Friday, July 20, 2007

லக்கியின் கிழிந்த டவுஸரை ஒட்ட !!!

பின்னவீனத்துவ எதிர் அழகியல் பிராண்டல்களுக்கு எதிரான கூட்டணி கட்சிகளை தாண்டி காட்சிகளாகும் தருணம்...அய்யகோ எனக்கும் கவிதை வந்திட்டதே...!!!



பின்னவீனத்துவ படம்...பொட்டீக்கடைக்கு சமர்ப்பணம்...!!!

மெல்லுவதெல்லாம் வாயல்ல...
கில்லுவதெல்லாம் கொலையல்ல...

மியோத்ஸி புத்தோ மியோத்ஸி காஜி

விரைந்து எழுதும் விடைத்தாளும்
குரைத்து கடிக்கும் சொறிநாயும்

உருப்புட்டதாயில்ல ஒரு சரித்திரம்...வெறுப்புற்றதாயில்ல இது மாத்திரம்..

வேட்டையாடு விளையாடு விருப்பம் போல நடைபோடு வீரமாக உடையைப்போடு
நீ காசை பெற்று கிளம்பியோடு...

புதிய வானம் பழைய பூமி, இந்த மேகம் மட்டும் ஓய்ந்திருந்தா நீ காமி...

சுண்ணாம்பு வெள்ளை...சூரியன் மஞ்சள்...ஏங்கே எனது ஏஞ்சல் ?

டெலிபோன் மணி ட்ரிங் ட்ரிங்...டோர் பெல் ரிங் ரிங்...சத்தங்கள் நிசப்தங்கள்..சில சமயம் தொல்லை...பல சமயம் நாம் சொல்வது போய்த்தொலை...என்றாவது ஒருநாள் அந்த மணியும் உடைந்துபோகும்...பல கணவுகளும் நொறுங்கிபோகும்...(ஆங் இந்தா வரேன்...)

வாட்டர் பாட்டில் தீர்ந்து போகும்...
வானம் என்றாவது காய்ந்து போகுமா ?

சேனல் பிடிக்கவில்லையா சேனலை மாற்று...நொடிகளில்..
டிவி. பிடிக்கவில்லை என்றால் டி.வியை மாற்றமுடியுமா..நொடிகளில்...

காலங்கள்...!!!

காலங்களில் அவள் வசந்தம்...
காசிருந்தால் என்றுமே என் சொந்தம்...

ஒளியில் தெரிவது தேவதை மட்டுமா ?
சில தேனீக்களும் தான்...தேவதை என் சொந்தம்....தேனீக்கோ தேன் கூடுதானே சொந்தம்..
சில சர்க்கரை பருக்கைகளை விட்டுவைக்கிறேன்...தேனீயோ எறும்போ தின்றுவிட்டுபோகட்டும்..

அவுட் கொடுப்பது அம்பயரு..
அவரே அவுட்டாயிட்டாருன்னா ?

போதும் நிறுத்திக்கறேன்...(யோவ் இது கவிதை கிடையாது... இதுக்கெல்லாம் // போதும் நிறுத்திக்கறேன்....// அருமையான வரிகள் என்று பின்னூட்டம் போடக்கூடாது..)

7 comments:

கோவி.கண்ணன் said...

//"லக்கியின் கிழிந்த டவுஸரை ஒட்ட !!!" //

:))

கெளம்பிட்டாங்கைய்யா ...கெளம்பிட்டாங்கே !

ரவி said...

ஆஆஆஆஅச்ச்சு...(தும்மினேன்)

நாடோடி said...

//போதும் நிறுத்திக்கறேன்...//

என்ன ஒரு முன்நவினத்துவமான வரிகள் இது ரவி.

லக்கிலுக் said...

ஆஹா.. பிரமாதம்.. கொன்னுட்டேள்.. பின்னிட்டேள்...

கார்மேகராஜா said...

//பின்னவீனத்துவ படம்...பொட்டீக்கடைக்கு சமர்ப்பணம்...!!!///


aahaa.. aarampamee emarkkaLam.,,,

:-0)

ILA (a) இளா said...

அருமையான வரிகள்

Anonymous said...

potteakku நீங்க சமர்பித்திஅ போட்டோவை பாத்துட்டு பேசாம அடுத்த மாதப் புகைப்படப்போட்டிக்கு "பின்னவீனத்துவம்னு தலைப்பு வெச்சிரலாமான்னு யோசிக்கராங்களாம் செல்லா கோஷ்டிகள். செம படம் மாம்ஸ்.

அப்புறம் வேலை வாய்ப்பு ரவிக்கே செல்லா ஒரு புது வேலை கொடுத்திருக்கார். http://photography-in-tamil.blogspot.com/2007/07/50.html
போய்ப்பாருங்க.

உங்கள் ரசிகை