Friday, October 02, 2009

2016 ஒலிம்பிக்ஸ் எங்கே ??

கோப்பன்ஹேகனில் இன்று (வெள்ளிக்கிழமை) நடைபெறும் ஒலிம்பிக் கமிட்டி கூட்டத்தில் 2016 ஒலிம்பிக் எங்கே நடக்கப்போகிறது என்று முடிவுசெய்யப்படும்.

இந்த வாய்ப்பை பெற களத்தில் குதித்து கடுமையாக போராடிக்கொண்டிருக்கும் நகரங்களை பற்றி கொஞ்சம் பார்க்கலாமா ?

சிக்காகோ:

பேரை கேட்டவுடன் பாண்டியராஜனின் அரை பேண்ட் சிக்காக்கோ ஜீன்ஸ் நியாபகம் வருதா ? அமெரிக்க இல்லினாஸ் மாகானத்திலேயே மிகப்பெரிய அழகிய நகரம். 2.8 மில்லியன் மக்கள், அமெரிக்காவிலேயே மிகப்பெரும் நகரங்களின் மூன்றாவது.1833 இல் இருந்து ஒரு நகரமாக அங்கீகரிக்கப்பட்ட, நார்த் அமெரிக்காவின் மாபெரும் வர்த்தக மற்றும் தொலைதொடர்பு நகரம் இது. விண்டி சிட்டி என்று செல்லமாக அழைக்கப்படும் இந்த சிட்டியில் வளைய வந்த ஒபாமா, இப்போது அமெரிக்க அதிபர். அவரையும் துணைக்கு அழைத்துக்கொண்டு போராடுகிறது சிக்காகோ.

டோக்கியோ:ஈஸ்டும் வெஸ்டும் கலந்த பாரம்பரிய டோக்கியோ. கமலகாசனில் இருந்து கவுண்டமணி வரை தயாரிப்பாளர் காசில் சுற்றிப்பார்த்த நகரம். பிரம்மாண்ட ஒலிம்பிக் ஸ்டேடியம் எல்லாம் ஏற்கனவே கட்டிவிட்டு, வாய்ப்பை மட்டும் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள். டோக்கியோ என்றால் நன்னீர் கடலில் கலக்கும் இடம் என்று பொருளாம். ஒரு சிறிய மீன்பிடி கிராமமாக 500 ஆண்டுகளுக்கு முன்னால் இருந்த நகரத்தின் அழகை கூகிளாண்டவரிடம் தேடி பாருங்க. இன்று முழுக்க ரசிக்கலாம்.

நீள அகலத்தில் 90 க்கு 25 கிலோமீட்டர் பகுதி இந்த டோக்கியோ, மொத்த மக்கள் தொகை 12.9 மில்லியனாம். பகல் வேலை நேரத்தில் மட்டும் 25 லட்சம் மக்கள் வேலைக்காகவும் கல்விக்காகவும் டோக்கியா வருகிறார்களாம். அற்புதமாக க்ளைமேட், அழகாக நகரம். நான் சப்போட் செய்வது இவர்களுக்கே.

ரியோ டி ஜெனிரோ:

ரியோ டி ஜெனிரோ அப்படீன்னா ஜனவரியின் ஆறுன்னு அர்த்தம். ப்ரெசிலின் இரண்டாவது பெரிய நகரம். உலக பொருளாதாரத்தின் வளரும் நாடுகள் வரிசையில் இந்தியாவுடன் சேர்த்து பார்க்கப்படும் ப்ரேசில் பொருளாதார வல்லரசாக மாறிக்கொண்டு வருகிறது. கிட்டத்தட்ட இரண்டு நூற்றாண்டுகளுக்கு ப்ரேசிலின் தலைநகராக இருந்த ரியோ, 11 இல் இருந்து 13 மில்லியன் பாப்புலேஷன் கொண்டது.கிளுகிளுப்புக்கு பெயர் போன ரியோவின் கார்னிவல்களும் சம்பா நடனமும் ரொம்ப பேமஸ். இந்த சின்ன ஹிண்ட்டோடு நிறுத்திக்கறேன். மேற்கொண்டு கூகிளாண்டவரிடம் தேடி கிளுகிளுத்துகொள்பவர்கள் செய்யலாம். அந்த படங்களை எல்லாம் இங்கன போட முடியாது ஓய். சாம்பிள் ஒன்று மட்டும்..பீச்சுகளும்,பல்வேறு வகை மக்களும் வாழும் ரியோ, மொத்தமே 14 லட்சம் மக்கள்தொகை கொண்டது.இது கண்டிப்பாக இளைஞர் பட்டாளத்தின் சாய்ஸ் என்பதி எந்த சந்தேகமும் இல்லை. பெரிசா ஒரு பெருமூச்சோடு அடுத்த இடம் பார்த்துவிடுவோம்.

மாட்ரிட்:ஸ்பெயின் தலைநகரம். அய்ரோப்பாவின் மூன்றாவது பெரிய நகரம். 3.2 மில்லியன் மக்களுடன், 234 சதுர கிலோமீட்டர் பரப்பளவுள்ள ஸ்பெயினின் மாபெரும் நகரம். கரடிகளின் நகரம் என்று முன்பொரு காலத்தில் வழங்கப்பட்டதாம். வரலாற்றில் ரோமானியர்களாலும் ஆளப்பட்ட நகரம்.

உள்நாட்டு போரால் 1930 களில் பாதிக்கப்பட்ட மாட்ரிட், அதன் பின் 1960 களில் ப்ரான்ஸிஸ்கோ ப்ராங்கோ காலத்தில் மாபெரும் தொழில் வளர்ச்சிகண்டது.கலையுணர்ச்சியும் வீரமும் அதிகம் கொண்ட ஸ்பானியர்களின் ரசிகன் நான்.

2020 ஒலிம்பிக்ஸ் டெல்லியில் நடக்கவேண்டும் என்று உள்ளூர ஆசையுடன் எழுதப்பட்ட பதிவு. பிடிச்சிருந்தா ஓட்டு குத்துங்க.

27 comments:

Pot"tea" kadai said...

//கலையுணர்ச்சியும் வீரமும் அதிகம் கொண்ட ஸ்பானியர்களின் ரசிகன் நான்.//

ஆமாப்பா பீபீசீ ப்ளாஷ் நியுஸ்ல இப்போ தான் போட்டாங்க...மொக்கன்னாலும் இத்துனூண்டு யூஸ்புல்

பீர் | Peer said...

டெல்லி போட்டோ கைவசம் இல்லையா?
:)

ILA(@)இளா said...

/கலையுணர்ச்சியும் வீரமும் அதிகம் கொண்ட ஸ்பானியர்களின் ரசிகன் நான்./
அப்போ இந்தியர்களுக்கு வீரம் இல்லையா?

Pot"tea" kadai said...

//அப்போ இந்தியர்களுக்கு வீரம் இல்லையா?//

ம்ம்ம்...ஜட்டீல ஈரம் தான் இருக்கு!!!

ILA(@)இளா said...

/ஜட்டீல ஈரம் தான் இருக்கு!!/
ஒலிம்பிக்ஸ்ல இன்னும் ஈரம், சே சே வீரம் வேணும். நம்மாளுங்க 2016க்கு கண்டிப்பா ஒருவெண்கலம் வாங்குவாங்க. வாங்குன அந்த அம்மணி அழகா இருந்தா (மட்டும்) விளம்பரத்துல நடிப்பாங்க. இல்லாட்டி யாருக்குத் தெரியும். ஜெயந்தா டலுத்கர் பத்தி யாருக்காவது கூகுளடிக்காம சொல்லுங்க பார்ப்போம்? ஆனா நயந்தாரா மேட்டரு எல்லாருக்கும் தெரியும். செ(ஜெய்)ய் ஹிந்த்

செந்தழல் ரவி said...

வாட் ஈஸ் ஹேப்பனிங் ஹியர் ?

ஏசி போட்டுட்டு காரை அப்படியே உட்டதுல பேட்டரி ட்ரைன் ஆகி, செத்து சுண்ணாம்பாகி வந்து பார்த்தா கும்மி.

நடத்துங்க.

செந்தழல் ரவி said...

பொட்டீ. ரிசல்ட் வந்துருச்சா ?

ILA(@)இளா said...

//ஏசி போட்டுட்டு காரை அப்படியே உட்டதுல பேட்டரி //
en ippadi?

நேசமித்ரன் said...

ஒவ்வொரு நகரத்திற்கும் உங்களுக்கே உரிய அங்கதம் கலந்த துள்ளலான மொழியில் கொடுத்திருக்கும் அறிமுகம். இறுதியில் நம்ம ஊர்ல நடக்கணும் என்கிற ஆவலையும் பதிந்து ... குறும்பு வழியும் மொழிக்கு துணை செய்யும் அதே பாணியிலான படங்களும் இணைத்து ஒரு பெஞ்ச் மார்க்கு போல செய்றீங்க பாஸ் எதை பதிவதாக இருந்தாலும் ... !

குடுகுடுப்பை said...

சூப்பர்.

ILA(@)இளா said...

Finally Rio!

செந்தழல் ரவி said...

ஆமாம் இளா.

மிச்செல் ஒபாமா அழுகாச்சி வேலைக்காவல போலிருக்கே ?

அரங்கப்பெருமாள் said...

ரியோ டி ஜெனிரோ

இங்கன தான் சாமி நடக்கப் போகுது...

jaisankar jaganathan said...

//கலையுணர்ச்சியும் வீரமும் அதிகம் கொண்ட ஸ்பானியர்களின் ரசிகன் நான்.//

நம்ப ஊர்ல மாடுபிடிகிறவங்க அதிகம் தல . நீங்க பாக்குல

செந்தழல் ரவி said...

நன்றி நேசமித்ரன்...........

செந்தழல் ரவி said...

நன்றி அரங்கபெருமாள்.

dyanna said...

Beautiful pictures.
Have a nice day.

கவிதை காதலன் said...

இப்பத்தான் உங்க பதிவை பார்க்குறேன். தொடர்ந்து கலக்குங்க. வாழ்த்துக்கள்

ஆப்பு said...

ஐ எம் பேக்!! (*****ஆப்பு*****)
http://evandapirabalam.blogspot.com/2009/10/blog-post.html

ஜோதிஜி. தேவியர் இல்லம். said...

இந்த மாதிரி உழைப்பு எல்லாம் நான் கற்றுக்கொண்டு என்றைக்கு போய் கரை சேர்வது? ம்ஹிம் பார்த்து ரசித்துக்கொள்ள மட்டும் தான் எனக்கு லாயக்கு? அற்புதம் ரவி. ஆனால் திருப்பூர் இத்துப்போன ஓயர் அலைவரிசை தான் கதறகிறது மொத்தமாக உள்வாங்க. அற்புதம். இது வரையில் ஊடகத்தில் பார்க்காத படிக்காத செய்திகள்.

செந்தழல் ரவி said...

ரோமானியாவில் இருந்து பின்னூட்டம் போட்ட டயானா.

உங்களுக்கு தமிழ் தெரியுமா என்று தெரியவில்லை.

இருந்தாலும், சத்தியமாக இந்த படங்கள் எல்லாம் நான் எடுக்கலை. ஆனால் எடுத்தேன். ஆமாம். கூகிளில் இருந்து எடுத்தேன். இருந்தாலும் நன்றி...

செந்தழல் ரவி said...

நன்றி கவிதை காதலன். நன்றி.

செந்தழல் ரவி said...

நன்றி ஆப்பு.

செந்தழல் ரவி said...

நன்றி ஜோதிஜி.

மகேஷ் said...

// 2020 ஒலிம்பிக்ஸ் டெல்லியில் நடக்கவேண்டும் என்று உள்ளூர ஆசையுடன் எழுதப்பட்ட பதிவு. .//

ரொம்பத்தான்.. :)

விக்னேஷ்வரி said...

நல்ல சுவாரசியமான பதிவு. கடைசியா உங்களின் ஆசை, எனக்கும்.

நர்சிம் said...

பிடித்த பதிவு பாஸ் இது.