழந்தையோடும் பெண்கள் பிரிவிவின் கிம் க்ளிஸ்டர்ஸும் உபரி நியூஸ். பைனஸ்ஸில் கிம்முடன் மோதிய மேடம் Caroline Wozniacki படத்தை பதிவில் போடுகிறேன். நன்றி.முதல் முறையாக யூ எஸ் ஓப்பன் பைனல்ஸ் வந்தவருக்கு இம்சையின் பாராட்டு.

Thursday, September 10, 2009

லக்கிலூக் !!!



கேள்வி : லக்கிலுக் தான் போலி டோண்டா ? அல்லது அவருக்கும் போலி டோண்டுக்கும் கொண்டான் கொடுத்தான் உறவுண்டா ? லக்கிலுக் ஆபாச பதிவு எழுதினாரா ? புரியல தயவு செய்து விளக்கவும்.
பதில் : ஆரம்பத்தில் லக்கிலுக்கும் போலி டோண்டிடம் இருந்து ஆபாச பின்னூட்டங்கள் பெற்றவர்தான். அந்த வகையில் அவரும் போலி டோண்டுவால் பாதிக்கப்பட்டவர்.

அடியேன் போலி டோண்டு மீது புகார் தர காவல் நிலையம் சென்றபோது, முந்தின நாள் இரவு, கணிணி இணைய கடை ஒன்றில், உண்மையார் டைப் செய்த போலி டோண்டு மீதான புகார் ஆவணங்கள், போலி டோண்டு குரல் பதிவு சிடிக்கள் போன்றவற்றை ப்ரிண்ட் அவுட் எடுத்ததில் இருந்து, சிடிக்களை பல பதிவுகளாக பிரதி எடுத்தது வரை அவரே செய்தார். அடியேன் எதிரில் இருந்த முருகன் இட்டிலி கடையில் சென்று உணவருந்தியபோது, இணைய கடை மூடும் நேரம் வந்ததால் அவர் பசியோடு அமர்ந்து இந்த பணியை முடித்தார்.

இந்த விவகாரத்தில் அவரை நான் முழுமையாக நம்புகிறேன். !!!!
போலி பதிவு எழுதும் அளவுக்கு அந்த வெகுளியான மனது செல்லாது. அவருடன் ஒரே ஒரு நாள் பழகியவர் கூட இதை கண்டுகொள்வார்.

பி.கு : இன்றைக்கு இந்த விவகாரத்தில் எல்லோரும் பிழைப்பை பார்க்க போய்விட்டபிறகு, போலி டோண்டு உட்பட, பின்னால் இருந்து இந்த விவகாரத்தை மீண்டும் தோண்டி குளிர்காயும் ஒரு பிரபல எழுத்தாளருக்கு நன்றி. அவர் நினைப்பது, இணையத்தில் இருப்பவர்கள் அடித்துக்கொண்டும், ஒருவரை ஒருவர் திட்டிக்கொண்டும், இருக்கவேண்டும். எதுவும் உருப்படியாக அவர்கள் எழுதிவிடக்கூடாது. வலைப்பதிவுகள் ஒரு சோஷியல் நெட்வொர்க் ஆக இருக்கவேண்டுமே தவிர, அதில் இருந்து படைப்பாளிகள் புறப்பட்டு தன்னுடைய பிழைப்பை கெடுத்துவிடக்கூடாது. அதற்கு தேவை, இதுபோன்ற விவகாரங்கள்.நன்றி எழுத்தாளரே. உங்களுக்கு ஒரு ஜே.

Wednesday, September 09, 2009

திமுக ஆட்சி சரியில்லை - திரு.ராகுல் காந்தி


படம் உதவி : கூகிள் கொம்பனி

தமிழகத்தில் திரு ராகுல்காந்தி சூறாவளி சுற்றுப்பயணம் செய்வது தெரிந்ததே. இளைஞர்களையும் விவசாயிகளையும் கட்சியில் சேர்ப்பதே திட்டமாம். அதுவும் இல்லாமல் முப்பந்தைந்து வயதுக்கு மேற்பட்டவர்கள் அவரை சந்திக்க தடைவேறு.(அப்ப மாப்பி சஞ்சய் அவரை சந்திக்கமுடியுமா என்ற எடக்குமடக்கான கேள்வியை எழுப்பாதீர்)

ஆங்காங்கே மக்களை சந்தித்து குறை கேட்கிறாராம். மீனவர்களும் மக்களும் தங்களது சொல்லமுடியாத துன்பங்களை ராகுல்ஜியிடம் கொட்டி, வடிகால் தேடுகிறார்களாம்.

குறிப்பாக, இதுவரை 400க்கும் மேற்பட்ட மீனவர்களை இலங்கை ராணுவத்தின் துப்பாக்கி குண்டுகளுக்கு காவு கொடுத்த தமிழக மீனவர் சமுதாயத்தின் கண்ணீரை கர்ச்சீப் வைத்து துடைக்காத குறையாம். அம்புட்டுபேரும், ராகுல்ஜியின் பெருந்தன்மையையும், ஏழைப்பங்காள மனோபாவத்தையும் கண்டு கண்ணீர் உகுக்கிறார்களாம்.

தலைப்பு : திமுக ஆட்சி சரியில்லை

அதாவது, மக்களுக்கு குறையில்லாத ஆட்சியை திராவிட முன்னேற்ற கழகம் நடாத்தினால், ராகுல்ஜி ஏன் இங்கு வந்து மக்களின் குறையை கேட்கப்போகிறார் ?

பி.கு : முப்பந்தைந்து வயதுக்கு மேற்பட்ட காங்கிரஸ்காரர்கள் யாரும் சந்திக்கக்கூடாது என்றால் ராகுல்ஜி தேங்கா மட்டையையும், ஈயம் பித்தாளையையும் தான் சந்திக்கவேண்டும். பர்த்து சட்டிபிக்கேட்டோடு காவல்துறையிடம் ஒரு காங்கிரஸ்காரர் கெஞ்சும் காட்சியை காண சகியாமல் இந்த பதிவு. உங்களது ஆதரவை ஓட்டுகள், மற்றும் கள்ள ஓட்டுகள் குத்துவதன் மூலம் தெரிவிக்கவும்.

Monday, September 07, 2009

திபிசிதி வாக்குமூலம்...கூ..கூ...

உங்களுக்கு இந்த டாப்பிக் பிடிக்கவில்லையென்றால் CHO KA KA O என்று யூ டூபில் தேடி GummiBear என்ற ஆல்பத்தை சந்தோஷமாக பார்க்கவும். நல்லாருக்கு..

பாவம் திரு.திபிசிதி. (இதன் அர்த்தம் தமிழ்நாட்டில் பிறந்த குழம்பிய திராவிடன்)

ஒரு வாக்குமூலமே கொடுத்துவிட்டார். போலி யார் என்று சொல்லி தெரியவேண்டியதில்லை. பதிவுலகில் மிக அநாகரீகமாக நடந்துகொண்டவர். (உங்களுக்கு இந்த அநாகரீகம் என்ற வார்த்தையின் உண்மையான வலி புரிய, நீங்கள் திரு.போலியாரிமிருந்து ஒன்றிரண்டு பின்னூட்டங்கள் பெற்றவறாயிருக்கவேண்டியது அவசியம்)

திரு.திபிசிதியின் பதிவில்

திபிசிதி:
கோவி.கண்ணன் மூர்த்தியுடனான நட்பை முறிக்கவில்லை என்பதால்,


கோவி.கண்ணன் said...
என்னுடன் நெருக்கமாக பழகிய காரணங்களுக்காக உங்கள் மீது

கூட்டுக்களவாணிகள் திரைப்படத்தில் ஒரு காட்சி கீழே.......



உங்கள் குடும்பத்தை பற்றி அசிங்கமான வார்த்தைகளில் தொடர்ந்து பின்னூட்டங்களை அளித்துக்கொண்டும், உங்கள் அலுவலகத்துக்கு போன் செய்து, செந்தழல் ரவி என்ற புனைப்பெயரில் எழுதுபவர், பார்ப்பணர்களை பற்றி அவதூறாக எழுதுகிறார், அவரை பணியில் இருந்து நீங்குங்கள் என்றும், தொடர்ந்து மன உளைச்சலை கொடுக்கும்படி உங்கள் பெயரில் தொடங்கப்பட்ட போலி வலைப்பதிவில் எழுதியும் வந்தவர்களுடன், நட்போடு இருக்கும் உங்களை குதறாமல் கொஞ்சவா செய்வார்கள் திபிசிதி ? உங்கள் அறிவுக்கு (??) இது எட்டாமல் போனது ஏனோ ?

சென்னை சைபர் க்ரைம் பிரிவில் இப்போதும் உங்கள் மீது புகார் கொடுக்கும் அளவுக்கு உங்கள் நன்பர்களும், நன்பர்களின் நன்பர்களும் ரொம்ப செய்துள்ளார்கள். கூட்டுக்களவாணி என்ற வார்த்தைக்கு அர்த்தம் தெரியுமோ இல்லையோ ??

இந்த பதிவு பிடித்திருந்தாலும் பிடிக்காமல் போனாலும் உங்கள் ஓட்டு மூலம் தெரிவிக்கவும்.


பிற்சேர்க்கைகள்

1. இந்த ட்விட்டர் குரூப் இமெயில் அனுப்பும்போது, சாக்கடைகளுக்கும் அனுப்பிவிடுகிறது. ட்விட்டரிடம் கம்ப்ளைண்ட் செய்யவேண்டும்.

2. களவாணிகளின் அலைபேசி எண் கண்டுபிடிப்பது , காவல்துறையினரிடம் கொடுக்கவே.

Sunday, September 06, 2009

YSR மரணம். அதிர்ச்சியில் ஆப்ரிக்காவில் ஆயிரம் பேர் சாவு


மரணம் கொண்டாடப்படக்கூடியதல்ல. அதன் இழப்பு அதீதமானது. ஆனால் அதை வைத்து செய்தி நிறுவனங்கள் விளையாடும் விளையாட்டு எரிச்சல் தருகிறது.