
ஈழ விவகாரத்தில் முத்து தமிழினி எதோ ஒரு பின்னூட்டத்தில் வைத்துள்ள கருத்து மிக தெளிவானது...விடுதலைப்புலிகள், ஆயுதப்போராட்டத்தின் காரணமாக கிடைத்த வாய்ப்புகளை லெவரேஜ் செய்யவில்லை, பயன்படுத்திக்கொள்ளவில்லை என்று சொல்லியிருக்கிறார்...அதை பிறகு பார்க்கலாம்...
தேர்தல் முடிந்துவிட்டது...இருந்தாலும் சில ஈழத்தமிழர்கள் பதிவுகளிலும் சரி, என்னுடைய நன்பர்களின் பதிவுகளிலும் சரி...இன்னும் கலைஞர் எதிர்ப்பு மனோபாவம் குறையவேயில்லை...என்ன செய்வது, அவர்கள் கலைஞரை ரொம்ப நம்பினார்கள்...அந்த ஏமாற்றத்தை தாங்கிக்கொள்ளமுடியவில்லை போலும்...
வாழும் ஹிட்லர் ராஜபக்சேவுடனும், அவன் தம்பி ங்கோத்தாபய ராஜபக்சவுடனும் தூப்பாக்கியை தூக்கிக்கொண்டு இந்த முதியவர் ஈழத்தில் சண்டையிட்டதைப்போல அவ்வளவு வெறுப்பை உமிழ்கிறார்கள்...
என்னைப்போல கொள்கையளவில் எதிர்க்கிறார்கள் என்று பார்த்தால் அதுதான் இல்லை, அவரது முதுமையை கூட கிண்டல் செய்யும் பிச்சைப்பாத்திரங்களை பார்க்கிறேன்...
தமிழக அரசியல் மாற்றம், வாரிசு அரசியல், விஞ்ஞான ஊழல், போன்ற எல்லா விடயங்களையும் தள்ளிவைத்துவிடுங்கள்..
இன்றைக்கு ஈழத்தில் எஞ்சியுள்ள மக்களுக்கும், இங்கே தாய் தமிழகத்தில் அகதிகள் என்ற சொல்லோடு வாழ்த்துவரும் மக்களுக்கும் உருப்படியாக எதாவது செய்யவேண்டும் என்றால் அது இப்போது மத்தியிலும் மாநிலத்திலும் ஆட்சியில் இருக்கும் கலைஞரால் தான் முடியும்...
இப்போது பசியில் வாடும் மக்களுக்கு தேவை உணவு. காயத்தில் இருக்கும் பிள்ளைகளுக்கு தேவை மருந்து....அரைஆடையில் உள்ள மக்களுக்கு தேவை நல்ல உடைகள்...உணர்வோ அல்லது இரங்கலோ, கவிதையோ, கோபமோ, ஸ்ட்ரேட்டஜியோ எல்லா கந்தாயத்தையும் பிறகு பார்த்துக்கொள்ளலாம்...
போர் நடைபெறும் நேரத்திலேயே திமுக அரசு பேக்கேஜுகளில் கோ ஆப் டெக்ஸ் ஆடைகளை உணவு பொதிகளை கிளிநொச்சிக்கு அனுப்பியதை மறக்கவேண்டாம்...அவர்களால் இப்போது நிறைய செய்யமுடியும்..
ஒருமித்த கருத்தோடு கேட்பதன் மூலமே முழுமையாக பெற்றுத்தரமுடியும்..இந்த நெடுமாறனுக்கு எல்லாம் எதுக்கு அரசியல் ? இப்ப கலைஞரிடம் போய் எந்த மூஞ்சிய வெச்சிக்கிட்டு நிக்கிறது ? என்ன செய்ய போய்த்தான ஆவனும் ?
எண்பத்தாறாவது அகவையை தொட்டுப்பார்த்த கலைஞருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்...எதாவது செய்யுங்க கலைஞரே, பிள்ளைங்க பசியில நிக்குது...