Thursday, July 19, 2007

மூன்றாம் உலகப்போருக்கு காரணமாகப்போகும் தமிழ் பதிவர்

ஏற்கனவே இரண்டு உலகப்போர்தான் நடந்திருக்கு...அந்த வரைக்கும் எனக்கு நிச்சயமா தெரியும்...இப்போ விஷயத்துக்கு வரேன்...இந்த வார இறுதியில் கொரியாவின் டி.எம்.ஸி (DMZ) என்ற இடத்துக்கு போகிறேன்...டி.எம்.ஸி என்றால் டீ மிலிட்டரைஸுடு ஜோன்...(தமிழ்ல எப்படி சொல்றது, நன்பர்கள் உதவுங்க)..அதாவது போர் தடைசெய்யப்பட்ட இடம்...இது பற்றிய விக்கி தொகுப்பு...

கொரியா தென் கொரியா மற்றும் வட கொரியாவாக பிளவுபட்டுக்கிடப்பது அனைத்து பதிவர்களுக்கும் தெரியும் என்று நினைக்கிறேன்...

இங்கே இரண்டு நாடுகளுக்கும் இடையே அமெரிக்காவின் கட்டைப்பஞ்சாயத்தில் உருவான இடம் தான் இந்த டீ.எம்.ஸீ..



இந்த இடத்தில் இரண்டு நாடுகளும் அரசுமுறையில் விடயங்களை பரிமாறிக்கொள்ளவும், கட்டைப்பஞ்சாயத்து ஒப்பந்தங்களை நிறைவேற்றவும் கட்டடங்களை கட்டிவைத்துக்கொண்டு பாதுகாப்புக்கு நிற்கிறார்கள்...நம்ம இந்தியா பாக்கிஸ்தான் பார்டர்ல பில்டிங்ல இல்லையா...அதுமாதிரி தான்...



இது வட கொரியாவில் இருந்து எடுக்கப்பட்டது...



இது தென் கொரியாவில் இருந்து எடுக்கப்பட்ட படம்...

இரண்டு பக்கமும் ஆப்பீஸர்கள் நிக்குறாங்க பாருங்க...

இந்த வடகொரிய மக்களும் தென்கொரிய மக்களும் மொழி, கலாச்சாரம், பண்பாடு மற்றும் எல்லா விடயங்களிலும் ஒன்றுதான்...இவர்களை இப்படி பிரித்துப்போட்டது மேற்கு உலக நாடுகளின் சுயநலமும், அமெரிக்கா மற்றும் ருஷ்யாவின் பனிப்போரும் தான்...விசு படம் சம்சாரம் அது மின்சாரத்தில், விசு கோடு போடுவார் - அதுவும் அவர் வீட்டுக்கு நடுவில் கோடு போடுவார்...அது வீட்டுக்குள் இருந்தவர்கள் எடுத்த முடிவு...ஆனா இங்க பக்கத்துவீட்டுக்காரன், அப்படி கூட சொல்லமுடியாது...அடுத்த தெருவுக்காரன் போட்டிருக்கான் கோடு...ஹும்...!!!

இப்போ இந்த இரண்டு நாடுகளும் அடித்துக்கொள்கின்றன...ஒருபக்கம் தென் கொரியாவில் அமெரிக்காவின் ஆதரவில் வந்து கொட்டும் வளமை...ஜப்பானை தட்டிவைக்க நினைக்கும் அமெரிக்கா, தென் கொரியாவை வளர்த்துவிட்டு குளிர்காய்கிறது...கம்யூனிசம் வீழ்ந்து, அமெரிக்காவுடனான பனிப்போரிலும் தோற்று, உள்ளாடை நிறுவனங்களில் வேலை செய்பவர்களுக்கு கூட சம்பளம் கொடுக்க முடியாமல் உள்ளாடையையே கொடுக்கும் நிலைக்கும், அழகிகளை உலகநாடெங்கும் அனுப்பி விபச்சாரம் செய்யவிட்டும் இன்று காலத்தை ஓட்டுகிறது ருஷ்யா...மனிதகுலத்தின் மாபெரும் ஆபத்து அணு உலைகள் டெக்னாலஜி தான் மிச்சம்...அதைக்கூட இன்று கல்பாக்கத்துக்கு கூட்டி கொடுத்து துட்டு சேர்த்து ப்ரட்டு வாங்கி தின்னுகிறார் புடின்..ச்சே அதை விடுங்க...

இந்த இரண்டு நாடுகளுக்கும் ( வடகொரியா மற்றும் தென்கொரியா) இடையேயான பனிபோர் சொல்லிமாளாது...இரண்டாயிரத்து நாலாம் ஆண்டுவரை இரண்டு பக்கமும் லவுட் ஸ்பீக்கர்ல கத்தி கத்தி திட்டிக்குவானுங்களாம்...2004 ஆம் ஆண்டு ஏற்பட்ட ஒரு அக்ரீமண்ட் படித்தான் இதை நிறுத்தி இருக்கானுங்க...கொடிமரத்துல கூட ஒரு சண்டை...தென் கொரியா 98 மீட்டர் உயரத்துல ஒரு கொடி மரம் வெச்சு அதுல கொடியேத்தி இருக்கானுங்க...அதை பார்த்து கடுப்பான வட கொரியா, 160 மீட்டர் உயரத்துல உலகத்திலேயே உயரமான கொடிமரம் கட்டி அதில் கொடியேற்றி தனது அரிப்பை தீர்த்துக்கொண்டது...



உலகத்திலேயே உயரமான கொடிமரம்...

இப்போ தலைப்பை ஒருமுறை படிங்க..."மூன்றாம் உலகப்போருக்கு காரணமாகப்போகும் தமிழ் பதிவர்"...வேற யாரு...இங்க ஆணி புடுங்கிக்கொண்டிருக்கும் நான் தான்...வரும் சனிக்கிழமை இங்கே போகப்போகிறேன்...நிறுவனம் ஏற்பாடு செய்யும் டூர்...இங்க தான் மேட்டரே இருக்கு...வடகொரியாவிடம் அணுஆயுத கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை இருப்பதாக என் மேனேஜர் தலையில் அடித்து சத்தியம் செய்கிறார்...வடகொரியாவில் இருக்கும் அவரது ஒன்னுவிட்ட சித்தப்பா முந்தா நேத்து மூணு மணிக்கு போன்ல சொன்னாராம்....

நான் அங்கே போகப்போறேன் இல்லையா...அங்கே ஆணி புடுங்கிக்கொண்டிருக்கும் தென் கொரிய ஆப்பீஸர் அசமஞ்சமா இருக்கும் நேரம் பார்த்து ஏதாவது அரை செங்கல்லை எடுத்து அவன் மண்டையை பேத்துடுறேன்...திரும்பி பார்த்தான்னா வட கொரியாக்காரன் தான் அடிச்சான் அப்படீன்னு சொல்லிட்டு அப்பீட் ஆகிடுறேன்...

அவன் இவனை சுட, இவன் அவனை சுட, ஓரே குஜாலா இருக்காது...அப்புறம் என்ன, அணு ஆயுத ஏவுகணையை அனுப்பி அமெரிக்காவின் நியூஆர்லியன்ஸ், நியூஆப்புலியன்ஸ் இந்தமாதிரி ஏதாவது ஒரு ஊர் செங்கல்லை பேர்த்துட்டான்னா கூட அமெரிக்கா குண்டு போட ஆரம்பிச்சிரும்...அப்படியே பிரச்சினை பெருசாகி உலகப்போராகிடுச்சின்னா...

ஹையா ஜாலி ஜாலி...

30 comments:

குசும்பன் said...

ஹையா ஜாலி ஜாலி...


:((((((

அனுசுயா said...

சிறந்த மொக்க‍பைதிவுதான் ஒத்துக்கிறேன். ஆனா நம்ம நாடுகளுக்குள்ள இருக்கற ஒற்றுமை ஒரு சின்ன செங்கல் அளவுகூட இல்லைனு நினைக்கும்போது வருத்தமா இருக்கு. உலக மக்களோட வாழ்வு ஒரு சின்ன செங்கல் நிர்ணயிக்குதுங்கறது மிக வருத்தமான விசயம்.

சாரிங்க மொக்கை பதிவு செண்ட்டியா பின்னூட்டம் போட்டுட்டேன்

ரவி said...

குசும்பன்...துபாய்க்கு வரலாம்னு இருக்கேன்...அங்க ஷேக்கு பேக்குன்னு எதாவது இருக்கா ?

Anonymous said...

// உலக மக்களோட வாழ்வு ஒரு சின்ன செங்கல் நிர்ணயிக்குதுங்கறது மிக வருத்தமான விசயம்.//

உங்க வருத்தத்தை ஏற்றுக்கொண்டேன்...அதனால் போகும்போது கண்டிப்பாக செங்கல் கொண்டுபோகவேண்டும் என்பதை நினைவுபடுத்தி மடல் அனுப்ப வேண்டுகிறேன்...

✪சிந்தாநதி said...

//சாரிங்க மொக்கை பதிவு செண்ட்டியா பின்னூட்டம் போட்டுட்டேன்//


இது மொக்கைப் பதிவு மாதிரி இல்லை. இன்பர்மேடிவ் பதிவு தான்

கதிர் said...

உங்க அக்கப்போரு பெரும்போரா இருக்கே. கொரியா போய்தான் கண்டனப்பதிவுகள், மொக்கைப்பதிவுகள் போடணும்னு இல்ல இங்க இருந்தும் போடலாம்.

Anonymous said...

ஜாலியா ரவிண்ணா/????

Anonymous said...

கலக்கு தலைவா :)
ஏதாச்சும் பிரச்சனைன்னா சொல்லு அடுத்த ப்ளைட் புடிச்சு உன்னை ரழ்ய ரானுவத்துகிட்ட புடிச்சு கொடுக்கிறேன் :))))

ரவி said...

///இது மொக்கைப் பதிவு மாதிரி இல்லை. இன்பர்மேடிவ் பதிவு தான் ///

தன்யனானேன்..!!!

ரவி said...

///கலக்கு தலைவா :)
ஏதாச்சும் பிரச்சனைன்னா சொல்லு அடுத்த ப்ளைட் புடிச்சு உன்னை ரழ்ய ரானுவத்துகிட்ட புடிச்சு கொடுக்கிறேன் :)))) ///

எனக்கு எதுவும் தெரியாது பெங்களூர் அனானி தான் செய்ய சொன்னார்னு உங்களை போட்டுக்கொடுத்திருவேன்...

ரவி said...

/// தூயா said...
ஜாலியா ரவிண்ணா/????
///

ஜாலி இல்ல..டபுள் ஜாலி...ஜல்ஜாலின்னு சொல்லலாம்...ஹி ஹி

ரவி said...

///உங்க அக்கப்போரு பெரும்போரா இருக்கே. கொரியா போய்தான் கண்டனப்பதிவுகள், மொக்கைப்பதிவுகள் போடணும்னு இல்ல இங்க இருந்தும் போடலாம். ///

நாம எங்க இருந்தாலும் மொக்கை போடுறதை விடக்கூடாதில்லையா...

இப்பல்லாம் கொழந்தைங்க கூட மொக்கை போடுதாம்...சமீபமா படிச்சேன்...

நாடோடி said...

//ஹையா ஜாலி ஜாலி..//

ரீப்பீட்டேய்ய்...

நாடோடி said...

///சிறந்த மொக்க‍பைதிவுதான் ஒத்துக்கிறேன். ஆனா நம்ம நாடுகளுக்குள்ள இருக்கற ஒற்றுமை ஒரு சின்ன செங்கல் அளவுகூட இல்லைனு நினைக்கும்போது வருத்தமா இருக்கு. உலக மக்களோட வாழ்வு ஒரு சின்ன செங்கல் நிர்ணயிக்குதுங்கறது மிக வருத்தமான விசயம்.

சாரிங்க மொக்கை பதிவு செண்ட்டியா பின்னூட்டம் போட்டுட்டேன்//

ரீப்பிட்டேய்ய்.....

நாடோடி said...

//இது மொக்கைப் பதிவு மாதிரி இல்லை. இன்பர்மேடிவ் பதிவு தான்//
ரீப்பிட்டேய்ய்.....

நாடோடி said...

//உங்க அக்கப்போரு பெரும்போரா இருக்கே. கொரியா போய்தான் கண்டனப்பதிவுகள், மொக்கைப்பதிவுகள் போடணும்னு இல்ல இங்க இருந்தும் போடலாம்.//
ரீப்பிட்டேய்ய்.....

நாடோடி said...

//ஏதாச்சும் பிரச்சனைன்னா சொல்லு அடுத்த ப்ளைட் புடிச்சு உன்னை ரழ்ய ரானுவத்துகிட்ட புடிச்சு கொடுக்கிறேன் :))))//

ரீப்பிட்டேய்ய்.....

நாடோடி said...

நீ மொக்கை பதிந்தான் போடுவே. நாங்ககெல்லாம் மொக்க பின்னூட்ட போரே நடத்துவோம்.

ரீப்பிட்டேய்ய்........

நாடோடி said...

//இப்பல்லாம் கொழந்தைங்க கூட மொக்கை போடுதாம்...சமீபமா படிச்சேன்...//

யாரு உங்களைமாதிரி பீர் குடிக்கிற குழந்தைகள்தானே?...
;)

Sridhar Narayanan said...

மூன்றாம் உலகப்போரா? பார்க்கலாம் உங்கள் திறமையை.

ரஷ்யாவை பற்றி நீங்கள் சொல்வதெல்லாம் 'போன மாசம்' மேட்டர் ஆயிடுச்சிங்க... 2000-ம் வருடத்தில் 10 சதவீத வளர்ச்சி கண்டுள்ளது.

G8 நாடுகளிலேயே அதி வேக வளர்ச்சி கொண்டுள்ள நாடு.

தற்பொழுது BRIC effect என்று அழைக்கப்படும் பிரேசில், ரஷ்யா, இந்தியா மற்றும் சீனாவின் பொருளாதாரம் உலக பொருளாதாரத்தில் மிக முக்கிய பங்கு வகிக்கிறது.

நாடோடி said...

எனக்கு என்னமோ நீ அந்த தாய்லாந்து பிகர பாத்ததுல இருந்தே ஒரு மாதிரிதான் இருக்கேப்பா. நாய் கடிச்சு வச்சப்ப கூட நீ இப்படி இல்ல.
;))

Anonymous said...

//எனக்கு எதுவும் தெரியாது பெங்களூர் அனானி தான் செய்ய சொன்னார்னு உங்களை போட்டுக்கொடுத்திருவேன்..//
அய்யோ ஏற்கனவே படறது போதாதா??

வவ்வால் said...

ரவி,

ஒரு மார்க்கமாய் தான் அலையறிங்க அனேகமா அந்த ஊரு ஜெயில் சோறு எப்படி இருக்கும்னு பார்க்காமா வர மாட்டிங்க போல தெரியுதே , பார்த்து சூதனமா இருந்துகோங்க !

//கொழந்தைங்க கூட மொக்கை போடுதாம்...//

நல்லாபடிங்க பொக்கைனு சொல்லி இருப்பாங்க !

G.Ragavan said...

நீங்க இவ்வளவு நல்லவருன்னு தெரியாமப் போச்சே! கொரியாவ எந்தக் கொரில்லாவும் இனிமே காப்பாத்த முடியாது.

ILA (a) இளா said...

உங்களோட பெரிய அக்கப்போர்டா சாமியோவ்வ்வ்வ்வ்வ்!

ரவி said...

வாங்க இளா, ராகவன் இனிமே யாராலயும் தமிழ் வலையுலக காப்பாத்த முடியாதுன்னு தோனுது..

Mookku Sundar said...

//அவன் இவனை சுட, இவன் அவனை சுட, ஓரே குஜாலா இருக்காது...அப்புறம் என்ன, அணு ஆயுத ஏவுகணையை அனுப்பி அமெரிக்காவின் நியூஆர்லியன்ஸ், நியூஆப்புலியன்ஸ் இந்தமாதிரி ஏதாவது ஒரு ஊர் செங்கல்லை பேர்த்துட்டான்னா கூட அமெரிக்கா குண்டு போட ஆரம்பிச்சிரும்...அப்படியே பிரச்சினை பெருசாகி உலகப்போராகிடுச்சின்னா //

ரொம்ப நல்ல எண்ணம் ரவி...!!
வாழ்க வளமுடன் :-(

நாய் கடிச்சதுக்கே விஸ்தாரமா பதிவு போட்ற ஆளு, போருக்கு எல்லாம் தாங்க மாட்டீங்க சாமி. Be careful on what you think about..!! It might become true... :-)

ரொம்ப ஆசையாயிருந்தா ஈராக்கிலோ, பாலஸ்தீனத்திலயோ, யாழிலோ போய் வேலை பாருங்கள். உயிரின் அருமை புரியலாம்!!!!!

Pot"tea" kadai said...

ஆகா அருமை அற்புதம்...

ஒலகம் வெளங்கினாப்ல தான் உன்ன மாதிரி ஆளுங்க இருக்கவரைக்கும்...

Anonymous said...

பெங்களூர் அனானின்னு பின்னூட்டம் போடுற கூமுட்டை கிட்டே ஜாக்கிரதையா இருக்கவும்.

Spencejjjf said...

ரவி, ஒரு மார்க்கமாய் தான் அலையறிங்க அனேகமா அந்த ஊரு ஜெயில் சோறு எப்படி இருக்கும்னு பார்க்காமா வர மாட்டிங்க போல தெரியுதே , பார்த்து சூதனமா இருந்துகோங்க ! //கொழந்தைங்க கூட மொக்கை போடுதாம்...// நல்லாபடிங்க பொக்கைனு சொல்லி இருப்பாங்க !