Friday, June 26, 2009

குப்பையான விளம்பர இடுகைகளை மட்டுறுத்தல் செய்கிறதா தமிழ்ஷ்




சமீப காலமாக குப்பையான இடுகைகளை தமிழிஷ் இல் பார்க்க முடியவில்லை. இடுகையை அழுத்தி அமுக்கி வெளியிட்டாலும் அவை பிரசுரம் ஆக சில நிமிட நேரம் பிடிக்கிறது.

என்ன காரணம் என்று உச்சந்தலையில் எலுமிச்சை தேய்த்து எமது தாட்புல் ஸ்பாட்டில் அமர்ந்து யோசித்ததில், இடுகைகள் மட்டுறுத்தப்பட்டு வெளிவருவது தெரிகிறது...

இதில் நிர்வாகத்தினருக்கு பணிச்சுமைதான் அதிகரிக்கும் என்றாலும், கடந்த வாரங்களாக பார்த்துவந்த தேவையற்ற விளம்பர ஸ்பாம் இடுகைகளை காணமுடியவில்லை.

ஆக பில்டர் செய்யப்பட்ட நல்ல இடுகைகளே தொடரும் இடுகைகள் வரிசையில் வருகின்றன. முன்பெல்லாம் மொக்கையான இடுகைகளை Bury பட்டன் அழுத்தி துரத்திக்கொண்டிருந்தேன். இப்போது பரி பட்டன் அழுத்தும் வேலை மிகவும் குறைந்துவிட்டது.

ஆக நிர்வாகத்தினரின் இந்த நடவடிக்கையால், வெட்டியான பதிவுகளில் என்னுடைய நேரம் பெருமளவு வீணாகாமல், நல்ல இடுகைகளை மட்டுமே வாசிக்கும் வாய்ப்பு கிடைக்கிறது...

இந்தாங்க பெரிய வாழ்த்துக்கள்...!!!



அதே சமயம், மற்ற திரட்டிகளில் உள்ளது போல இந்த வார இஸ்டார் மாதிரி எங்களது பதிவுகளை பெருமைப்படுத்தினால் மகிழ்வோம்...!!!! இது கோரிக்கை விண்ணப்பம் மட்டுமே !!!! அப்புறம் எதாவது கதை போட்டி, கட்டுரை போட்டின்னு வெச்சு எதாவது பரிசு அமவுண்டா கொடுத்தீங்கன்னா புல் க்வாட்டருக்கு ஆகும். கண்ஸிடர் செய்வீர்களா ???

உங்களது பொன்னான வாக்குகளை அள்ளி தெளிக்க மறவாதீர் !!!!!!!!

29 comments:

பழமைபேசி said...

உங்க கடமையுணர்வுக்கு நன்றி! கொஞ்ச நேரத்துக்கு முன்னாடிதான் உங்களைப் பத்தி நினைச்சுட்டு இருந்தேன்...நீர் தொடரும்!

ரவி said...

பழமைபேசி. என்னான்னு நினைச்சீங்க என்று சொன்னால் அதை வைத்து ஒரு பதிவை ஓட்டிக்கொள்ளமுடியும்...

பழமைபேசி said...

இங்க மைக்கேல் ஜாக்சனின் சரிவுக்கு என்ன காரணம்ன்னு விவாதம் போய்ட்டு இருக்கு.... ஒருத்தர் சொன்னாரு, அவன் அவனாக இல்லாத நிலையில இப்படியெல்லாம் நடக்கும்ன்னு.... அந்த இடத்துல, நீங்க நீங்களாவே (good or bad) இருக்குறதை நினைச்சுகிட்டேன்.... அதான்!

ஆ.சுதா said...

அப்புறம் எதாவது கதை போட்டி, கட்டுரை போட்டின்னு வெச்சு எதாவது பரிசு அமவுண்டா கொடுத்தீங்கன்னா புல் க்வாட்டருக்கு ஆகும்//

நல்ல யோசனை..!!

நாமக்கல் சிபி said...

//நீங்க நீங்களாவே (good or bad) இருக்குறதை நினைச்சுகிட்டேன்//

அவங்கவங்க இயல்பை, தனித்தன்மையை இழந்துடவோ/விட்டுக் கொடுத்துடவோ கூடாது என்பதில் உறுதியானவர் ரவி!

(இது என் சொந்தக் கருத்து)

ரவி said...

அட ஆமாம் பழமைபேசி.

நான் நானாகவே இருந்துவருவது சில சமயங்களில் இன்னல்களை பெற்றுத்தந்தாலும், எந்த விஷயத்தை செய்தாலும் அதில் ஒரு மன நிறைவு வந்து ஒட்டிக்கொள்வதை மறுக்கமுடியாது...

நிறைய நட்புகளை கூட இழந்திருக்கிறேன். அதெல்லாம் பெரிய கதை...!!!!!!

ரவி said...

ஆமாம் முத்து. கண்டிப்பாக கேட்கலாம். க்வாட்டர் புல் என்று ச்சும்மா எழுதினாலும் பல புதிவர்களை உற்சாகப்படுத்த இதுபோன்ற போட்டிகள் பேட்டிகள் கண்டிப்பா தேவை. பார்ப்போம் என்ன நடக்குதுன்னு...

ரவி said...

சிபியாரே நன்றி...!!!!!!

ரவி said...

அதனை கம்மிங் ப்ரம் த ஹாட்ர் ஆகவே எடுத்துக்கொள்கிறேன்.....

நாமக்கல் சிபி said...

//அதனை கம்மிங் ப்ரம் த ஹாட்ர் ஆகவே எடுத்துக்கொள்கிறேன்..//

உண்மைதான் ரவி!

(நான் உம்மைச் சந்தித்த ஓரிரண்டு சந்திப்புகளிலேயே அதை உணர்ந்திருக்கிறேன் உங்களிடம்)

நாமக்கல் சிபி said...

இத்தோட நிறுத்திக்கிறேன்! அப்புறம் தனிமனிதத் துதிபாடும் மாநக்கல் சிபின்னு பேச்சு வரும்!

:))

ரவி said...

இதையே தமிழ்மணம் செஞ்சா அத கொலகுத்தம் ரேஞ்சுக்கு பேசுங்கையா...

வால்பையன் said...

அப்ப சரி
நானும் வாழ்த்திகிறேன்!

ரவி said...

ரவி said...
இதையே தமிழ்மணம் செஞ்சா அத கொலகுத்தம் ரேஞ்சுக்கு பேசுங்கையா.

இதனை பெயரிலி போடவில்லை என்று வால்பையன் சத்தியமாக நம்புகிறேன்...

ரவி said...

தமிழ்மண ஓட்டு ஒன்றையும் குத்திட்டு போங்கப்பா !!!!!

Anonymous said...

இதையே தமிழ்மணம் செஞ்சா அத கொலகுத்தம் ரேஞ்சுக்கு பேசுங்கையா..&&

ஏன் அவ்ளோ வேலைவெட்டி இல்லாமலா இருக்காங்க தமிழ்மணத்துக்காரவுக?

வால்பையன் said...

//இதனை பெயரிலி போடவில்லை என்று வால்பையன் சத்தியமாக நம்புகிறேன்... //

இதனை செந்தழல் ரவி சத்தியமா நான் ஆமோதிக்கிறேன்!

Athisha said...

ஆமாங்க என் பதிவுகள் கூட பாப்புலர் ஆக மாட்டேங்குது..

Anonymous said...

வாழ்க தமிழிஸ்

Tech Shankar said...

Oh. I thought many of my posts buried by some one. Finally You are the person aa? Oho (: J4f..

Just for fun. :) You are the person who is voting and supporting for me. Thanks Dear Dude.

//ஆக பில்டர் செய்யப்பட்ட நல்ல இடுகைகளே தொடரும் இடுகைகள் வரிசையில் வருகின்றன. முன்பெல்லாம் மொக்கையான இடுகைகளை Bury பட்டன் அழுத்தி துரத்திக்கொண்டிருந்தேன். இப்போது பரி பட்டன் அழுத்தும் வேலை மிகவும் குறைந்துவிட்டது.

ரவி said...

தமிழ்நெஞ்சம். இந்த பதிவுக்கு ஓட்டு குத்தினீங்களா ?

ரவி said...

தமிழ்நெஞ்சம், எவ்வளவு பேருக்கு முடியுமோ அவ்வளவு பேருக்கும் ஓட்டு போடுவது என்னுடைய வழக்கம்.

அனைவரும் எழுதுவதை உற்சாகப்படுத்தனும் இல்லையா ?

ரவி said...

பேனாவை F5 கீயின் மீது வைத்து விட்டு ஒண்ணுக்கு அடித்துவிட்டு வருவதற்குள், 301 பேர் பார்வையிட்ட இடுகை என்று காட்டுகிறது. இந்த மொக்கை பிளாக்கிற்கு இவ்வளவு வாசகர்களா? அண்ணன் ரவி அவர்கள் வியக்க வைக்கிறார்.

ரவி said...

சுய விளம்பரம்?

ரவி said...

கொலைவெறி குப்பன் அவர்களே ?

நீங்கள் என்ன ஓட்டினாலும் அதை பெற்றுக்கொள்வது பற்றி எமக்கு கவலை இல்லை.

ஆனால் அட்லீஸ்ட் சொந்த பெயரில் கமெண்டு போட்டால் இவன் நோண்டி நொங்கெடுத்துவிடுவான் என்ற பயம் இருக்கிறதே உமக்கு...

அதுவே எனக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றி...

உமது கமெண்டுகள் ஆபாசமாக இல்லாதவரை சந்தோஷமே...

வந்ததுக்கு ரெண்டு ஓட்டுகளை போட்டுவிட்டு சென்றால் தன்யனாவேன்...

ILA (a) இளா said...

வோட்டுப்போட்டாச்சு. இந்த மேட்டரப் பத்தி நான் எந்தப் பக்கம் உரசினாலும் பத்திக்கும். ஸோ.. நல்லா இருக்கீங்களா ரவி? ஊர்ல மழை பெய்யுதா?

Tech Shankar said...

S u p e r


//செந்தழல் ரவி said...

தமிழ்நெஞ்சம், எவ்வளவு பேருக்கு முடியுமோ அவ்வளவு பேருக்கும் ஓட்டு போடுவது என்னுடைய வழக்கம்.

அனைவரும் எழுதுவதை உற்சாகப்படுத்தனும் இல்லையா ?

நசரேயன் said...

வோட்டுப்போட்டாச்சு

♫சோம்பேறி♫ said...

என் பதிவுகள் என் ஒரு ஓட்டிலேயே, டாப் ரேங்க்ட் பேஜஸில் சேர்ந்து விடுகிறது. அப்போ நான் தான் நிரந்தர தமிலிஷ் சூப்பர் இஸ்டார். :-)


P.S : ஸ்மைலி போட்டிருக்கேனுங்கோவ்..