Tuesday, January 16, 2007

இந்துக்கள் என்று கேவலப்படவேண்டாம் ஜடாயு

ஜடாயுவின் பதிவில் போட்ட பின்னூட்டம். சேமிப்பதற்காக இங்கே போடுகிறேன். அவர் வெளியிட்டதும் நான் எடுத்துவிடுவேன். ஆபீஸ் முடிஞ்சு வீட்டுக்கு போய்ட்டார் போல...

//நாம் இந்துக்கள் என்று சொல்லிக் கொள்வதில் கேவலப்படவேண்டுமாம். // என்று சொன்னாயா என்று வஜ்ரா கேட்டிருந்தார்...ஜல்லியாக ஜடாயு ஒரு பதிவிட்டு ஜோ பொங்கல் கொண்டாடியதை சாடியிருந்தார்...இந்த பதிவு ஒரு சிலருக்கு தான் புரியும்...புரியாதவங்க கொஞ்சம் ஜடாயு பதிவை படிச்சுட்டு வாங்க..( இந்த கொடுமையான ஜல்லிக்கு துனைபோகிறாயே முண்டமே !!!)

வஜ்ரா அவர்களே...நான் அப்படி சொல்லவில்லை...நாம், நமது பண்டிகை, என், எனது பண்டிகை, அடுத்தவருக்கு இல்லை, அஸ்க்கு புஸ்க்கு என்ற சிந்தனையைத்தான் சாடினேன். தமிழர் திருநாள் மட்டும்தான் அனைவரும் கொண்டாடும் திருநாளாக இருக்கிறது. அதுக்கும் இந்துத்துவ முலாம் பூசி, என்ன கொடுமை அய்யா !!!

மதம் என்பது என்ன ? இந்த(து) மதத்தை நீங்கள் எத்தனை ஆண்டுகளாக சார்ந்திருக்கிறீர் ? ஆயிரம் ஆண்டுகள் ? இரண்டாயிரம் ஆண்டுகள் ? ஒரு மூன்றாயிரம் ஆண்டுகள் ? அதற்கு முன் யார் அய்யா நீர் ? சூரியனையும், பாம்பையும், கடலையும் வழிபட்ட காட்டுமிராண்டி கூட்டம் தானே ? நபிகளை வணங்குபவர் ஆயிரத்தைந்நூறு ஆண்டுகளாக அதை சார்ந்திருக்கிறார், கிறிஸ்தவ மதத்தில் உள்ளவர் ( இந்தியாவில்) நானூறு ஆண்டுகளாக சார்ந்திருக்கிறார் என்று வைத்துக்கொள்வோம்...

இந்த இரண்டு பிரிவினரும் மூன்றாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு அதே காட்டுமிராண்டி கூட்டம் தானே ? பயந்து நடுங்கவைக்கும் அத்தனையும் அவனுக்கு தெய்வம். பாம்பு தெய்வம். அது முட்டையும் பாலும் சாப்பிட்டு புத்துக்குள்ள இருக்கு. அதை புத்து மாரியம்மன்னு சொல்லிட்டீங்க. ஏன்யா, ஐந்தறிவு கூட இல்லாத பாம்பு எப்படிய்யா உனக்கு தெய்வம் ? மண்டையில கொஞ்சமாவது மசாலா இருந்தா யோசிக்க மாட்டாயா ? க்வாண்டம் பிஸிக்ஸை பற்றி பேசுகிறாய்..பிக் பாங் தியரி, டார்வின் பரிணாம வளர்ச்சி எல்லாவற்றுக்கும் ஆதாரம் இருக்கு...கிருஷ்னர் மலையை தூக்கியதுக்கு ஆதாரம் இருக்கா ? ஒருத்தன் வாங்கய்யா...எவராவது ஒருத்தர் விளக்கம் சொல்லுங்க...பொங்கலாம் போகியாம்...

அதற்க்காக ஆத்திகவாதிகள் அத்துனைவரையும் நான் வெறுத்து சொல்லவில்லை...அவரவர் நம்பிக்கை அவருக்கு...மத்தவருக்கு உள்ளன்போடு உதவனும் என்னும் மனப்பாங்கு ஊற்றெடுக்கும் உள்ளம் தானய்யா கடவுள். அந்த உள்ளத்தை கையெடுத்து வணங்குறேன்...கண்ட உயிரற்ற கல்லையும் அல்ல...

இங்கே நாத்திகம் வலியுறுத்த வரவில்லை நான், 'மதம்' பிடித்த சில ஜந்துக்கள் மனிதரை பிரிக்க எந்தெந்த வழிகளில் முயலுகிறன்றதே என்ற ஆற்றாமையில் எழுதுவது...

37 comments:

ரவி said...

கொலைவெறி என்ற குறிச்சொல்லில் வகைப்படுத்தியுள்ளேன்......நான் க்ரியேட் செய்யலைங்க...யாரோ...மேபி லக்கி ???

Anonymous said...

இந்த கொடுமையான ஜல்லிக்கு துனைபோகிறாயே முண்டமே !!!)
ithu super!!!

Anonymous said...

//கொலைவெறி என்ற குறிச்சொல்லில் வகைப்படுத்தியுள்ளேன்......நான் க்ரியேட் செய்யலைங்க...யாரோ...மேபி லக்கி ???//

bramin puththi sakkadai.
வெறி வெறி வெறி வெறி வெறி வெறி வெறி வெறி வெறி வெறி வெறி வெறி வெறி வெறி வெறி வெறி
bramana வெறிyarkaL கொலைவெறி-ku ellaam
payappadamaattaar.

கோவி.கண்ணன் said...

காந்தி ஜெயந்தியும் இந்து பண்டிகையாமே ?
:)

thiru said...

ரவி,

நல்ல புரிதலான பதிவு. பாகன் வழிபாட்டுமுறை என்பது எந்த மதத்திற்கும் உரியதல்ல. அவை நமது மூதாதையரின் ஆதிகால வழிபாட்டுமுறை. அவற்றின் தொடர்ச்சி இன்றும் பல மதங்களில் உள்வாங்கப்பட்டுள்ளன. இதை ஒரு மதத்தினருக்கு மட்டும் உரியதாக அடையாளப்படுத்துவது சுத்த மோசடி. இது ஒரு கலாச்சார தொடர்ச்சியே. இன்றும் பல நாடுகளில், பல விதமான நாட்களில், பல பெயர்களில் பொங்கலாகவோ, தாங்ஸ் கிவிங் ஆகவோ, ஹார்வஸ்ட் பெஸ்டிவெல் என்றோ இந்த பண்டிகை கொண்டாடப்படுகிறது. இதில் இந்து என்பது பண்பாட்டு திரித்தல்.

//உலகம் முழுதும் வாழ்ந்த பாகன் (pagan) மதங்கள் ஒரு காலத்தில் கொண்டாடி வந்த சூரியத் திருநாளின் மரபுகளோடு இயைவதால் உலகின் ஆதித் திருநாளாகவும் ஆகிறது.//

இது ஜடாயுவின் பதிவின் மேற்கோள். இந்த வாக்கியத்திற்கும் அவரது முழு பதிவிற்கும் முரண்பாடு உள்ளது.

இந்த விடயத்தை சுட்டியமைக்கு நன்றி!

Anonymous said...

உழைப்பாளிகளின் விழாவான பொங்கலைப் பற்றி உழைப்பின் வாசனையே தெரியாத கூட்டம் பேசுவதற்கு அருகதையில்லை.

பொங்கல் பண்டிகை இந்துப்பண்டிகை என்று பம்மாத்துப் பேச்சு வேறு.

செந்தழல் ரவியின் கருத்து மிகவும் சரியானது.

திருவடியான் said...

ரவி..

ஜடாயு என்கிற அரக்கனுக்கு (நரகாசுரன் ரேஞ்சிற்கு நினைத்துக் கொள்ளவும்) நீங்கள் சொன்ன பதில் மிக நன்று.

திருவடியான்

ரவி said...

///ithu super!!! ////

அனானி 2, நன்றி !!!!!

ரவி said...

////காந்தி ஜெயந்தியும் இந்து பண்டிகையாமே ?
:) ////

இல்லை...முஸல்மான் பண்டிகை...அந்த இனிய நாளில்தான் பிரியாணி மணக்கும் !!! ஹி ஹி !!! ஆமாம் காந்தி தெரியும், ஜெயந்திங்கறது யாருங்க ?

பொன்ஸ்~~Poorna said...

//இந்த கொடுமையான ஜல்லிக்கு துணைபோகிறாயே **** !!!)//
ரிப்பீட்டே. ;)

//மத்தவருக்கு உள்ளன்போடு உதவனும் என்னும் மனப்பாங்கு ஊற்றெடுக்கும் உள்ளம் தானய்யா கடவுள். //
இதக் கவனிச்சிருக்கவே மாட்டாங்களே..

ஆமாம், இதை ஏங்க இம்சையில் போட்டுட்டீங்க? :)

பொன்ஸ்~~Poorna said...

//இந்த கொடுமையான ஜல்லிக்கு துணைபோகிறாயே **** !!!)//
ரிப்பீட்டே. ;)

//மத்தவருக்கு உள்ளன்போடு உதவனும் என்னும் மனப்பாங்கு ஊற்றெடுக்கும் உள்ளம் தானய்யா கடவுள். //
இதக் கவனிச்சிருக்கவே மாட்டாங்களே..

ஆமாம், இதை ஏங்க இம்சையில் போட்டுட்டீங்க? :)

ரவி said...

வருகைக்கு நன்றி !!! இது இம்சை தானே !!! :)))) ரிப்பீட்டு சரியான இடத்துலதான் அடிச்சீங்க...

✪சிந்தாநதி said...

:-)))

senthil.c.kumaran@gmail.com (செந்தில் குமரன்) said...

தலை வணங்குகிறேன் ரவி. நல்ல கருத்து சொல்லி இருக்கிறீர்கள்.

ஆனால் இந்து ஆதிக்க வெறியை கண்டித்த நீங்கள் இஸ்லாமிய தீவிரவாத வெறியையும், கிறிஸ்துவ பிரிவினை வெறியையும் கண்டிக்கத் தவறி விட்டீர்கள். பல இடங்களில் இதே தவற்றினை எல்லோரும் செய்கிறார்கள் நீங்களும் செய்யலாமா?

இந்து ஆதிக்க வெறி கலாச்சாரம் எல்லாம் என்னால் தான் உருவானது என்று சொன்ன அந்தப் பதிவில் இஸ்லாமிய தீவிரவாத வெறி கலாச்சாரமாவது ஒண்ணாவது அதெல்லாம் கிடையாது என் சாமி தான் எல்லாமே அதை மீறி கலாச்சாரமும் கிடையாது ஒண்ணும் கிடையாது என்று சொல்லியதை கவனிக்கவில்லையா?

இல்லை கிறிஸ்துவ பிரிவினை சக்தி தமிழ் பண்டிகையாகையால் கொண்டாடினோம் என்று சொன்னதை கவனிக்கவில்லையா? ஏன் இந்து பண்டிகையாக இருந்தால் அதனைக் கொண்டாட மாட்டார்களா அவ்வளவு பிரிவினையா உங்களுக்குள்?

இதில் நீங்கள் குறிப்பிட்டுள்ளது போல ஜடாயுவையோ, நல்லடியாரையோ இல்லை ஜோவையோ குறை கூறவில்லை மனிதனுக்குள் இத்தனைப் பிரிவினை வளர்க்கும் இந்து ஆதிக்க வெறியையும், இஸ்லாமிய தீவிரவாத வெறியையும், கிறிஸ்துவப் பிரிவினை வெறியையும் தான் குறை கூறுகிறேன்.

அரசியல் காரணங்களால் ஆதிக்க வெறியை மற்றும் குறை கூறி தீவிரவாதத்தையும் பிரிவினைவாதத்தையும் வளர்த்து விடாதீர்கள். எல்லாமே கொடுமையானதுதான் எல்லாமே மோசமானதுதான் என்பதை உணருங்கள்.

எல்லோரும் மனிதர்கள் என்பதை இந்து ஆதிக்க வெறி கொண்டிருப்பவர்கள் மட்டும் உணர்ந்தால் போதாது. இஸ்லாமிய தீவிரவாத வெறியினரும் கிறிஸ்துவ பிரிவினை வெறியினரும் கூட உணர வேண்டும்.

ரவி said...

கோதுமையையும், ரொட்டித்துண்டையும் காட்டி மதம் மாற்றிய அல்லேலூயா கோஷ்டியும், கருவில் இருக்கும் குழந்தைக்கு குண்டுவைக்க கற்றுத்தரும் தீவிரவாத முஸ்லீம்களையும் ( கவனிக்க, எல்லா கிறிஸ்தவர்களையும் / முஸ்லீம்களையும் சொல்லவில்லை) நான் சொல்லவில்லை என்பதற்காக நான் அவர்களை சாடவில்லை என்பதாகாது குமரன். உங்கள் அருமையான கருத்துக்களை அப்படியே பதிவில் சேர்த்துவிடலாமோ என்று யோசிக்கிறேன்...

லக்கிலுக் said...

எதுக்கு இந்த கொலைவெறின்னு தெரிஞ்சுக்கலாமா :-)))))

வெற்றி said...

ரவி,
நீங்களுமா? நம்ப முடியவில்லையே!!!!
என்ன நடந்தது?!!!
சொல்கிறேன் என்று தயவு செய்து குறை நினைக்காதீர்கள். இது தேவையற்ற ஒரு பதிவு. நேரம் கிடைக்கும் போது பின்னர் உங்களுக்கு இது குறித்துத் தனி மடல் அனுப்புகிறேன்.

ரவி said...

வெற்றி....இந்த கடைசி பாராவில்

/////இங்கே நாத்திகம் வலியுறுத்த வரவில்லை நான், 'மதம்' பிடித்த சில ஜந்துக்கள் மனிதரை பிரிக்க எந்தெந்த வழிகளில் முயலுகிறன்றதே என்ற ஆற்றாமையில் எழுதுவது...////

இருப்பதை மட்டும் ஒருமுறை நடுநிலையோடு படியுங்க...நான் எந்த குறிப்பிட்ட மதத்தையும் சொல்லவில்லை...பொதுவாகத்தான் சொல்கிறேன்...

பங்காளி... said...

ஜடாயுவின் சிறகுகளை வெட்டி வீழ்த்திவிட்டீர்கள்...

தேவையான ஒன்று....

அதுசரி....சிறகுகளை மட்டும் வெட்டினால் போதுமா....


(ஏற்கனவே கொலவெறி அது..இதுன்னு பேசிட்டு இருக்கீங்க...இதுல நான் வேற...ஹி..ஹி...)

வஜ்ரா said...

செந்தழல்,

கிருஸ்துமஸைக் கொண்டாடும் கிருத்தவர் அல்லாத இந்தியர்கள் (politically correct term for Hindus!) அதை கிருஸ்துமஸ் என்று தான் சொல்வார்கள், சொல்கிறார்கள், அதை "தமிழர்" மஸ், என்றெல்லாம் செகுலர் முலாம் பூசிக் கொண்டாடுவதில்லை.

கிருத்தவர்கள் பொங்கள் கொண்டாட எந்தக் கொம்பனாலும் தடுக்கமுடியாது. ஆனால் அதை இந்துப் பண்டிகை என்று சொல்லியே கொண்டாடவேண்டியது தானே, ஏன் அதை ஒரு செகுலர் பண்டிகை என்றெல்லாம் சொல்லவேண்டும் ?

அதற்காகத்தான் பொங்கல் இந்துப்பண்டிகை, அதை கர்வத்துடம் நாம் இந்துக்கள் என்று சொல்லிக் கொண்டேன்.

உடனே உங்களுக்கு அது கேவலமாகப் படுகின்றது.!

பொங்கல் மட்டுமல்ல, மற்ற இந்துப்பண்டிகைகளையும் (தீபாவளி கூட) கிருத்தவர்கள் அதை இந்துப்பண்டிகையாகவே கொண்டாடி மகிழாமல் அதை செகுலரைஸ் செய்வது தான் கேவலத்திலும் கேவலமான செயல்.

நீங்க நல்லா இருங்க சாமி. கருத்தர் உங்களை ரட்சிக்கட்டும்.

ஜோ/Joe said...

//கிறிஸ்துவப் பிரிவினை வெறியையும் தான் குறை கூறுகிறேன்.//

செந்தில் குமரன்,
என் எழுத்தில் அப்படி என்ன கிறிஸ்துவ பிரிவ்வினை வெறியை கண்டு விட்டீர் நீர் ? எனக்கு இது தேவை தான்.

ரவி said...

ஜோ...அவர் உங்கள் எழுத்தை கூறினார் என்று நான் நினைக்கவில்லை...பொதுவாக கூறி இருப்பார்...அவர் விளக்கம் அளிப்பார் என்று நம்புகிறேன்...!!!!

Anonymous said...

Sorry for putting one out of the context question here. I heard a KPN Bus collided with a Petrol Tanker in front of Electronic City, Bangalore at 8 AM this morning. Can you let us know if you come to know more details about the origin of the Bus etc.? Thanks,

senthil.c.kumaran@gmail.com (செந்தில் குமரன்) said...

///
இதில் நீங்கள் குறிப்பிட்டுள்ளது போல ஜடாயுவையோ, நல்லடியாரையோ இல்லை ஜோவையோ குறை கூறவில்லை
///

ஜோ நீங்கள் என் பின்னூட்டத்தை முழுவதுமாக படித்திருந்தால் இந்தப் பகுதியையும் படித்திருப்பீர்கள். உங்களை குறை அல்லது குத்திக் காட்டும் எண்ணம் இல்லை.

கீழே ஏன் அப்படி அடித்தேன் என்பதற்கு விளக்கம் கொடுக்கிறேன் அந்த விளக்கம் திருப்தி அளிக்கவில்லை எனில், இன்னும் தவறாகவே பட்டால், அதற்காக வருந்துகிறேன், மன்னிப்பும் கேட்டுக் கொள்கிறேன்.

நான் கிறிஸ்துமஸ் பண்டிகை என் கிறிஸ்துவ நண்பர்களுடன் கொண்டாடி இருக்கிறேன். அது ஆங்கிலேயர் பண்டிகை என்பதால் அல்ல. அது கலாச்சாரப் பண்டிகை என்பதால் அல்ல. அது கிறிஸ்துவப் பண்டிகை என்பதை உணர்ந்து.

நீங்கள் பொங்கலை இந்துப் பண்டிகை இல்லை தமிழ் கலாச்சாரப் பண்டிகை என்பதால் கொண்டாடினேன் என்று குறிப்பிட்டு சொன்னது தான் என்னை அப்படி சொல்ல வைத்து விட்டது.

ஏதற்காக அதனை தமிழ் கலாச்சாரப் பண்டிகை அதனால் கொண்டாடுகிறேன் என்று சொல்ல வேண்டும்? இந்து பண்டிகை என்றால் கொண்டாடக் கூடாதா? எது உங்களைத் தடுத்தது.

வேற்று மொழி பேசும் ஒருவரிடம் இது இந்துப் பண்டிகை இல்லை தமிழ் பண்டிகை என்று சொல்லி விட்டு கொண்டாடினேன் என்றும் சொல்லி இருக்கிறீர்கள்.

கிறிஸ்துவர் இந்து என்று பிரிவினை பார்த்திருக்கிறீர்கள் என்றும் சொல்லலாமா?

மறுபடியும் அந்தப் பின்னூட்டம் உங்களைக் குறித்து எழுதப்பட்டதல்ல. கிறிஸ்துவத்தின் மூலம் பிரிவினை பேசும் அனைவரையும் குறிக்கின்றது.

மறுபடியும் இந்த விளக்கம் உங்களுக்கு திருப்தி அளிக்கா விட்டால் உங்களை ஏதேனும் வகையில் காயமுறச் செய்திருந்தால் வருந்துகிறேன் மன்னிப்பும் கேட்டுக் கொள்கிறேன்.

Anonymous said...

அக்குவேறு ஆணி வேறா தொவைச்சு தொங்கப் போட்டு இருக்கீங்க.

அசுரன் said...

முதல் விசயம் இந்து மதம் என்பதை ஒரு குறிப்பிட்ட வரையறைக்குள் இல்லாததும், மதத்தின் தத்துவம், அது வலியுறுத்தும் சம்பிரதாய சடங்குகள் என்று பார்க்குமிடத்து அது பார்ப்பன மதம் என்று இருப்பதையும் இங்கு மறந்து விட்டு பேசினால் செந்தில் குமரன் சொல்வது நியாயம் என்றே தோன்றும்.

ஆக, இந்து என்று வரையறுக்கும் ஒரு பெரும் எண்ணிக்கையிலான மக்கள் இந்து மதத்தின் மூல தத்துவத்திற்க்கு ஏற்றவர்களே கிடையாது. இந்த சுந்தந்திர மக்கள் சம்பிர்தாய தாத்பிரியங்களால் மத்ம் என்ற அடிப்படையில் கட்டுண்டவர்கள் கிடையாது. மாறாக சாதி என்ற அடிப்படையிலேயே கட்டுண்டவர்கள். அதனாலேயே இவர்களால் எந்த பிரச்சனையும் இன்றி கிருத்துவ, இஸ்லாமிய மத சடங்குகளை கொண்டாட முடிகிறது.

மதம் என்று நிறுவனப்படுத்தப்பட்டுள்ள இடங்களில் இந்த சகிப்புத்தன்மையை காண முடியாது. இதை சுட்டிக் காட்டவே எனது பதிவில் பார்ப்பன மதம் எனும் நிறுவனப்படுத்தப்பட்டுள்ள மதத்தை சார்ந்தவர்களால் பிற நாட்டார் வழிபாட்டு சம்பிரதாயங்களை, சடங்குகளை கொண்டாட முடிவதில்லை என்பதை சுட்டிக் காட்டி இது இஸ்லாம், கிருத்துவ மதம் சார்ந்த பிரச்சனையல்ல. மாறாக மதம் என்ற வடிவத்தின் மூலப் பிரச்சனை என்பதை சுட்டியிருந்தேன்.

இப்போ செந்தில் குமரனின் வாதத்தில் என்ன பிரச்சனை என்பது புரிந்திருக்கும் என்று நம்புகிறேன்.



//இங்கே நாத்திகம் வலியுறுத்த வரவில்லை நான், 'மதம்' பிடித்த சில ஜந்துக்கள் மனிதரை பிரிக்க எந்தெந்த வழிகளில் முயலுகிறன்றதே என்ற ஆற்றாமையில் எழுதுவது...///

இதேதான் என்னை தொடர்ந்து மூன்று, நான்கு பதிவுகளுக்கும் மேல் எழுத வைத்து விட்டது. இடையில் இன்கெம்டேக்ஸ் விலக்குகளை நீக்கும் பட்ஜெட் திட்டஙகள் பற்றியும் வேறு சில பொருளாதார பிர்ச்சனைகள் பற்றியும் எழுதும் திட்டம் இதனால் தள்ளிப் போய்விட்டது.

மத வெறியை எதிர்த்து பாலாபாரதி, செந்தழல் ரவி போன்ற ஜனநாயக சக்திகள் குரல் கொடுப்பது உற்சாகமளிப்பதாக உள்ளது. வாழ்த்துக்கள்

அசுரன்

ரவி said...

உங்கள் கருத்துக்கு நன்றி அசுரன் அவர்களே...இதுபற்றி என் கருத்தை பிறகு எழுதுகிறேன்...

senthil.c.kumaran@gmail.com (செந்தில் குமரன்) said...

அசுரன் என்ன சொல்ல வர்றீங்கன்னு தெரியலியே?

இந்த விஷயத்தில் மூன்று மதங்களைச் சார்ந்தவர்களும் தவறு செய்திருக்கிறார்கள். ஒரு மதத்தை மட்டும் குறை சொல்வது சரியாக இருக்காது. எல்லா மத அமைப்புகளையும் குறை சொல்ல வேண்டும் என்று தான் எழுதி இருப்பதாக நினைத்துக் கொண்டிருந்தேன்.

அப்படி சொன்னதற்கு காரணமே மதம் என்ற அமைப்பையே எதிர்க்க வேண்டும் ஒரு குறிப்பிட்ட மதத்தை மட்டும் எதிர்ப்பதாக தோன்றி விடக் கூடாது என்ற கருத்தை வழியுறுத்தத் தான்.

நீங்கள் என்ன சொல்ல வருகிறீர்கள் என்று புரியவில்லை.

நாடோடி said...

நம்ம அசுர அண்ணனுக்கு நானும் ஒரு பதிவு போட்டுருக்கேன். யாரவது எட்டி பாருங்கோ..

ஜடாயு said...

அன்பின் செந்தழல் ரவி,

(உங்கள் பெயரைப் பார்க்கும்போதெல்லாம் "செந்தழல் புரை திருமேனியும் காட்டி, திருப்பெருந்துறையுறை கோயிலும் காட்டி" என்ற திருவாசகம் தான் நினைவுக்கு வருகிறது. சிவ சிந்தனையை நினைவூட்டும் பெயர்!!)

என் பதிவை சரியாகப் புரிந்து கொண்ட செந்தில் குமரன் அழகாக இப்படிச் சொல்லியிருக்கிறார் -

//
நான் கிறிஸ்துமஸ் பண்டிகை என் கிறிஸ்துவ நண்பர்களுடன் கொண்டாடி இருக்கிறேன். அது ஆங்கிலேயர் பண்டிகை என்பதால் அல்ல. அது கலாச்சாரப் பண்டிகை என்பதால் அல்ல. அது கிறிஸ்துவப் பண்டிகை என்பதை உணர்ந்து.

நீங்கள் பொங்கலை இந்துப் பண்டிகை இல்லை தமிழ் கலாச்சாரப் பண்டிகை என்பதால் கொண்டாடினேன் என்று குறிப்பிட்டு சொன்னது தான் என்னை அப்படி சொல்ல வைத்து விட்டது.
//

இது தான், இது தான் கொஞ்சமாவது சுய பிரக்ஞையுள்ள ஒவ்வொரு இந்துவும் சொல்லவேண்டும் என்று நான் எதிர்பார்த்தது. சொல்லிய செந்தில் குமரனுக்கு மிக்க நன்றி.

வேளாங்கண்ணி கோயில் போகும் இந்து அது கிறித்தவக் கோயில் என்று தெரிந்து, உணர்ந்து அந்த சமயத் தெய்வத்தையும் வணங்க வேண்டும் என்ற உணர்வுடன் போகிறான். நாகூர் தர்கா போகும் இந்துவும் அப்படியே. "நாகூர் முஸ்லீம் கோயில்னு யார் சொன்னது? அது திராவிடக் கோயில்பா!!!!" என்றெல்லாம் மழுப்ப வேண்டிய வெறுப்பு மனநிலை இந்துக்கள் யாருக்கும் இல்லை. பிற சமயத்தின் தெய்வ அடையாளங்களையும் போற்றும் இந்தத் தன்மையை மதிக்கும், பாராட்டும் பெருந்தன்மை செக்யூலர் ஆசாமிகளுக்கு உள்ளதா?

ஜோ மற்றும் இங்கே ஜால்ரா அடிக்கும் பார்ட்டிகள் "பொங்கல் இந்துப் பண்டிகை அல்ல" என்று கூக்குரல் இடுவதன் உள்நோக்கம் என்ன? அதைத் தான் என் பதிவில் உறுதியான சொற்களில் சொல்லியிருந்தேன்.

இந்தப் பதிவில் நீங்கள் போட்டுள்ள பாம்பு வழிபாடு பற்றிய கமென்டுக்கும், திருவின் பாகன் மதம் பற்றிய குழப்படிக்கும் மிகத் தெளிவான பதில்களை நீலகண்டன் போட்டிருக்கிறார். தயவு செய்து அதைப் படிக்கவும் -
http://arvindneela.blogspot.com/2007/01/blog-post_18.html

இப்பதிவில் "உலகத் திருநாள் பொங்கல்" என்ற என் பதிவுக்கு இணைப்புத் தந்ததற்கு மிக்க நன்றி.

ரவி said...

நீலகண்டன் பதிவை படித்து அதில் என் கருத்தையும் எழுதிவிட்டேன் ஜடாயு அவர்களே...

Anonymous said...

///உங்கள் பெயரைப் பார்க்கும்போதெல்லாம் "செந்தழல் புரை திருமேனியும் காட்டி, திருப்பெருந்துறையுறை கோயிலும் காட்டி" என்ற திருவாசகம் தான் நினைவுக்கு வருகிறது. சிவ சிந்தனையை நினைவூட்டும் பெயர்!!) ///

ஜடாயு, அருமையான SHOT !!!

Anonymous said...

//செந்தில் குமரன் said...
அசுரன் என்ன சொல்ல வர்றீங்கன்னு தெரியலியே?
//
Asuran pathi pathiya ezhuthina yaarukku thaan puriyum. Avaru mutli-dimension-la shot adippar!

senthil.c.kumaran@gmail.com (செந்தில் குமரன்) said...

ஜடாயு அவர்கள் என் பெயரை உபயோகித்திருப்பதால் மீண்டும் ஒரு பின்னூட்டம் எழுத வேண்டிய நிலமை. ஜோ அவர்களின் தனி மடல் உரையாடலில் அவர் அப்படி தமிழ் பண்டிகை என்று குறிப்பிட்டு சொன்னது அது இந்து பண்டிகை என்று சொல்லிக் கொண்டாடுவதில் உள்ள பிரச்சனைகளால் அல்ல என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும் அவர் தீபாவளி போன்ற பண்டிகைகளை இந்துப் பண்டிகை என்று தெரிந்தே கொண்டாடுவதையும் குறிப்பிட்டிருந்தார்.

ஆகவே அவருடைய நோக்கம் தவறானது அல்ல என்றே கருதுகிறேன்.

மேலும் இந்து மதத்தைப் பின்பற்றுபவர் அது இந்துப் பண்டிகை அல்ல தமிழர் பண்டிகை என்று சொல்லி இருந்தால் நான் எப்படி எடுத்துக் கொண்டிருப்பேன் என்றும் யோசிக்கிறேன்.

மதமே கூடாது என்ற கருத்து உடைய நானும் ஜோ அவர்களில் மதத்தைப் பார்த்து அவருடைய சாதாரண ஒரு கருத்தை தவறாக எடுத்துக் கொண்டேனோ என்றும் ஐயப் படுகிறேன்.

இந்த சம்பவம் எனக்கு மேலும் புரிதலைக் கொடுத்திருக்கிறது. மேலும் என்னை நானே பண்படுத்திக் கொள்ள கிடைத்த ஒரு சந்தர்ப்பமாக இதனைக் கருதுகிறேன்.

நன்றி.

அசுரன் said...

//மதம் என்று நிறுவனப்படுத்தப்பட்டுள்ள இடங்களில் இந்த சகிப்புத்தன்மையை காண முடியாது. இதை சுட்டிக் காட்டவே எனது பதிவில் பார்ப்பன மதம் எனும் நிறுவனப்படுத்தப்பட்டுள்ள மதத்தை சார்ந்தவர்களால் பிற நாட்டார் வழிபாட்டு சம்பிரதாயங்களை, சடங்குகளை கொண்டாட முடிவதில்லை என்பதை சுட்டிக் காட்டி இது இஸ்லாம், கிருத்துவ மதம் சார்ந்த பிரச்சனையல்ல. மாறாக மதம் என்ற வடிவத்தின் மூலப் பிரச்சனை என்பதை சுட்டியிருந்தேன்.
//

செந்தில் குமரன்,

உங்க கருத்துதான் எனதும், ஆயினும் பொங்கல் பண்டிகையை பொறுத்த வரை அதை கிருத்துவ, இஸ்லாம் மதத்தினர் கொண்டாததற்க்குக் காரணமாகவும், இந்து மதம் எனப்படுவதில் உள்ள பிறர் கிருத்துவ மத பண்டிகையை கொண்டாடுவதற்க்குக் காரணமாகவும் நீங்கள் குறிபிட்டுள்ள் விசயம் தவறு எனப்தைத்தான் நான் சுட்டிக் காட்டினேன்.

மத அபிமானம் வளர்ந்தால் அது மக்களின் சகிப்புதன்மையை பாழாக்குகிறது. இது அனைத்து மதத்திற்க்கும் பொருந்தும். இதைத்தான் நீங்கள் சொல்கிறீர்கள் நானும் சொல்கிறேன். ஆனால் அதை நடைமுறைக்கு அப்ளை செய்யும் பொழுது, இந்து/பார்ப்னிய மதம் குறித்த உங்களது புரிதலில் உள்ள் சிறு குறைபாடு தவறான நிலைக்கு இட்டுச் செல்கிறது.

இதை சுட்டிக் காட்டவே பார்ப்ப்னிய மத அபிமானிகள் கொண்டாடத் தயங்கும் பண்டிகைகளை, சம்பிரதாயங்களை நான் எனது பதிவில் சுட்டிக் காட்டினேன்.

அதே நேரத்தில் இந்த பதிவின் பின்னூட்டத்தில் இந்து மத பிரிவினர் பிற மத பண்டிகைகள் சிலவற்றை கொண்டாடுவதற்க்குக் காரணமான விசயத்தையும் குறிப்பிட்டேன்.

///முதல் விசயம் இந்து மதம் என்பதை ஒரு குறிப்பிட்ட வரையறைக்குள் இல்லாததும், மதத்தின் தத்துவம், அது வலியுறுத்தும் சம்பிரதாய சடங்குகள் என்று பார்க்குமிடத்து அது பார்ப்பன மதம் என்று இருப்பதையும் இங்கு மறந்து விட்டு பேசினால் செந்தில் குமரன் சொல்வது நியாயம் என்றே தோன்றும்.

ஆக, இந்து என்று வரையறுக்கும் ஒரு பெரும் எண்ணிக்கையிலான மக்கள் இந்து மதத்தின் மூல தத்துவத்திற்க்கு ஏற்றவர்களே கிடையாது. இந்த சுந்தந்திர மக்கள் சம்பிர்தாய தாத்பிரியங்களால் மத்ம் என்ற அடிப்படையில் கட்டுண்டவர்கள் கிடையாது. மாறாக சாதி என்ற அடிப்படையிலேயே கட்டுண்டவர்கள். அதனாலேயே இவர்களால் எந்த பிரச்சனையும் இன்றி கிருத்துவ, இஸ்லாமிய மத சடங்குகளை கொண்டாட முடிகிறது.
///

கிருத்துவ மத பண்டிகையை கொண்டாட முடிந்த ஒரு பார்ப்பனரால், தலித் வீட்டு திருமணச் சடங்கையோ அல்லது தலித் விழாக்களையோ கொண்டாட முடியாது ஏன்?

ஏனேனில், கிருத்துவ பண்டிகை கொண்டாடுவதில் இவரது சம்பிரதாயத்துக்கு எந்த குந்தகமும் இல்லை. ஆனால் தலித் விழாவை கொண்டாடுவதில் இவரது ச்ம்பிரதாயத்துக்கு குந்தகம் வருகிறது. இதே விசயம் இந்து பண்டிகை கொண்டாடுவதில் இஸ்லாமியர் தனது சம்பிரதாயத்தை மீற வேண்டிய விசயம் இடிக்கிறது.

இதில் இஸ்லாமியர் விசயத்தை மட்டும் பேசி மத வெறியை அவர்கள் கிளப்புவதையே நான், செந்தழல் ரவி கண்டித்து எழுதினோம்.(if they are honest to their opinion expose all the religion. Including Brhamanism)

புரியவில்லை என்றால் தயவு செய்து தெரியப்படுத்தவும்.... எனது எழுத்து வன்மை மிக அதலபாதாளத்தில் இருப்பது ஒரு பிரச்சனையாகவே இருக்கிறது. கூடிய விரைவில் மற்றவர்களைப் போல எழுதும் திறமை கை கூடும் என்று நம்புகிறேன்.

அசுரன்

சுரேஷ் ஜீவானந்தம் | Suresh Jeevanandam said...

மீண்டும் விவாதத்தைக் கிளப்புகிறேன். ஜடாயுவின் பதிவில் நான் இட்டுள்ள பின்னூட்டம்:
ஜடாயு,

இன்றைக்கு இந்து என்பது ஒரு அடையாளம், தமிழர் என்பது ஒரு அடையாளம்.

பொங்கல் என்பது ஒரு இந்து பண்டிகை என்று சொல்வதற்கு உங்களுக்கு இருக்கிற உரிமைகளை விட, தமிழர் பண்டிகை என்று கூறுவதற்கு எங்களுக்கு அதிக உரிமை இருக்கிறது. (தமிழனுக்கு என்று ஒரு பண்டிகை இருப்பது உங்களுக்கு ஏன் இடிக்கிறது.?)

இந்தியா முழுவதும் கொண்டாடப்படுவதாலேயே அது இந்துப் பண்டிகை என்று ஆகிவிடாது. ( நான் இங்கு இந்து மதம் என்பதை சனாதன நிறுவன மதத்தை மட்டுமே கூறுகிறேன். இதைப் பின்பற்றுபவர்கள் சிறுபான்மையினர்தான். மீதம் இருப்பவர்கள் பாகன்கள் அல்லது மதமற்றவர்கள். இவர்களுக்கும் சேர்த்து இந்து என்ற அடையாளத்தை ஆங்கிலேய நிர்வாகம் வழங்கிவிட்டது குழப்பங்களை உண்டாக்குகிறது.)

கிறித்தவத்தைப் போலவே சனாதன மதமும் (இந்து) பாகன் (மதமற்ற மக்களின்) மரபுகளை உள்வாங்கியே வளர்ந்து வந்துள்ளது. ஆகவே, பொங்கல் என்பது தமிழர் பண்டிகை, மதமற்ற பெருங்குடி தமிழ் மக்களின் பண்டிகை. சனாதனம் அதனை இலேசாக உள்வாங்கி வைத்திருக்கிறது. மீதியை நீங்கள் பதிவு போட்டு உள்வாங்கிக்கொண்டிருக்கிறீர்கள்.

--
ஞாயிறு அசுரன்.

நியோ / neo said...

ரவி,

உங்கள் கருத்து முழுக்க நியாயமானது.

சனாதன ஜல்லியடிக்கும் கூட்டத்துக்கு Ahura Mazda வோ allathu Yima வோ நல்ல புத்தி அருள்வார்களாக! ;))


பி.கு.:

உங்கள் சாயிபாபா பதிவில் நான் போட்ட பின்னூட்டம் இன்னும் வரவில்லையே?