![](http://www.cinemaofmalayalam.net/aadumkoothu.jpg)
அழகான ஒரு கிராமம், அதில் நவ்யா நாயர், மற்றும் சில சம்பவங்களோடு படம் ஆரம்பிக்கும்போது, அட...ஏதோ இருக்கே...என்று ஒரு சுகமான அனுபவத்துக்கு தயாராகி, நிமிர்ந்து உட்கார்ந்தீர்கள் என்றால்...
அரதப்பழசான ஸ்ட்ரியோ டைப் அரைத்த மாவை மீண்டும் அரைத்து, குழப்பி, நொந்து, நோகடித்து, உங்களை சீட்டுக்கு அடியில் உட்காரவைத்துவிடுவார்கள்...
போராளியாக / திரை இயக்குனராக நடித்துள்ளார் சேரன்...ஒரு போராளி என்பவர் பதினைந்து நாள் தாடியோடிருக்கவேண்டும் என்ற தமிழ் சினிமா விதியை தவறாமல் காத்துள்ளார்..மேக்கம் சற்றும் இல்லாத முகம், வயதை கூட்டிக்காட்டுகிறது...அட்லீஸ்ட் குளித்து முகம் கழுவக்கூட நேரமில்லாமல் நடித்துகொடுத்துள்ளார். படத்தில் தெரிகிறது...
எடிட்டர் தவச தானியத்துக்கு பணியாற்றியிருப்பார் போல...ஆங்காங்கே தேவை இல்லாத ப்ளாஷ் பேக், எங்கே கட்டிங் எங்கே ஒட்டிங் என்று புரியாத மொக்கையான எடிட்டிங். இவரது எடிட்டிங் கருவிகள் மீது கொத்து குண்டுகள் போட்டு அழிக்கவேண்டும்..
இசை என்று எதாவது இருக்கிறதா என்று தேடினேன், இல்லை, அதனால் அதுபற்றி வேண்டாம்...!!
இந்த படத்துக்கு பிரகாஷ் ராஜ் எதுக்கு ? சன் டிவி மேகலா நெடுந்தொடரில் வரும் மேகலா அப்பா கதாபாத்திரத்தில் நடிக்கும் மொக்கை நடிகர் போதாதா ? கண்ட்ரி புரூட்ஸ்..
நவ்யா நாயரின் மாமா மகன் கிப்டாக தரும் ஒரு வளையல் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறது...அதில் இருந்து வரும் ஒரு ஒளி படம் போல நவ்யா நாயரின் கண்களுக்கு தெரிய, அதை வைத்து கதை (??) நகர்கிறது...
அந்த கிராபிக்ஸ் காட்சிகளை செய்த சாப்ட்வேர் எஞ்சினீயருக்கு சம்பள பாக்கி போல...அல்லது ஏதாவது அரைகுறை இன்ஸ்ட்யூட்டில் கிராபிக்ஸ் பழகிவரும் மாணவராக இருக்கக்கூடும்...கிராபிக்ஸ் காட்சிகளில் அவ்வளவு முதிர்ச்சி (டேய் டேய்...)
எழுபத்தைந்துகளில் நடப்பதாக காட்டப்படும் ப்ளாஷ்பேக் காட்சிகளில் பெரிதாக அலட்டிக்கொள்ளவில்லை இயக்குனரும், ஆர்ட் டைரக்டரும்..ஆங்காங்கே ப்ளாக்கன் ஒயிட் நிறத்தை படத்தில் தூவிவிட்டுள்ளார்கள்...அதன் மூலம் நாம் அது ப்ளாஷ் பேக் என்று புரிந்துகொள்ளவேண்டுமாம்...அய்யோ...சோதிக்கறாங்கப்பா...
ஏதோ ஒரு ஜமீந்தாரால் பாதிக்கப்பட்டு மொட்டையடிக்கப்பட்ட ஒரு கூத்தாடி இளம்பெண் பாத்திரத்தையும் நவ்யா நாயரே செய்துள்ளார்...அட்டுத்தனமாக உள்ளது...
ஜமீந்தார் மகனாக வந்து, திரைப்படம் எடுக்கும் முயற்சியை தடுத்து, அதன் பின் போராளியாக மாறிய சேரன் கையால் துப்பாக்கி குண்டு பட்டு சாகும் பாத்திரத்தில் சீமான்...மொத்தம் ரெண்டே சீன் இவருக்கு...சாப்பாடும் சிகரெட் பாக்கெட்டும் வாங்கிதந்திருப்பார்கள் போல...எளிமையாக நடித்துவிட்டுப்போகிறார்...
எவ்வளவோ நல்ல படங்களை கொடுத்த மற்றும் நடித்த பாண்டியராஜனை முழுமையாக வீணடித்துளார்கள்...அவருக்கு குடிகாரன் வேடம்...மொத்தம் மூன்று சீன்...கண்கள் சிவக்க மூன்று நாள் தாடியுடன் மாமனார் வீடு எதிரில் வந்து குடிப்பதற்கு பணம் கேட்கிறார். ஒரு முறை ஐந்தாயிரம் கொடுத்து அனுப்புகிறார்கள்...தயாரிப்பாளரும் அவ்வளவுதான் கொடுத்தாரா என்பதை அவர்தான் சொல்லவேண்டும்...
நவ்யா நாயரிடம் படம் ஆட்டோகிராப் மாதிரி வரும், அவார்டு வரும் என்று கொஞ்சம் அமவுண்டும் தேத்திவிட்டார்கள் போலிருக்கிறது...கொறைச்சு மலையாள வாசம் வீசுந்து...படத்தில் அங்கிங்கெனாதபடி மலையாள வாசனை...
தேவையில்லாமல் ஒரு தமிழாசிரியரை படத்தில் நுழைத்து, முதிர் கண்ணனான அவர் நவ்யாவிடம் காதலை சொல்வது போலவும், மறுக்கப்படுதல் போலவும், கிண்டல் செய்யப்படுதல் போலவும் காட்டி, தமிழாசிரியர் குலத்துக்கு மிகப்பெரிய வன்முறையை செய்துள்ளார்கள்...
இந்த மொக்கை படத்தை க்ளைமாக்ஸ் வரை பார்த்து முழுமையாக விமர்சனம் எழுதும் அளவுக்கு பொறுமை இருந்திருந்தால் நான் வலைப்பதிவு எழுத வந்திருக்கமாட்டேனே ?
ஆடும் கூத்து, அறுவையான படம்...
16 comments:
சிவா மனசுல சக்தின்னு ஒரு படம் பாத்தேன்.இப்படிதான் வாழ்க்கை போகுது என்ன பண்றது.நீங்களும் பாத்து விமர்சனம் எழுதுங்க
விமர்சனம் எழிதின உங்களுக்கே விருது கொடுக்கலாம்
SMS இப்படியா ///
நசி வாங்க
ஜமீந்தார் மகனாக வந்து, திரைப்படம் எடுக்கும் முயற்சியை தடுத்து, அதன் பின் போராளியாக மாறிய சேரன் கையால் துப்பாக்கி குண்டு பட்டு சாகும் பாத்திரத்தில் சீமான்...மொத்தம் ரெண்டே சீன் இவருக்கு...சாப்பாடும் சிகரெட் பாக்கெட்டும் வாங்கிதந்திருப்பார்கள் போல...எளிமையாக நடித்துவிட்டுப்போகிறார்...
luck luk got girl baby
சிறிய அளவில் எடிட் செய்யப்பட்டுள்ளது....
ஆனாலும் நீங்க பெரும் பொறுமைசாலி :)
சபரிக்கு அப்புறம் நொந்தது இந்த படத்துல தானா :))
(நவ்யா நாயரை ரசிக்க தனிக்கண் வேணும் ரவி.!)
சபரியை நான் முழு அளவில் பார்த்தேன் என்று யார் சொன்னது ?
வாங்க கானா. வயித்தெரிச்சல கெளப்பாதீங்க
பாஸூ... இந்த படத்தை தியேட்டர்ல
ரீலீஸ் பன்னாங்களா?
அதையும் காசு கொடுத்து,
பார்த்தது மட்டும் இல்லாம,
2 மணிநேரம் பதிவெழுதி,
எங்கள காப்பாதுன நீங்க.. ரொம்ம்ம்பப..(FIB)
இப்படிக்கு,
ஓசியில் படம் பாப்போர் சங்கம்
மலையாள இயக்குனர் TV சந்திரன் இயக்கிய இப்படம் 2006 இன்
சிறந்த தமிழ் படம் என்ற தேசிய விருது பெறப்பட்டது.மேலதிக தொடர்புக்கு :
http://www.altfg.com/blog/awards/indian-national-film-awards-2007/
இயக்குனர் TV சந்திரன் பற்றிய தகவலுக்கு http://www.cinemaofmalayalam.net/chandran.html
நன்றி
அருண்
Ravi,
2006 la irunthu intha blog vechurukkeenga..0ru thadava kooda linka tvpravi.blogspotla kudukkavey illaye???
-Kumar
downloaded
சேரனை திருத்தவே முடியாது போல..
பரவாயில்லையே கேபிளார் தான் பதிவிடுவார் என்று நினைத்தேன். அதற்குள் நீங்கள் முந்தி விட்டீர்கள். எப்படியோ எங்களையெல்லாம் காப்பாற்றி விட்டீர்கள்.
நன்றி ரவி..
Post a Comment