
ஆகஸ்ட் 09 2009 : கடந்த ஏழு ஆண்டுகளாக நார்வேயில் வசித்துவரும் இலங்கையை சேர்ந்த தமிழர் செல்வராசா. இவர் நார்வேயில் வணிக நிறுவனம் ஒன்றை நடத்திவருகிறார். ஒவ்வொரு ஆண்டும், நார்வேயின் குளிர்காலத்தில் தமிழகத்தில் பயணம் செய்து, திருத்தலங்களை தரிசனம் செய்வது வழக்கம். குறைந்தபட்சம் மூன்று மாதங்கள் அவர் தமிழகத்தில் சுற்றுப்பயணம் செய்யும்போது, சரவணா ஸ்டோர்ஸ், பழனி முருகன், திருப்பதி , திருவண்ணாமலை போன்ற தலங்களை தரிசிப்பதுடன், பெரிய அளவில் தன்னுடைய நிறுவனத்துக்கு தேவையான பொருட்களையும் கொள்முதல் செய்வார்.
கடந்த ஐந்து ஆண்டுகளாக தமிழக சுற்றுப்பயணத்துக்கான விசாவை வழங்கி வந்த இந்தியன் எம்பஸி, இந்தமுறை இந்திய விசா தர மறுத்துள்ளது. அதிர்ச்சியடைந்த அவர், இந்திய எம்பசி அதிகாரிகளிடம் விசாரித்தபோது, சிகப்பு நிற பாஸ்போர்ட், அதாவது நார்வேஜியன் குடியுரிமை பெற்றிருந்தால் மட்டுமே இந்திய விசா தரமுடியும், இலங்கை பாஸ்போட்டுக்கு இந்திய விசா தர முடியாது என்று மறுத்துள்ளனர்.
எந்தவிதமான குற்றப்பின்னணி அற்றவரான செல்வராசா, எழுபது வயதுக்கு மேல் கடந்தவர். தனக்கு ஒரு சீனியர் சிட்டிஸன் என்ற வகையிலாவது இந்தியா செல்ல விசா வழங்கவேண்டும் என்று கோரியபோது, ஓஸ்லோ இந்திய எம்பஸி அதிகாரிகள் எந்த விதத்திலும் மனமிரங்கவில்லையாம்...
தமிழர்கள் இந்தியாவுக்கு வரும்போது, இந்திய சுற்றுலாத்துறையில் இருந்து, விமான துறையில் இருந்து, அவர் தங்கும் ஹோட்டல், அவர் வழக்கமாக வாங்கும் பழனி பஞ்சாமிர்த கடைக்காரரில் இருந்து அனைவருக்கும் லாபமே, எந்த விதத்திலும் நட்டமில்லை.
இது நார்வே எம்பஸியில் மட்டுமா, அல்லது மற்ற அனைத்து எம்பஸிகளிலும் இதே நிலையா, இந்திய வெளியுறவுத்துறை ஏதேனும் குறிப்பிட்ட வகையிலான வழிகாட்டும் நெறிமுறைகளை உருவாக்கியுள்ளதா, இலங்கை கடவுச்சீட்டுக்கு அனுமதி வழங்கக்கூடாது என்று ?
அப்படி வழிகாட்டும் நெறிமுறைகள் ஏற்கனவே இருந்தால் கடந்த ஐந்தாண்டுகளாக எப்படி அனுமதி வழங்கப்பட்டது ? இதுபோன்ற 'திடீர்' வழிகாட்டும் நெறிமுறைகள் வெளியுறவுத்துறைக்கும், இந்திய வெளியுறவு அமைச்சருக்கும் தெரிந்துதான் உருவாக்கப்படுகிறதா என்பது போன்ற கேள்விகள் எழுந்துள்ளன...
தகவல் தொழில்நுட்பம் பரவலாகிவிட்ட இந்த நாட்களில், அரசு துறையிலும், அமைச்சகத்தில் இருந்தும் வலைப்பதிவுகளை பார்வையிடுவதாக செய்திகள் வந்துள்ளவேளையில் இதனை வலைப்பதிவு முலம் வெளியிடுகிறேன்..
இந்த பதிவை தமிழக துணை முதல்வர் ஸ்டாலின், அமைச்சர் ஆ.ராசா போன்ற வலைப்பதிவு செய்யும் தமிழக அரசுத்துறையினருக்கும் அனுப்புகிறேன், மேலும் ஆங்கிலத்தில் எழுதி, இந்திய எக்ஸ்டர்னல் அபையர்ஸ் மினிஸ்டரிக்கும் அனுப்புகிறேன்..அதனால் உங்கள் மறுமொழிகளில் வேறெதுவும் விவரங்கள் இருந்தால் தெரிவியுங்கள்...இணைத்துக்கொள்கிறேன்...
தமிழக புலனாய்வு பத்திரிகைகள் தொடர்புகொண்டால், மேல்விவரங்களையும் தெரிவிக்கிறேன்.
8 comments:
kayamai pinnuuttam
ஏந்தான் இந்த எம்பசிகாரவங்க இப்படி எல்லாம் செய்யுறாங்களோ! அந்த முதியவருக்காக சாதா தமிழன் என்கிற வகையில் என்னால் ஒன்னத்தையும் கழட்ட முடியாதுதான். இருந்தாலும் எம்பசி மனமிரங்கி அவரது வயசு, வியாபார நோக்கம், கோயில் தரிசனம் போன்ற காரணங்களுக்காக விசா கொடுக்கவேண்டும் என .... எதிர்பார்க்கிறேன்.
உலகம் ரொம்பவே கெட்டுப் போச்சுடா சாமி!
இந்திய அரசுங்கறது தமிழின எதிர்ப்பு அரசு என்பதை விளக்கு போட்டுக் காட்டுகிறார்கள் அவ்வளவுதான்.
மடச் சாம்பிராணிகள் எது நல்லது ,எது கெட்டது என்ற வரைமுறையே இல்லாத
வக்கிரங்கள் நிறைந்த மடையர்கள்,இது தான் அரசு.
பயங்கரவாதிகளை ஓட்டை விட்டு விட்டுப் பாமர மக்களை வதைப்பது தான் அறிவா?
தமிழன் எந்த நாட்டு குடி உரிமை பெற்றிருந்தாலும் இலங்கை முக்கியமாக யாழில் பிறந்திருந்தால் விசேட கவனிப்புக்கு உட்பட்டாக வேண்டும். தங்களுக்கு பிந்திய தகவல் கிடைத்திருக்கிறது.
எச்சரிக்கையா இருக்க வேண்டிய இடத்தில் கோட்டை விட்டுவிட்டு இப்படி சாதாரண ஆட்களிடம் தன் விழிப்புணர்வை காட்டுவதில் நமக்கு நிகர் நாமே...
இலங்கைத் தமிழர் விடயத்தில்
எழுதப்படாத விதிமுறைகளை
இந்திய அதிகாரவற்கம் பல
வருடங்களாக நடைமுறைப்
படுத்திவருகிறார்கள்.தமிழரை
இந்த மொத்த உலகமும்
வெறுப்பதின் காரணம்
புரியவில்லை.
good india
இப்பிடியே புலம்பெயர்ந்திருக்கிற ஒட்டுமொத்த ஈழத்தமிழர்களுடைய இந்தியாவுக்கான விசாவை இந்தியா நிராகரித்தால் புண்ணியமாகிப்போகும்.
வருடம் பூராக உழைத்து கடைசியில் போத்தீசுக்கும் சரவணாக்கும் அள்ளிக்கொடுத்து விட்டு வருகிறார்கள் ஈழத்தமிழர்கள்.. அங்கே கலைஞருக்கும் சன்னுக்கும் கொடுப்பது போதாதென்று...
இந்த முடிவை நான் வரவேற்கிறேன்.
Post a Comment