இந்த கடிதம் மதிப்பிற்கும் மரியாதைக்கும் உரிய மாலன் அவர்களுக்கு எழுதப்பட்டது...நுண் அரசியல் என்ற வார்த்தையை முன் பின் கேள்விப்பட்டவன் இல்லை இந்த செந்தழல் ரவி...நீங்கள் பட்டறையில் பேசியதை கண்டு பொன்ஸ் எழுதியதை பார்த்தவுடன் தான் தமிழில் அப்படிப்பட்ட ஒரு வார்த்தை இருப்பதே தெரியும்..இருந்தாலும் இந்த பதிவில் நான் கும்மி அடிக்க எடுத்துக்கொண்ட விஷயம் இது தான்...!!!
எதுக்கெடுத்தாலும் பாலகுமாரனுக்கு பகிரங்க கடிதம், பாமரன் பாயா சாப்பிட்டது ஏன்,பத்ரி பக்கோடா சாப்பிட்டாரா, மாலன் மசிந்துகொடுப்பாரா, ஜெயமோகன் ஜம்ப் அடித்தாரா என்று பிரபலமானவர்களை பிடித்து வம்பிழுப்பது பதிவர்களுக்கு வழக்கமாக போய்விட்டது...
நாம அடிக்கிறது கும்மியும் போடுறது மொக்கையும்...இதுல மார்க்கிசியமும் இராம் பொண்ணு கே.எப்.சியில சிக்கன் துன்றதும் - தேவையா நமக்கு...
வெளியுலகில் பிரபலமானவர்கள் AACH என்று தும்மினால் அறுநூறு அர்த்தம் கண்டுபிடித்து குமுற குமுற கும்முவதும் புதிய ட்ரெண்டாக மாறி ஒரு மாதமாகிறது...
அதனால் இப்படி எல்லாரும் ஆளுக்கொரு கடிதம் எழுதும்போது நான் மட்டும் சும்மா இருந்தால் இந்த ஆண்டு இறுதியில் சர்வேசன் வைக்கப்போ"கும்" சிறந்த கும்மி பதிவர் யார் என்ற சர்வேயில் லக்கி, பொட்டீக்கடை,வரவணை,பாலபாரதி, அபி அப்பா, குசும்பன், லாஸ்ட் பட் நாட் லாஸ்ட் மிஸ்டர் ஓசை செல்லா போன்ற மெகா கும்மி பதிவர்களிடம் தோல்வியுற்று மண்ணை கவ்வவேண்டியிருக்கும்...ஐக்கான் கிடைக்காது...அதனை வலைப்பதிவிலும் போட்டுக்கொள்ள முடியாது...
அதனால் ப்ளீஸ்...நானும் மிஸ்டர் மாலனை வெச்சு ஒரு கும்மி அடிச்சிக்கிறேனே...
மிஸ்டர் மாலன்...நீங்க ஆயிரம் இருந்தாலும் இப்படி செய்திருக்க கூடாது...எப்படி ? நீங்க சமீபத்துல எழுதுன பதிவுல அங்க இங்க ஸ்பேஸ் வெக்காம நீளமா அடிச்சுட்டீங்க...அலைன்மெண்டும் சரியா இல்லை...அதனால அங்கே அங்கே கொஞ்சம் கேப் விட்டீங்கன்னா ரீடபிளிட்டி நல்லா இருக்கும்னேன்...!!!
காணாமே பூட்ட மொவமூதி எல்லாம் வந்து கொலைக்க ஆரம்பிச்ச பிறகு நமக்கு என்ன வேல இங்க..
வர்ட்டுங்களா...