Showing posts with label அப்பா. Show all posts
Showing posts with label அப்பா. Show all posts

Friday, June 26, 2009

புது அப்பாக்களுக்கான பாயிண்ட்ஸ் வெர்ஷன் 2


புது அப்பாக்களுக்கான பாயிண்ட்ஸ் என்ற முல்லையின் பதிவை பார்த்து இந்த பதிவு. அங்கே இதனை பின்னூட்டமாகவும் போட்டாச்சு...!!!

கண்ட கண்ட செய்திகளை கேட்டு மனது குழப்பமடையாமல் பார்த்துக்கொள்வதும் தேவை...

ஆறுமாதம் வரை தாய்ப்பால் மட்டுமே கொடுத்தால் குழந்தை நல்ல உடல் நலனுடன் இருக்கும்...சளி சுரம் போன்ற தொல்லைகள் அடிக்கடி வராது...

அப்படியே சளி சுரம் போன்றவை வந்தாலும், உடனே மாத்திரை போடுவது ஊசி போடுவது போன்றவற்றை தவிர்க்கலாம். தானாக சரியாகும்படி விடலாம்..பிள்ளையின் இம்யூன் ஸிஸ்டம் சிறப்பாக அமைய இது உதவும்...

குழந்தைகளை தூக்கும்முன் கைகளை நன்றாக சோப்பு போட்டு சுத்தம் செய்வது முக்கியம்.

குழந்தையை பார்க்க வருபவர்கள் அனைவரும் குழந்தையின் முகத்தில் வலுக்கட்டாய உம்மா தருவதை தடுக்கவேண்டும். அவர்கள் தவறாக எடுத்துக்கொண்டாலும் பரவாயில்லை. குழந்தையின் ஆரோக்கியம் முக்கியம்.

குழந்தையை தோளில் கிடத்தி முன்னும் பின்னும் கொஞ்சம் / என்ன ஒரு அரை மணி நேரம் நடந்தால் குழந்தை நன்றாக தூங்கும்.

குழந்தை திடீரென்று அழுதால் உடைகளை கழட்டி பரிசோதியுங்கள். இறுக்கமான உடைகள், அன்கம்பர்டபுளாக இருக்க வாய்ப்பு உண்டு.

அதிக குளிரும் சரி, அதிக சூடும் சரி, குழந்தைக்கு ஆகாது.

கச்சா முச்சா நாட்டு வைத்தியங்களை குழந்தைக்கு வலுக்கட்டாயமாக திணிப்பதை தவிருங்கள். நீங்கள் 21 ஆம் நூற்றாண்டில் இருக்கிறீர்கள். உங்கள் குழந்தைக்கும் 100 வருடத்துக்கு முன் இருந்த குழந்தைக்கும் வேறுபாடு உள்ளது. அந்த ரப்பஸ்ட்நெஸ் இப்போது இல்லை. அதனால் ஜாக்கிரதையாக இருங்கள்.

கடைசியாக, குழந்தையை பெற்றபிறகு தாய் தனது உடல் நலனில் அக்கறை இல்லாமல் இருப்பார். வேளைக்கு இரும்புச்சத்து, கால்சியம் போன்ற மாத்திரைகளை உட்கொள்வதில் சோம்பேறித்தனமும் வெறுப்பும் இருக்கும். நீங்கள் கட்டயப்படுத்தி அல்லது நல்ல விதமாக சொல்லி அந்த மாத்திரைகளை உட்கொள்ளச்செய்யவேண்டும்.

இல்லையென்றால் அடுத்த பத்து ஆண்டுகளில் மூட்டு வலி, கால் வலி கை வலி என்ற பல உபாதைகளுக்கு அவர்கள் ஆளாவார்கள்.

அப்பா டே விஷ்ஷஸ்...!!