Sunday, March 30, 2008

தமிழச்சியின் இடுகையை மீண்டும் தமிழ்மணம் சேர்க்கவேண்டும்

பெரிய கோரிக்கை எல்லாம் இல்லை...தமிழச்சி அவர்களின் வலைத்தளத்தை மீண்டும் தமிழ் மணத்தில் சேர்க்கவேண்டும்...

பெண்ணீய கலகக்குரல் - அது கண்டிப்பாக வேண்டும் இந்த காலகட்டத்தில்..

வார்த்தைகளில் தவறுகள் இருப்பதாக நீங்கள் நினைக்கலாம், அப்படி நீங்கள் கட்டாயமாக நம்பும் இடுகைகளை மட்டும் நீக்கலாமே, முழு பதிவையும் ஏன் தூக்கவேண்டும் ?

அப்படி சேர்க்கும்போது அது மலேசியா ஐ.பியில் இருந்து சேர்க்கப்படுகிறதா, சேர்ப்பவரின் மின்னஞ்சல் தமிழச்சியின் மின்னஞ்சலை ஒத்திருக்கிறதா என்று கண்டு அதன் பிறகே சேர்க்கவேண்டும்...

களவாடப்பட்ட தமிழச்சியின் தளம் தவறாக உபயோகப்படுத்தப்படலாம்...அதனால் தமிழ்மண நிர்வாகிகள் எச்சரிக்கையாகவும் பொறுப்புடனும் நடந்துகொண்டு, தமிழச்சியின் தளத்தை சேர்ப்பதோடு, அதன் ஆத்தண்டிக்கேஷனையும் பார்க்க வேண்டும்...

Saturday, March 29, 2008

வசந்தம் ரவிதான் போலி டோண்டு மலேசியா மூர்த்தியா ?

வசந்தம் ரவி எதையோ எழுதினார் என்பதற்காக பதிவர்கள் NMH எடிட்டர், முகுந்தின் இ-கலப்பை உட்பட மென்பொருட்களை நீக்கிவிட்டு மொக்கையாகிறார்கள் என்று ஆனபிறகு உண்மையை சொல்லிவிடலாம்...

"தமிழ் தட்டச்சு" மென்பொருட்கள் என்று குன்ஸாக பெயர் வைத்து அவர் எந்த மென்பொருளை டார்கெட் செய்கிறாரோ அது புரியவில்லை, ஆனால் கூகுள் டூல்பார், மைக்ரோ சாப்ட் வேர்டு உட்பட எந்த மென்பொருளும் இணையத்துடன் தொடர்புகொண்டு தகவல்களை அனுப்ப முடியும்...

இட்லிவடையின் இ-மெயில் ஹேக்கிங் படம் எப்படி கிடைத்தது இவனுக்கு ? ஹேக் செய்ததே இவன் தானோ ?

தமிழ் இணையத்தில் ரெண்டு வருடம் குப்பை கொட்டிவிட்டால் போதும், எது மலேசியா மூர்த்தியின் பதிவு என்று குழந்தை கூட சொல்லிவிடும்...

இப்போதெல்லாம் மின்னஞ்சலில் உயர் பாதுகாப்பு தகவல்கள், வங்கி கணக்குகள் போன்ற விவரம் இருப்பதால் உங்கள் மின்னஞ்சலை பாதுகாத்துக்கொள்வது நல்லது தான், ஆனால் மின்னஞ்சலை பாதுகாக்கிறேன் என்று வசந்தம் ரவி அலைஸ் போலி டோண்டு அலைஸ் மலேசியா மூர்த்தி அலைஸ் விடாது கருப்பு பேச்சை கேட்டீங்கன்னா,

முதலுக்கே மோசமாகும். வேலியில் போற ஓனானை காதில் விட்டுக்கொண்டது போல ஆகும்...

பதிவர்களை ஒரு மென்பொருளை டவுன்லோடு செய்ய சொல்லுகிறானே, அந்த மென்பொருள் கூட ஒரு திருட்டு மென்பொருளாக இருக்கும்...

பதிவர்களே - இந்த "தெய்வமகன்" வசந்தம் ரவி அலைஸ் விடாது கருப்பிடம் இருந்து (மூர்த்தி) தப்பித்துகொள்ளுங்கள்....

Wednesday, March 26, 2008

தமிழ்மண பிரச்சினை

கடந்த சில நாட்களாகவே இந்த பிரச்சினை தமிழ்மணத்தில் இருந்துகொண்டிருக்கிறது. சொல்லலாம் என்றால் யாரிடம் சொல்வது என்று தெரியவில்லை...

கிசு கிசுவாக எழுத இரவுக்கழுகாரும் இல்லை...என்ன செய்ய, இப்படி பதிவு போட்டுத்தொலைக்கவேண்டியிருக்கிறது...



தமிழ்மணத்தை ஒப்பன் செய்தாலே - இந்த மாதிரி மைக்ரோசாப்புட்டு வார்னிங் வருகிறது. இது என்னுடைய கணினி கோளாறா - அல்லது தமிழ்மண கோளாறா தெரியவில்லை...

இந்த பதிவை நீக்கிவிடவேண்டாம் என்று தமிழ்மண நிர்வாகத்தினரை கேட்டுக்கொண்டு, (மொக்கைதான்), இதனை காமெடியாக எடுத்து கட்டாயம் சிரித்தேயாகவேண்டும் என்று கொழுவி அவர்களை கேட்டுக்கொண்டு, இப்போதைக்கு இடத்தை காலிசெய்கிறேன்...

தமிழ்மணத்துக்கு என்னுடைய புல் சப்போட்டு உண்டு ( தமிழச்சி பதிவை மீண்டும் சேர்த்துக்கோங்கப்பா )