பாகம்1
பாகம்2
பாகம்3
பாகம்4
பாகம்5
பாகம்6
அவள் கைகளை கெட்டியாக பற்றிக் கொண்டு...காட்டை நோக்கி பார்த்தேன்..
தொலைவில்..நரி ஒன்று...ஊஊஊஊஊஊஊ என்று ஊளையிட்டு அமைதியை கிழித்தது....
திவ்யா..இப்போ என்ன செய்வது....
மனம் செய்வதறியாது துடித்தது.....
அவள் மென்மையாக என்னை பார்த்தாள்...பொறுங்க குமார்...என்றாள்...
அவள் மனதில் இவ்வளவு தைரியமா....எனக்கு ஆச்சர்யமான ஆச்சர்யம்...
சின்னப்பெண்...அவளுக்கே இவ்வளவு தைரியம் இருக்கும்போது நமக்கென்ன..
என் மனதில் எப்படித்தான் அந்த உத்வேகம் வந்ததோ தெரியவில்லை...
திவ்யா..வா என்னோடு என்று...அவள் கைகளை கெட்டியாக பிடித்துக்கொண்டு காட்டுக்குள் நுழைந்தேன்...
காட்டுக்கு உள்ளே செல்லாமல் காட்டை ஒட்டியே நடந்தால் - பாதையில் கொஞ்சம் முட்கள் இருந்தாலும் - ஐந்து நிமிட நடையில் அடுத்த தோட்டத்துக்கு சென்று விடலாம்...பிறகு அங்கிருந்து - ஓடை வழியாக இறங்கி நடந்தால் - மாரியம்மன் கோவில் செல்லும் பாதை வந்துவிடும்...
அங்கிருந்து ஐந்து நிமிட நடையில் திவ்யாவின் கல்லூரி தோழி மோகனாவின் வீடு..
அங்கே சென்று மோகனா வீட்டில் திவ்யாவை விட்டுவிட்டால், திவ்யா தோழி வீட்டுக்கு வந்தது போல் இருக்கும்..பிறகு மோகனாவே திவ்யாவை அவள் வீட்டில் கொண்டுபோய் விட்டுவிடுவாள்...
இதுதான் என் மனதில் தோன்றிய எண்ணம்...திவ்யாவிடம் சொன்னேன்...சிரித்துக்கொண்டே ஆமோதித்தாள்...படபடவென செயல்படுத்தினேன்...
பக்கத்து தோட்டம் வந்தது...அங்கிருந்து ஓடைக்கு செல்லவேண்டும்...விரைந்து நடந்தோம்...ஓடையில் சிறிய அளவில் தண்ணீர் ஓடிக்கொண்டிருப்பதால் கடப்பது சுலபமாகவே இருக்கும் என்று நம்பினேன்..
ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்....ஆ..ஆ...ஆ..ஆ...என்று வலி மிகுந்த முனகலை திவ்யா வெளிப்படுத்தினாள்...
என்ன என்ன என்ன என்று கேட்டேன்...
காலை காட்டினாள்...
குனிந்து அமர்ந்து பார்த்தேன்...
நல்ல கருவேல முள் ஒன்று என் அன்பிற்க்கு இனியவளின் காலை பதம் பார்த்திருந்தது...
மெல்ல பிடுங்கி எடுத்தேன்...
வலியை தாங்கிக்கொண்டாள் போல..அவள் தங்க முகம் அதை பிரதிபலித்தது....
குமார்...இனிமே என்னால நடக்க முடியாது..பயங்கரமா வலிக்குது என்றாள்...
கண்ணு...ஓடையை மட்டும் கடந்திடலாம்....பிறகு நல்ல பாதை இருக்கு...ஐந்து நிமிட நடையில் மோகனா வீட்டுக்கு போயிடலாம்...என்றேன்...
ம்ம்ம்ம்ம்ஹும்ம்....என்னை தூக்கிட்டு போ...ஓடையில் முள் இருக்கும்...ஓடையை தாண்டி விட்டுவிடு...பிறகு நடக்கிறேன்....என்றாள்...
என்ன, உன்னை தூக்கவா...முடியாது....நடந்து வா....என்றேன்..
ம்ம்ம்ஹூம்...ஓடையை தாண்டி விட்டுவிடு...பிறகு நடந்து வருகிறேன்...என்று அடம் பிடித்தாள்...
சரி நீங்க சொல்லிவிட்ட பிறகு அப்பீல் ஏது....என்று...அலாக் அலேக்...என்று ஒரே தூக்கு...
பிறகு ஓடையில் இறங்கி நடந்தேன்...
சலசலத்து ஓடும் ஓடை நீர்....மேகங்களுக்கு இடையே மெல்ல எட்டிப்பார்க்கும் தங்க நிலா...என் கரங்களில் 50 கிலோ தாஜ்மாஹால் போல் - என் காதலி...என்னவள்..என் பொன்நிலா..
வான் நிலா, நிலா அல்ல, என் வாழ்வினில் நிலா என்று பாடவேண்டும் போலிருந்தது..அது சினிமா பாட்டாச்சே...
இப்படி செய்தால் என்ன...
ஒரு காடு...ஒரு ஓடை..ஒரு நிலா...என் கையில் என் காதலி....
அட இந்த தலைப்பில் கவிதை எழுதி நம் கவிதை பிரசவத்தை தொடங்க வேண்டியது தான் என்று நினைக்கையில்.....
குமார்...ஏதாவது பாட்டு பாடுங்க என்றாள்...
என்ன...பாட்டா...எவ்வளவு பிரச்சினையில் போய்க்கிட்டு இருக்கோம்...இன்னும் பாட்டு கேட்குதா உனக்கு என்றேன்..
இல்லை, நீங்க பாடத்தான் வேண்டும்..இல்லை என்றால் நான் வர மாட்டேன்...என்றாள்..
சரி, உன் பிடிவாதம் தான் எனக்கு தெரியுமே என்று மனதிற்க்குள் நினைத்தபடி...
'ரட்சகன்' சினிமா பாட்டு பாடவா...என்றேன்...
ஓ..ஓ...என்றாள்..
ம்ம்ம்..மகாராணியார் சித்தம் என் பாக்கியம் என்றேன்...
அவள் செல்லமாக சினுங்க,
நான் ஆரம்பித்தேன்..
"கையில் ஏந்திய கனவா நீ...
கைகால் முளைத்த காற்றா நீ...
கையில் ஏந்தியும் கணக்க வில்லையே...
நிலவால் செய்த சிலையா....நீநீநீ..."
என்று பாடினேன்...கண்மூடி ரசித்தாள்...
ஓடையை கடந்தேன்...ம்ம்ம்...இறங்கு என்றேன்...
ஜிங்...என்று கீழே கொலுசு சப்தம் கேட்க குதித்து...பட பட என்று நடக்க ஆரம்பித்தாள்...
வாங்க சீக்கிரம் மோகனா வீட்டுக்கு போவோம்...என்றாள்...
ஏய்..."நடக்க முடியவில்லை தூக்கு என்றது....
அது சும்ம்ம்ம்ம்மா....என்றாள்...
அடிப்பாவி....என்றேன்...
சரி நீங்க இப்படியே உங்க வீட்டுக்கு போங்க...நான் மோகனா வீட்டுக்கு போய்விடுகிறேன்...என்றாள்...
பார்த்து போடா செல்லம்...என்று விடை கொடுத்தேன்...
சிரித்து செல்லும் தென்றல் போல சிட்டாக பறந்தோடி போனாள்....
என் உள்ளம் வானில் பட்டாம்பூச்சியாய் பறந்தது...
இந்த சிரிப்பெல்லாம் இன்னும் சிலநாளில் வடியப்போகிறது என்பது தெரிந்தால்.....என் உள்ளத்து பட்டாம்பூச்சி சிறகொடிந்து போயிருக்குமோ..................
..காதல் பயணம் தொடரும்..
13 comments:
கொஞ்சம் காமெடியை குறைத்து சீரியசாக எழுத முயல்கிறேன். படிப்பவர்கள் தான் சொல்லவேண்டும்..நல்லாருக்கா இல்லையா என்று..
நல்லா இருக்கு ரவி...
ரவி,
நகைச்சுவையை ஏன் குறைக்கிறீங்க? உணர்வுகளும் நிகழ்வுகளும் படு வேகமாகப் போகும் கதையில் அதுதான் நிதானம் கொடுக்கிறது.
அன்புடன்,
மா சிவகுமார்
நன்றி மங்கை அவர்களே..
தல,
இப்போ தான் படிச்சு முடிச்சேன். நாசம்...கலக்கிட்டீங்க...கொன்னுட்டீங்க்...அடுத்த பார்ட் எப்போ?
சீரியசா எழுதப் போறீங்களா? காமெடி கீமெடி எதுவும் பண்ணலியே
ரவி.. 7 பாகமும் இப்பதான் படிச்சேன்..
கதைய விட உங்க நடையும் காமடியும் நல்லா இருக்கு..
ரொம்ப இழுக்கர மாதிரி இருக்கு.. பாத்துக்குங்க.. :-)
அப்பா என்னா வெயிலு!
அட வெளியில தாங்க.
ஆனா உங்க பதிவு ரொம்ப ஜில் தான்.
ரொம்ப சின்ன பதிவா பண்ணிட்டீங்களே இந்த ஏழ.
சூப்பரா எழுதி இருக்கீங்க...இப்படியே எழுதுங்க காமெடிய குறைக்க வேண்டாம்...பாகம்1 ல ஆரம்பிச்சு 7 முடிக்கர வரைக்கும் மூச்சு விடாம படிச்சுட்டேன்...இடையில நம்ம ஆட்டோகிராப் வேற வந்து எட்டி பாத்துட்டு போச்சு...அடுத்த பகுதிக்கு வெயிட்டிங் :-)
where is the next chapter????
ஹா ஹா
ஏறத்தாழ 6 மாசம் முன்னாடி 6ஆம் பாகம் படிச்சமாதிரி நியாபகம் ரவி? நலமா? நியாயமா? மீதி பகுதிகளை உடனே போடுங்கப்பா :)
ஸ்ரீஷிவ்...:)
when will you write the next chapter?? do it now.
when will you do the next chapter??
when'll you write the next chapter?? do it now.
Post a Comment