Sunday, March 30, 2008

தமிழச்சியின் இடுகையை மீண்டும் தமிழ்மணம் சேர்க்கவேண்டும்

பெரிய கோரிக்கை எல்லாம் இல்லை...தமிழச்சி அவர்களின் வலைத்தளத்தை மீண்டும் தமிழ் மணத்தில் சேர்க்கவேண்டும்...

பெண்ணீய கலகக்குரல் - அது கண்டிப்பாக வேண்டும் இந்த காலகட்டத்தில்..

வார்த்தைகளில் தவறுகள் இருப்பதாக நீங்கள் நினைக்கலாம், அப்படி நீங்கள் கட்டாயமாக நம்பும் இடுகைகளை மட்டும் நீக்கலாமே, முழு பதிவையும் ஏன் தூக்கவேண்டும் ?

அப்படி சேர்க்கும்போது அது மலேசியா ஐ.பியில் இருந்து சேர்க்கப்படுகிறதா, சேர்ப்பவரின் மின்னஞ்சல் தமிழச்சியின் மின்னஞ்சலை ஒத்திருக்கிறதா என்று கண்டு அதன் பிறகே சேர்க்கவேண்டும்...

களவாடப்பட்ட தமிழச்சியின் தளம் தவறாக உபயோகப்படுத்தப்படலாம்...அதனால் தமிழ்மண நிர்வாகிகள் எச்சரிக்கையாகவும் பொறுப்புடனும் நடந்துகொண்டு, தமிழச்சியின் தளத்தை சேர்ப்பதோடு, அதன் ஆத்தண்டிக்கேஷனையும் பார்க்க வேண்டும்...

3 comments:

Thamizhan said...

ஒரு துணிச்சலான பெண்ணின் வார்த்தைகள் வெளிவரவேண்டியது முக்கியம்.
ஆண்கள், பெண்கள் அடக்கத்துடன் பேசுவது அவசியம் என்பது மாறவேண்டும்.
அவர் பிரெஞ்சு நாட்டில் வளர்ந்தவர் ,ஆரம்ப எழுத்தாளர் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.
பொதுவாகத் தமிழர்கள் அநாகரீக வார்த்தைகள் என்று எண்ணி ஒதுக்கப்படும் பல வார்த்தைகள் வெளி நாட்டுப் பண்பாட்டில் சாதாரணமாகப் பயன் படுத்தப்படும் வார்த்தைகள் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்(ஆங்கில கலாச்சாரத்தில் பெண்குறி என்று யாரும் எழுது வதில்லை).

தமிழச்சி அவர்கள் அவர் எழுதுவது பிரெஞ்சுக் காரர்களுக்கல்ல.தமிழ்ப் பெண்களுக்கு முக்கியமாக அவர் கருத்துக்கள் போய்ச் சேர வேண்டும்,அவர்கள் முக்கியமாகப் படிக்க வேண்டும் என்பதை உணர்ந்து அவர்கள் முகம் கோணாமல் படித்து கருத்துக்களை அறிந்து கொள்ள வேண்டும் என்று எழுத வேண்டும் என்று வேண்டுகிறேன்.

கருத்துக்கள் முக்கியம் ஆனால் அதைச் சொல்லும் விதம் அதைவிட முக்கியம்.

Anonymous said...

அவருடைய கருத்துக்களில் உள்ள நியாயங்கள்கூட அவருடை சொற்பிரயோகங்களினால் கெட்டு விடுகின்றது. 'இருப்பதைக் குறித்துதான் எழுதுகின்றேன்' என்பது அபத்தமான வாதம். அப்படியானால் இருப்பதைதான் படமாகப் போடுகின்றேன் என மற்றுமொருவர் கிளம்புவார். பலர் பல தடவைகள் தமிழச்சியின் பதிவுகளைக் கண்டித்துப் பதிவுகள் போட்டார்கள். தமிழ்மணமும் சில ஆலோசனைகளை வெளியிட்டது. அதற்கு தமிழச்சியின் போக்கில் மாற்றம் ஏற்பட்டதா?.

அவர் சொல்லவேண்டிய கருத்துக்களை நாகரீகமாக சொல்ல முடியும். வெளிநாடுகளிலும் பண்பானவர்கள் நாகரீகமாகத்தான் எழுதுகின்றார்கள், நாகரீகமாகத்தான் பேசுகின்றார்கள்.

த‌மிழ‌ச்சியின் ஆர‌ம்ப‌கால‌ப் ப‌திவுக‌ளைப் ப‌ல‌ர் விரும்பி வாசித்தார்க‌ள். த‌ற்பொழுது சில‌ கால‌மாக‌த்தான் த‌ர‌ம்கெட்ட‌ சொற்பிர‌யோக‌ங்க‌ள்.

தமிழச்சியின் பதிவுகள் நல்ல‌ குடும்பத்தவர்களிடம் காட்டிப்பாருங்கள்.
தமிழ்மணம் எடுத்த முடிவு அவசரப்பட்டு எடுத்த முடிவாகத் தெரியவில்லை.

திருந்தவேண்டியவர்கள் தமிழ்மண நிர்வாகிகள் அல்ல.

புள்ளிராஜா

Anonymous said...

//pulliraajaa said...

புள்ளிராஜா//

போடாங் ... பொறுக்கி ராசா!