Sunday, July 06, 2008
கமா கதைகள்...(23455)...(1)...
ஒரு புள்ளியும் ஒரு கமாவும் சந்தித்துக்கொண்டபோது...புள்ளி சொன்னது...உணர்வை விட உற்சாகம் முக்கியம்...காதலை விட காற்று முக்கியம்...சரி அதனால்
என்ன என்றுகேட்டது கமா..கமாவை கமாவாக பார்க்காமல், எதனோ ஒரு வடிவத்தின் நீட்சியாக பார்க்கலாம் என்றது புள்ளி...நீட்சியென்றால்...மீட்சியா என்றது கமா...மீட்சியோ, மிரட்சியோ அது எனக்கு தெரியாது...ஆனால் அது ஆதிக்கத்தில் ஆரம்பித்து, பாதிப்பில்
முடிவடையும் என்றது புள்ளி..புள்ளியுடன் இனைந்து உறவுகொள்ள கமாவுக்கு காதல் தேவையாக இருக்கவில்லை..காற்றுக்கென்ன வடிவமா இருக்கிறது...காதலுக்கும் தான் இல்லை...புள்ளிக்கு தேவை ஒரு புள்ளி. ஆனால் கமாவுக்கோ தேவை சற்று நீளமான
கோடு. கோட்டை புள்ளியோடு இணைத்தால் அது கமா. இணைவது காமன் செயல். அதாவது பொதுச்செயல். பொதுவில் வைப்பதால் அது பொதுவானதா ? இல்லை அந்தரங்கமானதா ? அந்தரத்தை உயரத்தில் தான் வைக்கவேண்டுமா ?
அடியிலும் வைக்கலாம்...!!!!!!
பின்குறிப்பு: எதிர்பார்த்தது கிடைக்கவில்லை என்றால் கிடைத்ததை எதிர்பார்ப்பதே சரியானது : ஜப்பானிய அறிஞர் கொயமோட்டோ டொமோட்டோ...
Subscribe to:
Post Comments (Atom)
1 comment:
அசோகமித்திரனோட, புலிக் கலைஞன் கதை கிடைச்சுதா? படிச்சீங்களா?
Post a Comment