Monday, January 29, 2007

ஒரு பின்னவீனத்துவ பின்னூட்டம்.

அனானி நண்பர் ஒருவர் ஒரு பின்னவீனத்துவ பாணி பின்னூட்டம் ஒன்றை கொடுத்துள்ளார்...(உபயம் - ம்யூஸ்)...ஆனால் கொஞ்சம் கண்ணைக்கட்டுகிறது தான் எனக்கு...என்னை கொஞ்சம் கலாய்த்திருந்தாலும் இதில் ஏதோ ஒரு மேட்டர் இருக்கு என்று தோன்றுகிறது...ஆனால் என்ன மேட்டர் என்றுதான் புரியவில்லை...கொஞ்சம் அரசியல்...கொஞ்சம் வலைப்பதிவு என்று தொட்டு, இவரும் நல்லாத்தாம் எழுதுறார்...ஆனால் பத்திகளுக்கு இடையே கொஞ்சம் கேப் விட்டு எழுதினா படிக்கும்போது கண்ணைக்கட்டாம இருக்கும்..இனிமேலாவது ஆவன செய்வாரா ? (பாலபாரதிக்கும் பின்னூட்டம் போட்டது நீங்கதானேங்னா...) இதை பதிவாக வெளியிடுவது சும்மா சேமிக்க...::)))))))))))

வியாழன், ஜனவரி 25, 2007 ஸ்ஸப்பா கண்ணைக் கட்டுதே உன் தலைமைபீடத்தில்நான் வைகோவா செஞ்சியா?நீ பொதுகுழுவென்றால்நான் சேலமா சென்னையா?என்று மண்டையைப் பிய்த்துக் கொண்டிருக்கும் மதிமுகவைப் பார்த்து கபிலனின் லிஸ்டை உல்டாப் பாடலாய் குசும்பன் எழுத கிலியடித்துப் பொகின்றார்கள் வைகோவும் மற்றும் செய்தித் தொடர்பாளர் கேஎஸ்ஆர். "என்னோட நிலைமையைப் பார்த்தாயா ராதா? நேத்து மொளைச்ச வலைப்பூக்கள் கூட என்னையக் கிண்டல் பண்ற மாதிரிப் போச்சே?" என்று அவர் அழுது கொண்டே கறுப்புத் துண்டில் மூக்கு சிந்துகின்றார். அப்போது சடேரென்று ஒரு ஆட்டோவில் முகம் மறைத்த உருவம் இறங்குகின்றது. "அண்ணா மீட்டருக்கு மேல ஒண்ணுமே வேண்டாம். மேட்டர மட்டும் சுகுற்றா தாரேன்", என்றது. ஓசியென்றால் பினாயிலையும் குடிக்கும் வீரத்தமிழனன்றோ நாம்! கிடைத்தவரையில் லாபமென்று நினைத்தபடி ஊம் கொட்டுகின்றார் வைகோ. "அண்ணாத்த மதிமுக லவ்ஸ் மீ; மதிமுக லவ்ஸ் மீ நாட்" அப்பிடின்னு செந்தமிழ்ல்ல அறிக்கை ஒண்ணு வுடுங்க. அதுல நீங்க மதிமுகவையும் திட்டணும். வெட்டிப் போட்ட திமுகவையும் திட்டி அழும்பு பண்ணணும். ஆனா நீங்க குறிப்பிட்டு யாரையும் திட்டுன மாதிரி தெரியப்படாது" என்கிறது மீட்டர். "என்னது என்னோட மதிமுகவையே திட்டுறதா?" வைகோ வாயைப் பிளக்கின்றார். "அட மாம்ஸே அங்கதான் உங்க கைங்கர்யம் இருக்கு. LG'யும், செஞ்சியும் இருக்கிற மதிமுகவைத் திட்டினேன் அப்பிடின்னு பிட்டைப் போட வேண்டியதுதான? வேணும்னா சொல்லுங்க நானே அறிக்கையை டிராப்ட் செஞ்சுத் தாரேன்" என்கின்றார் முருகேசன். "அடப்பாவிங்களா அரசியல் அஸ்தமனத்திற்கு நானே கால்கோளிடுவதா" என்று பதறியபடி பறக்கின்றார் வைகோ."அய்யய்யோ LG பெருங்காயத்திற்கு என்ன ஆச்சு?" என்று பதறியபடி கோபாலைத் தள்ளிவிட்டுக் கொண்டு மூச்சிறைத்தபடி ஓடி வருகின்றார் துளசி. "என்னது LG பெருங்காயமா? நாசமாப் போச்சி. நாங்க சொன்னது L.Ganesan" திருத்துகின்றார் கேஎஸ்ஆர். "இல்லை துளசி சொன்னது சரிதான். LG உருவாக்கியது பெருங்காயம்தாம்" என்றார் வைகோ கவித்துவமாய். "அய்யய்யோ என் கணேசனுக்கு என்ன ஆச்சு?" என்றார் பிள்ளையார் பக்தையான துளசி. "நேக்கு பைத்தியமே பிடிக்கும் போலருக்கே. மத்த குழப்பத்தை விட இந்தம்மா கொழப்பறதை தாங்க முடியலியே. அட ராமச்சந்திரா", என்று கதறுகின்றார் கேஎஸ்ஆர். "இப்போது செஞ்சியையும் ஏன் இழுக்கின்றாய்? நீயும் அவர் கட்சியா?" என்று வைகோ எகிற, "அடடே ராமச்சந்திரனுக்கு என்ன ஆச்சு?" என்று துளசி வினவி விவகாரத்தை பெரிதாக்குமுன் கூட்டாக எஸ்கேப்பாகின்றார் கேஎஸ்ஆர்."தலைவா நம்ம ராங் ரூட்டுல வந்துட்டோம் போலருக்கு; போர்க்களத்துள அடிக்கிற பொணவாடையைப் பாத்தா இது இன்பர்மேஷன் ஹைவே போலருக்கு; சொந்த செலவுல சூனியம் வைக்கிற ஆளுங்க இங்கன ஜாஸ்தின்னு கேள்விப்பட்டேன். வாங்க வேற வழியா ஓடிப்போயிடலாம்" என்ற கேஎஸ்ஆரை மடக்கிய வைகோ "இன்பர்மேஷன் ஈஸ் பவர் என்றான் ஈஸ்ட் இந்தியத் தமிழன்; வந்ததுதான் வந்தோம் முழுதும் பார்த்து விடுவோம்" என்றார்."ஒன் டூ திரீ போர் பைவ் ஒன்ஸ் ஐ காட் எ பிஷ் அலைவ்; சிக்ஸ் செவன் எயிட் நயன் டென் தென் த்ரூ இட் பேக் எகெய்ன்" என்று பாடியபடி வந்தவர் வைகோவைப் பார்த்து ஸ்டைலாய் "பாபாவின் கவுண்ட் டவுன் ஸ்டார்டர்ட்" என்று கர்ஜிக்கின்றார். "என்ன இழவுடா இது இங்கேயும் ஏற்கெனவே கட்சி பிரிஞ்சு கவுந்தடிச்சுக் கெடக்கும் நேரத்துல இந்தாளு வேற கவுண்ட் டவுன் போடுறானே; ஒருவேளை விஷயம் தெரிஞ்சவனோ?" என்று முனகியபடி வைகோ "எனக்கு பாபான்னா ரொம்ப உசிரு. அதுனாலதான் தெலுகு-கங்கைத் திட்டம் விட்டு கிருஷ்ணா நதிநீரைக் கொண்டு வர அவரோட திட்டம் போட்டேன். அத மாறன் மூலம் மோப்பம் புடிச்சி முந்திக்கிட்டார் அண்ணன் கருணாநிதி" என்றார். கேஎஸ்ஆரோ "அண்ணே நீங்க சொல்றது புட்டபர்த்தி பாபா. இது வேற பாபா" என்று காதைக் கடிக்கின்றார். "விஷயதானம் செய்யிறேன் வாருங்க. கட்சியில ஒன் டூ டென் யாருன்னு அடிக்கடி லிஸ்டை வெளியிட்டு ஜல்லியடிக்கணும். சென்னை காண்டாக்டைப் புடிச்சி முடிஞ்சா கில்லியிலயும் வரவழைக்கணும். வருஷத்துக்கு ஒரு முறை இல்லாம வாரத்துக்கு ஒரு முறை போட்டு அவனவனையும் வகுத்தால போக வைக்கணும். முடிஞ்சா தொண்டர்படை, பாதுகாப்புப்படை, அம்மாதுதி, சின்னம்மா அந்தாதி, மாறன் கலம்பகம்ன்னு கேட்டகிரி வாரியா மாத்தி மாத்தி லிஸ்டைப் போட்டு போற வர்றவனுக்கெல்லாம் பாலூத்தணும்" "அப்பிடி ஊத்தினா?" குழப்பாமானார் வைகோ. "அடப்போய்யா அரசியல் புரியாமப் பேசுற; பத்து பேரை நம்பர் ஒண்ணு நீதான்ன்னு கையைக் காட்டினா அத்தனைப் பேரும் உன் பாக்கெட்டுக்குள்ளே; தமிழனுக்கு நன்றி உணர்ச்சி பெருக்கெடுக்க தலீவான்னு கால்ல உழாட்டியும், கப்சிப்'ன்னாவது கெடப்பான்; நெட்டுல இந்த பிட்டு சூப்பரா வொர்க் அவுட் ஆவுது தல" என்று கேட்டதும் வைகோவிற்கு "நம்பர் ஒண்ணே" வந்துவிட அவசர அவசரமாய் அகல்கின்றார்.மறைவிடத்தில் சடாரென்று மொடர்ன் மோகினி ஒன்று தோன்ற சடர்ன் பிரேக் போடுகின்றார் வைகோ. "இவ்விடம் கட்சியடி கடிகளுக்கு நீதி வழங்கப்படும்" என்று மொடர்னாய் கொஞ்சினாள் கேர்ள். "ஆஹா நீதித் தேவையை தீர்க்க வந்த தேவதையே வா! சோனியா மட்டும் சட்டம் போடாவிட்டால் கட்சிக்கடி ஆழமாயிருந்திருக்கும். மன்மோகன் மட்டும் மட்டுறுத்தா விட்டால் பின்னூட்டம் இன்னும் மோசமாக இருந்திருக்கும்" என்று வைகோ உளறிக் கொட்ட காண்டாகின்றார் கேஎஸ். "பேஷனில்லா தமிழன் பெருமையாய்க் கேட்டது கண்டு, எண்ட நிகண்டான உங்கள் Tooth Paste பீய்ச்சல் Teething முன்னர் என்றும் சொல்லிக் கொல்லலாம். பிரச்சினை உங்களுடைய பாரபட்சமா? பாராபட்சமா?ன்னு ஒரு கால்லதான் தொங்குது மெல்லின வல்லினமாய். இதைபத்தி ஆறுமுகமாய் வந்து நாவலராய்ப் போனவரோ, ஆழமாய் உழுதுபோட்ட அ.முத்துலிங்கமோ தெளிவின்றி இருந்ததாலும் பிரச்சினை பெரிதாகியிருக்கலாமெண்டு இவ யோசிக்கிறா" என்று மொடர்ன் முடித்ததும் 'இதுக்கு வைகோ உளறலே சூப்பர்மா' என்று தலையாட்டித் தெறிக்கின்றார் கேஎஸ். "இஞ்ச பாருங்கோ" என்று இளம்பெண்ணை ஒத்த முகமூடி உருவம் திடீரெனக் குதிக்க "நான் அப்பவே சொன்னேனே நமக்கு நேரம் சரியில்லன்னு" என்று புலம்ப ஆரம்பிக்கின்றார் கேஸ். "மதிமுக மீது பரிச்சயமுண்டு எண்ட கேள்வியை பரீட்சிக்கவே சேலம் பொதுக்குழுவிற்கு சென்றேன். ஆனால் அங்கே மசால்வடை என்ற பஷணம் பரிமாறப்படாததால் வேறு பாரமேதுமின்றி நான் உலா வந்தது வேறு விதயம். அங்கு போனபோது வைகோ, எல்.கணேசன், செஞ்சி இராமச்சந்திரன், வையாபுரி, சிப்பிப்பாறை ரவிச்சந்திரன், நாஞ்சில் சம்பத் போன்றோரின் கைவண்ணங்கள் காணவே. ஆனால் பெருந்தலைகள் உருட்டும் ஆட்டம் இவை என்று என்பதை மீண்டும் நினைவுறுத்திக்கொள்கின்றேன்." என்று முடித்தவுடன் அய்யய்யோ பேஷனில்லாத தமிழனைக் கூட நம்பலாம் ஆனா Passion இல்லாத DJ தமிழன நம்பாதடோய்", என்று கதறுகின்றார் கேஎஸ்.யாமிருக்க பயமேனென்று அட்டெண்டெண்ஸ் போடுகின்றார் உஷா. "வைகோ நீங்க அருமையா அடிச்சு ஆடுறீங்க இருந்தாலும்..." என்று உஷா இழுத்ததும் அய்யய்யோ என்று அப்பாவியாய் விழிக்கின்றார் வைகோ. "மத்தியில மன்மோகனோட கூட்டணி. மாநிலத்தில் அம்மாவிடம் அடைக்கலம்... இப்பிடி மட்டும் அரசியல் பண்ணா பத்தாது. விழுப்புரத்தில் வி.சி. யோட கைகுலுக்கல்; கல்பாக்கத்தில் கம்யூனிஸ்ட்களோடு நடைப்பயணம்; மூணாறில் மூவேந்தர் கட்சியோடு மாநாடு; தேக்கடியில் தேமுதிகவோடு தேநீர் விருந்து; முட்டத்தில் முஸ்லீம் லீக்கோடு முகாம்; இப்பிடின்னு எல்லா இடத்துலேயும் அட்டெண்டெண்ஸ் போடோணும்; இவ்வளவு ஏன் இப்ப எந்த கட்சியில நீங்க இருக்கீங்கன்னு அவனவன் மண்டையைப் பிச்சிக்கணும். அப்பிடி செஞ்சீங்கன்னு வைங்க உங்கள விட்டு பிரிய நினைக்கிற ஆளுங்க எந்த கட்சியில போயி ஐக்கியமாகிறதுன்னு தெரியாம உங்களோடயே இருந்துடுவான்", என்றதும் "ஆஹா விட்டா நம்மள லாரல்-ஹார்டி ஆக்கி இண்டெர்நேஷனல் லெவல்ல சந்தி சிரிக்க வைச்சிடுவாங்க" என்றபடி இருக்குமிடம் தெரியாமல் மறைகின்றார்கள் வைகோவும், கே எஸ்ஸும். இன்னமும் அட்வைஸ் கொடுக்க நான், நீயென்று பலர் இணையத்தில் போட்டி போடுவதாகத் தகவல்....பிகு: சும்மா இருக்க வுட மாட்டேங்றாங்ணா... அதான் மேட்டருங்ணா...

16 comments:

கோவி.கண்ணன் said...

ஒன்னுமே புரியல,
தனித்தனி பத்தியாக போடுப்பா...!

என்னமோ பதிவை படிக்கையிலே மீட்டரண்ணா எழுத்து ஞாபகம் வருது !
:)

நாமக்கல் சிபி said...

:))

நல்லா இருக்குங்க ரவி!

சரியான காமெடிதான்!

thiru said...

:)))

Anonymous said...

ரவி சார் பதிவருங்கள கலாய்ச்சிருங்காங்க. துளசிம்மா, பாஸ்டன் பாலா சார், DJ தமிழன், கடலோடி கணேசன் சார், மீட்டர் முருகேசன், பிகேஎஸ் சார், மிதக்கும் வெளி, முகமூடி, ஞானவெட்டியான் ஐயா, விடாது கருப்பு, உஷாஜீ, குசும்பன், மாசி, மதிக்கா, பாலபாரதி, ஆப்பக்கடைகாரர் இப்படியே லிஸ்ட் போகுது பாருங்க.

குழலி / Kuzhali said...

kusumban பதிவிலும் இதே இருக்கே.... இதை படிச்ச உடனே அங்கே போனேன், நான் நினைத்தது சரிதான்....

Anonymous said...

கோவி அது மீட்டர் இல்லப்பா. மீட்டரையே தூக்கி சாப்பிடுற வேறொருத்தரு. இங்கே பாருங்கப்பா
http://kusumban.blogspot.com/2007/01/blog-post_25.html

வரவினையானும் கொழம்பிட்டாருப்பா. இது ரவி, பாலபாரதி பத்தில்லாம் இல்ல. பாஸ்டன் பாலாவோட பதிவு போட்டவரோட லடாய் பத்தினது

PKS said...

வரவணையான்,

பி.கே.எஸ். சாரா? இந்த சார் மோர் எல்லாம் கொஞ்சம் ஓவரா தெரியலையா? பெயர் சொல்லியே அழைக்கவும்.

குசும்பன் பதிவில் அவர் எழுதியிருந்ததை யாரோ ரவிக்கு அனானியாக பின்னூட்டமாய் இட்டிருக்கிறார்கள் என்று நினைக்கிறேன்.

அன்புடன், பி.கே. சிவகுமார்

Anonymous said...

சாராக பதிவு உயர்வு பெற்ற எங்கள் அண்ணன் பிகேஎஸ் வாழ்க வாழ்க

சென்ஷி said...

முன்னாடியெல்லாம் விகடனில் சுக்காண்டி, மக்காண்டி என்ற இரு கேரக்டர்கள் இப்படித்தான் உளறிக் கொட்டி செய்திகளை தரும். அதுபோலத்தான் உள்ளது இதுவும்.

சென்ஷி

வரவனையான் said...

//வரவினையான் said...
ரவி சார் பதிவருங்கள கலாய்ச்சிருங்காங்க. துளசிம்மா, பாஸ்டன் பாலா சார், DJ தமிழன், கடலோடி கணேசன் சார், மீட்டர் முருகேசன், பிகேஎஸ் சார், மிதக்கும் வெளி, முகமூடி, ஞானவெட்டியான் ஐயா, விடாது கருப்பு, உஷாஜீ, குசும்பன், மாசி, மதிக்கா, பாலபாரதி, ஆப்பக்கடைகாரர் இப்படியே லிஸ்ட் போகுது பாருங்க//


யாருய்யா அது, திண்டுக்கல்லுக்கே பூட்டா ?

எம் பேருலையே அதர் ஆஃப்சனா.

அதர் ஆஃப்சனுல நாங்க போஸ்ட் கிராஜுவேட் வாங்குனவுங்க. எங்ககிட்டேயேவா?

:)))))))))))))

பொன்ஸ்~~Poorna said...

//அதர் ஆஃப்சனுல நாங்க போஸ்ட் கிராஜுவேட் வாங்குனவுங்க. //
அவைங்க பி.எச்.டி. வாங்கினவைய்னங்க போல ;)

Anonymous said...

both are same

வரவனையான் said...

பொன்ஸ் said...
//அதர் ஆஃப்சனுல நாங்க போஸ்ட் கிராஜுவேட் வாங்குனவுங்க. //
அவைங்க பி.எச்.டி. வாங்கினவைய்னங்க போல ;) //


:))))))))))))))))))))))))))))

அப்படித்தான் தெரியுது, "கில்லாடி புல்லட்டை வெள்ளையடிச்சு வித்த" கதையால்ல ஆகிப்போச்சு

:((

Anonymous said...

என்னைப் பத்தி அவதூற கெள்ளப்பராய்ங்க. நம்பிடாதீங்க

- பரட்டை என்கிற அழகுசுந்தரம்

Pot"tea" kadai said...

மிஸ்டர் வரவெணையான், உங்களுக்கு தமிழ் படிக்க வராதோ? வரவினையை வரவணைன்னு நீங்க புரிஞ்சிட்டா பி எச் டி முடிச்ச்வங்க மேல எப்பிடி தப்பு சொல்ல முடியும்.

***
சார்ன்னவொடனே டக்குன்னு வண்ட்டாரு அடலாண்டிக்கு அப்பாலர்ந்து...

குசும்பன் said...

ஆஹா என்னடா என்னோட பதிவிலே காத்தடிக்குதேன்னு பாத்தா இதான் விஷ(ய)மா?

;-))))))))))