நான் சுவீடனில் இருப்பதாக தெரிந்துகொண்டு ஆயிரக்கணக்கில் வந்து சந்தித்த அனைத்து ரசிகப்பெருமக்களுக்கும் (????!!!!!) நன்றி...
அதிலும் சுவீடன்காரர்களும் என்னுடைய வலைப்பதிவின் சுவீடிஷ் மொழிபெயர்ப்பை படித்துவிட்டு வந்து ஆட்டோகிராப் வாங்கியது சிறப்போ சிறப்பு...
ரயில்வே ஸ்டேஷனில் சந்தித்த கருப்பின நன்பரிடம் ஜிம்பாப்வே மற்றும் ராபர்ட் முகாபே பற்றி தெரிந்துகொண்டதோடு போதும் என்று நினைக்கிறேன்...
அடுத்து ? நார்வே...!!!
நார்வேயிலயாவது சாம்பார்ல புளி போட்டு செய்யவேண்டும் என்பதை தவிர வேறு பெரிய லட்சியம் இல்லை...தயவு செய்து புளி எங்க கிடைக்கும்னு சொல்லுங்கப்பா...!!!
பி.கு 1: குளிர் காற்று வீசும்போது மூக்கை மூடிக்கனும்னு கடைசீ நாள்ல சொல்லுறாங்க...சாதாரண குளிர் 0 டிகிரி, ஆனா குளிர் காத்துல -15 டிகிரியாம்..நுரையீரல் உறைந்து போய் க்றிஸ்மஸ் நியூஇயர் படுத்த படுக்கை....தொலைபேசியில் வாழ்த்து சொன்ன யோகன் அண்ணன், லீனா ரோய், மலைநாடன் அனைவருக்கும் நன்றி...
பி.கு 2: நான் வேடிக்கை பாக்குறமாதிரி போஸ் கொடுப்பது என்னுடைய சிங்கிள் ரூம்..ஹி ஹி
2 comments:
உங்களுடைய் பின்னூட்டம் வகுப்பறையில் அருமை ,
மனுதகருமம் மிக சிறப்பு
நன்றி
தங்கள் பதிவுகளை www.newspaanai.com இல் சேர்த்து பலருடன் பகிர்த்து கொள்ளுங்கள். www.newspaanai.com தமிழ் சோசியல் புக் மார்கிங் சைட். நன்றி
Post a Comment