Monday, February 11, 2008
கிழக்கு தைமூர் மேட்டர்.....
வழக்கமாக அவுஸ்திரேலிய பயணங்களின்போது நான் மிகவும் ரசிக்கும் தீவு தைமூர்...இரண்டு பக்கமும் சேர்ந்தால் கூட மொத்தமே 10 கி.மி அகலம் இருக்கும் என்று நினைக்கிறேன்...ஆனால் உயர உயர மரங்களுடன் ரொம்பவே ரசிக்கும்படி இருக்கும்...
விமானத்தில் உள்ள மேப்பில் திமோர் கடல் என்று பெரிய கடல்பரப்பு இருக்கும்...மனசுக்குள் அப்பாடா...அரைக்கிணறு தாண்டிட்டோம்...அடுத்து டார்வின்...அடுத்து சிட்னி...என்று கணக்கு போட்டுக்கொண்டே போவதும் இந்த கிழக்கு தைமூரை பார்த்துக்கொண்டுதான்...
போர்ச்சுக்கீசிய ஆதிக்கத்தில் இருந்து 1977ல் விடுபட்டதுன்னு நினைக்கிறேன்...அதிலிருந்து தைமூரில் இந்தோனேசிய ஆதிக்கம்...1999ல இந்தோனேசியா - போங்கடான்னு விட்டுட்டானுங்க...அட 2002ல தாங்க உருப்புடியான ஜனநாயகம் மலர்ந்தது...
அதை வாங்கிக்கொடுத்த ஜோஸ் ரமோஸ் கோர்த்தாவுக்கு நோபல் பரிசு ( அமைத்திக்கான) கிடைச்சது...அதே சமயம் அவர் கிழக்கு தைமூரின் அதிபராகவும் பொறுப்பேற்றாருங்க...
2006 ல முன்னாள் காவல்துறை தலைவரான அல்பர்டோ ரோனிடோவுக்கு நாட்டை ஆளனும்னு ஆசைவந்து கலவரம் - காம்ப்ரமைஸ் எல்லாம் ஆச்சுங்க...(அந்தாளுக்கிட்ட மொத்தமே 600 சோல்ஜர்ஸாம்)...( அதுலேயே எனக்கு டவுட்டு...)
பாவிப்பய...ரெண்டு ஜீப்ல வந்து அதிபரை அதிகாலையில 4.30 மணிக்கு போட்டுட்டான்...குண்டு காயத்தோட, ஆஸ்திரேலிய படையினர் அவரை டார்வினுக்கு (ஆஸ்திரேலியாவில் உள்ளது) தூக்கிட்டு போயிருக்காங்களாம்...ஆள் கோமா ஸ்டேஜ்ல இருக்காராம்...
அதிபர் மாளிகை செக்கியூரிட்டிகளோட நடந்த சண்டையில ரோனிடொவும் செத்துட்டானாம்...உலக நாடுகளோட அதிபர்கள் எல்லாம் கவலை தெரிவிச்சிருக்காங்க...
நம்ம இந்திய பிரதமர் அலுவகத்துல இருந்துகூட இரங்கல் அறிக்கையும், தைமுரில் ஜனநாயகத்தை நிலைநாட்டனும், அப்பாவி மக்கள் உயிருக்கு ஆபத்து ஏற்படாமல் காக்கனும்னு சிங்ஜி அறிக்கை உட்டிருக்கார்...
எங்கியோ இருக்க தைமூர் தீவுக்கு குரல்கொடுக்கும் இந்திய பிரதமர் அலுவலகம், இங்கே இருக்க இலங்கைத்தீவில் இருக்கும் தீவிரவாதியான ராஜபக்சேவிடம் ஜனநாயகத்தை நிலைநாட்டவும், பொதுமக்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்கவும், மனித உரிமைகள் காக்கவும் அறிக்கை விடாமல் வாய்மூடி மவுனியாக உள்ளது ஏனோ ? மத்திய அரசில் அங்கம் வகிக்கும் தி.மு.க, பாட்டாளி மக்கள் கட்சி எல்லாம் என்னைக்கு வாய திறக்குமோ ?
Subscribe to:
Post Comments (Atom)
3 comments:
//எங்கியோ இருக்க தைமூர் தீவுக்கு குரல்கொடுக்கும் இந்திய பிரதமர் அலுவலகம், இங்கே இருக்க இலங்கைத்தீவில் இருக்கும் தீவிரவாதியான ராஜபக்சேவிடம் ஜனநாயகத்தை நிலைநாட்டவும், பொதுமக்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்கவும், மனித உரிமைகள் காக்கவும் அறிக்கை விடாமல் வாய்மூடி மவுனியாக உள்ளது ஏனோ ? மத்திய அரசில் அங்கம் வகிக்கும் தி.மு.க, பாட்டாளி மக்கள் கட்சி எல்லாம் என்னைக்கு வாய திறக்குமோ ?//
Unnmai Ravi
ஆபத்தான் நிலையில் தான் இருக்கிறாராம் ஆனால் அவர் நிலமை சீராக இருக்காம்- இதை எப்படி அர்த்தப்படுத்துவது என்று தெரியவில்லை.
//எங்கியோ இருக்க தைமூர் தீவுக்கு குரல்கொடுக்கும் இந்திய பிரதமர் அலுவலகம், இங்கே இருக்க இலங்கைத்தீவில் இருக்கும் தீவிரவாதியான ராஜபக்சேவிடம் ஜனநாயகத்தை நிலைநாட்டவும், பொதுமக்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்கவும், மனித உரிமைகள் காக்கவும் அறிக்கை விடாமல் வாய்மூடி மவுனியாக உள்ளது ஏனோ ? மத்திய அரசில் அங்கம் வகிக்கும் தி.மு.க, பாட்டாளி மக்கள் கட்சி எல்லாம் என்னைக்கு வாய திறக்குமோ ?//
Post a Comment