சுண்டக்கஞ்சி with கோயிந்தசாமி & கொலசாமியுடன் - நொச்சிக்குப்பம் பீலா
நம்ம அண்ணாத்தே நொச்சிக்குப்பம் பீலாவை பட்டினப்பாக்கத்தாண்ட கண்டுக்கினேன். அப்பால அப்படியே ஒரு இண்டர்வியூ வெச்சாக்க இன்னான்னு தோனுச்சு. அதேன், அப்படியே பத்துரூவா மக்கு சுண்டக்கஞ்சி ஒரு மக்கும், அயிர மீனு வறுவல் ஒரு ப்ளேட்டும், ரெண்டு கட்டு பீடியும் வாங்கித்தந்ததுல பீலா கைலிய வாகா மடிச்சு உட்டுக்கினு குந்திட்டார்..இணையத்துல போடனும்னா ரீஜெண்டா இருக்கனுமாமே? அதான், பாசையை மாத்துற ஏஜண்டு ஒருத்தன புடிச்சு இணையத்துல வரமாதிரி எழுதி வாங்கிட்டேன். இதுல காப்பி, டீ ரைட்டு பிரச்சினை ஏதும் வந்துராதே? ஏரோப்பிளேனுலேயே வித்தவுட்ல போற எனுக்கு இன்னாடா காப்பிரைட்டு ?
வாயை புடுங்கற ரவுண்டு:-
(டேய், இவன் பல்லு விளக்கியே பத்து நாள் இருக்குமே, இவன் வாயை புடுங்கலாமா, இல்லையா ? )
கோயிந்து:- பீலா, பட்டினப்பாக்கம் எதுக்கு வந்தீங்க ?
எதுத்த ஊட்டு சரோஜாவ எந்த நாதாரியோ இங்க தள்ளிக்கினு வந்துட்சி. அதுல பாரு, எவன் எந்த நாதாரிய தள்ளிக்கினு போனா எனக்கு இன்னா..அவ கைல எம்பொஞ்சாதி நூத்தம்பது ரூவா குட்திருந்தாளாம். சரக்கடிக்க காசு குடுறீன்னா, அவகிட்ட போய் வாங்கிகோன்னா...அப்பால அவள தேடனா, அவ புருசனுக்கு ஜபுரு காட்டிட்டு இங்க வந்து ஒரு வாரமாச்சாமே..அதான் இந்த ஏரியாவுல தெம்புடுவாளானான்னி பாக்க வந்தேன்.
கோயிந்து:- கடைசியா எப்ப சரக்கடிச்சீங்க? ஒரு முழு மக்கு சுண்டக்கஞ்சிய காஞ்ச மாடு கம்புல ஊந்த மாதிரி நாட்டறீங்க?
இன்னா ஒரு வாரம் ஆச்சு, **நட்டாம்பட்டி(TM) சரக்கு அடிச்சு....அதுல பாரு கோயிந்து, நீயும் க்வாட்டர் பாட்டுல கொத்துக்கொத்தா குடிச்சுத்தான் க்வாட்டர் கோயிந்தன்னு நல்ல பேரு வாங்கியிருக்க நம்ம ஏரியாவுல. ஆனா எனக்கு சரக்கு சல்லீசா கிடைக்க மாட்டேங்குதே.உம்பொஞ்சாதி எங்க சிறுவாடு வச்சிருக்கான்னு உனுக்கு தெரியுது.எம்பொண்டாட்டி எங்க வக்கிறான்னு கண்டுபிடிக்கறதுக்குள்ள முன்னாடி அடிச்ச மப்பும் எறங்கிடுது...
கோயிந்து: உங்க ஏரியா களவானிங்களை பத்தி நீங்க இன்னா சொல்றீங்க?
இவனுக்களுக்கு சுத்தமா வேலை வெட்டி கிடையாது..எவ கழுத்துல தாலிச்செயின் பெருசா இருக்கோ அவளுங்களை லவ் பண்ணி கல்யாணம் பண்ணி இழுத்துனு ஓடி தாலிச்செயினை ஆட்டையப்போட்டு குடிச்சு கும்மாளமடிக்கறானுங்க..ஏழாவது படிக்கற பொண்ணுக்கு லவ் லெட்டர் கொடுத்திருக்கான் ஒரு களவானிப்பய..கொடியில காயற துனியை எல்லாம் எடுத்து வித்து குடிச்சிடுறானுங்க..என்னோட அண்ட்ராயரை தள்ளிக்கினு பூட்டானுங்க நாதாரிங்க..
அனானி கொலசாமி : நீங்க அண்ட்ராயர் கடைல வாங்கினீங்களா இல்ல சுட்டுக்கினு வந்தீங்களா ?
டாய், இன்னா டபாய்க்கற. அது என்னோட மாமனார் ஊட்ல இருந்து சீதனமா வாங்கியாந்தது...
ரவுண்டு கட்டி அடிக்கற ரவுண்டு:-
கோயிந்து: அவன விட்டுத்தள்ளுங்க. நேத்து நொச்சிக்குப்பம் டாஸ்மாக்ல ஏதோ பிரச்சனை பண்ணீங்களாமே ? இன்னா ?
அது வந்து கோயிந்து, (விவேக் ஸ்டைலில் படிக்கவும்), நானா எந்த பிரச்சினையயும் தேடிப்போறதில்ல. ஏதாவது பிரச்சினை வந்தாக்க, சொல்லி அடிப்பேன். நான் வாங்கினது மானிட்டர் குவாட்டர். அதுக்கு அறுவது ரூபா குடுத்தேன். அம்பத்தி எட்டுரூவா போவ மீதிய அவன் குடுக்கனும் இல்ல ? கேட்டா நாதாரி சில்லற இல்லன்னுது..நான் வாங்குற சைட்டிஸ்ஸே அம்பது பைசா ஊறுகா மட்டைதான் தான்..மீதி ஒரு ரூவா வாட்டர் பாக்கெட், அம்பது பைசா ப்ளாஸ்டிக் டம்ளர். அதான்...புடிச்சேன்...சட்டைய...வாயில வச்சிருந்த ப்ளேடை நாலு துண்டா கடிச்சு புளிச்சுன்னு துப்பினேன் மூஞ்சியில...கொய கொயன்னு ஆயிருச்சு...
அனானி கொலசாமி: போதும் போதும் நிறுத்துங்க...நோ வன்முறை...
கோயிந்து: திருவல்லிக்கேணி பார்த்த சாரதி கோயில்ல ஏதோ தகறாறு செஞ்சீங்களாமே ?
அதா, அது ஒன்னுமில்ல....ங்கொய்யால, நான் குச்சுட்டு நாக்கு வறண்டு கடந்தேன்...தேங்காய ஒடச்சு தண்ணிய கீழ ஊத்தனான்...நாஞ்சொன்னேன், டேய் அயிறு, கீய ஊத்தறத அப்படியே என் வாயில ஊத்துடான்னு....அந்தாளு அபிஷ்டுன்னு திட்டுட்டு போனான்...அதான், தேங்கா மூடிய எடுத்து மண்டைய தொறந்துட்டேன்...
கோயிந்து: அய்ய...அப்புறம் தேங்காதண்ணி கிடைச்சுதா இல்லையா ?
அனானி கொலசாமி : டேய் நீங்க ரெண்டுபேரும் உருப்படமாட்டீங்க..
கொலைசாமி குழுவினர் : if you dont have a place to kummi, just create it rather then searching for it.