Thursday, October 01, 2009

வெண்ணை போல் ஒருவன்



நேரம் : காலை 9 மணி
இடம் : போலீஸ் கமிஷனர் அலுவலகம்.

கமிஷனர் ஏ.பீ.சீ.போறார் மொபைல் ஒலிக்கிறது.

போறார் : ஹலோ. கமிஷனர் போறார் ஹியர். ஹூ ஈஸ் திஸ் ?

மிடில் மேன் : ஹெல்லோ. நான் மிடில் மேன் பேசறேன். சி.எம் கிட்ட பேசனும். என்னோட நெகோஷியேட் பண்ணப்போறது யாரு ?

போறார் : முண்டம். சி.எம் கிட்ட பேசனும்னா சி.எம் வீட்டுக்கு போன் போடவேண்டியது தானே ? ஏண்டா எனக்கு போன் பண்றே ?

மிடில் மேன் : சென்னையில இன்னும் ஒரு மணி நேரத்துல வெடிக்கறமாதிரி குண்டு இருக்கு. அதே மாதிரி சிட்டி முழுக்க நாலு குண்டு வெச்சிருக்கேன்.அதனால தான் உங்களை கூப்பிட்டேன்.

போறார் : யோவ்...ரியல்லி ? நீ குண்டு வெச்சது உண்மையா ? ஆர் யூ சீரியஸ் ?

மிடில் மேன் : ஆமா இவர் மிர்ச்சி சுச்சி பாரு. போன் போட்டு காமெடி பண்ண ? யோவ் உண்மையிலேயே குண்டு வெச்சிருக்கேன். உடனே பாம் ஸ்க்வாடை அனுப்பி தேடு. மஞ்ச ஒயர விட்டுட்டு பச்ச ஒயர வெட்டு.

போறார் : எந்த ஒயரை வெட்டனும்னு பாம் ஸ்க்வாடுக்கு தெரியும். நீ குண்டு வெச்ச இடத்தை பத்தி சொல்லு.

மிடில் மேன் : ஐ ஐ. கஷ்டப்பட்டு குண்டு வெச்சது நானு, இடத்தை சொன்னா நீ நோவாம நோம்பி திங்கலாம்னு பாக்குறியா ? தேடி எடுய்யா நீயே ?

போறார் : மிடில் மேன். ப்ளீஸ் ப்ளீஸ். எங்க இருக்குனு ஒரு க்ளூவாவது குடேன் ப்ளீஸ்..

மிடில் மேன் : சரி ரொம்ப கெஞ்சற. இந்த மேட்டர் முடிஞ்சதும் ரெண்டு பாக்கெட் நேந்திரம் சிப்ஸ் தரேன்னு சொல்லு. க்ளூ தரேன்.

போறார் : (அல்ப்ப பாண்டி பயபுள்ள). சத்தியமா ஏற்பாடு பண்றேன். க்ளூ குடுத்து தொலை.

மிடில் மேன் : அண்ணா நகர் போலீஸ் ஸ்டேஷன்ல தண்ணி வராத எடம் எதுன்னு பார்த்து அங்க தேடச்சொல்லு.

போறார் : பாத்ரூமா ?

மிடில் மேன் : அதே. அதே. வேற பால்கனியிலயா தண்ணி வராது ? என்ன கமிஷனரோ ? அஞ்சு நிமிசத்துல போன் பண்றேன். அப்புறம், வீட்ல எல்லாரும் சவுக்கியமா ? இந்த புட்டுல வாழைப்பழத்தை பிணைஞ்சு சாப்பிட்டா தொண்டையில அடைக்குதே அதுக்கு என்ன செய்வீங்க கேரளாவுல ?

போறார் : (போனை அக்குளில் மறைத்துக்கொண்டு) மிஸ்டர் வெல்லாரியா, சொல்ல மறந்துட்டேன். இந்த காலை ட்ரேஸ் பண்ணுங்க.

மிடில் மேன் : எனக்கும் கேட்டுது. காலை ட்ரேஸ் பண்றதை மெதுவா சொல்லக்கூட தெரியலை. நீ எல்லாம் என்ன கமிஷனர் ?

...........பீப் பீப் பீப்.........

வெல்லாரியா : சார். ரொம்ப ஷார்ட் கால். ட்ரேஸ் பண்ண முடியல.

போறார் : யோவ் மணிக்கணக்கா பேசிக்கிட்டிருந்தேனே ?

வெல்லாரியா : சார், நீங்க உங்க வீட்டம்மாக்கிட்ட பேசுறீங்கன்னு நினைச்சேன்.

போறார் : சரி அடுத்த காலையாவது ஒழுங்கா ட்ரேஸ் பண்ணித்தொலை...

%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%

(பாம் ஸ்க்வாட் பாமை கண்டுபிடித்து மஞ்சள் ஒயரை விட்டுவிட்டு பச்சை ஒயரை வெட்ட பாம் செயலிழக்கிறது. கமிஷனர் போறார், வார் ரூமுக்கு போறார். எல்லோரும் அங்கே அசம்பிளாகி நிற்கிறார்கள்)

போறார் : யாருக்காவது மூச்சா போகனும்னா பாத்ரூம் போய்ட்டு வாங்க.

எல்லோரும் கோரஸாக : நோ சார். ஏற்கனவே நாங்க போயிட்டோம்.

போறார் : இனிமே இந்த ரூம்ல நடக்கறது இந்த நாலு செவுத்துக்குள்ள தான் இருக்கனும்.

முந்திரி : சார், மேல ஒன்னு கீழ ஒன்னுன்னு ரெண்டு செவுரு இருக்கே, அது வழியா போலாமா ?

போறார் : இவனை தூக்கி போட்டு மிதிங்கடா. (முந்திரியை எல்லோரும் கும்முகிறார்கள்). எல்லோரும் அலர்ட்டா இருங்க. அவன் போன் பண்ணுவான். வெல்லாரியா ட்ரேஸ் பண்ணுவான். போலீஸ் போய் அவனை புடிச்சுடனும்..சி.எம், பி.எம், சீப் செக்கரட்டரி எல்லாருக்கும் போன் போட்டு சொல்லுங்க. ஆயிரம் போலீஸை சென்னை சிட்டியை சுத்தி சுத்தி வரச்சொல்லுங்க...

..ரிங் ரிங்..

போறார் : வேற நம்பர்..ஆனால் அவன் தான். ஆல் டீம் அலர்ட்...

பெண் குரல் : சார், ஐசிஐசிஐ பர்சனல் லோன் டிப்பார்ட்மெண்ட் சார். பத்து பர்சண்ட் இண்ட்ரஸ்ட். உங்களுக்கு இண்ட்ரஸ்ட் இருக்குனா சொல்லுங்க சார். பார்க், பீச் எங்கியாவது மீட் பண்ணலாம்..

போறார் : ஷிட். போனை வைம்மா. படற லோல் பத்தாதுன்னு லோன் குடுக்க வந்துட்டா. எந்த லோனும் வேண்டாம்...

வெல்லாரியா : சார். காலை ட்ரேஸ் பண்ணியாச்சு. பக்கத்து தெருவுல இருந்து வருது சார்.

போறார் : டேய்...என்ன கொலகாரனாக்காத..எரிச்சலாகிறார்.

...ரிங் ரிங்...

போறார் : இது கண்டிப்பா அவன் தான். எவ்ரிபடி அலர்ட்...

மிடில் மேன் : ஹாய். டைம் பாம் குண்டை எடுத்துட்டீங்களா ? அதுல இருந்த டைம் பீஸ் சரியா அடிக்காது. அதை யூஸ் பண்ணனும்னு நினைக்கவேண்டாம். ஒருமுறை காலை 5 மணி ட்ரெயினுக்கு அலாரம் வெச்சா, சாயங்காலம் 5 மணிக்கு அடிச்சுது.

போறார் : யோவ்..என் கிட்டயே டைம் பீஸ் இருக்கு. நீ வேற எங்க குண்டு வெச்சிருக்க அதை சொல்லு...

...பீப் பீப் பீப்....

போறார் : வெல்லாரியா...ட்ரேஸ் பண்ணியா ? கால் திடீர்னு கட்டாயிருச்சு...

வெல்லாரியா : சார். அவன் ஒரே நம்பர்ல இருந்து தான் போன் பண்ணுறான். திரும்ப அவனுக்கு ஒரு மிஸ்ஸுடு கால் கொடுங்க. ஒர்க் ஆவுதா பார்ப்போம்...

போறார் : முண்ட கலப்பை. ஏன் போனே பண்ணலாமே ? கவர்மண்டு காசு தானே ?

வெல்லாரியா : க்ரேட் ஐடியா சார்.

..கமிஷனர் போறார் திரும்ப அதே எண்ணுக்கு அழைக்கிறார்...

போறார் : ரிங் போவுது. ரிங் போவுது. ஆல் டீம் அலர்ட். எல்லோரும் அலர்ட்.

பியூன் ஆறுமுகம் : ஹல்லோ ?

போறார் : மிடில் மேன், என்ன குரலை மாத்தி பேசுற ?

பியூன் ஆறுமுகம் : யோவ். நான் எதுக்கு குரலை மாத்தி பேசனும் ? நீ யார் அதை சொல்லு..

போறார் : நான் சென்னை போலீஸ் கமிஷனர் ஏ.பீ.சீ.போறார் பேசறேன். யாருய்யா நீ ?

பியூன் ஆறுமுகம் : சாசாசார்...நான் கீழ்ப்பாக்கம் பைத்தியக்கார ஆஸ்பத்திரி ஸ்டாப் ஆறுமுகம் பேசறேன் சார். டாக்டர் ரூம்ல மறதியா வெச்சுட்டு போன செல்போனை ஒரு பைத்தியம் எடுத்துக்கிச்சு சார். இப்பத்தான் சார் கஷ்டப்பட்டு புடுங்கினோம்.

போறார் : தேங்கியூ வெரிமச். டேக் கேர் ஆறுமுகம்...

%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%

முன்னாள் கமிஷனர் ஏ.பீ.சீ போறார், பீச்சில் டாபர் மேன் நாயுடன் தனியாக பேசிக்கொண்டிருக்கிறார்.

போறார் : யார் அந்த மிடில் மேன். காத்து மாதிரி வந்தான். லூசு மாதிரி பேசினான். பைத்தியத்தோட போனுக்கு சி.எம் வரைக்கும் தொந்தரவு பண்ணதால என்னோட வேலைக்கும் வேட்டு வெச்சான். பச்சை ஒயரை செவுத்துல இருந்து கட் பண்ண பாம் ஸ்க்வாட் எந்த பள்ளிக்கூடத்துல படிச்சானுங்களோ ? எனிவே..ஐ லைக் டு பீ எ மிடில் மேன். ஐ யம் எ ஜெண்டில் மேன். ஆவேனே சூப்பர் மேன். லா லா லா...
%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%

20 comments:

ரவி said...

தமிழ்மணத்துல தெரியலைன்னு இந்த பதிவுலயும் போஸ்ட் செய்துட்டேன். மன்னிக்கவும்...

வால்பையன் said...

அவன் மெண்டல் என்றால் அண்ணாநகர் போலிஸ் ஸ்டேஷனில் தண்ணி வராத இடத்தில் கட் பண்ண பச்ச ஒயர் என்ன?

லாஜிக் இடிக்குது!

ரவி said...

வால்ஸ். கரெக்ட் பண்னிட்டேன் லாஜிக்க.

அத்திவெட்டி ஜோதிபாரதி said...

மஞ்ச ஒயர விட்டுட்டு பச்ச ஒயர வெட்டு.
//

அதுதான் நடந்திருக்கு!

வரிகள் ரசிக்கும் படியாக இருந்தது!

அத்திவெட்டி ஜோதிபாரதி said...

பாம் ஸ்க்வாட் பாமை கண்டுபிடித்து மஞ்சள் ஒயரை விட்டுவிட்டு பச்சை ஒயரை வெட்ட பாம் செயலிழக்கிறது. //

கண்டிப்பா அது பச்சை கலர் பாம் தான்!

அத்திவெட்டி ஜோதிபாரதி said...

எல்லோரும் கோரஸாக : நோ சார். ஏற்கனவே நாங்க போயிட்டோம்.


ஏற்கனவே இந்த ரூமுக்குள்ளேயே நாங்க உச்சா போயிட்டோம். அப்படின்னு இருக்கனும்.

அரங்கப்பெருமாள் said...

அடுத்தப் படம் நீங்கதான் பண்ணணும்..பிடிங்க அட்வான்ஸை...

யாசவி said...

யோவ்

ஆபிஸ்ல சிரிப்பை அடக்க முடியல

:))

யாசவி said...

:)

ரவி said...

நன்றி யாசவி !!!!!!

ரவி said...

தொடர் மொக்கைகளுக்கு நன்றி அத்திவெட்டியாரே

ரவி said...

நன்னி அரங்கபெருமாள் அண்ணாச்சி

வரவனையான் said...

ரொம்ப நாளைக்கு அப்புறம் சிரிச்சேன் ரவி !

தாங்க்ஸ்

ஆதி மனிதன் said...

இப்படியும் ஒருத்தன்... நல்ல காமடி போங்க:)

sathiri said...

சிரிக்க வைச்சிட்டீங்கள்

SHOBIKA said...

யப்பா தாங்க முடியல

SHOBIKA said...

யப்பா தாங்க முடியல

SHOBIKA said...

யப்பா தாங்க முடியல

உண்மைத்தமிழன் said...

சூப்பர் தம்பி..

செம காமெடி..!

வாய் விட்டுச் சிரிக்க வைத்ததற்கு நன்றி..!

Anonymous said...

நன்றி சோபிகா
நன்றி உண்மை அண்ணா
நன்றி சாத்திரி