Showing posts with label இரட்டைக்கொலை. Show all posts
Showing posts with label இரட்டைக்கொலை. Show all posts

Friday, January 09, 2009

சங்கீதா த மர்டரர்

சென்னை: 5 திருமணம் செய்து பயங்கர மோசடியில் ஈடுபட்டு, உச்சகட்டமாக முதிய தம்பதியின் படுகொலைக்குக் காரணமாகி கைதாகியுள்ள சங்கீதா, பிரபல நடிகர் ஒருவரை மிரட்டிப் பணம் பறித்த கதை தற்போது தெரிய வந்துள்ளது.

சைதாப்பேட்டை இரட்டை கொலை வழக்கில், கைது செய்யப்பட்டுள்ள சாகசக் கொலைகாரி சங்கீதா பற்றி தோண்ட, தோண்ட திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்தவண்ணம் உள்ளன.

சங்கீதா போட்ட அவதாரங்களில் ஒன்று துப்பறியும் நிறுவனத்தில் பணியாற்றியது. அந்த நிறுவனத்தில் போலீஸார் தீவிர விசாரணை நடத்தினர்.

அந்த நிறுவனத்தில் தனது அதிரடி நடவடிக்கைகளால் படு செல்வாக்காக இருந்துள்ளார் சங்கீதா. துப்பறியும் நிறுவனத்துக்கு உதவி தேடி வருபவர்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்காக சங்கீதாதான் கவுன்சிலிங் மூலம் விசாரிப்பாராம்.






கேஸ் விஷயமாக வெளியில் விசாரணை செய்ய செல்லும்போது, பெண் சப்-இன்ஸ்பெக்டர் என்று சங்கீதா கூறிக்கொள்வாராம். பெண் சப்-இன்ஸ்பெக்டர் வேடத்தில் இவர், தனது தோழி ஒருவரோடு பெரிய அளவில் பணம் சுருட்டியுள்ளதாக கூறப்படுகிறது.


பிரபல நடிகர் ஒருவர் தனக்கும், இன்னொருவருக்கும் நில பிரச்சினை இருப்பதாகவும், அதை தீர்த்து வைக்கும்படி சங்கீதா வேலை பார்த்த துப்பறியும் நிறுவனத்துக்கு வந்தார்.

ஆனால் அந்த நடிகரிடமே, பெண் எஸ்.ஐ. வேடத்தில் போய் மிரட்டிப் பணம் பறித்துள்ளார் சங்கீதா. இதுகுறித்து நடிகர் போலீஸை அணுக, சங்கீதாவை மட்டும் விட்டு விட்டு அவரது தோழியை மட்டும் போலீஸார் கைது செய்தனராம்.

டி.எஸ்.பியின் நல்லாதரவு...

சங்கீதாவுக்கு ஒரு டி.எஸ்.பி. நல்லாதரவு அளித்துள்ளதாகவும் கூறப்படுகிறது. அவரது உதவியதால்தான் நடிகர் புகாரிலிருந்து சங்கீதா மட்டும் தப்பியுள்ளார்.

சென்னை தங்க சாலையை சேர்ந்த கணவன்-மனைவி இருவர் தங்களுக்குள்ள சண்டைகளை தீர்க்க சங்கீதாவின் துப்பறியும் நிறுவனத்திற்கு வந்துள்ளனர். அந்த தம்பதிகளை மிரட்டியும் பணம் சுருட்டியுள்ளார்.

இதேபோல, கணவரால் துன்புறுத்தப்பட்ட பெண் ஒருவர் கைக்குழந்தையோடு உதவி கேட்டு சங்கீதாவிடம் வந்திருக்கிறார். அவரையும் மிரட்டி சங்கீதா தன்னோடு வேலைபார்த்த நண்பர் ஒருவருக்கு உல்லாச விருந்து படைக்க வைத்துள்ளார்.

இப்படி சங்கீதா கதையைத் தோண்டினால் மலைக்க வைக்கும் அளவுக்கு பல மேட்டர்கள் வெளியாகி வருகிறதாம்.

சங்கீதா 5வதாக கல்யாணம் செய்து கொண்ட தொழிலதிபருக்கும், சைதாப்பேட்டை கொலை வழக்கில் தொடர்பு இருக்கக் கூடும் என சந்தேகிக்கப்படுகிறது. அதேபோல சங்கீதா ஆதரவு டி.எஸ்.பியும் தற்போது போலீஸ் கண்காணிப்பின் கீழ் வந்துள்ளார்.

சங்கீதாவை 5 நாள் போலீஸ் காவலில் விசாரணை நடத்த அனுமதி கோரி தனிப்படை போலீசார் சைதாப்பேட்டை 23-வது கோர்ட்டில் மனுதாக்கல் செய்துள்ளனர். அந்த மனு இன்று விசாரணைக்கு வருகிறது.

விசாரணைக்கு சங்கீதா அனுமதிக்கப்பட்டால் மேலும் பல திடுக்கிடும் தகவல்கள் வெளி வரக் கூடும்.

சிறையில் ஹாயாக ...

இதற்கிடையே புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள சங்கீதா அங்கு படு கேஷுவலாக இருக்கிறாராம். சக பெண் கைதிகளுடன் படு நெருக்கமாக பேசிப் பழகுகிறாராம். சிறையில் இருப்பது போன்ற உணர்வே இல்லாமல், ஏதோ ஹாஸ்டலில் தோழியரோடு இருப்பது போல சிரித்துப் பேசி ஜாலியாக இருக்கிறாராம்.

கொசுறு: இவர் ஆச்சார அய்யங்கார் வீட்டு பெண் என்று நான் சொல்லமாட்டேன்..

நன்றி : தட்ஸ் தமிழ்