Monday, June 22, 2009

உரையாடல் அமைப்புக்கு கதை அனுப்பியவர்களுக்கு - என் விமர்சனங்கள் பாகம் 4



நாற்பதில் இருந்து ஐம்பது கதைகள்

இஷா கோபிகர். எனக்கு பிடித்த நடிகை அல்ல..!! இருந்தாலும் வேண்டி விரும்பி கேட்ட வாசகருக்காக...!!!!

51. சரணாகதி : ‘உயிரோடை‘ எஸ்.லாவண்யா

சிறு கதைக்கான ஸ்கெலட்டன், கரு எல்லாம் நன்று. ஆனால் கதையில் ஏதோ ஒரு நாடகத்தனம் இருப்பதை தவிர்த்திருக்கலாம்...எளிமையான கதை...கதை மாந்தரின் பெயர் அருமை...கதையில் திடீரென எட்டிப்பார்க்கும் திருப்பாவை கூட அழகு...

நல்ல முயற்சி. குழப்பம் இல்லாத தெளிவான நடை. சிற்சில எழுத்துப்பிழைகளை தவிர்த்திருக்கலாம். குறிப்பாக சொல்லப்போனால் அந்த கடைசி வரியில்...
எனக்கு பிடித்திருக்கிறது...

என்னுடைய மதிப்பெண் 60 / 100

52. ஆசை வந்தது போலவே : தவறு

கதைக்கான சரியான சுட்டியை கொடுக்க தவறியுள்ளார்...

தன் சிந்தனையோட்டத்தை எழுத்தில் வடித்துள்ளார்....கதை என்பதையும் தாண்டி, ஏதோ ஒரு கட்டுரையை வாசிப்பது போல இருக்கிறது....

என்னுடைய மதிப்பெண் 50 / 100

53. ஹெலிகாப்டர் : அற்புதன்

இந்த கதைக்களம் உணர்வுகளை சுண்டி இழுக்கக்கூடியது. இன்னும் வலிமையான வார்த்தைகளை பயன்படுத்தி, அந்த வலியை அழுத்தமாக வாசகர்களின் மனதில் பதிய வைத்திருந்திருக்கவேண்டும். தவறிவிடுகிறது...

இன்னும் முயலவேண்டும் அற்புதன்...

என்னுடைய மதிப்பெண் 52 / 100

54. கொள்ளி.. கொள்ளி.. : சந்துரு

உண்மையில் நல்ல கதைக்கரு. அற்புதமான சிந்தனை. உங்கள் குற்ற உணர்ச்சியை கண்டிப்பாக தூண்டிவிடக்கூடும்..ஆனால் எழுதப்பட்ட விதத்தில் ஸ்கோர் செய்யவில்லை...கொஞ்சம் வளவளாவாக உள்ளது..ஒரு பக்க கதையாக சுருக்கினால் அருமையாக வரக்கூடும்...

என்னுடைய மதிப்பெண் 51 / 100

55. கதையின் தலைப்பு ஒருவேளை உங்களிடமே இருக்ககூடும். : கும்க்கி

சரியான சுட்டி கொடுக்கப்படவில்லை. வலைப்பதிவில் இருந்து கதையை கண்டுபிடித்தேன்.....கும்க்கி மாற்றுவார் என்று நம்புவோம்...

கடைசி ட்விஸ்ட் என்று எதுவும் இல்லை...கதை அங்கே தான் கொண்டுசெல்கிறது என்று முன்பே தெரிந்தது...ஆனால் கடைசியில் சரசக்கா பேசுவதாக வரும் வசனம் தேவையற்றது..

இது நல்ல கதையா இல்லையா என்பது கொஞ்சம் குழப்பமாகத்தான் உள்ளது. தலைப்பு எதுவும் வைக்கத்தோன்றவில்லை...

என்னுடைய மதிப்பெண் 62 / 100

56. &&& தாய்மை &&& : சுமஜ்லா

கொஞ்சம் அழுத்தமான கதை..தேர்ந்த நடை..நல்ல கதைக்கரு...கண்டிப்பாக படிக்கவேண்டிய கதை...பரிசும் பெறவேண்டிய கதை...!!!

என்னுடைய மதிப்பெண் 70 / 100

57. கிணற்றில் மிதக்கும் நிலவின் சடலம் : நிலாரசிகன்

நல்ல கதைசொல்லும் உத்தி. ஏற்கனவே சில கதைகளில் பார்த்திருந்தாலும், இந்த கதைக்கு தேவையான ஒன்று...

சமூகத்தின் நடபடிகளை கதையாக்கியிருக்கிறார் நிலா ரசிகன், நல்ல தலைப்பு, எளிமையான நடை. நான் ரசித்தேன்...

என்னுடைய மதிப்பெண் 70 / 100

58. சின்னு : நாடோடி இலக்கியன்

அற்புதமான மொழிநடை. வட்டார வழக்கு...கதையும் அதன் முடிவும் சூப்பர். ஆற அமற படித்து ரசிக்கவேண்டிய கதை...!!!! வேறென்ன சொல்ல, வெற்றிபெற வாழ்த்துக்கள் நாடோடியாரே...

என்னுடைய மதிப்பெண் 75 / 100

59. செல்லம்மாள்.. : ஆ.ஞானசேகரன்

வட்டார வழக்கில் முயன்றிருக்கிறார் ஆ.ஞானசேகரன். கதையின் உள்ளடக்கம் அவ்வளவாக கவரவில்லை. தினத்தந்தி செய்திக்கு ஒரு முடிவு கொடுத்து கதையாக்கியதுபோல இருக்கிறது...

என்னுடைய மதிப்பெண் 50 / 100

60. எதிர்பார்ப்பு : S.A. நவாஸுதீன்

ஷாக்கிங் இறுதி ட்விஸ்டுடன் கூடிய மிடில் ஈஸ்ட் கதை. எதிர்பாராத அந்த இறுதி முடிவில் ஸ்கோர் செய்கிறார் நவாஸ். அதற்காகவே கொஞ்சம் சுவாரய்ஸ்யமற்ற நடையை பற்றி கவலைப்படாமல் படிக்கலாம்...

என்னுடைய மதிப்பெண் 60 / 100

61. விலைமகளே பரவாயில்லை : SUREஷ்

கண்ட இடத்திலும் கலர் அடித்து கொஞ்சம் கலீஜாக இருந்தாலும், பதிவில் எடுத்துகொண்ட மேட்டர் அழுத்தமானது...

சுவாரயஸ்யமான நடை இல்லையென்றாலும் கூட, கொஞ்சம் ரசிக்கலாம்...தலைப்பிலேயே முழு கதையையும் சொல்வதையும், கதைக்கு நடுவே முடிவையும் சொல்வதையும் தவிர்த்திருந்தால், இறுதிவரை சுவாரஸ்யம் கூட்டியிருக்கலாம்.

என்னுடைய மதிப்பெண் 60 / 100

62. மைய விலக்கு : சத்யராஜ்குமார்

அற்புதமான நடை..அருமையான கதைக்கரு...கலக்கலான முடிவு...

வேண்டாம்...வேண்டாம்...அட..இந்த கதையை படிக்காமல் இருக்கவேண்டாம்...

இவ்ளோ நாள் எங்கேய்யா இருந்தீங்க...!!!! நிறைய எழுதுங்க...!!!

என்னுடைய மதிப்பெண் 80 / 100

63. கூரை மீதினிலே ஒரு பூனைக் குட்டி : சாம்ராஜ்ய ப்ரியன்

நல்ல கதை..இன்னும் எலாபரேட்டாக எழுதியிருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும்...கொஞ்சம் கொசுவத்தி சுத்தவைக்கும் நடை...

நன்று...!!!

என்னுடைய மதிப்பெண் 60 / 100

64. \"இது நியாயமா, கிருஷ்ணா????\"- : \'இனியவன்\' என். உலகநாதன்

இனியவன் எழுதிய இந்த கதையை விக்ரமன் பார்த்தால் ஒரு படம் எடுத்துடுவார். அந்த அளவுக்கு ஒரு முழுமையான கதை. வார்த்தைக்கோர்ப்புகளில் சில இடங்களில் சுவாரஸ்யம் குன்றும் வகையில் இருந்தாலும் ஒரு முழு அளவில் பார்க்கும்போது அவை பெரிதாக தெரியவில்லை...

சில இடங்களில் எடிட் செய்தால் இன்னும் அற்புதமான கதையாக மிளிரும்.

என்னுடைய மதிப்பெண் 65 / 100

65. அம்மாவும் அப்பாவும் தூங்கட்டும்....... : அன்புடன் அருணா

கொஞ்சம் வேறுபட்ட நடை இருந்திருக்கலாம்...இருந்தாலும் எடுத்த முயற்சியில் மனம் தளராமல் கதையை கொண்டு சென்றுள்ளார்கள்...

கொஞ்சம் பெரிய பாண்ட் கடுப்படித்தாலும், இந்த கதைச்சூழலும், அதன் இறுதியில் உள்ள மெசேஜும் நன்று...நல்ல முயற்சி..!!!

என்னுடைய மதிப்பெண் 60 / 100

28 comments:

ரவி said...

டெஸ்ட்டு.............

வால்பையன் said...

நிறைய கதைகள் 60 மார்க்குக்கு மேல இருக்கே!

பரிசு தராட்டியும் பார்டிசிபேட் சர்டிபிகேட்டாவது வாங்கி கொடுங்க!

ரவி said...

சரி வாங்கித்தறோம். கவலை வேண்டாம்.

கம்மி மார்க் கொடுத்தால் மனக்கஷ்டம்.

என் பார்வையில் கதை எழுத முயற்சி செய்தாலே 40 மார்க். அப்புறம், மொழி நடை, எழுத்துப்பிழை, ஆரம்பம், முடிவு, கதைக்கரு அப்படீன்னு அஞ்சு அஞ்சு மார்க்கா கூடுது அவ்ளோ தான்...

மயாதி said...

நல்லதோ கெட்டதோ என் கதையையும் பார்த்து ஏதாவது சொல்லு தல ...

என் முதல் கதை என்பதால் , கதைதானா எனற சந்தேகத்தில் இருக்கிறேன்

http://konjumkavithai.blogspot.com/2009/06/blog-post_21.html

ரவி said...

மாயாதி

லிங்க் ல சேர்த்துட்டீங்க இல்லையா ? கண்டிப்பாக படிப்பேன்...

நாடோடி இலக்கியன் said...

நன்றி செந்தழல்,
என்னுடைய பதிவில் உங்கள் பதிவின் இணைப்பை வைத்துத்தான் இங்கே வந்தேன்.
எதிர்பார்க்கவே இல்லை.
இப்போதுதான் உங்க எல்லா விமர்சனத்தையும் படித்துக் கொண்டிருக்கிறேன்.
பாராட்ட வேண்டிய முயற்சி நண்பரே.கதை எழுதிய அனைத்து நண்பர்களுக்கும் உற்சாகம் கொடுக்கும் விதமாக அமைந்திருக்கிறது.
தொடரட்டும் உங்கள் பணி.

அன்புடன் அருணா said...

60 மார்க்குக்கு நன்றி...........
உங்களின் பொறுமைக்கு உங்களுக்கு மார்க் 100/100.

ஆ.சுதா said...

சலிப்பில்லாமல் தொடர்ந்து படித்து விமர்சனம் செய்வது கடினமான ஒன்று. அதை சிரமம் பாராமல் செய்கிறீர்கள். ரொம்ப நன்றி.

இரா. வசந்த குமார். said...

அன்பு ரவி...

/*
என் பார்வையில் கதை எழுத முயற்சி செய்தாலே 40 மார்க். அப்புறம், மொழி நடை, எழுத்துப்பிழை, ஆரம்பம், முடிவு, கதைக்கரு அப்படீன்னு அஞ்சு அஞ்சு மார்க்கா கூடுது அவ்ளோ தான்...
*/

ரெண்டாவது கதைக்கு 35 தான் போட்டிருக்கீங்க.. பாவம்ல அவங்க..!!

ரவி said...

நன்றி நாடோடி இலக்கியன்..........

ரவி said...

சரி ஒரு பத்து சேர்த்து போடுவோம் கவலை வேண்டாம் வசந்த்..

ரவி said...

காசா பணமா மார்க்கு தானே ........

ரவி said...

நன்றி ஆ முத்துராமலிங்கம்.,......

ரவி said...

அன்புடன் அருணா தேங்ஸுங்க......

குடுகுடுப்பை said...

பிளாக் எல்லா இடத்திலேந்தும் படிக்கனும். பிரியுதா

உண்மைத்தமிழன் said...

மத்தவங்க கதை இருக்கட்டும்..

உன் கதை எங்கடா ராசா..?!!!

நிலாரசிகன் said...

விமர்சனத்திற்கு நன்றி ரவி. தொடரட்டும் உங்கள் பணி.வாழ்த்துகள்.:)

SUREஷ்(பழனியிலிருந்து) said...

நன்றி ரவி சார்,

போட்டிக்குத் தகுதியானது கதைதான் மற்றும் அழுத்தமான கரு என்று பாராட்டுகளையும் மதிப்பெண்களையும் கொடுத்ததற்கு மகிழ்ச்சி.

ஆனால் நீங்கள் தலைப்பில் முடிவு என்று நினைத்திருப்பது முடிவல்ல.., அது இடைவேளைதான்.

நான் எடுத்துக் கொண்டிருப்பது தாழ்த்தப் பட்ட சமூகத்தைச் சார்ந்தவர்களை தலைமை இடத்தில் வைத்துப் பார்க்க விரும்பாத சிலரின் எண்ண ஓட்டங்கள், கடைசிவரையில் அவர்களால் வேட்பாளராக ஏற்றுக் கொள்ளப் பட்டவரின் சாதியை உணர்ந்து கொள்ள பிரயாசைப் படுவதையும் பதிவு செய்யவே விரும்பினேன், உண்மையில் முடிவு கொடுக்காமலேயே முடித்துள்ளேன்.

யார் தலைவராகிறார் என்பதாக நான் கதை அமைக்கவில்லை.., தலைவராக யார் ஆகக் கூடாது என்பதைத் தீர்மானிக்கும் சிலரின் எண்ண ஓட்டங்களை வெளிச்சமிடத்தான் நான் எண்ணினேன். அந்த எண்ணங்களை வாசகர்களின் மனதில் தோற்றுவிக்க நான் இன்னும் பல தூரம் போகவேண்டும் என்று நினைக்கிறேன்

தமிழன்-கறுப்பி... said...

அண்ணே நானும் கதை எழுதவா? நீங்க 90/100 மதிப்பெண் தருவிங்கன்னா ஓகே..

:))

SUMAZLA/சுமஜ்லா said...

என்னுடைய &&& தாய்மை &&& சிறுகதைக்கு 70 மார்க் கொடுத்து பாராட்டியதற்கு நன்றி! இது, முழுக்க முழுக்க என் வாழ்வில் நடந்த உண்மை சம்பவம்.

லக்கிலுக் said...

//62. மைய விலக்கு : சத்யராஜ்குமார்


இவ்ளோ நாள் எங்கேய்யா இருந்தீங்க...!!!! நிறைய எழுதுங்க...!!!

என்னுடைய மதிப்பெண் 80 / 100//

யோவ் ரவி!

நக்கலா?

நாமள்லாம் புட்டிலே பாலு குடிச்சிக்கினு இருந்த காலத்திலேயே அண்ணாத்தை எழுத ஆரம்பிச்சிட்டாரு. சத்யராஜ்குமார் யாருன்னு தெரியலையா? இண்டர்நெட்டு அழிஞ்சிடும் :-(

ரவி said...

தமிழன் கருப்பி...

நீங்க மொதல்ல எழுதுங்க...அப்பால பாக்கலாம்...

ரவி said...

சுஜ்மலா...

கற்பனை செய்து எழுத முயலுங்க...நிறைய உண்மை சம்பவங்களை விட கற்பனை இன்னும் அழகா இரூக்கும் இல்லையா ?

ரவி said...

லக்கி...

இப்பதான் அவர் க்ராஸ் ஆவுறார். எனக்கு சுந்த ராமசாமியையே ரெண்டு வருசத்துக்கு முன்னாலதான் தெரியும்...ஜெயமோகன் போன வருஷம் அறிமுகம். அது மாதிரிதான்...என்னை மாதிரி குமுதம் நடிகையின் கதை வாசகனும் சுஜாதாவின் அறிமுகம் மட்டும் இருந்தா போதாதா ?

சத்யராஜ்குமார் said...

ரவி,

உங்கள் விமர்சனத்துக்கு நன்றி. எழுதுவதை விட பொறுமையாய் படித்து விமர்சிப்பது கடினமான காரியம்.

லக்கியார் சொன்னது போல் நான் எண்பதுகளில் நீங்கள் படித்த நடிகையின் கதைக்கு இரண்டு பக்கங்கள் தள்ளி பல சிறுகதைகள் எழுதியுள்ளேன். அப்புறம் பத்திரிகைகளை மறந்து கடந்த பல வருடங்களாக இணையத்தில் குப்பை கொட்டிக் கொண்டிருக்கிறேன்!

-சத்யராஜ்குமார்

S.A. நவாஸுதீன் said...

வரிசை என்னும் 60. நீங்கள் கொடுத்த மதிப்பெண்ணும் 60. எழுத்துப்பிழை இல்லையே. Just kidding

ரவி said...

Thanks Sathyarajkumar...

ரவி said...

Navaz, Nadri.