வணக்கம் சகோதரி...முதல் முறையாக ஒரு வாசகி, தமிழ் வலைப்பதிவு உலகத்துக்கு அளிக்கும் செவ்வி இது..(பேட்டி / சரியான தமிழ் வார்த்தை செவ்விதான்)...
உங்களை பற்றி சொல்லுங்க, எப்படி தமிழ் வலைப்பதிவுகள் படிக்க ஆரம்பிச்சீங்க ?
பெங்களூரில் தகவல் தொழில்நுட்ப துறையில் பணியாற்றுகிறேன்...அலுவலகம் முடிந்து வீட்டு சென்றபின் கணவர் வரும் வரையில் தினமலர் போன்ற தளங்களை மேய்வது வழக்கம்...அதன் மூலமாக தமிழ்ஷ் பழக்கமானது...கடந்த மூன்று மாதங்களாக தமிழ்ஷ் மூலம் வலைப்பதிவுகளை படித்து வருகிறேன்...
எப்படிப்பட்ட பதிவுகள் படிக்கிறீங்க ? பிடித்த பதிவு எது ? எந்த எந்த பதிவுகளை எப்படி படிக்கிறீங்க ?
பொதுவாக சீரியசாக எழுதும் வலைப்பதிவுகளை கண்டால் தூர விலகி ஓடுவேன்...உங்களுடைய வீராசாமீ பதிவு பி.டி.எப் கோப்பாக வந்தபோது அட தமிழில் இப்படி கூட எழுதறாங்களா என்று ரசித்தேன்...அப்போது அது ஒரு வலைப்பதிவு என்று தெரியாது...ப்ராக்லி ஸ்பீக்கிங், நான் ரெகுலராக படிப்பது குசும்பன் வலைப்பதிவு தான்..ஆம்லேட் மூலமாக வயதை கண்டுபிடிப்பது எப்படி என்று அவர் ஒரு குசும்பு பதிவு போட்டிருந்தார்...அதில் இருந்து ரெகுலராக அந்த பதிவுகளை வாசிப்பேன்...
நான் தமிழ்ஷ் மூலமாக, தலைப்புகள் ஈர்க்கும்படி இருந்தால் கண்டிப்பாக போய் படிப்பேன்...சில சமயம் தலைப்புகள் ஈர்க்கும்படி வைத்துவிட்டு உள்ளே மொக்கையாக இருக்கும்...தமிழ்ஷ் இல் அதிக ஓட்டுகள் வாங்கிய பதிவுகள் படிப்பேன்...
<இடைமறித்து> எப்படி பதிவுகளுக்கு போறீங்க ?
தமிழ்ஷ் மூலமாக பொதுவாக போவேன், ஆனால் குசும்பன், ஜ்யோராம் சுந்தர், பரிசல்காரன் போன்றவர்கள் பதிவுக்கு நேரடியாக URL டைப் செய்து இண்டர்நெட் எக்ஸ்ப்ளோரர் மூலமாக போவேன்...
தமிழ்மணம் பற்றி தெரியுமா ?
ஆங், அங்கங்கே லிங்க் பார்த்திருக்கேன் ஆனால் இன்னும் சென்றதில்லை, தினமும் தமிழ்ஷ் மூலமாக பதிவுகள் படிக்கிறேன்...
உங்களுக்கு பிடித்த பதிவர்கள் யார்?
குசும்பன், ஜ்யோராம் சுந்தர், வெண்பூ, பரிசல்காரன், அதிஷா போன்றவர்களின் பதிவுகளை தொடர்ந்து படிக்கிறேன்...உங்கள் பதிவும் படிக்கிறேன்...
எப்போதில் இருந்து படிக்கும் பழக்கம் ? பிடித்த எழுத்தாளர்கள் ?
சின்ன வயதில் இருந்து படித்துக்கொண்டிருக்கிறேன்...வீட்டில் அம்மா மளிகை கடை பொட்டலம் வாங்கி வந்தாலும் அதை கொட்டிவிட்டு அசுரத்தனமாக அதில் என்ன இருக்கிறது, அது எந்த புத்தகத்தின் பகுதி என்று கொலைவெறியோடு படித்திருக்கிறேன்...
சுஜாதா பிடிக்கும்...தேவிபாலா படுவேகமாக எழுதுவார்...படு விறு விறுப்போடு படிப்பேன்...
சாரு நிவேதிதா பற்றி ஏதோ சொல்லவேண்டும் என்றீர்களே ?
தனிமனித ஒழுக்கத்தோடு எழுதுங்கள் என்கிறார். இவர் ரொம்ப ஒழுங்கு. அவ்ளோதான்...
வலைபதிவுகள் படிப்பதால் என்ன நன்மை தீமை ?
பொதுவாக வலைப்பதிவுகள் ஒரு ஸ்ரெஸ் ரிலீப் என்று சொல்லவேண்டும்...வலைப்பதிவுகள் படிக்கும்போது மன அழுத்தங்கள் குறைந்து மனது லேசாகிறது...
பல்வேறு தகவல்களின் களஞ்சியம் என்றும் சொல்லலாம்...பொதுவாக செய்தி ஊடகங்களில் வெளிவராத தகவல்கள் கூட உடனுக்குடன் வெளியாகிது மிகவும் சிறப்பு...
எப்படிப்பட்ட பதிவுகள் வரவேண்டும் ?
நகைச்சுவை பதிவுகள் அதிகம் வரவேண்டும்...நகைச்சுவை என்ற பெயரில் மொக்கை போடுவது குறைய வேண்டும்...
தலைப்பு கவர்ச்சியாக வைப்பார்கள்...இங்கே க்ளிக் என்பார்கள்...உள்ளே சென்று க்ளிக் செய்தால் ஒரு மண்ணும் இருக்காது...இதுக்கு ஒரு பதிவு எதுக்கு ? டைம் வேஸ்ட் !!! போடும் மொக்கையை நல்ல மாதிரி, நகைச்சுவையா போடவேண்டும்...
வலையுலகின் எதிர்காலம் என்ன ?
இது ஒரு தொடர்பு ஊடகமாக, சோஷியல் நெர்வொர்க் ஆக, பிஸினஸ் நெர்வொர்க் ஆக உருவாக வாய்ப்பு உண்டு...மற்றபடி, பணிச்சுமை அழுத்தும்போது, மன அழுத்தம் குறைய வலைப்பூக்களை, நல்ல நகைச்சுவை வலைப்பூக்களை உபயோகிக்கலாம்...
உங்கள் குடும்பத்தினர் பற்றி / நீங்கள் வலைப்பூக்களை வாசிப்பதை அவர்கள் எப்படி எடுத்துக்கொள்கிறார்கள் ?
தகவல் தொழிநுட்ப துறையில் பணிபுரிகிறார் என்னுடைய கணவர், "அப்படி என்னதான் படிக்கிற அதுல" என்று ஆச்சர்யப்படுகிறார்..."அதெல்லாம் உங்களுக்கு தெரியாது" என்பேன்....
மொக்கை, கும்மி, பின்னூட்டம் என்பதெல்லாம் அவருக்கு புரியாத தமிழ் வார்த்தைகளாக உள்ளன...
வலைப்பூ ஆரம்பிக்கும் எண்ணம் உண்டா ?
கண்டிப்பாக...ஒரு அம்பது பதிவை எழுதி வைத்துவிட்டு, அதற்கு அப்புறமாக வலைப்பூவை ஆரம்பித்து ஒவ்வொன்றாக பதிவிடவேண்டும் என்பது என்னுடைய ஆசை...இன்னும் ரெண்டு மாசம் போகட்டும், இன்னும் ஒரு அதிரடி பதிவரை சந்திக்கபோகிறது இந்த வலையுலகம்...
************************************************************************
வாழ்த்துக்கள்...கண்மணி அக்கா சகோதரி ராப் போல காமெடியில் கலக்க வாழ்த்துக்கள்...!!!!
1 comment:
//ஒரு அம்பது பதிவை எழுதி வைத்துவிட்டு, அதற்கு அப்புறமாக வலைப்பூவை ஆரம்பித்து ஒவ்வொன்றாக பதிவிடவேண்டும் என்பது என்னுடைய ஆசை //
நானும் இப்படி தாங்க ஆரம்பிச்சேன்...
என்ன ஒரு சின்ன தப்பு பண்ணிட்டேன்னா...
எல்லாத்தையும் ஒரே நாள்ல அடிச்சுத் தள்ளிட்டேன்...
முதல் முதல் முதல் முதலாய் வாசகியோட பேட்டியை நீங்கள் எழுதியிருப்பது வித்தியாசமான முயற்சி....
உங்களை தொடர்ந்து படித்துக் கொண்டு வருகிறேன் ....
நன்றாகவே எழுதுகிறீர்கள்...
Post a Comment