Monday, July 07, 2008

கோவை வாத்தியார் சுப்பைய்யாவுக்கு ஒரு கேள்வி

சோதிடம் - கிரகங்கள் என்றெல்லாம் சொல்கிறீர்கள் அல்லவா...அது சம்பந்தமான ஒரு கேள்வி..

சோதிடம் ஒன்பது கிரகங்களால் ஆனதுங்கறீங்க...பழைய காலக்கணக்கு அது...

ஆனா இப்போ நூற்றுக்கும் மேற்பட்ட கிரகங்கள், ஆண்ட்ரமீடா, பால்வெளி மண்டலம், ஹப்பிள், கரும் புள்ளி என்று வான் வெளி ஆராய்ச்சியில் உச்சத்துக்கு சென்றுவிட்டோம்...(ஒரு தமிழ் வலைப்பதிவர் நாசாவுல பணியாற்றுகிறார், டவுட் இருந்தால் அவரை கேட்டுக்கொள்ளலாம்...)

இன்னும் கிரகம், ராசி, லக்கினம் என்று உப்புப்பெறாத விடயங்களை வைத்து வகுப்பறை நடத்துக்கிறீர்களே ? இவற்றில் எல்லாம் மருந்துக்கு கூட பகுத்தறிவு என்பதே இல்லையே ? யோசிக்கமாட்டீங்களா வாத்யாரே ?

பொண்ணுக்கு கல்யாணம் பண்ணிவைக்க முடியாத பிக்காரிங்க, செவ்வாய் தோஷம்னு கல்யாணத்தை தள்ளிப்போட்டு, பெண்களை முதிர்கண்ணியாக்கும் கொடுமை இன்னும் வேண்டுமா ?

வாஸ்து என்ற பெயரில் ஒழுங்கா இருக்க வீட்டை சனிமூலை, சூரிய மூலைன்னு பணக்காரனுங்க மாத்தினா பரவாயில்லை...நடுத்தரவர்க்கத்துக்காரனும் கையில் இருக்கும் காசை வாஸ்து மேஸ்திரியிடம் கொடுத்து வீணாகிறார்களே ? அந்த பணத்தை பிள்ளைங்க படிப்பு செலவுக்கு பயன்படுத்தலாம் என்று பகுத்தறிவோடு ஆலோசனை சொல்வீரா, அல்லது வாஸ்து ஈஸ் த பெஸ்ட், சைனீஸ் வாஸ்துவையும் முயற்சி செய்யுங்க என்று ஆலோசனை சொல்வீரா ?

கிளிசோசியம் பார்த்தால் வாழ்க்கை மாறிவிடும் என்றால், அந்த கிளி சோசியக்காரன் ஏன் ஐந்து ரூபாய்க்கு லோ - low என்று வெய்யிலில் அலைகிறான் - கிராக்கி பிடிக்க ?

ராசியான திசை தெற்கு என்றால், இண்டர்வீயூ நடக்கும் அலுவலகம் அதற்கு ஆப்போசிட் திசையில் இருந்தால் - எப்படி - பூமியை சுற்றி அந்த அலுவலகத்துக்கு போவனுமா ?

சாமியை நம்புறீங்க, அதனால பேயையும் நம்புறீங்க, ராவுல பிஸ்ஸடிக்க போகும்போது கூட "அய்யோ அங்கன பேய் இருக்கும்" என்று அலறும் சிறுவன் - பிரச்சினை எங்கே இருக்கிறது ? சாமியிலா, பேயிலா ?

பகுத்தறிவு, பகுத்தறிவு என்று கரடியாக கத்திக்கினு இருந்தாரே - ஒருத்தர் - மிஸ்டர் பெரியார்...அவரை பற்றி உங்கள் கருத்து என்ன ?

6 comments:

Anonymous said...

செந்தழல் ரவிக்கு. உங்கள் எண்ணங்களை நான்
ஏற்றுக்கொள்கிறேன். இந்த சந்தேகத்தில் தான்
நான் ஒரு வருடம் ஜாதகம் இல்லாமல் ஜோதிடம்
பார்ப்பது பற்றிப் படித்தேன் 'பிரசனம்'
அதுவும் ஜாதகம் சார்ந்தே செல்கிறது. நம்ப
முடியவில்லை. எனது வலைப்பதிவு
-http://www.kuppusamy-prasna.blogspot.com/
தற்கால கிரகங்கள் பற்றி யாரும் ஜோதிட
ரீதியாக ஆராய்ட்சி செய்ய வில்லையே.
பழமையையே ஏன் நம்ப வேண்டும்.
தற்போது டெல்லியில் செல் போன்
எண்ணிலும் ஆரம்பித்து விட்டது.என்று
மாறுமோ பழமைகள் மூடநம்பிக்கைகள்.
நன்றி.
குப்புசாமி.க.பொ.
கோவை-37.

DHANS said...

நீங்க கரடியா கத்தினாலும் சோதிடத்த நம்பறவங்க இருக்க வரைக்கும் சோதிடம் சொல்றவங்க இருக்கத்தான் செய்வாங்க.
விடுங்க பாஸ், இன்னும் எவ்ளோ நாளைக்கு இப்படி இருக்கபோவுதுனு பாக்கலாம்.

rapp said...

பெரியார் சொல்லியே யோசிக்க முடியாதுன்னு பிடிவாதமா இருக்கறவங்கள என்ன செய்ய முடியும்

Anonymous said...

ஈரோடு, ஜூலை 9-
நிர்வாண பூஜைக்கு முயன்ற செக்ஸ் ஜோசியர் அறையில் இருந்து, வெப் கேமரா மற்றும் லேப்டாப் பறிமுதல் செய்யப்பட்டது. தன்னிடம் ஜோதிடம் கேட்க வந்த பெண்களை ஆபாச படம் எடுத்தாரா என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
ஈரோடு வீரப்பன்சத்திரத்தை சேர்ந்தவர் கோபாலன் (48). நஷ்டம் ஏற்பட்டதால் ஓட்டலை மூடிவிட்டு, வேறு தொழில் செய்ய திட்டமிட்டார். இதற்காக மனைவி கவுரியுடன் ஈரோடு ரங்கம்பாளையத்தில் உள்ள பிரம்மரிஷி ஜோதிட நிலைய ஜோசியர் கிரி எஸ்.அய்யர் என்பவரிடம் நேற்று முன்தினம் சென்றார்.
ஆளுக்கு ஒரு எலுமிச்சம் பழத்தை கொடுத்த கிரி, கவுரியின் ஜாதகத்தில் தோஷம் இருப்பதால் பரிகார பூஜை நடத்தி தோஷம் கழிக்க வேண்டும் என்றார். பரிகார பூஜை நடக்கும்போது கவுரி, ஒருநாள் முழுவதும் தனியாக இருக்க வேண்டும் என்று கிரி கூறினார். கிரியின் நடவடிக்கையால் சந்தேகமடைந்த கோபாலன், மறுநாள் வருவதாக கூறிச் சென்றார்.
கிரியை கையும் களவுமாக பிடிக்க திட்டமிட்ட கோபாலன், உறவினர்கள் சிலரை அழைத்துக்கொண்டு நேற்று மதியம் ரங்கம்பாளையம் சென்றார். உறவினர்களை அருகிலுள்ள டீக்கடையில் அமர வைத்தார். கோபாலனும், கவுரியும் ஜோதிட நிலையத்துக்குள் சென்றனர்.
தம்பதியை அமர வைத்து, இருவர் கையிலும் எலுமிச்சம் பழத்தை கொடுத்த கிரி, கோபாலனிடம் பூ வாங்கி வரும்படி கூறியுள்ளார். பூ வாங்குவது போன்று வெளியேறிய கோபாலன் உறவினர்களை அழைத்துக் கொண்டு ஜோதிட நிலையத்தின் வெளியே காத்திருந்தார்.
அப்போது தனியாக இருந்த கவுரியிடம் உடைகளை கழற்றிவிட்டு நிர்வாணமாக பாயில் படுக்குமாறும், தன்னுடன் உறவு கொண்டால் விரைவில் கஷ்டம் நீங்கி குடும்பத்தில் பணம் கொழிக்கும் என்றும் கூறிய கிரி, கவுரியிடம் தவறாக நடக்க முயற்சித்துள்ளார். ஆத்திரமடைந்த கவுரி அருகில் இருந்த சேரை தூக்கி கிரியை தாக்கிவிட்டு சத்தம் போட்டார். கோபாலனும், உறவினர்களும் உள்ளே புகுந்து ஜோசியரை சரமாரியாக தாக்கினர். தகவல் பரவியதும் அக்கம்பக்கத்தில் வசிக்கும் பெண்களும் ஜோதிடரை சுற்றிவளைத்து Ôகவனித்தனர்Õ.
பின்னர் கவுரி கொடுத்த புகாரின் பேரில் தாலுகா போலீசார் வழக்கு பதிந்து ஜோசியர் கிரியை கைது செய்தனர். அவரது ஜோதிட நிலையத்தில் சோதனை செய்தபோது அங்கிருந்து லேப்டாப் கம்ப்யூட்டர், தானியங்கி வெப் காமரா பறிமுதல் செய்யப்பட்டது. கிரி, கேரள மாநிலம் கொல்லம் பகுதியை சேர்ந்தவர் என்பது தெரியவந்தது.
கரூர், கொடைக்கானல், ஊட்டி, கோவை என பல ஊர்களுக்கு சென்று ஜோதிடம் பார்ப்பதாகவும், தோஷம் கழிக்க பரிகார பூஜை நடத்துவதாக கூறி பல பெண்களை ஏமாற்றி இருக்கலாம் என கூறப்படுகிறது. ஜோதிட நிலையத்தில் கேமரா பொருத்தப்பட்டிருந்ததால் பெண்களை நிர்வாண படம் எடுத்து மிரட்டி உல்லாசம் அனுபவித்து வந்தாரா என்பது குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

nedun said...

பூமியை மையமாக வைத்து கோள்கள் சுற்றி வருகிறது என்ற அடிப்படையில் அமைக்கப்பட்டதுதான் ஜாதகம். எனெனில் பழங்காலத்தில் பூமி தட்டயானது அதை சுற்றி பிற கோள்கள் சுற்றுகின்றன் என நினைத்தனர். தற்போது ஜாதகத்தின் மையக் கருவே அடிபட்டு போய் விட்டது

நாட்டாமை said...

http://chandroosblog.blogspot.com/2010/06/blog-post.html
இதில் நான்கு பாகங்கள் உள்ளது படித்துவிட்டு பெரியாரின் பெருமைகளைப் பேசுங்கள்