தென்னிந்தியாவின் ஒபாமா விஜய், தன்னுடைய அரசியல் பாய்ச்சலை ஆரம்பித்துவிட்டார்..இளைய தளபதி விஜய் 2020ல் முதல்வர். இப்பத்திக்கு அமவுண்டு கொடுத்தாவது ஒரு கிளை செயலாளர் பதவியையாவது வாங்கிகோங்கடே...
செய்தி > தமிழுக்கு புதிதாக அறிமுகமாகவுள்ள நிகிதா ராவெல்.
விமர்சனம் > ரகசியா, முமைத்கான்...அடுத்த குத்தாட்ட ஆக்ட்ரஸ் ரெடிங்கோம்...
&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&

செய்தி > ஜே.கே ரித்திஷின் அடுத்த படம் வேட்டைப்புலி. இதுவரை ஜேகேஆரால் வாந்திபேதி பிரச்சினை தமிழகத்துக்கு மட்டும்தான், ஆனால் இந்த வேட்டைப்புலி, பாலிவுட்டையும் கடித்து குதற ரெடியாம். அட ஆமாங்க..இந்தியிலும் தயாராகிரதாம் இந்த கோராமை.
துஷ்மன் என்ற பெயரில் (ஜேகேஆருக்கே இந்த வார்த்தைக்கு அர்த்தம் தெரியுமா என்பது கேள்விக்குறி) பாலிவுட்டை தாக்கப்போகிறாராம் ஜே.கே.ஆர்...
பாலிவுட் கிளு கிளு ஹீரோயின்களோடு இந்தியில் குத்தாட்டம் போட அகிலாண்ட நாயகன் ரெடி. இனி டெல்லி பார்லிமெண்டில் மே பாலிவுட் ஹீரோ ஹே ஹே என்று ஹிந்தியில் பேசுவார் அகிலாண்டம்.
விமர்சனம் > டேய் உங்களுக்கெல்லாம் இரக்கமே இல்லையா...