Tuesday, October 07, 2008

இரண்டு டவுசர் பாண்டிகளின் டிஜிட்டல் படம் !!!

எங்கள் இருவருக்கும் ஆரம்பத்தில் பதினேழாம் பொருத்தம்...அப்புறம் தான் தெரிந்தது, பல விடயங்களில் நாங்கள் இருவரும் ஒரே திசையில் பயணிக்கிறோம் என்பது...!!!!

எங்கள் இருவருக்கும் உள்ள ஒற்றுமைகளை பட்டியலிட்டால்...

1. சாமி கும்பிடுவதில்லை
2. டோமர் மாதிரி பதிவு எழுதுவது
3. காதல் திருமணம்
4. அவுஸ்திரேலியா
5. பாஸ்டர்ஸ் பியர்
6. ஹாலி டேவிஸன் பைக் மீது காதல் ( அவரிடம் உள்ளது, என்னிடம் அதன் படம் மட்டும்)
7. மேட்டருக்கு / மீட்டருக்கு அலைவது
8. பின்னூட்டத்தில் மொள்ளமாறித்தனம் செய்வது
9. டவுஸர்
10. புகை பழக்கத்தை விட்டுவிட்டது

வேற்றுமைகளை சொன்னால் இந்த பதிவு தாங்காது...யாரடா அந்த டாபர்கள் என்று பார்க்கிறீர்களா ?

சமீபத்தில் என்னுடைய புறாக்கூண்டு வீட்டுக்கு (பெங்களூரு) வருகை தந்த பொட்டீக்கடையார் தான் அவர்...அவர் போட்டிருந்த டவுஸரை பார்க்கும்போது இவர் பொட்டீக்கடையா அல்லது ஜட்டீக்கடையா என்று தெரியவில்லை...(லக்கி, தமிழச்சி கவனிக்க)...



படம் ஒரு தலைப்பட்சமாக எடுக்கப்பட்டுள்ளது. அதனால் கழுத்தை சாய்த்து பார்க்கவும். கழுத்து சுளுக்கு மற்றும் அய்யோடெக்ஸ் செலவுக்கு நான் பொறுப்பல்ல...!!!

படத்தை பார்த்துவிட்டு, இதை சூடான இடுகையாக தமிழ்மணத்திலும், அதிக ஓட்டுகள் குத்தி தமிழிஷிலும் முதலில் கொண்டுவரவும்...

இது போன்ற டவுசர் பாண்டிகள் உங்கள் நன்பர்கள் இருந்தால் அவர்கள் படத்தையும் போட்டு ஒற்றுமை வேற்றுமைகளை பிரித்தாளுகை செய்க...!!!

வாழ்க பின்னூட்ட மொள்ளமாறித்தனம்..
வாழ்க பின்னூட்ட முடிச்சவுக்கித்தனம்..
வாழ்க பின்னுட்ட டுபுரித்தனம்..(நன்றி அதிஷா / பரிசல்)
வாழ்க தனம்..

லேபிள்: மொள்ளமாறிகள், முடிச்சவுக்கிகள் ( நன்றி தீவு)