Saturday, June 21, 2008

அசோகமித்திரன் : மிஸ்டர் "மாமீஸ்" ரைட்டர்

லக்கியும், பாலபாரதியும் வாங்கி அனுப்பிய புத்தகங்கள் வாசித்துக்கொண்டிருக்கிறேன்..

அசோகமித்திரன் சிறுகதைகளை "முத்துக்கள் பத்து" என திலகவதி தொகுத்திருக்கிறார்...படித்து முடிக்குமுன் சன்னல் வழியாக வீசியெறிந்துவிட்டேன்...

உண்மைத்தமிழனாவது மொக்கையான புத்தகங்களை எடைக்கு போடும்வரை பொறுமை காத்திருக்கிறார்...



என்னால் முடியவில்லை...

அம்பது வருடங்களாக எழுதினாராமே ? எனக்கு என்னமோ எல்லாம் குப்பை என்று தோன்றுகிறது...

இண்டலக்சுவலுகளுக்காகவும், மாமிகளுக்காகவும் கதை எழுதும் இதுபோன்றவர்கள் ...ச்ச்சே !!!

ஆனந்த விகடன் வாசிக்கும் மாமிகளை "தனது" எளுத்தால் கட்டிப்போட்ட அசோகமித்திரனுக்கு இந்த பதிவு சமர்ப்பணம்...

12 comments:

அபி அப்பா said...

ங்கொயால மசக்கையா இருக்கும் நேரத்திலே ஏனய்யா விழப்பரீட்சை! அடங்க மாட்டியா!!!

SP.VR. SUBBIAH said...

வாங்கி அனுப்பிய கவிஞரிடமும், மடிப்பாக்கம் நியூஸ் ஏஜென்சிக்காரரிடமும் ஒரு வார்த்தை சொல்லிவிட்டு வீசியிருக்கலாமே?

லக்கிலுக் said...

அசோகமித்திரனை ரசிக்க முடியலையா? ஆச்சரியமா இருக்கு! :-(

ers said...

இன்னா தலிவா நிஜமாவே லந்து பன்றீயா? அசோகமித்தரன் கத புடிக்கிலியா? வேற எதாச்சும் கத சொல்லு நயினா...

Anonymous said...

அந்தத் தொகுப்புல புலிக் கலைஞன் கதை இருக்குதா?

அவரோட நல்ல கதை அது. முடிஞ்சா வாசிச்சுப் பாருங்க.

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

என்னது அசோகமித்திரன் எழுத்துகள் இண்டலக்சுவல்களுக்கானதா?!??!!

சுகுணாதிவாகர் said...

/அசோகமித்திரனை ரசிக்க முடியலையா? ஆச்சரியமா இருக்கு! :-(/

லக்கிக்கு மப்பு ஓவராயிட்டு போல. இந்தப் பின்னூட்டத்தை என் பதிவிலும் போட்டிருந்தார்.

ரவி said...

வாங்க வாத்தியாரே !!!!...

அவங்க இந்த பதிவு மூலமா தெரிஞ்சுக்கிட்டாங்க :))))

எல்லா புத்தகங்களையும் குறைசொல்லமுடியாது...

"தாச்சாச்சார்யார் எழுதிய இந்துமதம் எங்கே போகிறது" டாப் பிக்...

நீங்க படிச்சீங்களா ?

ரவி said...

///இன்னா தலிவா நிஜமாவே லந்து பன்றீயா? அசோகமித்தரன் கத புடிக்கிலியா? வேற எதாச்சும் கத சொல்லு நயினா...///

அசோகமித்திரன் கதைகளுக்கு டோண்டு ராகவன் கேள்விபதிலே தேவலாம் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்...அவை எவ்வளவு மொக்கை என்று...

"முனீர்" என்றொரு மொக்கை கதை....அவாள் இவாள் பாசை பேசும் அய்யர்வாள், வீடு மாத்துகிறார். அவருக்காக வேலை செய்யும் முனீர் என்ற பையன் வேலை போகிறது. அதற்கு காரணம் முனீர் கடையின் ஸ்பானர்கள் அய்யரின் மூட்டையில் இருந்ததே காரணம்.

ஒரு திருப்பமும் இல்லாமல் எருமை மாட்டு மேல மழை பேய்ஞ்ச மாதிரி கதை...

எழுத்து என்பது பிரசவம் என்பேன்...அவர் சில பிள்ளைகளும் பெற்றிருக்கலாம்....ஆனால் மற்றவை காசுக்காகவும் சன்மானத்துக்காகவும் பெத்துப்போட்ட மரப்பாச்சி பொம்மைகள்...அவைகளில் எந்த உணர்ச்சியுமில்லை...

ரவி said...

//அவரோட நல்ல கதை அது. முடிஞ்சா வாசிச்சுப் பாருங்க.///

இல்லை...கண்டிப்பா தேடி வாசிக்குறேன் வேலன்...

ரவி said...

//அசோகமித்திரனை ரசிக்க முடியலையா? ஆச்சரியமா இருக்கு! :-(///

வண்ணநிலவனை ரசிக்கமுடிகிறது லக்கி...

ரவி said...

.//லக்கிக்கு மப்பு ஓவராயிட்டு போல. இந்தப் பின்னூட்டத்தை என் பதிவிலும் போட்டிருந்தார்.///

:)))))))))))))))) LOL