Friday, July 11, 2008

சோதிடத்தை நம்பும் அம்பிகளே, மாமிகளே !!!


*************************** ********** ************** *************** ************* * ************** ************* * **************** *********** *************** ******************** *********** ************** ******************** *********************** *****************

தமிழ்மணம் ஹேக் செய்யப்பட்டது !!!!!!1

இன்று காலை தமிழ்மணம் ஹேக் செய்யப்பட்டது...!!! அதிர்ச்சியான இந்த தகவலை நான் அறிந்துகொண்டது ஒரு காமெடி பதிவை தமிழ்மணம் நிர்வாக குழுவின் வலைப்பதிவில் இருந்து போடப்பட்டபோதுதான்...

இந்த காமெடி பதிவை படியுங்கள் !!!

யார் அந்த ஹேக்கர் ? நமது அன்புக்குரிய திரட்டியான தமிழ்மணத்தின் நிர்வாகி ஒருவரின் மூன்றுவயது குழந்தைதான் அது :)))

ஹி ஹி !!!!

காமம் என்ற தலைப்பிட்டு கதை எழுதிய சுந்தரின் பதிவை "***" கொடுத்து எடிட் செய்து, எடிட்டர் வெற்றிலைப்பாக்கு ஆனந்தவிகடன் அய்யங்கார் மாமா போல் நடந்துகொண்டது சரி !!! ஆனால் பதிவருக்கு எந்தவித விளக்கமும் கொடுக்காமல் இந்த செயலை செய்தபோதுதான், இவ்வளவு நாட்களாக சிறப்பாக இயங்கிவரும் நிர்வாகத்தினர் கணினி ஹேக் ஆகிவிட்டதோ என்று சந்தேகம் ஏற்பட்டது...

"காமத்துப்பால்" பற்றி தலைப்பிட்டு திருக்குறள் விளக்கம் எழுதினால் அதைகூட மட்டுறுத்தல் செய்வார்களா என்ன ? திருவள்ளுவரே, உமக்கேன் இந்த கதி ?

///அப்படியான சொற்களை மட்டுமே தமிழ்மணம் மட்டுறுத்தி உள்ளது. அவற்றினைக் கொண்ட இடுகைகளை தமிழ்மணம் நீக்கவில்லை என்பதையும் தெரிவித்து கொள்கிறோம்////

இப்படி சொன்னால் என்ன அர்த்தம் ? அதே எடிட்டர் மனோபாவம் தானே ?

//இடுகைகளின் தலைப்புகள் இத்தகைய சிறப்பு பகுதியில் இடம் பிடிக்கவும், வாசகர்களை தொடர்ந்து இழுக்கவுமே வைக்கப்படுவதாக தமிழ்மணம் நம்புவதால்//

இந்த நம்பிக்கை சரியா - தவறா என்று கொஞ்சம் யோசித்திருக்கவேண்டும்...ஜ்யோராம் சுந்தர் அப்படி செய்யவில்லை என்பது என்னுடைய கருத்து...!!!

நிர்வாகத்தின் தரப்பிலிருந்து பதிவர்கள் கருத்துக்கேட்டிருக்கவேண்டும்...ஒரு சர்வே வைத்திருக்கவேண்டும்...அப்படி வெளிப்படையாக - ட்ரான்ஸ்பரண்ட்டாக இந்த செயலை செய்திருந்தால் - யாரும் கேள்விகேட்டிருக்கப்போவதில்லை...

அமெரிக்காவில் இருந்து திரட்டியை நடத்துவதால் ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை போய்விட்டதா என்ன ? அனைத்து வாசகர்கள் கருத்தை வெளிப்படையாக கேட்கும் பழக்கமே கிடையாது என்பது தான் என்னுடைய குற்றச்சாட்டு...குறைந்த அளவு பதிவர்களின் கருத்தை கேட்டு(பதிவர்கள் - தமிழ்மணம் நிர்வாகிகள் சந்திப்பு போன்ற) அதன் அடிப்படையில் முடிவெடுப்பது சரியில்லை...

///தமிழ் வலைப்பதிவு சூழல் குறித்து ஒன்றுமே தெரியாத நிலையில் புதியதாக தமிழ்மணத்திற்கு வரும் ஒரு வாசகர் வரிசையாக “காமக் கதைகள்” என்ற தலைப்புகளை பார்த்தால் தமிழ்மணம் குறித்து என்ன நினைப்பார் என்று எண்ணிப் பாருங்கள். அதனை எண்ணியே இப்படியான நடவடிக்கையினை மேற்கொண்டோம். ///

குப்பையான குமுதம் நடுப்பக்க வாசகர்களை விட, பதிவை படிப்பதை விட அதன் உள்ளடக்கத்தை உணரும் தரமான வாசகர்கள் தமிழ்மணத்துக்கு வருதல் நலம்...(இந்த இண்டலக்சுவல் லிஸ்ட்ல நான் இல்லை, ஹி ஹி, நான் சினிமா நிருபர் - வாழ்க..கோஷ்டி :) )

இணையத்துல குப்பைகள் இல்லையா என்ன ? குப்பையை பார்க்கவேண்டும் என்று நினைப்பவர், தமிழ்மணத்தில் உள்ள காமக்கதைகளை பார்த்துத்தான் குப்பையாவார் என்றில்லை...குப்பை என்றும் குப்பைதான்...!!!!

தமிழ்மணத்தை கூகிள் விளம்பரம் செய்து அதன் வாசகர் தளத்தை விரிவாக்குதல் நலமே !!! இன்னும் இரண்டு வருடங்களுக்கு பிறகு "காசி" என்பவர் யார் என்றுகூட தெரியாமல் போகும் வாய்ப்பு உள்ளது...அதுபற்றி எனக்கு கவலை இல்லை...(அவருக்கும் இல்லை, கேட்டால் சொல்வார்..)..

தமிழ்மணம் நிர்வாகம் அடிக்கடி சொல்வது போல தமிழ்மணம் என்பது முழுக்க முழுக்க வாசகர்கள் எழுதும் பதிவுகளால் செயல்படுவது...இதில் வெத்தலைப்பெட்டி எடிட்டர் மாமா இல்லை...ஆனால் சர்வாதிகார போக்கின் மூலம், மீண்டும் வெத்தலைப்பெட்டி மாமாவின் நிலைக்கு கொண்டுசென்றுவிடாதீர்கள்...

இந்த பதிவின் மூலம் நான் சொல்லவருவது

ட்ரான்ஸ்பரன்ஸி தேவை...
பதிவர்களின் கருத்தை கேட்கவேண்டும்...

பி.கு: ஆனா எனக்கு ஒரு ஆசை சுகுணா திவாகர், ஜ்யோராம் சுந்தர், அய்யனார், பைத்தியக்காரன், ஆடுமாடு, வளர்மதி...இந்த பின்னவீனத்துவ குழுவினரை ஒரு ரூம்ல பத்து புல் வோட்கா, டாஸ் காப்பிடல்ஸ், ஒரு பண்டல் சிகரெட் பாக்கெட் கொடுத்து அடைச்சுடனும் :))

Monday, July 07, 2008

கோவை வாத்தியார் சுப்பைய்யாவுக்கு ஒரு கேள்வி

சோதிடம் - கிரகங்கள் என்றெல்லாம் சொல்கிறீர்கள் அல்லவா...அது சம்பந்தமான ஒரு கேள்வி..

சோதிடம் ஒன்பது கிரகங்களால் ஆனதுங்கறீங்க...பழைய காலக்கணக்கு அது...

ஆனா இப்போ நூற்றுக்கும் மேற்பட்ட கிரகங்கள், ஆண்ட்ரமீடா, பால்வெளி மண்டலம், ஹப்பிள், கரும் புள்ளி என்று வான் வெளி ஆராய்ச்சியில் உச்சத்துக்கு சென்றுவிட்டோம்...(ஒரு தமிழ் வலைப்பதிவர் நாசாவுல பணியாற்றுகிறார், டவுட் இருந்தால் அவரை கேட்டுக்கொள்ளலாம்...)

இன்னும் கிரகம், ராசி, லக்கினம் என்று உப்புப்பெறாத விடயங்களை வைத்து வகுப்பறை நடத்துக்கிறீர்களே ? இவற்றில் எல்லாம் மருந்துக்கு கூட பகுத்தறிவு என்பதே இல்லையே ? யோசிக்கமாட்டீங்களா வாத்யாரே ?

பொண்ணுக்கு கல்யாணம் பண்ணிவைக்க முடியாத பிக்காரிங்க, செவ்வாய் தோஷம்னு கல்யாணத்தை தள்ளிப்போட்டு, பெண்களை முதிர்கண்ணியாக்கும் கொடுமை இன்னும் வேண்டுமா ?

வாஸ்து என்ற பெயரில் ஒழுங்கா இருக்க வீட்டை சனிமூலை, சூரிய மூலைன்னு பணக்காரனுங்க மாத்தினா பரவாயில்லை...நடுத்தரவர்க்கத்துக்காரனும் கையில் இருக்கும் காசை வாஸ்து மேஸ்திரியிடம் கொடுத்து வீணாகிறார்களே ? அந்த பணத்தை பிள்ளைங்க படிப்பு செலவுக்கு பயன்படுத்தலாம் என்று பகுத்தறிவோடு ஆலோசனை சொல்வீரா, அல்லது வாஸ்து ஈஸ் த பெஸ்ட், சைனீஸ் வாஸ்துவையும் முயற்சி செய்யுங்க என்று ஆலோசனை சொல்வீரா ?

கிளிசோசியம் பார்த்தால் வாழ்க்கை மாறிவிடும் என்றால், அந்த கிளி சோசியக்காரன் ஏன் ஐந்து ரூபாய்க்கு லோ - low என்று வெய்யிலில் அலைகிறான் - கிராக்கி பிடிக்க ?

ராசியான திசை தெற்கு என்றால், இண்டர்வீயூ நடக்கும் அலுவலகம் அதற்கு ஆப்போசிட் திசையில் இருந்தால் - எப்படி - பூமியை சுற்றி அந்த அலுவலகத்துக்கு போவனுமா ?

சாமியை நம்புறீங்க, அதனால பேயையும் நம்புறீங்க, ராவுல பிஸ்ஸடிக்க போகும்போது கூட "அய்யோ அங்கன பேய் இருக்கும்" என்று அலறும் சிறுவன் - பிரச்சினை எங்கே இருக்கிறது ? சாமியிலா, பேயிலா ?

பகுத்தறிவு, பகுத்தறிவு என்று கரடியாக கத்திக்கினு இருந்தாரே - ஒருத்தர் - மிஸ்டர் பெரியார்...அவரை பற்றி உங்கள் கருத்து என்ன ?

Sunday, July 06, 2008

சென்னையில் என்னுடைய முப்பத்தி ஐந்தாவது வீக் எண்ட்

இன்றைக்கு வழக்கம்போது காலையில் எழுந்தேன்...ரூம் மேட்ஸ் இரண்டு பேரும் பாத்ரூமில் ஒருவரும், பால்கணியில் ஒருவருமாக ஆக்குபை செய்ய...

நால் பால்வாங்கிவர புறப்பட்டேன்...

பால் ரூ பத்து.

பாக்கெட்டில் இருந்ததோ பதிநான்கு.

ஏன் பதினான்கு தெரியுமா ? நாலுரூப்பியாவுக்கு ஒரு கிங்ஸ் வாங்கி நாற்றமில்லாமல் அடிக்கத்தான்...

அடுத்தது தனியாக சினிமா பார்க்க போகவேண்டியது தான்...ஏன் தனியாக என்று கேட்கிறீகளா ? பரங்கிமலை ஜோதிக்கு தனியாகத்தான் போகவேண்டும்...தாத்தாவுமா கூட வருவார் ?

நான் லிஸ்ட் எடுத்தபடி தனியாக நான் போகும் இடங்கள்...

1. பாத்ரூம்
2. பரங்கிமலை ஜோதி.
3. பால் வாங்க.
4. பக்கத்து வீட்டு ஆண்டியிடம் மோர் மொளகா கடன் வாங்க.

நீங்களும் இதையே ட்ரைபண்ணுங்க. நான் என்னுடைய முப்பத்து ஒம்போதாம் வீக் எண்ட் அன்று மீண்டும் முழுமையான லிஸ்ட் போடுகிறேன்..

பை பை டாமீஸ்...

கமா கதைகள்...(23455)...(1)...



ஒரு புள்ளியும் ஒரு கமாவும் சந்தித்துக்கொண்டபோது...புள்ளி சொன்னது...உணர்வை விட உற்சாகம் முக்கியம்...காதலை விட காற்று முக்கியம்...சரி அதனால்

என்ன என்றுகேட்டது கமா..கமாவை கமாவாக பார்க்காமல், எதனோ ஒரு வடிவத்தின் நீட்சியாக பார்க்கலாம் என்றது புள்ளி...நீட்சியென்றால்...மீட்சியா என்றது கமா...மீட்சியோ, மிரட்சியோ அது எனக்கு தெரியாது...ஆனால் அது ஆதிக்கத்தில் ஆரம்பித்து, பாதிப்பில்

முடிவடையும் என்றது புள்ளி..புள்ளியுடன் இனைந்து உறவுகொள்ள கமாவுக்கு காதல் தேவையாக இருக்கவில்லை..காற்றுக்கென்ன வடிவமா இருக்கிறது...காதலுக்கும் தான் இல்லை...புள்ளிக்கு தேவை ஒரு புள்ளி. ஆனால் கமாவுக்கோ தேவை சற்று நீளமான

கோடு. கோட்டை புள்ளியோடு இணைத்தால் அது கமா. இணைவது காமன் செயல். அதாவது பொதுச்செயல். பொதுவில் வைப்பதால் அது பொதுவானதா ? இல்லை அந்தரங்கமானதா ? அந்தரத்தை உயரத்தில் தான் வைக்கவேண்டுமா ?

அடியிலும் வைக்கலாம்...!!!!!!

பின்குறிப்பு: எதிர்பார்த்தது கிடைக்கவில்லை என்றால் கிடைத்ததை எதிர்பார்ப்பதே சரியானது : ஜப்பானிய அறிஞர் கொயமோட்டோ டொமோட்டோ...