Showing posts with label அட்வைஸ். Show all posts
Showing posts with label அட்வைஸ். Show all posts

Monday, May 11, 2009

பிரபல பதிவருக்கு அட்வைஸ் மழை...!!!



ஆறுமாதம் வரை தாய்ப்பாலை தவிர வேறு எதுவும் தராமல் இருப்பது சால சிறந்தது..நான்கு மாதத்தில் இட்லி ஊட்டுவது, சோறு ஊட்டுவது எல்லாம் வேண்டாம்.

குழந்தையின் வயிறு ஆறுமாதம் வரை தாய்ப்பாலை தவிர மற்றவற்றை அவ்வளவாக ஏற்றுக்கொள்ளாது.

கண்டதை குழந்தைக்கு கொடுக்கும்போதுதான் வயிற்றுவலி, கேஸ்டிக் போன்ற தொந்ததவுகள் வருகிறது.

தாயிடம் சரியாக தாய்ப்பால் இல்லை, குழந்தை எப்போதும் பசிக்கு அழுகிறது என்றால் மட்டுமே மருத்துவரை கலந்து ஆலோசித்து, வேறு உணவுகள் < பார்முலா, ரைஸ் செரலாக்> போன்றவை தரலாம்.

குழந்தை தாய்ப்பால் குடித்து முடிந்தவுடன் தோளில் வைத்து நங்கு நங்கு என்று முதுகில் மென்மையான ரெண்டு வைக்கவும். நல்லதொரு ஏப்பம் விடும். இது குழந்தைக்கு நெஞ்சு எரிச்சல் ஏற்படாமல் இருக்க உதவும்.

குழந்தைக்கு டிஸ்போஸபிள் டைப்பர்ஸ் வாங்கி உபயோகப்படுத்தலாம்...அப்படி விருப்பம் இல்லை வேட்டித்துணியை கிழித்து பயன்படுத்தலாம்.

குழந்தை மூச்சா, ஆயி போனவுடன், சூடான நீரில் துணியை நனைத்து மென்மையாக துடைக்கவேண்டும்...

தாயின் உடல்நலனை காப்பது மிக முக்கியம். குழந்தை பிறக்கும்வரை கால்சியம், இரும்பு சத்து மாத்திரைகளை கட்டாயப்படுத்தியாவது தந்திருப்பீர்கள்..

குழந்தை பிறந்தவுடன், அந்த மாத்திரைகளின் மேல் அவர்களுக்கு எரிச்சலும் டென்ஷனும் இருக்கும்...கண்டிப்பாக அவைகளை வெறுப்பார்கள்..

ஆனால் அவைகளை மருத்துவர் நிறுத்த சொல்லும்வரை கண்டிப்பாக உட்கொள்ளவேண்டும்.

அதுதான் தாய்க்கும் குழந்தைக்கும் நல்லது, என்பதை பொறுமையாக புரியவைக்கவேண்டும்...

பெண்கள் குழந்தை பிறந்தவுடன், சிறிய மன அழுத்ததுக்கு உள்ளாவார்கள் என்று நினைக்கிறேன்...

அவர்களின் மீது எரிந்து விழாமல், மென்மையாக போக்கை கடைபிடிக்கவேண்டும். உளவியல் ரீதியாக புரிந்துகொள்ளவேண்டும்...

குழந்தை தொடர்ந்து இடைவிடாமல் அழும் நிலை உருவாகலாம். அந்த நேரத்தில் குடலேற்றம், உரம் விழுதல் போன்ற பாட்டி காலத்து ட்ரீட்மெண்டுகளை மட்டுமே நம்பியிராமல், மருத்துவரை கலந்து ஆலோசித்தல் நலம்...

குழந்தையை கொஞ்ச வருபவர்கள் வாயை கொஞ்சம் அடக்கி வைத்தல் நலம். எடுத்தெறிந்து பேசுவது போல அல்லாமல், குழந்தைக்கு இன்பெக்ஷன் வரும், அதனால் முத்தம் கொடுக்க வேண்டாம் என்று டாக்டர் சொல்லி இருக்கார் என்று பயமுறுத்தவும்...

முந்தைய காலகட்டத்தில் குழந்தைகள் ஆரோக்கியமாக இருந்தன, அதற்கு காரணம் நமது உணவு பழக்கம், மாசுபடாத காற்று...

ஆனால் இப்போது உள்ள குழந்தைகளுக்கு உடனே நோய் தொற்று ஏற்பட வாய்ப்புண்டு. அதனால் குழந்தையை பார்வையிட வருபவர்களிடம் ரொம்ப ஸ்ட்ரிக்டாக இருக்கவும்...

நேரடியாக சொல்லிவிடுங்கள். குழந்தையை மூன்று மாதம் வரை அம்மாவை தவிர வேறு யாரும் தொடவேண்டாம் என்று மருத்துவர் சொல்லியிருக்காரு என்று உடான்ஸ் விட்டாலும் பரவாயில்லை...

குழந்தையை தூக்க தெரியாதவர்கள் தூக்கி, உடல்நலம் பாதிக்கப்படுவதும் உண்டு.

என்னால் முடிந்த அளவு சொல்லியிருக்கேன். மீதியை பின்னூட்டத்தில் அனுபவப்பட்டவர்கள் சொல்லுவார்கள், பார்த்து தெரிந்துகொள்ளுங்கள்..!!!