வசந்தம் ரவி எதையோ எழுதினார் என்பதற்காக பதிவர்கள் NMH எடிட்டர், முகுந்தின் இ-கலப்பை உட்பட மென்பொருட்களை நீக்கிவிட்டு மொக்கையாகிறார்கள் என்று ஆனபிறகு உண்மையை சொல்லிவிடலாம்...
"தமிழ் தட்டச்சு" மென்பொருட்கள் என்று குன்ஸாக பெயர் வைத்து அவர் எந்த மென்பொருளை டார்கெட் செய்கிறாரோ அது புரியவில்லை, ஆனால் கூகுள் டூல்பார், மைக்ரோ சாப்ட் வேர்டு உட்பட எந்த மென்பொருளும் இணையத்துடன் தொடர்புகொண்டு தகவல்களை அனுப்ப முடியும்...
இட்லிவடையின் இ-மெயில் ஹேக்கிங் படம் எப்படி கிடைத்தது இவனுக்கு ? ஹேக் செய்ததே இவன் தானோ ?
தமிழ் இணையத்தில் ரெண்டு வருடம் குப்பை கொட்டிவிட்டால் போதும், எது மலேசியா மூர்த்தியின் பதிவு என்று குழந்தை கூட சொல்லிவிடும்...
இப்போதெல்லாம் மின்னஞ்சலில் உயர் பாதுகாப்பு தகவல்கள், வங்கி கணக்குகள் போன்ற விவரம் இருப்பதால் உங்கள் மின்னஞ்சலை பாதுகாத்துக்கொள்வது நல்லது தான், ஆனால் மின்னஞ்சலை பாதுகாக்கிறேன் என்று வசந்தம் ரவி அலைஸ் போலி டோண்டு அலைஸ் மலேசியா மூர்த்தி அலைஸ் விடாது கருப்பு பேச்சை கேட்டீங்கன்னா,
முதலுக்கே மோசமாகும். வேலியில் போற ஓனானை காதில் விட்டுக்கொண்டது போல ஆகும்...
பதிவர்களை ஒரு மென்பொருளை டவுன்லோடு செய்ய சொல்லுகிறானே, அந்த மென்பொருள் கூட ஒரு திருட்டு மென்பொருளாக இருக்கும்...
பதிவர்களே - இந்த "தெய்வமகன்" வசந்தம் ரவி அலைஸ் விடாது கருப்பிடம் இருந்து (மூர்த்தி) தப்பித்துகொள்ளுங்கள்....
1 comment:
இரவி,இதுதாம் உண்மையாக இருக்கும்.ஏனெனில், எனக்கு ஏற்பட்டவொரு அநுபவமும் இதையே ஆமோதிக்கச் சொல்கிறது.கடந்த மாதமளவில்"வசந்தம் இரவி" தமிழ் செயலியொன்றைக் கணினியில் தன்னியல்பாய்ப் பொருத்திவிடுவதமாகச் சொல்லியொரு பதிவு போட்டார்.அப்பதிவின் வழி,நேரடியாக ப்பிளக்கர் கணக்குக்ப்போய் இணைப்பதான நுட்பம்.நானும் அப்படிச் செய்தபோது,எனது பாஸ்வோர்ட் திருடப்பட்டு,எனது தளமான ஜனநாயகம் எனது கைகளிலிருந்து பறிபோகும் நிலை இருந்தது.எனினும், உடனடியாகச் சந்தேகங்கொண்ட நான் மீளவும் அத்தளத்தைமீட்கக் காரியத்திலறங்கி மீட்டெடுத்து மின் அஞ்சல் மற்றும் பாஸ்வோர்ட் அனைத்தையும் புதிதாக மாற்றினேன்.இதுவொரு அநுபவம்.ஆனால்,இது நடந்தது "வசந்தம் இரவி"தம் பதிவின் மூலமே!
வந்தம் இரவி என்பவர் சிக்கலான பேர்வழிதாம் என்றே நான் கருதுகிறேன்.
ஸ்ரீரங்கன்
Post a Comment