Tuesday, June 09, 2009

அதெப்படிடா ஆயுத கெடங்குல தீ புடிக்கும் ?மடப்பய மருமகன் அலுப்போன்ஸு ஒரு கேள்வி அனுப்பியிருந்தான். இவனெல்லாம் இமெயில் அடிக்க ஆரம்பிச்சுட்டானே என்று நொந்துபோய் பார்த்தால், அதில் ஒரு இண்டெலி ஜெண்டலி கொஸ்டின் எழுப்பியிருந்தான்...

முதலில் யாழ்ப்பாணம், பிறகு மயிலிடி, இப்ப வவுனியா...

ராணுவ ஆயுத கிடங்குல தீ புடிச்சுருச்சாம்...

அங்க எல்லாம் தீயை அனைக்க வாளி வெச்சு அதுல மணல் கொட்டி வெச்சுருப்பாங்களா இல்லையா என்பது தான் அந்த கேள்வி...

நான் இப்படி மனசுக்குள்ள நினைச்சுக்கிடேன்...ஆனா சொல்லல..

அட முண்டமே...முண்ட கலப்பையே...எவனோ புடிச்ச பீடி துண்டு தீப்பிடிக்க இது என்ன டுமீல்குப்பமா ? ராணுவ ஆயுத கெடங்குடா...அங்கன எவ்ளோ பேரு நிப்பானுங்க...

நாலு காரணம் இருக்கலாம்டா...

ஒன்னு...

செத்துபோன 20 ஆயிரம் ( அட இந்திய பார்லிமெண்டுலயே சொல்ற கணக்குப்பா) தமிழர்கள் உடல்களை மொத்தமா எரிக்க இதை விட நல்ல சான்சு ஏது ?

ரெண்டு...

வாங்கி வெச்சுருக்கற பேரழிவு, ரசாயன ஆயுதங்களை எல்லாம் வெடிச்சு வுடுறான்னு ங்கோத்தாபயவும் சொரத் மொண்சேகாவும் சொல்லிட்டாங்களாம்...

அமெரிக்காக்காரன் சாட்டிலைட் வெச்சு மோப்பம் புடிச்சாலும் புடிச்சுருவான் என்பது தான் ரீசனாம்..இவுக ரெண்டு பேரும் அமெரிக்க சிட்டிசனுல்லா...அங்கன சொத்து பத்து வெச்சுருக்கானுவல்ல..

மூனு...

இந்த எல்டிட்டீயி பயலுக இன்னும் குண்டு வெக்குறானுங்க தெரியுமா ? அதனால நாங்க சொல்ற வரைக்கும் இண்டர்நேஷனல் மீடியாக்காரன் வரக்கூடாது..இந்த மக்கள் எல்லாம் இப்படி அடைபட்டுத்தான் கெடக்கனும்...என்று வாய்க்கு வந்ததை சொல்லு உலகத்தை ஏமாத்த..

நாலு...

ஏய் எங்க கிட்டக்க இருந்த குண்டெல்லாம் வெடிச்சுபோச்சு தெரியுமா ? இன்னும் குண்டு குடு..அப்படீன்னு சீனா பாக்கிஸ்தான் காரவுக கிட்ட வாங்கி, இந்தியாவுக்கு பலமா ஆப்பை சொருக...ஒருக்கா மறுக்கா பார்த்தா இலங்கையே ஒரு பெரிய ஆப்பு மாதிரிதான் தெரியுது மேப்புல...நீங்க இன்னோரு முறை பாருங்களேன்...

சிங்களவன் முட்டாளுன்னு தெரியும்...ஆனா இவ்வளவு முட்டாளா இருப்பான்னு தெரியலையே...

அதுல ஒரு காமெடி பார்த்தீங்கன்னா, இந்த சிங்களவன் சொல்றதையே நம்பிக்கிட்டு ஏமாறுது பாரு இந்த அலுப்போன்ஸு...

இதை ரிட்டன் மெயில் அல்போன்ஸுக்கு அனுப்பலானும்னு பார்த்தேன்..நேரமில்ல..அதான் ஒரு பதிவா போட்டு அந்த லிங்க அவனுக்கு போன்ல சொல்லிக்கலாமேன்னு...வர்ட்டா..

24 comments:

செந்தழல் ரவி said...

முடிஞ்சா ஓட்டுபோடுங்க...என்னால எல்லாம் இங்கிலீஷ் ஓவியா, தினவு மாதிரி மார்க்கெட்டிங் பண்ண முடியாது. ஒரே ஒரு கயமை பின்னூட்டம் மட்டும் போட்டுக்கறேன்...

சென்ஷி said...

2ம் கயமை!

ராஜ நடராஜன் said...

சரியான துப்பறியும் புலியா இருக்குறீங்களே!நீங்க சொல்ற லாஜிக் சரியாக இருக்கும் போல இருப்பதற்கும் சாத்தியங்கள் இருக்குது.

மதிபாலா said...

அட்டா...

ரிட்டர்ன் மெயில் பண்ணறதுக்கு நேரமில்லாம பதிவா போட்டதான உங்க கடமை உணர்ச்சிக்கு அளவே இல்லையா?

ஆனாலும் அனேகமா இதுவும் இன்னொரு ங்கோத்தாபய சதிதான்னு மட்டும் தெரியுது.

தீப்பெட்டி said...

//நீங்க சொல்ற லாஜிக் சரியாக இருக்கும் போல இருப்பதற்கும் சாத்தியங்கள் இருக்குது//

நானும் அப்படித்தான் நினைக்குறேன்..

செந்தழல் ரவி said...

வாங்க சென்ஷி. சொகமா ? கயமைக்கு நன்னி..

செந்தழல் ரவி said...

ராஜ நடராஜன் அண்ணா..

அந்த ஒபாமா கும்பல்கிட்ட மாட்னீங்களே.. இப்ப நலமா ?

செந்தழல் ரவி said...

வாங்க மதிபாலா..உண்மையை பேசுவதில் எங்களுக்கு இணை நாங்களேதான்.

செந்தழல் ரவி said...

திப்பெட்டி, தீ ன்னதும் வந்துட்டீங்களா ஹி ஹி

சிவகாசியா...

அலுப்போன்ஸ் said...

நான் சிங்களன் பட்டாசு வெடிக்கும் போது பயர் ஆகிடுச்சின்னி நெனைச்சேன்.

வெறுமை said...

துப்பறியும் சிங்கம் சங்கர்லால் !!!

நல்லாவே யோசிக்கிறிங்கப்பு ...

சுரேஷ் குமார் said...

//
ஒருக்கா மறுக்கா பார்த்தா இலங்கையே ஒரு பெரிய ஆப்பு மாதிரிதான் தெரியுது மேப்புல...நீங்க இன்னோரு முறை பாருங்களேன்...
//
ஹும்.. எப்படியெல்லாம் யோசிக்கிறாய்ங்க..

செந்தழல் ரவி said...

வெறுமை !!! நன்றி...!!!

ஏதோ சேட்ஜி பெயரை சொல்றீங்க...

பான் பராக்கை போட்டு என் மூஞ்சியில எச்சி துப்பிறபோறாங்க சேட்டுங்க..

செந்தழல் ரவி said...

நன்றி சுரேஷ் குமார்.

முன்னால அது பெரிய கணணீர் துளின்னு படம் வரைவானுங்க..

வெறுமை said...

:) ...ரவி, சிறுவயதில் துப்பறியும் சங்கர்லால் கதைகள் படித்தது.

கப்பலோட்டி said...

துப்பறியும் சாம்பு ரவி கலக்குறிங்க!!!!!!!!!!

Kanna said...

ரவி ஒரு சில உங்கள் பதிவை தமிழ் மணத்தில் பார்த்து தலைப்பு பிடித்திருந்தாலும் உங்கள் தளத்திற்கு வரவில்லை. காரணம் உங்களும் தெரியும்.

ஆனால் இந்த தலைப்பே என்னை உங்கள் தளத்திற்கு இழுத்து வந்து விட்டது..

அருமையான பதிவு..

வாழ்த்துக்கள்

செந்தழல் ரவி said...

கண்ணா ரிலாக்ஸ்ஸ்.....!!!!

நானும் உங்களை போல நல்லவந்தான்...!!!

குடுகுடுப்பை said...

ஒன்னு...

செத்துபோன 20 ஆயிரம் ( அட இந்திய பார்லிமெண்டுலயே சொல்ற கணக்குப்பா) தமிழர்கள் உடல்களை மொத்தமா எரிக்க இதை விட நல்ல சான்சு ஏது ?//

இதுதான் எனக்கு தோனுது.

குடுகுடுப்பை

யாரோ - ? said...

ஹாய் ரவி.. நல்லாத்தான் இருக்குது உங்க கற்பனை.. ஆனால் எனக்கு ரெண்டு இடத்துல இடிக்குது.

ஓன்று :
//செத்துபோன 20 ஆயிரம் ( அட இந்திய பார்லிமெண்டுலயே சொல்ற கணக்குப்பா) தமிழர்கள் உடல்களை மொத்தமா எரிக்க இதை விட நல்ல சான்சு ஏது //

இப்படி இராணுவ முகாம்களிலே பிணங்களை எரிக்க வேண்டிய அவசியம் இராணுவத்துக்கு நிச்சயமாக இல்லை. பரந்த வன்னி நிலப்பரப்பில் எங்கே வேண்டும் என்றாலும் எரிக்க முடியும். யார் கேட்பதற்கு இருக்கிறார்கள். அது மட்டுமல்ல சும்மா இப்படி ரிஸ்க் எடுத்து எரிக்க வேண்டிய தேவைதான் என்ன??

அதுமட்டுமல்ல அப்படி ஆயுதங்களை எரித்துவிட்டு ஏதேனும் பிரச்சனை என்றால் புலிகளிடம் கைப்பற்றப்பட்ட ஆயுதங்கள்தான் அவை என்றும் உலகத்துக்கு கூறலாம். யார் இருக்கா தட்டி கேட்க.. ) :

இரண்டு :

//வாங்கி வெச்சுருக்கற பேரழிவுஇ ரசாயன ஆயுதங்களை எல்லாம் வெடிச்சு வுடுறான்னு ங்கோத்தாபயவும் சொரத் மொண்சேகாவும் சொல்லிட்டாங்களாம்...
//

எரிந்த அவ்வளவும் அம்பு வில் அல்ல என்பது உங்களுக்குத் தெரியும் அவ்வளவும் இரசாயனம் என்றால் சிங்களவன் அவ்வளவு முட்டாளா இரசாயன ஆயுதங்களை தனது எல்லைக்குள் எரித்து தனக்கு தானே தீங்கை தேடிக் கொள்ள. அதுக்கும் வன்னிக்காடு இருக்கு கேட்பதற்கு யாரு இருக்கா என்ன வேண்டுமென்றாலும் பண்ணலாம். எனக்கு தெரிந்தவரைக்கும் தீ மூன்று மணித்தியாலயங்களால எரிந்ததாகவும். இராணுவ முகாமுக்கு பெரும் சேதம் ஏற்பட்டதாகவும் எனது நண்பன் சொன்னான்

சிங்களவன் முட்டாள் என்பது அந்தக்காலம்.. இப்படி என்னி என்னி முட்டாளானதே நாம்தான்.. அவன் ரொம்பத் தெளிவாக இருக்கிறான்... நாம??

சாந்தி ரமேஷ் வவுனியன் said...

//செத்துபோன 20 ஆயிரம் ( அட இந்திய பார்லிமெண்டுலயே சொல்ற கணக்குப்பா) தமிழர்கள் உடல்களை மொத்தமா எரிக்க இதை விட நல்ல சான்சு ஏது ?//
*********************************************

ஈழத்தமிழர்களுக்காக பாசக்கயிறோடு அலையும் வை.கோ போன்ற சென்மங்களுக்கு இதெல்லாம் புரீயுமா ?

சாந்தி

செந்தழல் ரவி said...

yaaro and santhi donku

Joe said...

ரவி,
நல்ல பதிவு.
நகைச்சுவையா சொல்லியிருந்தாலும், சிந்திக்க வேண்டிய விஷயங்களை சொல்லியிருக்கீங்க.

அமெரிக்காகாரனே கொளுத்தச் சொன்னாலும் சொல்லியிருக்கலாம். அப்போ தானே அவன் ஆயுதங்களை, இவிங்களுக்கு விக்க முடியும்? பாவம் அவுக பொருளாதாரம் தெக்கப் பாத்து போய்க்கிட்டே இருக்கில்ல?

Yazhini said...

நன்றி ஜோ. இருக்கலாம் இருக்கலாம்..