மே 18, வருடம் இரண்டாயிரத்து முப்பந்தைந்து..முதல்வர் லெனின் தன்னுடைய வேளச்சேரி வீட்டின் ஓய்வறையில்..
ஐந்தாவது முறை முதல்வரானதற்கான பாராட்டு விழா பற்றிய செய்திகளை Dailyகரன் பத்திரிக்கையில் படித்துக்கொண்டிருந்தார். சுருதிஹாசன் மகள் சூர்யாஹாசனின் கெட்ட ஆட்டம் கலர் படங்களாக கண்ணில் விரிந்தது..
உதவியாளர் மேகநாதன் ஒரு இளைஞரை அழைத்துவந்தார்.
சார் இவர் காலையில் இருந்தே உங்களை பார்க்கனும் என்று காத்திருக்கிறார்..
யார் தம்பி நீங்க ? என்ன வேண்டும் ?
என்னை நல்லா உற்றுப்பாருங்க..!! உங்களுக்கே தெரியும்...!!!
கண்களை சுருக்கி கொஞ்ச நேரம் உற்றுப்பார்த்த முதல்வரின் கையில் இருந்த செய்தித்தாள் தானே நழுவியது.
அதிர்ச்சியில் உறைந்த அவரது வார்த்தைகளும் உடைந்து குழறியது..
ந் நீ நீங்க நீங்க !!!
_____%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%_____
நாமல் கூஜபக்சே தன்னுடைய பல் மருத்துவரிடம் கிளம்பிய போது மணி ஆறு. மே மாதம் 18 ஆம் தேதி நியூயார்க் நகரில் நடைபெறும் ஐ.நா பாதுகாப்பு சபை கூட்டத்தில் இந்தியாவுக்கு ஆதரவாக வாக்களிக்க கிளம்பி வந்த இலங்கை ஜனாதிபதி இப்படி தனியே கிளம்பிப்போவது ஒன்றும் புதிதல்ல..
பல் மருத்துவரின் மருத்துவமனை..
சிரித்த முகத்துடன் வரவேற்ற பல் மருத்துவரை எங்கோ பார்த்தது போல இருந்தது...
ஹெல்லோ என்றபடி அறையின் உள்ளே நுழைந்தவரிடம் சில வினாடி தயக்கம்..
என்ன தயங்குகிறீர்கள் ?
நீங்கள் ? ஆட்ரியன் என்பவரின் தானே நான் அப்பாயிண்மெண்ட் வாங்கினேன் ?
நீங்கள் மேலே போகும்வரை ஆட்ரியன் மயக்கத்தில் இருந்து எழமாட்டார் ?
என்ன ?
மருத்துவரிடம் கையில் கச்சிதமாக ஒரு மைக்ரோ துப்பாக்கி அமைதியாக நீண்டது.
நாமலுக்கு இப்போது உடலெல்லாம் உதறத்தொடங்கிவிட்டாலும், எதிரில் இருப்பது யார் என்று தெரிந்துபோனது.
யூ யூ யூ ?
சத்தமில்லாமல் செத்துப்போனார் ஒரு ஜனாதிபதி.
_____%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%_____
மதுரை. மே பதினெட்டு. நாம் தமிழகம் கட்சியின் இருபத்தைந்தாவது ஆண்டு விழா கொண்டாட்டத்துக்கு வந்து பாண்டியன் உறைவிட உணவகத்தில் தங்கியிருந்த இயக்குனர் நீமான்.
அண்ணே ? யாரோ ஒரு தம்பி நேற்று காலையில் இருந்தே காத்திருக்காங்க. ஜெர்மனியில் இருந்து வந்திருக்கார். மாநாட்டுக்கு போறதுக்கு முன்பு ஒரு ரெண்டு நிமிஷம் அந்த தம்பிக்கிட்ட பேசிருங்க.
சரி வரச்சொல்.
உள்ளே நுழைந்தவரின் முகம் எங்கோ பார்த்த ஒரு முகத்தை நியாபகப்படுத்த, கண்களை சுருக்கினார் நீமான்..
அண்ணே. என்னை தெரியலையா ?
யார் என்று புரிந்துபோய், உடல் உதறி, சிலிர்ப்பு அடங்காமல் இருக்கையில் இருந்து எழுந்து பாய்ந்து போய் கட்டியணைத்துக்கொண்டார்.
தம்பி நீங்க ? நீங்க ? அப்படியே இருக்கீங்க !!
அவர் கட்டியணைத்தது தமிழ் ஈழத்துக்காய் போராடிய மாவீரன் பிரபாகரன்.
_____%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%_____
அதே வினாடியில் இலங்கை NDTV செய்தி சேனலில் ஸ்க்ரோல் நியூஸ் ஓட ஆரம்பித்தது.
இலங்கை முன்னாள் அமைச்சர் பருணா தனது அறையில் தூக்கில் தொங்கினார். அவர் யாரையோ பார்த்து பயந்து இந்த காரியத்தை செய்ததாக அவரது பணியாளர் சாட்சியம்.
முன்னாள் ஜனாதிபதி கோத்தாபய ராசபக்சே மாடிப்படியில் தடுக்கி விழுந்து சாவு.
இலங்கை பலாலி விமானதளத்தில் இருந்த போர் விமானங்கள் ஐந்தை காலையில் இருந்து காணவில்லை.
_____%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%_____
தேவையற்ற பழைய செய்திகள்: தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் வே.பிரபாகரனின் தாயார், இந்தியாவில் சிகிச்சை எடுத்துக்கொள்ள சென்னை உயர்நீதிமன்றம் மே 18 2010 அன்று அனுமதி அளித்தது
2010 ஆம் ஆண்டு ஐஸ்லாந்தில் வெடித்த எரிமலைகள் காரணமாக ஸ்காண்டிநேவியா மூன்று வாரங்களுக்கு முடங்கியது.
2012 ஆம் ஆண்டு தென் இந்தியாவில் ஏற்பட்ட கடும் பூகம்பத்தில் மூன்று லட்சம் பேர் பலியானார்கள்.
2015 ஆம் ஆண்டு உயிர்கொல்லி நோய் எயிட்சுக்கு நியூசிலாந்தில் மருந்து கண்டுபிடிக்கப்பட்டது.
2017 ஆம் ஆண்டு அரபு நாடுகளில் விபச்சாரம் சட்டப்பூர்வமாக்கப்பட்டது.
2019 ஆம் ஆண்டு மாலத்தீவு முழுமையாக கடலில் மூழ்கியது. எவாக்குவேட் செய்யப்பட்ட மக்கள் ஆஸ்திலேயியா டாஸ்மேனியாவில் குடியமர்த்தப்பட்டார்கள்.
க்ளோனிங் 2021 ஆம் ஆண்டு சட்டப்பூர்வமானது. இது ஏற்கனவே க்ளோனிங் முயற்சியில் இருப்பவர்களுக்கும் பொருந்தும் என்று வரையறுக்கப்பட்டது.
_____%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%_____