
- நயந்தாரா பிரபுதேவா கிசுகிசு வந்தவுடன் நாமக்கல் பதிவர் ஒருத்தர் மூனு நாளா சாப்பிடலையாமே ? சின்னப்பையா...உண்மைய சொல்லாதே...

- தமிழ் வலைப்பதிவர் ஒருத்தர் நமீதாவோட சொள்பேசியில் பேசும் அளவுக்கு நெருக்கமாம்...உதய சூரியா, எல்லாருக்கும் வெளிச்சம் உடுப்பா...

- காட்டுக்குள்ள இருக்க பதிவர் ஒருத்தரை சூட்டிங்ல பார்த்த மூனுசா நடிகையோட மம்மியும் பதிவரும் தொலைபேசியில் விடும் ஜொள்ளுக்கு அளவேயில்லையாம்...லா ல்லா லா ல்ல ல்லா ல்லா லா...

- பின்னவீனத்துவ அழகிய பதிவர் ஒருத்தரும் மும்பை இறக்குமதி நடிகை ஒருத்தரும் ரொம்ப நெருக்கமாம்.....விமான டிக்கெட் புக் பண்ணித்தர அளவுக்கு...அந்த நடிகை யாருங்கறது ரொம்ப ரகசியாம்....கவலைப்படாதே சகோதரா, எங்கம்மா கருமாரி...

- கர்நாடகாவை சேர்ந்த துள்ளிய இளமைக்காரி நடிகை இப்ப தமிழ் கத்துக்கறது தமிழ் பத்திரிக்கையாளரும் வலைப்பதிவருமான ஒருத்தர்க்கிட்டதானாம்...பாய் பிரண்டை வெட்டிவிட்டபிறகு இப்பதான் நீயா நானாக்கு இருக்கிறாங்களாம்...அழகிய அசுரா அழகிய அசுரா அத்த்துமீற ஆசையில்லையா...

- விஜய் டிவிக்கு நெருக்கமா இருக்க செல்வ பதிவரும் சாயா குடிச்ச மன்மத ராணியும் மொபைல் சூடாவற வரைக்கும் பேசுராய்ங்களாம்...சூப்பர் சூப்பர் சூப்பர்...
கிசு கிசு போடுபவர்கள் எந்த க்ளூவும் கொடுக்காமல் எரிச்சலைடைய வைப்பது காலங்காலமாக இருந்துவருகிறது...அதை உடைக்கும் விதமாக 50 சதவீத க்ளூவை படமாக கொடுத்துவிட்டேன்...ஆங் அப்புறம் இன்னொரு விஷயம், இந்த கிசுகிசுவில் ஒன்னே ஒன்னு தான் உண்மை...
ஏய் இங்க ஒருத்தன் சிக்கியிருக்கான்...வாங்கடே...கும்மலாம்...தமிழ்வெளியில் புதிய சேட் காம்பொனண்ட். நல்லா இருக்கு...தமிழ்மணத்தில் எலக்ஷன் நேரத்தில் செய்தது தான், ஆனால் உண்மையிலே கும்ம சிறந்த இடம் இது...
ப்ரீயா இருந்தா சொல்லிவிடுங்க, அங்கன வெச்சு கும்மலாம்...
படித்துவிட்டு தமிழ்ஷ், தமிழ்மணம்ல ஓட்டை போடுங்க...தமிழ்வெளியிலும் சங்கமத்திலும் ஆட்டோமேட்டிக்காக சூடாகும்...