Wednesday, July 18, 2007

துபாய் வலைப்பதிவர்களின் கவனத்துக்கு: கவிதை திறனாய்வு (அய்யனார்)

எனது சமீபத்திய பின்னவீனத்துவ கவிஞர்கள் பற்றிய பதிவில் துபாய் வலைப்பதிவாளர்களை தனது கொலைவெறி பின்னவீனத்துவ கவிதைகளால் டருஜு ஆக்கி வரும் அய்யனார் பற்றி ஏன் எழுதவில்லை என்று பல பதிவர்கள் கோபித்துக்கொண்டார்கள்...

அவர்களின் ஆதங்கத்தினை போக்கும் விதமாகவும், உண்மையான மொக்கைகளை அடையாளம் கண்டு மெச்சும் விதமாகவும், கொலைவெறியுடன் இருக்கும் துபாய் வலைப்பதிவர்களை தாகசாந்தி செய்வதற்காகவும் இந்த பதிவு...

என்னுடைய கல்லூரி காலத்து தோழன் ஒருவன் இதுமாதிரிதான்...புரியாத கவிதைகளை எழுதுவதில் வல்லவன்...கடைசிவரை அவனது கவிதை நோட்டுப்புத்தகம் எனக்கு ஒரு புரியாத புதிராகவே இருந்துவந்தது...

அய்யனார் கவிதைகளில் எனக்கு பிடித்த வரிகள்

"உன் அதிர்வுகளில் குலைகிறதென் நிசப்தம்
உன் பிரசன்னத்தில் ஓடிப் பதுங்குகிறது என் நிழல்
உன் கட்டுக்களற்ற சொற்கள் நிறைக்கிறதென் துவாரங்களை
முன் தீர்மாணங்களில்லாத அடுத்தநிமிடங்கள்
தற்கொலை செய்துகொள்கின்றன

நான் எழுத வேண்டும் தோழி
தயவு செய்து இடத்தை காலி செய்"

என்ன ஒன்னு...ஒரு எழவும் புரியல...முதல் வரி உன் அதிர்வுகளில் குலைகிறதென் நிசப்தம்...குலைக்கிறதுன்னா நாய் தான...உன் பிரசன்னத்தில் ஓடி பதுங்குது நிழலா ? ஏது இந்த பிரகாஷ் ராஜ் படத்துல நடிப்பானே பிரசன்னா அவனை சொல்றீங்களா ? உன் கட்டுகளற்ற சொற்கள் ? சொல்லை எப்படி கட்டமுடியும் ? தாலி தான் கட்டமுடியும்...அடுத்த வீட்டுகாரன் பொண்டாட்டி நம்மளோட ஓடிவந்தத...அடுத்த நிமிடங்கள் தற்கொலை செய்துக்குதா ? கடிகாரத்தை தூக்கிபோட்டு உடைக்கனுமா ?

//நான் எழுத வேண்டும் தோழி
தயவு செய்து இடத்தை காலி செய்"
//

பிகரை கூட தொரத்திட்டு கவுஜ எழுதறதுக்கு நீர் என்ன அருந்ததி ராயா இல்லை இல்ல உமா மகேஸ்வரியா ? ( யாருடா இந்த உமா மகேஸ்வரி ?)

இப்போ விஷயத்துக்கு வருவோம்...என்ன சொன்னாலும் கோச்சுக்க மாட்டேங்குறாரு நம்ம அய்யனார்...அவர் ஒரு பாசக்கார பருந்து...நேசக்கார நேரு...அதனால அவரை பின்னூட்டங்கள் வழி வாழ்த்துவோம்...எப்படி ? ஒரு கவிதையின் மூலமாகத்தான்...உங்களால் முடிந்த அளவு திட்டியோ கொட்டியோ பாசத்துடனோ ஒரு கவிதைப்பின்னூட்டம் போடனும்...(ரொம்ப முக்கியம், அது கவிதையா இருக்கனும்)...

வாங்க...வரிசையா ஒடிவாங்க...பினாத்தல் சுரேஷ், அபி அப்பா, குசும்பன், மின்னுது மின்னல், தம்பி, கோபி, சென்ஷி, சேகர், லியோ சுரேஷ், மகி எல்லாரும் வாங்க...அய்யனாரை வாழ்த்தி கவுஜையாக இடுங்க பின்னூட்டம்..

22 comments:

குசும்பன் said...

அய்யனார ஓட்டுரதுன்னா எனக்கு அல்வா சாப்பிட்ட மாதிரி...

ரவி உங்களுக்கு நன்றி சொல்ல வார்தைகள் அற்று நிற்கிறேன்

குசும்பன் said...

"குலைக்கிறதுன்னா நாய் தான"

இன்னு ரவி அதில் இருந்து மீளவில்லையா?

குசும்பன் said...

"பிகரை கூட தொரத்திட்டு கவுஜ எழுதறதுக்கு நீர் என்ன அருந்ததி ராயா "

ரிப்பீட்டே!!!!

ரவி said...

யோவ் உன்ன என்னா சொன்னேன்

வருதோ வரலையோ

எந்த கருமமா இருந்தாலும் பின்னூட்டம் கவிதையா இருக்கனும்...

இதுல நாங்க ரொம்ப ஸ்டிரிக்ட்..ஓக்கே...

குசும்பன் said...

மல்லாந்து படுத்தேன் கவிதை வரவில்லை

குப்புற படுத்தேன் கவிதை வரவில்லை

குந்திகினு பார்தேன் கவிதை வரவில்லை

கவிதையான அய்யானாரை பார்த்தேன்

கவிதை வந்தது...

"போது நிறுத்து"

குசும்பன் said...

"வருதோ வரலையோ

எந்த கருமமா இருந்தாலும் பின்னூட்டம் கவிதையா இருக்கனும்..."

வெறும் காத்துதாங்க வருது:(

முரளிகண்ணன் said...

அய்யனார்
நீங்கள் எழுதிய கவிதைகளால்
பலர்
டார்

Unknown said...

ìø‹îðfˆ
ø¸îðf ìøîðf îøðf
«î;ð ðîføì îðf«';øìf
îðf ðîfƒ¢¯Œî
øˆðø ðîfþ
îδþ¯ îðfø숌ú
øúŒîøˆ‹ îfþö
úŒîøìîðf¯ö îðfŒúîˆ
úŒøìîøì úŒøîìˆ
úŒîøƒ¤8ðf

நாடோடி said...

ஆணி புடுங்க சொல்லுகிறான் தலைவன்..
கவுஜ எழுத சொல்லுறான் தோழன்..
இரண்டுக்கும் நடுவே நிக்கிறான் காலன்...
அய்யோ யாரது.. அய்யனாரா?..
வுடு ஜூட்..

சென்ஷி said...

//
குசும்பன் said...
அய்யனார ஓட்டுரதுன்னா எனக்கு அல்வா சாப்பிட்ட மாதிரி...

ரவி உங்களுக்கு நன்றி சொல்ல வார்தைகள் அற்று நிற்கிறேன்
//

ரிப்பீட்டே :))

துபாயிலிருந்து
சென்ஷி

சென்ஷி said...

காதலித்துப் பார்
கவிதை வரும்..
அய்யனார் கவிதையை பார்
காதலும் ஓடும்!..


நான் எழுதி வைத்த‌
எல்லா எழுத்துக்களையும்
எப்படி நான் சேர்த்து வைப்பது..


எதில் ஆரம்பம்
கவிதை தெரியவில்லை..
அய்யனார் : அது கவிதையே இல்லை .. பின்னவீனத்துவத்துக்கு நான் எழுதி வச்ச நோட்ஸ்..


செருப்பு கடிக்குது
கொசுவே தேவலை..
நாய் துரத்தியது
நிழலுடன் சேர்ந்து ஓடினேன்


துபாயிலிருந்து
சென்ஷி

கோபிநாத் said...

அய்யனார !

ஓட்டுரதுன்னா !!

எனக்கு !!!

அல்வா !!!!

சாப்பிட்ட !!!!!

மாதிரி !!!!!!

ரீப்பிட்டேய்...!!!!!!!!!!!!

தல இந்த கவிதை போதுமா?

Ayyanar Viswanath said...

தாவு

தீ
ரு
து
:)

நாடோடி said...

தாவு!

தீ!!
ரு!!!
து!!!!
:)!!!!!!!!!!!!!!!!!!

ALIF AHAMED said...

தனிமையில்தான்
நடக்கிறேன்
புலிகளில்
உறும்மல்களோடு
இருந்தும்
நீலிகளுக்கு
முன்
புலிகளெல்லாம்
பூனைகளாக
சுருண்டு
படுத்துகொள்கிறது
அடுப்படியில்...!!!!

Jazeela said...

உன் வருகையில்..
தொலைந்தது நிசப்தம்
ஒளிந்தது நிழல்

நீ கத்துறது
காதுல
குவைஐஐஐன்னு கேட்குது.
ஒரு நிமிஷம் தயங்காம
காதை அறுத்துக்கிட்டேன்.
காது தற்கொலைப் பண்ணிக்குச்சு

நான் எழுதுறது எனக்கே புரியல
நீ வேற
தயவு செஞ்சி இடத்தை காலி செய் தாயி

அபி அப்பா said...

அடங்காத அய்யனாரு
அடகிட்டாண்டா மாமனாரு

அபி அப்பா said...

அடர்கானக புலி
அண்டிராயர கிழி

அபி அப்பா said...

ரவி! முடியலய்யா! வசனத்துக்கு மாறிடவா அய்யனாரை ஓட்ட சொற்கள் கட்டுடைத்து பீறிகிட்டு வருதுய்யா!

லொடுக்கு said...

may i come in?

லொடுக்கு said...

அடர்கானகப் புலி
அதனூடே நீலி
இவையாவும் போலி...

லொடுக்கு said...

இங்கே பாருங்க ஒரு ஐக்கூ:

தனிமையே
ஒருநாள் தனிமை தேடும்
புரியா கவிதைகள் படைப்பதால்.