Wednesday, June 03, 2009

கலைஞரை திட்டுவதை நிறுத்திக்கலாம் வாங்க...



ஈழ விவகாரத்தில் முத்து தமிழினி எதோ ஒரு பின்னூட்டத்தில் வைத்துள்ள கருத்து மிக தெளிவானது...விடுதலைப்புலிகள், ஆயுதப்போராட்டத்தின் காரணமாக கிடைத்த வாய்ப்புகளை லெவரேஜ் செய்யவில்லை, பயன்படுத்திக்கொள்ளவில்லை என்று சொல்லியிருக்கிறார்...அதை பிறகு பார்க்கலாம்...

தேர்தல் முடிந்துவிட்டது...இருந்தாலும் சில ஈழத்தமிழர்கள் பதிவுகளிலும் சரி, என்னுடைய நன்பர்களின் பதிவுகளிலும் சரி...இன்னும் கலைஞர் எதிர்ப்பு மனோபாவம் குறையவேயில்லை...என்ன செய்வது, அவர்கள் கலைஞரை ரொம்ப நம்பினார்கள்...அந்த ஏமாற்றத்தை தாங்கிக்கொள்ளமுடியவில்லை போலும்...

வாழும் ஹிட்லர் ராஜபக்சேவுடனும், அவன் தம்பி ங்கோத்தாபய ராஜபக்சவுடனும் தூப்பாக்கியை தூக்கிக்கொண்டு இந்த முதியவர் ஈழத்தில் சண்டையிட்டதைப்போல அவ்வளவு வெறுப்பை உமிழ்கிறார்கள்...

என்னைப்போல கொள்கையளவில் எதிர்க்கிறார்கள் என்று பார்த்தால் அதுதான் இல்லை, அவரது முதுமையை கூட கிண்டல் செய்யும் பிச்சைப்பாத்திரங்களை பார்க்கிறேன்...

தமிழக அரசியல் மாற்றம், வாரிசு அரசியல், விஞ்ஞான ஊழல், போன்ற எல்லா விடயங்களையும் தள்ளிவைத்துவிடுங்கள்..

இன்றைக்கு ஈழத்தில் எஞ்சியுள்ள மக்களுக்கும், இங்கே தாய் தமிழகத்தில் அகதிகள் என்ற சொல்லோடு வாழ்த்துவரும் மக்களுக்கும் உருப்படியாக எதாவது செய்யவேண்டும் என்றால் அது இப்போது மத்தியிலும் மாநிலத்திலும் ஆட்சியில் இருக்கும் கலைஞரால் தான் முடியும்...

இப்போது பசியில் வாடும் மக்களுக்கு தேவை உணவு. காயத்தில் இருக்கும் பிள்ளைகளுக்கு தேவை மருந்து....அரைஆடையில் உள்ள மக்களுக்கு தேவை நல்ல உடைகள்...உணர்வோ அல்லது இரங்கலோ, கவிதையோ, கோபமோ, ஸ்ட்ரேட்டஜியோ எல்லா கந்தாயத்தையும் பிறகு பார்த்துக்கொள்ளலாம்...

போர் நடைபெறும் நேரத்திலேயே திமுக அரசு பேக்கேஜுகளில் கோ ஆப் டெக்ஸ் ஆடைகளை உணவு பொதிகளை கிளிநொச்சிக்கு அனுப்பியதை மறக்கவேண்டாம்...அவர்களால் இப்போது நிறைய செய்யமுடியும்..

ஒருமித்த கருத்தோடு கேட்பதன் மூலமே முழுமையாக பெற்றுத்தரமுடியும்..இந்த நெடுமாறனுக்கு எல்லாம் எதுக்கு அரசியல் ? இப்ப கலைஞரிடம் போய் எந்த மூஞ்சிய வெச்சிக்கிட்டு நிக்கிறது ? என்ன செய்ய போய்த்தான ஆவனும் ?

எண்பத்தாறாவது அகவையை தொட்டுப்பார்த்த கலைஞருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்...எதாவது செய்யுங்க கலைஞரே, பிள்ளைங்க பசியில நிக்குது...

23 comments:

ரவி said...

கலைஞர் என்று எழுதினால் தமிழ்மணத்தில் சேர்க்கமுடியலை...ஒரு வேளை கருணாநிதி என்று சொல்லவேண்டுமோ ?

பிருந்தன் said...

காலத்தில் செய்யாத பயிறும், காலத்தில் செய்யாத செயலும் பயனற்று போய்விடும்.

தந்தை பெரியாரிடம் உதவி கேட்டபேது பெரியார் சொல்லியது ஒரு அடிமை இன்னொரு அடிமையிடம் உதவி கேட்கிறது என்று,
அந்த இன்னொரு அடிமைக்கும் ஒரு சந்தர்ப்பம் கிடைத்தது.
அதை கூட அவர் செய்யவில்லை,
கட்சி குலைந்து விடும் ஆட்சி போய்விடும்,
35000 உயிர்களை விட அவை மேலானதா?
பின் ஏன் தமிழின தலைவர் என்ற பெயர்?
ஒரு மூண்றம் தர அரசியல் வாதியாகவே இருந்து விட்டு போகட்டுமே.

தமிழக மக்கள் செய்ததை கூட தமிழின தலைவர் செய்யவில்லையே?

இந்திய அதிகார வர்கத்தின்மீதே எமது கோபம். கோபபட மட்டுமே எம்மால் முடியும்.

இது ஒரு சராசரி தமிழனின் கோபம் மட்டுமே.

ரவி said...

உங்கள் உணர்வுகள் புரிகிறது பிருந்தன்...எனக்கும் தூக்கமில்லாத இரவுகளை இன்றும் தந்துகொண்டிருக்கிற நிகழ்வுகள் அவை...

அவர் நினைத்திருந்தால்...
அவர் செய்திருந்தால்...
அவர் அப்படி இருந்திருந்தால்...

என்று ஆயிப்போனதை பேசுவதை விட்டுவிட்டு, இனி ஆகவேண்டியது என்ன...

கருணாநிதியிடம் போலாமா, இல்லை வெறும் கருணாவிடம் போலாமா இல்லை அந்த கொலைகார ராஜபக்சேவிடமே போலாமா என்று எப்படியாவது அந்த மக்களை வெளியே எடுப்பது, அவர்களின் அத்தியாவசிய தேவைகளை நிறைவேற்றுவது, அவர்களது பாதுகாப்பை, இருப்பை, அமைதியான நிம்மதியான வாழ்வை உறுதிசெய்ய நடவடிக்கை எடுப்பதே நமது உடனடியான கடமை...

இதில் ஜாதி மத கட்சி கொளுகை வேறுபாடின்றி தமிழர் என்ற ஒற்றுமையோடு செயல்படும் நேரம்...

நீங்கள் சொல்வது மாதிரி இதுவும் காலத்தே செய்யவேண்டிய பயிர்தான்...

அங்கே அடைபட்டுக்கிடக்கும் மக்கள் அனைவரும் மாண்டபின் உணவும் உடையும் அரசியல் தீர்வும் அனுப்பி என்ன பயன் ?

பிருந்தன் said...

அதற்கான வாய்பை கூட இந்தியா முன்னின்று தடுத்து விட்டதே, ஜநாவில் இலங்கைக்கு எதிரான தீர்மானம் தோற்கடிக்கபட்ட பின்னர் எப்படி ஜநாவையும் , உதவி அமைப்புகளையும் இலங்கை அரசு முகாம்களுக்குள் அனுமதிக்கும். தமிழக ஆதரவில் ஆட்சியில் இருந்தபோதே டெல்லி கேட்கவிலை பெரும்பான்மை இருக்கும் போது கேட்குமா? தெருவில் இரங்கி உலக நாடை வற்புறுத்துவது மட்டுமே எம்மால் முடிந்தது, அதை கூடா இந்தியா வலிந்து வலிந்து தடுக்கிற்தே,முகாமில் 350000 மக்களில் 13000 பேரை காணவில்லையாம்.இந்தியா தடுக்க தடுக்க அங்கு காணமல் போபவ்ரின் தொகை அதிகரித்தே செல்லும்.

மயாதி said...

கலைஞரை திட்டுவது அவரை திருத்துவதற்காக அல்ல அவர் திருந்தப்போறவரும் அல்ல .
இப்படியே அவரை விட்டுவிட்டால் உங்கள் குழந்தைகள் வரலாற்றுப் பாடத்தில் என்ன படிக்குங்கள் தெரியுமா .....?
கொஞ்சம் வாசித்துப் பாருங்கள்.

இந்தியாவிலே கலைஞர் என்றொரு முதல்வர் இருந்தார். அவர் ஒரு முத்தமிழ் வித்தகர் தமிழினக் காவலர். எமது அருகே இருந்த நாட்டிலே (இலங்கை) தமிழர்கள் போரால் பாதிக்கப்பட்ட போது நடுவன அரசுக்கு தனிப்பட்ட முறையிலேயே பல அழுத்தங்களைக் கொடுத்து தமிழர்களை காப்பாற்ற மன்றாடினார், இறுதியில் தன் உயிரையே பணயமாக்கி உண்ணாவிரதம் இருந்தார். இதைக் கண்டு இந்திய அரசு மட்டுமல்ல இலங்கை அரசே உடனடியாக போரை நிறுத்தி தமிழ் மக்களுக்குரிய உரிமையை வழங்கியது.
இவ்வாறு தனது உயிரைப் பணயம் வைத்து தமிழைக் காப்பாற்றிய கலைஞருக்கு அடுத்த தேர்தலில் மக்கள் அமோக ஆதரவளித்து அவரது மகனை மத்திய அமைச்சர் ஆக்கினார்கள். அது மட்டுமா தமிழை வளர்ப்பதற்காக சொந்த செலவிலேயே எந்த லாப நோக்கமும் இல்லாமல் ஒரு தொலைக்கட்சியையே நடத்தினார். அந்த தொலைக்காட்சியை அவர் எந்த அரசியல் நோக்கத்திற்காகவும் பயன்படுத்தியதே இல்லை. அதுமட்டுமா அந்த தொலைக்கட்சியில் தமிழைத் தவிர அவர் வேற எதையும் பேச விடுவதேயில்லை, அந்த தொலைக்கட்சியில் வரும் பெண்கள் எமது கலாச்சாரத்தை மீறும்படி ஆடை அணிவதே இல்லை....ஏறக்


இப்பெடிஎல்லாம் ஒரு வரலாறு உங்கள் பிள்ளைகளால் படிக்கப் படுவதை நீங்கள் ஏற்றுக்கொள்ள தயாரா?

மயாதி said...

sollunka

லக்கிலுக் said...

உங்க ஃப்ரொஃபைலில் இருக்கும் அந்த பாவமான போட்டோவை இப்பவாவது மாத்தக்கூடாதா செந்தழல்? :-)

ரவி said...

ஹெல்லோ என்னப்பாத்தா பாவமா இருக்கா இல்லையா ?

அபி அப்பா said...

ரவி உன் பொண்ணுக்கு மட்டும் தான் மாமா மோதிரம் போட இருந்தேன். இப்ப உனக்கும் மச்சான் மோதிரம் போட வச்சுட்டியே:-)))

Athisha said...

\\ எண்பத்தாறாவது அகவையை தொட்டுப்பார்த்த கலைஞருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்...எதாவது செய்யுங்க கலைஞரே, பிள்ளைங்க பசியில நிக்குது... \\

எல்லோருடைய வேண்டுகோளும் இதுதான் நண்பரே

ஆர்வா said...

சில நிதர்சனமான உண்மைகள் சுடும்

ரவி said...

நன்றி அபி அப்பா...அந்த மோதிரத்தை கடையில வெச்சு காசை அவங்களுக்கே அனுப்பிருவேன்...

நன்றி பார் மோதிரம்..

ரவி said...

எஸ் மிஸ்டர் அதிஷா...

ரவி said...

ஆமா கவிதை காதலன்...என்ன செய்ய, வருத்தம் இருக்கத்தான் செய்யுது...ஆனால் எவ்வளவோ பணிகள் காத்திருக்குது இல்லையா ?

ரவி said...

மாயாதி...

உங்கள் உணர்வு சரி...ஆனால் அதை பேசிக்கொண்டு போகும் நேரம் இல்லை இப்போது...ஆக்கப்பூர்வமான பணிகள் உடனடி தேவை...வரலாறு புத்தகம் ப்ரிண்ட் ஆக நிறைய நாள் இருக்குங்க...அப்போ பாத்துக்கலாம்..

Anonymous said...

கலைஞர் சிறந்த எழுத்தாளர் உ-ம் பராசக்தி வசனங்கள்.. ஆனால் செயலில் பெரிய கேள்விக் குறி... இலங்கைப் பிரச்சனையில் தான் அவரைப் பற்றி முழுவதுமாக அறிய முடிந்தது.. சோனியாவும் , இந்திய ஏகபோக முதலாளிகளும் இலங்கைப் பிரச்சனையில் ராசபக்சவை ஆதரித்தார்கள்...உதவி செய்தார்கள்... கலைஞர் ஒரு முறை 1989ல் இலங்கையிலிருந்து வந்த இந்திய ராணுவத்தை வரவேற்கவே செல்ல மாட்டடேன் என்று சண்ட மாருதம் செய்தவர்... 2009ல் தாயே... என்று கும்பிட்டு சோனியாவிடமே பிரச்சனையை விட்டுவிட்டார்.. அதனால்தான் விமர்சனமே தவிர வேறு காரணமில்லை... தன்னை தமிழினத் தலைவர் என்று பிறர் கூறுவதை கேட்க விரும்பும்போது, அதற்காக நீ என்ன செய்தாய் என்று கேட்பவர்கள் கேட்கத்தானே செய்வார்கள்....?

உடன்பிறப்பு said...

//செந்தழல் ரவி said...

ஹெல்லோ என்னப்பாத்தா பாவமா இருக்கா இல்லையா ?//

ஐயோ பாவம் தோழர் ரவி கலைஞர் மீது வைக்கப்படும் வசவுகளுக்கு ஈழம் ஒரு போர்வை என்று இன்னும் புரியாமல் இருக்கும் அவர் ரொம்ப பாவம் தான்

Starjan (ஸ்டார்ஜன்) said...

கலைஞர் கண்டிப்பாக செய்வார்.

இங்கே வாங்க



http://www.ensaaral.blogspot.com/

Anonymous said...

!!!!!!!!!

Anonymous said...

//...ஒரு வேளை கருணாநிதி என்று சொல்லவேண்டுமோ ?//
is that not his name? are you ashamed of saying his name?
//எதாவது செய்யுங்க கலைஞரே, பிள்ளைங்க பசியில நிக்குது... //
why are you begging?

This is so sick..

ரவி said...

அனானி

என் பிள்ளைங்க அதைவிட சிக்கா இருக்கே...பிச்சை எடுக்கறது கூட தப்பில்லை...யாருக்கிட்டயும் அவுக சிக்கிடாக இருக்கனும்யா...

அன்புள்ள சொந்த பெயரை சொல்லக்கூட துப்பில்லாத முக்காடு போட்ட முண்டக்கலப்பையே...உன்னோட பொண்டாட்டி புள்ளைங்க அங்க நின்னா தெரியும்..

சவுக்கடி said...

அங்கு மகன்/மகள் பேரன்/பேத்திகளுக்கு ஏதாவது அமைச்சுப் பதவி தேறுமா?

இல்லாவிட்டால் மூடிக்கொண்டு போகவேண்டியதுதான்!

இன்னமுமா?

Muthu said...

//ஈழ விவகாரத்தில் முத்து தமிழினி எதோ ஒரு பின்னூட்டத்தில் வைத்துள்ள கருத்து மிக தெளிவானது...விடுதலைப்புலிகள், ஆயுதப்போராட்டத்தின் காரணமாக கிடைத்த வாய்ப்புகளை லெவரேஜ் செய்யவில்லை, பயன்படுத்திக்கொள்ளவில்லை என்று சொல்லியிருக்கிறார்...அதை பிறகு பார்க்கலாம்...//


ரவி,

இந்த பதிவை இப்பத்தான் பார்த்தேன். இதில் உள்ள அர்த்தத்தை சரியாக உள்வாங்கி கொண்டீர்கள் என்பது எனக்கு சந்தோஷம் அளிக்கிறது.

இதில் நிறைய பேச இருக்கிறது. ம்...காலம் வரும்...