
என் டி டி வியின் ரியாலிட்டி ஷோ, 'ராக்கிய கட்டிக்கோங்கடா' வில் என்ன பரபரப்பு தெரியுமா ? அதுக்கு முன்னாடி, இந்த ஷோவை பற்றி கொஞ்சம் சொல்லிடறேன்...
பாடகியும் நடிகையுமான ராக்கி ஷாவந்த், சுயம்வரம் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொள்வது, பின் அதில் தேர்வாகும் நபரை மணந்துகொள்வது, இதுதான் ஆட்டமாம்...ஏற்கனவே ராகுல் காந்தியை கட்டிக்க விருப்பம் என்று பீதியை கிளப்பி ராகுல் ராக்கி இருக்கும் திசைக்கு எதிர் திசையில் தான் தேர்தல் பிரச்சாரத்தை கூட வைத்துக்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது...
அதற்குமுன் ஒரு பர்த் டே பார்ட்டியில் ராக்கியின் கிளுகிளு உடையை பார்த்து டென்ஷன் ஆன நடிகர் மிக்கா ராக்கியை வலுக்கட்டாய லிப் லாக் செய்தது குறிப்பிடத்தக்கது...

அதற்கு முன் பப்ளிக் ப்ளேஸ் ஒன்றில் இன்னொரு விளம்பர விரும்பி நடிகையின் உதட்டையும் பதம் பார்த்தவர் ராக்கி என்பது ஊர் அறிந்த ரகசியம்...

நல்லா கெளப்புராய்ங்கடா பீதிய என்று நினைத்திருந்தவேளையில்...
விண்ணப்பித்த 12500த்து சொச்சம் பேரில் ஷார்ட் லிஸ்ட் ஆன பதினாறு பேரையும் கல்யாணம் பண்ணிக்கரேனே என்று தடாலடி ஆட்டம் ஆடியுள்ளார் ராக்கி...
உதய்ப்பூரில் நடந்த இந்த எக்ஸாமில் ஒவ்வொருவரை நேரிலும் ஸ்க்ரீனிங் செய்தாராம ராக்கி...எவன் அப்பமூட்டு காசு, எல்லாம் என் டி டி வி செலவு...
மற்றபடி, தான் உதய்ப்பூரின் ராணி போல பீல் ஆகியதாக கொடுத்த காசுக்கு மேல் கூவினார் ராக்கி..
பதிவை எழுத ஆரம்பித்தபோது, கஷ்டப்பட்டு ராக்கி ஷாவந்தின் டீசண்ட் போட்டோ ஒன்றை போட்டுவிட்டேன்..அப்புறம் இன்னும் சில படங்களை போட நேர்ந்தபோது, 18+ போடவேண்டிய கட்டாயம். வேற வழி, கடைசியாக நான் போட வைத்திருந்திருந்த போட்டோவையே போட்டு தொலைகிறேன்...

கதை எழுத நேரம் இல்லையே, ஒரு சின்ன பதிவு போட்டுவிட்டு எஸ்கேப் ஆகலாம் என்றாலும், பத்து நிமிடம் விழுங்கிவிட்டது இந்த பதிவு. எங்கிருந்தாலும் வாழ்க. இந்த பதிவுக்கு முக்கியமான ஒரு விஷயம் இங்கே உள்ளது. இதை ராக்கிக்கு பார்சல் அனுப்பினால் மகிழ்வார்... என்னோட பதிவு லதானந்த் பதிவை விடவா மோசமா இருக்கு ? அப்படி இல்லைன்னா ஒரு ஓட்டு போடுங்க...இருந்தாலும் போடுங்க..