மே 18, வருடம் இரண்டாயிரத்து முப்பந்தைந்து..முதல்வர் லெனின் தன்னுடைய வேளச்சேரி வீட்டின் ஓய்வறையில்..
ஐந்தாவது முறை முதல்வரானதற்கான பாராட்டு விழா பற்றிய செய்திகளை Dailyகரன் பத்திரிக்கையில் படித்துக்கொண்டிருந்தார். சுருதிஹாசன் மகள் சூர்யாஹாசனின் கெட்ட ஆட்டம் கலர் படங்களாக கண்ணில் விரிந்தது..
உதவியாளர் மேகநாதன் ஒரு இளைஞரை அழைத்துவந்தார்.
சார் இவர் காலையில் இருந்தே உங்களை பார்க்கனும் என்று காத்திருக்கிறார்..
யார் தம்பி நீங்க ? என்ன வேண்டும் ?
என்னை நல்லா உற்றுப்பாருங்க..!! உங்களுக்கே தெரியும்...!!!
கண்களை சுருக்கி கொஞ்ச நேரம் உற்றுப்பார்த்த முதல்வரின் கையில் இருந்த செய்தித்தாள் தானே நழுவியது.
அதிர்ச்சியில் உறைந்த அவரது வார்த்தைகளும் உடைந்து குழறியது..
ந் நீ நீங்க நீங்க !!!
_____%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%_____
நாமல் கூஜபக்சே தன்னுடைய பல் மருத்துவரிடம் கிளம்பிய போது மணி ஆறு. மே மாதம் 18 ஆம் தேதி நியூயார்க் நகரில் நடைபெறும் ஐ.நா பாதுகாப்பு சபை கூட்டத்தில் இந்தியாவுக்கு ஆதரவாக வாக்களிக்க கிளம்பி வந்த இலங்கை ஜனாதிபதி இப்படி தனியே கிளம்பிப்போவது ஒன்றும் புதிதல்ல..
பல் மருத்துவரின் மருத்துவமனை..
சிரித்த முகத்துடன் வரவேற்ற பல் மருத்துவரை எங்கோ பார்த்தது போல இருந்தது...
ஹெல்லோ என்றபடி அறையின் உள்ளே நுழைந்தவரிடம் சில வினாடி தயக்கம்..
என்ன தயங்குகிறீர்கள் ?
நீங்கள் ? ஆட்ரியன் என்பவரின் தானே நான் அப்பாயிண்மெண்ட் வாங்கினேன் ?
நீங்கள் மேலே போகும்வரை ஆட்ரியன் மயக்கத்தில் இருந்து எழமாட்டார் ?
என்ன ?
மருத்துவரிடம் கையில் கச்சிதமாக ஒரு மைக்ரோ துப்பாக்கி அமைதியாக நீண்டது.
நாமலுக்கு இப்போது உடலெல்லாம் உதறத்தொடங்கிவிட்டாலும், எதிரில் இருப்பது யார் என்று தெரிந்துபோனது.
யூ யூ யூ ?
சத்தமில்லாமல் செத்துப்போனார் ஒரு ஜனாதிபதி.
_____%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%_____
மதுரை. மே பதினெட்டு. நாம் தமிழகம் கட்சியின் இருபத்தைந்தாவது ஆண்டு விழா கொண்டாட்டத்துக்கு வந்து பாண்டியன் உறைவிட உணவகத்தில் தங்கியிருந்த இயக்குனர் நீமான்.
அண்ணே ? யாரோ ஒரு தம்பி நேற்று காலையில் இருந்தே காத்திருக்காங்க. ஜெர்மனியில் இருந்து வந்திருக்கார். மாநாட்டுக்கு போறதுக்கு முன்பு ஒரு ரெண்டு நிமிஷம் அந்த தம்பிக்கிட்ட பேசிருங்க.
சரி வரச்சொல்.
உள்ளே நுழைந்தவரின் முகம் எங்கோ பார்த்த ஒரு முகத்தை நியாபகப்படுத்த, கண்களை சுருக்கினார் நீமான்..
அண்ணே. என்னை தெரியலையா ?
யார் என்று புரிந்துபோய், உடல் உதறி, சிலிர்ப்பு அடங்காமல் இருக்கையில் இருந்து எழுந்து பாய்ந்து போய் கட்டியணைத்துக்கொண்டார்.
தம்பி நீங்க ? நீங்க ? அப்படியே இருக்கீங்க !!
அவர் கட்டியணைத்தது தமிழ் ஈழத்துக்காய் போராடிய மாவீரன் பிரபாகரன்.
_____%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%_____
அதே வினாடியில் இலங்கை NDTV செய்தி சேனலில் ஸ்க்ரோல் நியூஸ் ஓட ஆரம்பித்தது.
இலங்கை முன்னாள் அமைச்சர் பருணா தனது அறையில் தூக்கில் தொங்கினார். அவர் யாரையோ பார்த்து பயந்து இந்த காரியத்தை செய்ததாக அவரது பணியாளர் சாட்சியம்.
முன்னாள் ஜனாதிபதி கோத்தாபய ராசபக்சே மாடிப்படியில் தடுக்கி விழுந்து சாவு.
இலங்கை பலாலி விமானதளத்தில் இருந்த போர் விமானங்கள் ஐந்தை காலையில் இருந்து காணவில்லை.
_____%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%_____
தேவையற்ற பழைய செய்திகள்: தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் வே.பிரபாகரனின் தாயார், இந்தியாவில் சிகிச்சை எடுத்துக்கொள்ள சென்னை உயர்நீதிமன்றம் மே 18 2010 அன்று அனுமதி அளித்தது
2010 ஆம் ஆண்டு ஐஸ்லாந்தில் வெடித்த எரிமலைகள் காரணமாக ஸ்காண்டிநேவியா மூன்று வாரங்களுக்கு முடங்கியது.
2012 ஆம் ஆண்டு தென் இந்தியாவில் ஏற்பட்ட கடும் பூகம்பத்தில் மூன்று லட்சம் பேர் பலியானார்கள்.
2015 ஆம் ஆண்டு உயிர்கொல்லி நோய் எயிட்சுக்கு நியூசிலாந்தில் மருந்து கண்டுபிடிக்கப்பட்டது.
2017 ஆம் ஆண்டு அரபு நாடுகளில் விபச்சாரம் சட்டப்பூர்வமாக்கப்பட்டது.
2019 ஆம் ஆண்டு மாலத்தீவு முழுமையாக கடலில் மூழ்கியது. எவாக்குவேட் செய்யப்பட்ட மக்கள் ஆஸ்திலேயியா டாஸ்மேனியாவில் குடியமர்த்தப்பட்டார்கள்.
க்ளோனிங் 2021 ஆம் ஆண்டு சட்டப்பூர்வமானது. இது ஏற்கனவே க்ளோனிங் முயற்சியில் இருப்பவர்களுக்கும் பொருந்தும் என்று வரையறுக்கப்பட்டது.
_____%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%_____
42 comments:
//2012 ஆம் ஆண்டு தென் இந்தியாவில் ஏற்பட்ட கடும் பூகம்பத்தில் மூன்று லட்சம் பேர் பலியானார்கள்.//
அதில் நானும் என் சம்ஸ்கிருத suicidal note-ம் புதைந்து போகக் கடவது.... :))
:( ஒண்ணியும் புரியலயே!
மொக்கையில் ஒரே ஸ்பெல்லிங் மிஸ்டேக் அப்டீன்னு சொன்னா பார்ப்பனவாதமாகுமா?
மீதிய நாளைக்கு வந்து பார்த்துக் கொள்கிறேன். நான் எப்போது பின்னூட்டங்களை இமெயிலில் சப்ஸ்க்ரைப் செய்வதில்லை.
bye the way, இதை எழுதினவருக்கு நல்ல கற்பனை!
சிறுகதைக்கு சம்பந்தம் இல்லாமல் இருப்பினும் விதூஷ் அவர்களே.
நாம் பார்ப்பணீயச்சிந்தையையும், தமிழை விட சம்ஸ்க்ருத சுலோகம் சொன்னால் தான் கடவுளுக்கு நல்லா காது கேட்கும் என்ற பிடிவாத்தத்தையும், பார்ப்பணர் அல்லாதோரை கருவறைக்குள் விட மறுக்கும் சனாதன தர்மவாதிகளையும், அமெரிக்காவில் செட்டில் ஆனவன் தான் உயர்ந்தவன் என்று நினைக்கும் பூர்ஷ்வா குடிகளையும், தமிழ் நாட்டில் வாழ்ந்துகொண்டு தமிழையும் தமிழனையும் கேவலமான நினைக்கும் வந்தேறிகளையும், வீட்டுக்கு வரும் பிற சாதியினருக்கு நாய் தட்டில் சோறிடுபவர்களையுமே எதிர்க்கிறோம்.
நீங்கள் அவ்வாறு இல்லாதபட்சத்தில் எமக்கு என்ன எதிர்ப்புணர்வு உம்மிடம் இருக்கக்கூடும் ? நீரும் எமது சகோதரியே...!!!
பொது தளத்தில் என்னுடைய வார்த்தைகள் மூலம் உங்களை புண்படுத்தியிருந்தால் அது எமது மொழியின், சிந்திக்கும் திறனின் குறைபாடேயாகும். அப்படி நடந்திருந்தால் மன்னித்தருள்க.
சிபி. நான் லீனியர் நாலுமுறை படிச்சாத்தான் புரியும்.
&&மொக்கையில் ஒரே ஸ்பெல்லிங் மிஸ்டேக் அப்டீன்னு சொன்னா பார்ப்பனவாதமாகுமா?
Thursday, 22 April, 2010^^
முதலில் டைப்பிவிட்டு அப்புறமாக ஸ்பெல்லிங் மிஸ்டேக் பார்ப்பது பழக்கம். நேரமின்மை காரணம். வாக்களிக்காமல் செல்லவேண்டாம். நீங்கள் தமிழில் சொல்வது தவறில்லை. ஹிந்தியில் அல்லது சம்ஸ்கிருதத்தில் சொன்னால் யோசிப்பேன்.
//நான் லீனியர் நாலுமுறை படிச்சாத்தான் புரியும்//
நீங்க லீனியரா? இதுவும் புரியலையே!
Ravi, sujathavuku aduthu internetla famous neer thanya!?(pinna vera eppadi pazhi vangurathu)
Ravi, sujathavuku aduthu internetla famous neer thanya!?(pinna vera eppadi pazhi vangurathu)
குளோனிங்!!!
அப்பவும் அவரு பாவம் போராட்டக் காரனாகத்தான் இருக்க வேண்டுமா?
அட்லீஸ்ட் அவரை தமிழீழத் தலைவராகவாவது மாத்துங்க...
வவ்வால். லேட்டா வந்தாலும் லேட்டஸ்ட்டாவா ?
ராஜசூரியன் நன்றி.
அறிவன். வாழைமரத்தில் இருந்து பலாக்காயை எதிர்ப்பார்ப்பதேன் ? மேலும் எனக்கு வாழைதான் பிடிக்கும்.
அபாரமான கற்பனை!
நன்றி ரவி.
எதற்கு நன்றி என்று மண்டையை பிய்த்துக்கொள்ளவேண்டாம்
லேபிள்ல தாகம் இருக்குது. குடிக்கணும் ஏதாவது கானல்நீரைத் தேடிக்கிட்டிருக்கப் போறீங்க.. மற்றபடி தாகத்தில் ஒன்றாவது தீரட்டும்!
/செந்தழல் ரவி said...
சிபி. நான் லீனியர் //
இளைச்சுப் போயிட்டீங்களா ரவி? :)
// Vidhoosh(விதூஷ்) said...
//2012 ஆம் ஆண்டு தென் இந்தியாவில் ஏற்பட்ட கடும் பூகம்பத்தில் மூன்று லட்சம் பேர் பலியானார்கள்.//
அதில் நானும் என் சம்ஸ்கிருத suicidal note-ம் புதைந்து போகக் கடவது.... :))//
அப்போ மீதி ரெண்டு லட்சத்து தொன்னூத்தொன்பதாயிரத்து தொள்ளாயிரத்து தொன்னூத்தொன்பது பேரு யாராயிருக்கும் ரவி? :)
(மேல போட்ட கமெண்டுல கணக்கு விட்டுப்போச்சு. அதான் எடுத்து திருத்திட்டேன்:) )
குளோனிங் கதை சூப்பர்
ரவி!ரவி!ஓடியாருங்களேன் சீக்கிரம்.காணவில்லை இடுகை போட்டும் கண்டுக்காம வவ்வால் இங்கே வந்து தொங்கிட்டிருக்கு.
//வவ்வால். லேட்டா வந்தாலும் லேட்டஸ்ட்டாவா ?//
அட்டா!வுட்டீட்டீங்களே,புடியுங்க சீக்கிரம்.
gpp
நோண்டு என்ற பதிவர் பிரபாகரன் உயிரோடிக்கிறார் என்று தெரிந்ததுமே வாலண்டியராக சென்று கீழ்ப்பாக்கத்தில் அட்மிட் செய்து கொள்ளும்படி கெஞ்சினார். அங்கு மருத்துவர்கள் நோண்டுவின் பேரன் சின்ன வயதில் தெருவில் உச்சா போனதை காரணம் காட்டி மருத்துவமனையின் உள்ளே அனுமதிக்க மறுத்து அவரை திருப்பி அனுப்பினர்.
இப்போது அவர் பூணூலை அறுத்துக்கொண்டு, நானே உயர்சாதி பைத்தியம் என்று புலம்பிக்கொண்டு தெருவில் அலைவதாக கேள்வி.
பைத்தியம் என்று புலம்பிக்கொண்டு தெருவில் அலைவதாக கேள்வி.
//
சரிசெய்ய, சாணியில் செய்த டோண்டா தான் ஒரே வழி...
கூறுகிறார் பட்டாபட்டி
கலக்கல் ரவி...
க்ளோனிங் தாகம்.....
நன்றி பட்டாப்பட்டி !!!
&&நோண்டு என்ற பதிவர் பிரபாகரன் உயிரோடிக்கிறார் என்று தெரிந்ததுமே வாலண்டியராக சென்று கீழ்ப்பாக்கத்தில் அட்மிட் செய்து கொள்ளும்படி கெஞ்சினார். அங்கு மருத்துவர்கள் நோண்டுவின் பேரன் சின்ன வயதில் தெருவில் உச்சா போனதை காரணம் காட்டி மருத்துவமனையின் உள்ளே அனுமதிக்க மறுத்து அவரை திருப்பி அனுப்பினர்.
இப்போது அவர் பூணூலை அறுத்துக்கொண்டு, நானே உயர்சாதி பைத்தியம் என்று புலம்பிக்கொண்டு ^^^
இந்த தனிமனித தாக்குதலை நான் ஏற்றுக்கொள்ளவிலை.
//இந்த தனிமனித தாக்குதலை நான் ஏற்றுக்கொள்ளவிலை//
முதல்வர் லெனின்
உதவியாளர் மேகநாதன்
கூஜபக்சே
இயக்குனர் நீமான்
அமைச்சர் பருணா
எப்படி இவர்களேல்லாம் அவர்கள் இல்லையோ அதே மாதிரி
நோண்டுவும்
அவர் இல்லை :)
பரிதி நிலவன் ஹி ஹி மடக்கிட்டீங்க
ரவி..கற்பனைக் கொமெடிகள்..கடிகள் அருமை...
இப்படி கதை சொல்லியே தொந்திகடல்'நு ஒரு இடத்திலே ஒருத்தர் தலயிலே முளைத்த கோடாளியோடு நீந்தி விளையாடினார் :) :)
க்ளோனிங் செய்யும்போது கோடாலி இருந்ததா இல்லையா? :)
அருமை.
//2015 ஆம் ஆண்டு உயிர்கொல்லி நோய் எயிட்சுக்கு நியூசிலாந்தில் மருந்து கண்டுபிடிக்கப்பட்டது.//
நல்ல சேதிக்கு நன்றி ரவி
சான்ஸே இல்லங்க! கிட்டத்தட்ட இதே ஆங்கிளில் ஒரு மேட்டர் யோசிச்சு வச்சிருந்தேன். ஆனால் அதைவிட சிறப்பா, கலக்கலா உலகத்தையே கவர் பண்ணி எழுதியிருக்கீங்க! வாழ்த்துக்கள் அண்ணே!
நன்று.. அருமையான பதிவு..
www.narumugai.com
இதுக்குப் பேருதான் நான் லீனியரா..? ம்ஹும்.. வர வர கனவு காண்பதற்கு ஒரு எல்லையே இல்லாமல் போச்சு..!
Post a Comment