Monday, May 11, 2009

பிரபல பதிவருக்கு அட்வைஸ் மழை...!!!ஆறுமாதம் வரை தாய்ப்பாலை தவிர வேறு எதுவும் தராமல் இருப்பது சால சிறந்தது..நான்கு மாதத்தில் இட்லி ஊட்டுவது, சோறு ஊட்டுவது எல்லாம் வேண்டாம்.

குழந்தையின் வயிறு ஆறுமாதம் வரை தாய்ப்பாலை தவிர மற்றவற்றை அவ்வளவாக ஏற்றுக்கொள்ளாது.

கண்டதை குழந்தைக்கு கொடுக்கும்போதுதான் வயிற்றுவலி, கேஸ்டிக் போன்ற தொந்ததவுகள் வருகிறது.

தாயிடம் சரியாக தாய்ப்பால் இல்லை, குழந்தை எப்போதும் பசிக்கு அழுகிறது என்றால் மட்டுமே மருத்துவரை கலந்து ஆலோசித்து, வேறு உணவுகள் < பார்முலா, ரைஸ் செரலாக்> போன்றவை தரலாம்.

குழந்தை தாய்ப்பால் குடித்து முடிந்தவுடன் தோளில் வைத்து நங்கு நங்கு என்று முதுகில் மென்மையான ரெண்டு வைக்கவும். நல்லதொரு ஏப்பம் விடும். இது குழந்தைக்கு நெஞ்சு எரிச்சல் ஏற்படாமல் இருக்க உதவும்.

குழந்தைக்கு டிஸ்போஸபிள் டைப்பர்ஸ் வாங்கி உபயோகப்படுத்தலாம்...அப்படி விருப்பம் இல்லை வேட்டித்துணியை கிழித்து பயன்படுத்தலாம்.

குழந்தை மூச்சா, ஆயி போனவுடன், சூடான நீரில் துணியை நனைத்து மென்மையாக துடைக்கவேண்டும்...

தாயின் உடல்நலனை காப்பது மிக முக்கியம். குழந்தை பிறக்கும்வரை கால்சியம், இரும்பு சத்து மாத்திரைகளை கட்டாயப்படுத்தியாவது தந்திருப்பீர்கள்..

குழந்தை பிறந்தவுடன், அந்த மாத்திரைகளின் மேல் அவர்களுக்கு எரிச்சலும் டென்ஷனும் இருக்கும்...கண்டிப்பாக அவைகளை வெறுப்பார்கள்..

ஆனால் அவைகளை மருத்துவர் நிறுத்த சொல்லும்வரை கண்டிப்பாக உட்கொள்ளவேண்டும்.

அதுதான் தாய்க்கும் குழந்தைக்கும் நல்லது, என்பதை பொறுமையாக புரியவைக்கவேண்டும்...

பெண்கள் குழந்தை பிறந்தவுடன், சிறிய மன அழுத்ததுக்கு உள்ளாவார்கள் என்று நினைக்கிறேன்...

அவர்களின் மீது எரிந்து விழாமல், மென்மையாக போக்கை கடைபிடிக்கவேண்டும். உளவியல் ரீதியாக புரிந்துகொள்ளவேண்டும்...

குழந்தை தொடர்ந்து இடைவிடாமல் அழும் நிலை உருவாகலாம். அந்த நேரத்தில் குடலேற்றம், உரம் விழுதல் போன்ற பாட்டி காலத்து ட்ரீட்மெண்டுகளை மட்டுமே நம்பியிராமல், மருத்துவரை கலந்து ஆலோசித்தல் நலம்...

குழந்தையை கொஞ்ச வருபவர்கள் வாயை கொஞ்சம் அடக்கி வைத்தல் நலம். எடுத்தெறிந்து பேசுவது போல அல்லாமல், குழந்தைக்கு இன்பெக்ஷன் வரும், அதனால் முத்தம் கொடுக்க வேண்டாம் என்று டாக்டர் சொல்லி இருக்கார் என்று பயமுறுத்தவும்...

முந்தைய காலகட்டத்தில் குழந்தைகள் ஆரோக்கியமாக இருந்தன, அதற்கு காரணம் நமது உணவு பழக்கம், மாசுபடாத காற்று...

ஆனால் இப்போது உள்ள குழந்தைகளுக்கு உடனே நோய் தொற்று ஏற்பட வாய்ப்புண்டு. அதனால் குழந்தையை பார்வையிட வருபவர்களிடம் ரொம்ப ஸ்ட்ரிக்டாக இருக்கவும்...

நேரடியாக சொல்லிவிடுங்கள். குழந்தையை மூன்று மாதம் வரை அம்மாவை தவிர வேறு யாரும் தொடவேண்டாம் என்று மருத்துவர் சொல்லியிருக்காரு என்று உடான்ஸ் விட்டாலும் பரவாயில்லை...

குழந்தையை தூக்க தெரியாதவர்கள் தூக்கி, உடல்நலம் பாதிக்கப்படுவதும் உண்டு.

என்னால் முடிந்த அளவு சொல்லியிருக்கேன். மீதியை பின்னூட்டத்தில் அனுபவப்பட்டவர்கள் சொல்லுவார்கள், பார்த்து தெரிந்துகொள்ளுங்கள்..!!!

45 comments:

செந்தழல் ரவி said...

படத்தில் ஜொள்ளோடு போஸ் கொடுக்கும் விளம்பர மாடல் யார் , அவரது பெயர் என்ன என்று கண்டுபிடிப்பவர்களுக்கு, அவரது இன்னோரு சூப்பர் போஸ் மின்னஞ்சலில் அனுப்பப்படும்.

செந்தழல் ரவி said...

;அந்த; சென்னைப்பதிவரை வெத்திலையில் மை போட்டு கண்டுபிடித்த்தால் இந்த பதிவர் எந்த பதிவர் என்று சொல்வேன்.

லக்கிலுக் said...

அந்த பிரபலப் பதிவருக்கு வாழ்த்துகள்!

ரவி! என்னை மாதிரி யூத்துகளுக்கு இந்த மாதிரி பதிவுகள் போர் அடிக்கிறது. ஏதாவது குஜாலாக போட்டு குஷிப்படுத்தவும்!

செந்தழல் ரவி said...

நன்றி லக்கி அவர்களே. உங்கள்ளை போன்ற யூத்துகள், டோண்டு ராகவன் போன்ற யூத்துகளுடன் இணைந்து எங்காவது டூர் செல்லவும்.

Anonymous said...

i know it's lucky look.
eggjactly that's him

வல்லிசிம்ஹன் said...

பெயர் எல்லாம் சொல்ல மாட்டோம். ஆனா தெரியும். வாழ்த்துகள்:)

செந்தழல் ரவி said...

நன்றி வல்லிம்மா அவர்களே !!!!

செந்தழல் ரவி said...

இந்த எக்ஜாக்ட்லி அனானி அவர்கள் உடனே வலைப்பதிவை துவக்கவேண்ண்டும்

Anonymous said...

that's y he came out first.
congrats lucky.
boy or girl?
anyway it's good dude.

Anonymous said...

thanks ravi.
if i start a blog,
you will put so many eggjactly.

Anonymous said...

senthalalu! photova guess panni,
thappaa ponaa tharma adi, eggjactly
yaarukku? thazhala konjam korai.

சென்ஷி said...

:-))


எனக்கு யாருன்னு தெரியாட்டியும் கண்டிப்பா இன்னொரு போஸ் மெயில்ல அனுப்பி வைச்சே ஆகணும்.

வாழ்த்துக்கள் ரவி!

நெல்லைத்தமிழ் said...

என்னால் முடிந்த அளவு சொல்லியிருக்கேன். மீதியை பின்னூட்டத்தில் அனுபவப்பட்டவர்கள் சொல்லுவார்கள், பார்த்து தெரிந்துகொள்ளுங்கள்..!!! ///

பிரபல பதிவருக்கு வாழ்த்துக்கள்.

யாத்ரீகன் said...

>>> டோண்டு ராகவன் போன்ற யூத்துகளுடன் இணைந்து எங்காவது டூர் செல்லவும் <<<

:-))))))))))))))))))))))))))))))))))))))))))))

ராஜ நடராஜன் said...

புது மருத்துவர் கண்ணுல பட்டார்ன்னு பதிவைப் படிச்சிட்டு பின்னூட்டத்துக்கு வந்தா இது மருத்துவரோட அட்வைஸ் இல்ல குண்டு பேபி படம் பற்றிய பதிவுன்னு சொல்லுதே:)

தமிழன்-கறுப்பி... said...

வாழ்த்துக்கள் அண்ணன்..!

நல்லதந்தி said...

பிரபல பதிவருக்கு வாழ்துகள்! :)

இளைய கரிகாலன் said...

வாழ்த்துக்கள் லக்கி!

தமிழ் பிரியன் said...

ரவி அண்ணனை ஓட ஓட விரட்டியடிக்கும் தகுதி படைத்த ஒரே ஜூனியர் போல இருக்கு.. ;-)))

செந்தழல் ரவி said...

பதிவர் கெட்டதந்தி, நீங்கள் யாரை வாழ்த்துகிறீர்கள் என்று தெரிந்தால் வாழ்த்தமாட்டீர்கள். சாபம் விடுவீர்கள்.

இழவிலும் சாம்பார் கேட்கும் குரூப் உங்களுது :)))

ஊர்சுற்றி said...

ஒண்ணுமே புரியலியே!!!

நான் இன்னும் பதிவுலகில் குழந்தையாத்தான் இருக்கேனா?!!! (குழப்பக்குறி) :)))

பின்னாலபோடுவோம் said...

நெல்லைத்தமிழ் உங்க பின்னூட்டம் புரியல.

ஏதோ லிங்கு குடுத்திருக்கீங்க.. ஏதும் மால்வேர் வைரஸா அது?!@!

அந்த சென்னைப்பதிவர் யார்னு சொல்லலாம்னு வந்தா இந்த பதிவரே அந்த பதிவர் யாருனு கேட்டா எந்த பதிவர அந்த பதிவர்னு இந்த பதிவர் காட்டமுடியும்

என்ன கந்தாயமா இருந்தாலும்

நல்லதந்தியின் நல்ல குணத்தை பாராட்டி நான் அவருக்கு ஒரு ரீப்பீட்டு போட்டுக்கொள்கிறேன்பா..

அதிஷா said...

அனானியா பின்னூட்டம் போடறதிலதான் என்னா ஆனந்தம்..

இது மெயிலு பாலோ அப்புக்கு

அதிஷா said...

ஆமா இந்த வாட்டி மடிப்பாக்கத்தில வலையுல பேமஸ் லக்கிலுக்கு ஆதரிக்கும் வேட்பாளருக்ககுதான் வெற்றிவாய்ப்பாமே..

உண்மையா?

ஆதிமூலகிருஷ்ணன் said...

யாரந்த பதிவர்னு சொல்லியிருந்தா வாழ்த்தியிருக்கலாமே ரவி.!

நான் ஆதவன் said...

யாருன்னு தெரியாவிட்டாலும் சம்பந்தப்பட்டவருக்கு வாழ்த்துகள்

ஜூனியர் ஜூப்பரு....

Anonymous said...

:-)

Anonymous said...

ஜெவுக்கு எப்படின்னாலும் லாபம் தான். பிரபாகரன் இறந்தாலும் லாபம், காங்கிரஸ் வென்றாலும் லாபம் தான், அம்மா ஜகஜ்ஜால கில்லாடி

Anonymous said...

yes u r right anony.

துளசி கோபால் said...

படா போஸா இருக்கே!!!!!

என்னா லுக்கு என்னா லுக்கு.

மாடலுக்கு இனிய வாழ்த்து(க்)கள்.

நல்லதந்தி said...

//பதிவர் கெட்டதந்தி, நீங்கள் யாரை வாழ்த்துகிறீர்கள் என்று தெரிந்தால் வாழ்த்தமாட்டீர்கள். சாபம் விடுவீர்கள்.//

ரவி அண்ணாச்சி! ஏனிந்த கொலைவெறி!. எனக்கு எந்தப் பதிவருடனும் பகை கிடையாதே!.சாபம் என்கிற வார்த்தையெல்லாம் டூ மச். :)

//இழவிலும் சாம்பார் கேட்கும் குரூப் உங்களுது :)))//

எனக்குத் தெரிந்த குரூப் பிளட் குரூப் மட்டும் தான் :))

Ƹ̵̡Ӝ̵̨̄Ʒ SanjaiGandhi Ƹ̵̡Ӝ̵̨̄Ʒ said...

போட்டோல இருக்கும் ஜொள்ளு பிகர் தான் எனக்கு ரொம்ப நல்லாத் தெரியுமே.. :)) அவ விடியோவே என்கிட்ட இருக்கு.. இவரு மெயில்ல இன்னொரு போட்டோ அனுப்ப போறாராம்.. :))

வால்பையன் said...

டூ லேட்
என் பொண்ணுக்கு ஏழு வயசு ஆகுது!

செந்தழல் ரவி said...

ஆமா இந்த வாட்டி மடிப்பாக்கத்தில வலையுல பேமஸ் லக்கிலுக்கு ஆதரிக்கும் வேட்பாளருக்ககுதான் வெற்றிவாய்ப்பாமே..//

ஓம்..ஆலந்தூர் சென்று ஆர்.எஸ்.பாரதிக்கு பிரச்சாரம் வேறயாம். எல்லாம் விட்டமின் ப. வருடத்துக்கு ஒரு தேர்தல் வந்தால் திராவிட முன்னேற்ற கழகத்தின் சைண்டிபிக் ஊழல் பிளாக் மணி எல்லாம் மக்களிடமே சேரும்.

செந்தழல் ரவி said...

நன்றி ஜோதிபாரதி, வால், துளசிகோபால்.

அதிஷா said...

வலையுலகம் வளர.. பதிவர்கள் வாழ்வு மேலோங்க இரட்டைஇலை சின்னத்தில் வாக்களித்து அஇஅதிமுக கூட்டணியை வெற்றிபெற செய்யுமாரு கேட்டுக்கொள்கிறேன்

அதிஷா said...

\\ ஓம்..ஆலந்தூர் சென்று ஆர்.எஸ்.பாரதிக்கு பிரச்சாரம் வேறயாம். எல்லாம் விட்டமின் ப. வருடத்துக்கு ஒரு தேர்தல் வந்தால் திராவிட முன்னேற்ற கழகத்தின் சைண்டிபிக் ஊழல் பிளாக் மணி எல்லாம் மக்களிடமே சேரும். \\

எங்கள் ஏரியா வேஸ்ட்டு டி.ஆர்.பாலு பல கோடிகள் கொள்ளையடித்தாலும் 50 ரூபாய் கூட கொடுக்கவில்லை. அதனால் திருபெரும்புதூர் தொகுதியில் திமுக மண்ணைக்கவ்வ போகிறது

செந்தழல் ரவி said...

50 ரூவா கூட கொடுக்கலையா ? என்ன அமைச்சர் இவர் ? அப்போ நிச்சய தோல்வி. சரத்பாபுவை விட அதிகம் ஓட்டு வாங்குவர் என நம்புவோம்

செந்தழல் ரவி said...

ஆதிமூலகிருஷ்ணன்...

நீங்க இன்னுமா கண்டுபிடிக்கல ??

Anonymous said...

please vote for tamil people http://internationaldesk.blogs.cnn.com/2009/05/11/monday-poll/#comment-1857

Anonymous said...

please vote for tamil people http://internationaldesk.blogs.cnn.com/2009/05/11/monday-poll/

பிரியமுடன்.........வசந்த் said...

அதான் பாக்குறதுக்கு போட்டோ அழகா இருக்குள்ள இதுல இருந்தே தெரியவேனாமா?

அய்யோ.....அய்யோ....!

இளைய கரிகாலன் said...

ரவி ஸார், பிரபல பதிவருக்கு குழந்தை வளர்க்க எல்லாம் நல்ல நல்ல அட்வைஸ் செய்யுறீங்க, சரி!

அப்படியே இந்த எலெக்‌ஷனில் யாருக்கு ஓட்டு போட்டா நல்லதுன்னு கொஞ்சம் பெர்சனல் அட்வைஸ் பண்ணக்கூடாதா...

மணிகண்டன் said...

பிரபல பதிவருக்கு வாழ்த்துக்கள்.

Subash said...

பதிவிற்கு நன்றிகள்
இந்தப்பதிவினை அண்ணாக்கு ட்ரான்ஸ்பர் பண்ணிருக்கேன்.

பிரபல பதிவருக்கு வாழ்த்துக்கள்.