Tuesday, June 23, 2009

உரையாடல் கதை விமர்சன முயற்சி இடைநிறுத்தம்...!!!



அனுஷ்கா படம் நல்லா இருந்தா இப்பவே ஓட்டு போட்டுருங்க ஒக்கே...!!!

டிவிஆர் அய்யாவின் வேண்டுகோளை ஏற்று, உரையாடல் கதை விமர்சன முயற்சி, முடிவுகள் வெளியாகும்வரை இடை நிறுத்தப்படுகிறது...

நேரம் இருந்தால் அதன் பிறகு பொறுமையாக விமர்சனம் எழுத முயல்கிறேன்...

ஆனால் இந்த விமர்சன முயற்சியில், ஒரு பின்னூட்டத்தில் வசந்த் கொடுத்த திரட்சியான சிறுகதை எழுதுதலுக்கான உதவி சுட்டிகள் மிகவும் சிறப்பாக உள்ளன...

நானும் அந்த பின்னூட்டங்களில் சொல்லியுள்ள விஷயங்களை கருத்தில் கொண்டால் நல்ல ஒரு சிறுகதையை தரமுடியும் என்று நம்புகிறேன்...

மற்றபடி, இந்த முயற்சியால் யாரையும் புண்படுத்தவேண்டும் என்ற எண்ணம் சிறிதும் இல்லை, அப்படி காயப்பட்டிருந்தால் பெருந்தன்மையாக என்னை மன்னிச்சுருவீங்க தானே ??

அதுவரைக்கும் நீ எங்க போறன்னு கேக்குறீங்களா ? நானும் ஒரு சிறுகதை எழுதப்போறேன்....இன்னும் ரெண்டொரு நாளில் பிரசுரம் செய்கிறேன்...அதுக்கு நீங்க எல்லாரும் மார்க் போடுங்க...வாங்க செத்து செத்து விளையாடலாம்...

30 comments:

மயாதி said...

இது என்ன நியாயம்?
கொஞ்சப் பேருக்கு மட்டும் விமர்சனம் , மற்றவங்களுக்கு?
சரி நானும் அரசியல் வாதி மாதிரி ஒரு கேள்வி கேட்கிறேன்...
அவர்கள் சொல்வது மாதிரி உங்கள் விமர்சனம் நடுவர்களை திசை திருப்பும் என்றால் , இது வரை நீங்கள் அதிகம் புள்ளி கொடுத்த கதையோடு ஒப்பிடுகையில், விமர்சனம் கொடுக்காத கதைகள் அல்லவா பாதிக்கப் படப் போகின்றன ?

அதுசரி நாட்டைத் தீர்மானிக்கும் தேர்தலிலே முன்னோட்டமாக எத்தனை விமர்சனக் கணிப்புக்கள் நடைபெற அனுமதி இருக்கும் போது ஒரு கதைப் போட்டிக்கு முந்திய விமர்சனம் கண்டு நடுங்கும் கூட்டம் இருப்பதைப் பார்க்கும் போது புரிகிறது..

நியாயம்தான் ! தமிழ் சாவதும் தமிழர்கள் சாவதும்.

இவர்கள் எல்லோரும் சொல்லும் படி நடுவர்களின் முடிவு உங்களின் விமர்சனத்தால் பாதிக்கப் படும் என்பது உண்மை என்றால், அவ்வாறான ஆளுமை அற்ற நடுவர்கள் இருக்கும் போட்டியில் கலந்து கொண்டதை எண்ணி ஒவ்வொருவரும் வெட்கப் படவேண்டும் அல்லவா?

பொறுப்பானவர்கள் பொறுப்பான நடுவர்களையே தெரிவு செய்வார்கள் என்ற நம்பிக்கையில் நீங்கள் உங்கள் பணியைத் தொடருங்கள் நண்பரே

உண்மைத்தமிழன் said...

படம சூப்பரப்பு..!

ரவி said...

மாயாதி....

நடுவர்களின் முடிவு என்னைப்போன்ற பொடியனின் விமர்சனத்தால் பாதிக்கப்படும் என்று நம்புவது உச்சகட்ட காமெடியாகும்....

தயாரிப்பில் இருக்கும் படத்தை ஆனந்தவிகடன் விமர்சித்து மதிப்பெண்ணும் போடுவார்களா ?

அதான் வலைப்பதிவில் வெளியிடப்பட்டதே என்று நீங்கள் கேட்கலாம், ஆனால் வலைப்பதிவில் வெளியிட்டதை வைத்து அல்ல, போட்டிக்கான கதைகள் தொகுக்கப்பட்ட சங்கமம் தளத்தில் இருந்தே நான் கதைகளை எடுத்தேன்...

பலர் கேட்டதுபோல , நினைப்பதுபோல இந்த விமர்சனத்தை ஏன் அவர்கள் பதிவில் போடவில்லை என்பதன் பதில்...

முதல் பதினைந்து அல்லது இருபது கதைகளின் விமர்சனத்தை அவர்கள் பதிவிலும் போட்டுள்ளேன், பிறகு நேரமின்மையால் விட்டுவிட்டேன்...

அதை அந்த அந்த சுட்டிகளில் சென்று பார்த்தால் தெரியும்...

இப்போதைக்கு, போட்டி நல்லபடியாக நடக்கவேண்டும், அதற்கு என்னுடைய பதிவுகள் எந்தவிதத்திலும் உறுத்தலாக இருக்கக்கூடாது என்பதால் மட்டுமே இடைநிறுத்தம்...

போட்டி அமைப்பாளர்களோ அல்லது வேறு எவரோ சொல்லி அல்ல...

இன்பேக்ட் திரு பைத்தியக்காரன் உற்சாகப்படுத்தினார் என்பதால் மட்டுமே தொடர்ந்து எழுதினேன்...

மற்றபடி இதனை தொடர்ந்து விவாதித்து மொக்கை போடாதீங்க, ப்ளீஸ்...

☀நான் ஆதவன்☀ said...

என் கதைய படிச்சுட்டு என்ன மார்க் கொடுக்குறதுன்னு தெரியாம இந்த முடிவு எடுத்தமாதிரி இருக்கே!!!

ஆனா 30தேதிக்கப்புறம் எல்லா விமர்சனமும் மறக்காம போடுங்க

ரவி said...

முயற்சி செய்யுறேன் ஆதவன். அப்படி விமர்சனம் செய்தே ஆவனும் என்றால் சுட்டியை கொடுத்தீங்க என்றால் என்னுடைய மனதுக்கு தோன்றிய விஷயங்களை சொல்கிறேன்...

இரா. வசந்த குமார். said...

அன்பு ரவி...

நேரம் கிடைக்காத நிலைமையில் தவிர, நீங்கள் இதைத் தொடர வேண்டும் என்பது என் கருத்து/ஆசை.

நன்றிகள்.

அபி அப்பா said...

ரவி நீங்க நிப்பாட்டி இருக்க வேண்டாம் என்பது என் கருத்து. டி.வி.ரா பதிவிலயும் என் கருத்தை பதிந்து இருக்கேன் பாருங்க.

ரவி said...

வசந்த், அபி அப்பா...

நன்றிகள்...பெரியவங்க சொன்னா கேட்டுக்கனும்...அவங்க மனதில் சரி என்று படுவதை சொல்லியிருக்கார்...

அதை மறுத்து தொடர்ந்து எழுதுவதை விட, அதை ஏற்று எழுதுவதை நிறுத்துவது என் மனதுக்கு இதமாக இருக்கிறது....

T.V.ராதாகிருஷ்ணன் said...

ரவி..சில விஷயங்களை ஓரளவுதான் வெளியே சொல்லமுடியும்.என்னிடமிருந்து ஏன் இப்பதிவு வந்தது என்பது சற்று யோசித்தால் புரியும்.
எப்படியோ...நன்றி ரவி.

அன்புடன் அருணா said...

Hats off to you that you took the right step for a genuine request

கே.என்.சிவராமன் said...

அன்பின் ரவி,

தொடர்ந்து உங்கள் விமர்சனப் பார்வை வர வேண்டுமென விரும்புகிறேன். டிவிஆர் அவர்களின் பதிவில் வந்துள்ள பின்னூட்டம் இது:

அன்பின் டிவிஆர்,

அச்சு ஊடகங்களில் நடத்தப்படும் சிறுகதை போட்டிகளில், தேர்வு பெற்ற, பரிசுக்குரிய சிறுகதைகளை மட்டுமே பிரசுரிப்பார்கள். அதனால் தேர்வு பெற்ற சிறுகதைகள் தொடர்பான பார்வைகளும், விமர்சனங்களும் போட்டி முடிவு அறிவிக்கப்பட்ட பிறகே எழும்.

ஆனால், 'உரையாடல்' அமைப்பு நடத்தும் சிறுகதைப் போட்டி அப்படியல்ல. வலைத்தளத்தில் பிரசுரமான சிறுகதைகளே போட்டியில் கலந்து கொள்கின்றன.

பிரசுரமான அனைத்தையும் குறித்து விமர்சனம் வைக்க அனைவருக்குமே சுதந்திரம் இருக்கிறது. அப்படியான விமர்சனங்கள் தேவையா இல்லையா என்பது அவரவர் தேர்வு.

எழுதப்பட்ட ஒரு பதிவை பகடி செய்து பதிவிடுவதும், எதிர்வினை புரிவதும், ஆதரிப்பதுமான சூழல் இணையத்தில் உண்டு.

ரவியின் விமர்சனம் அதுமாதிரியானதுதான். எப்படி அக்கறையுடன் நீங்கள் இந்தப் பதிவை எழுதினீர்களோ, அப்படியான அக்கறையுடன்தான் ரவியும் சிறுகதைப் போட்டி தொடர்பான விமர்சனப் பதிவுகளை எழுதுகிறார் என்று நினைக்கிறேன்.

இப்படியான விமர்சனப் பதிவும், மதிப்பெண் பட்டியலும் நடுவர் குழுவை பாதிக்கும் என்றால், நடைபெற்ற தேர்தலை முன்னிட்டு எழுதப்பட்ட பதிவுகள் அனைத்துமே தேர்தல் முடிவில் எதிரொலித்திருக்க வேண்டும்.

ஒரு நிகழ்வை முன்வைத்து கட்டற்ற நிலையில் உரையாடல் நடைபெறுவதே சூழலுக்கு தேவையானது என கருதுகிறேன்.

அதனால்தான் சிறுகதை தொடர்பான ரவியின் தனிப்பட்ட விமர்சனப் பதிவை வாழ்த்தி வரவேற்பது போலவே, இந்தப் பதிவையும் ஆதரிக்கிறேன்.

இது தனிப்பட்ட பைத்தியக்காரனின் கருத்து மட்டுமே. சிறுகதைப் போட்டியை நடத்தும் 'உரையாடல்' அமைப்பு சார்பாக எழுதப்பட்ட பின்னூட்டமல்ல.

தோழமையுடன்
பைத்தியக்காரன்

விரைவில் உங்கள் விமர்சனப்பூர்வமான பதிவுகளை எதிர்பார்க்கிறேன். நீங்களும் போட்டியில் கலந்து கொள்வதாக அறிவித்திருப்பது மகிழ்ச்சியை அளிக்கிறது.

தோழமையுடன்
பைத்தியக்காரன்

கார்க்கிபவா said...

//நீங்க எல்லாரும் மார்க் போடுங்க...வாங்க செத்து செத்து விளையாடலாம்.?

:)))

மணிகண்டன் said...

மிச்சம் எல்லாம் படிச்சுட்டு நான் விமர்சனம் எழுதலாம்ன்னு இருக்கேன். சோ, திருப்பி எழுதாதீங்க.

உரையாடல் சிறுகதை போட்டி நடுவர் யாரு ? நீங்க தானா ?

கிள்ளிவளவன் said...

Actually i was little bit disappointed as you stopped review because i have also written a story. but it is up to you, because this is your blog you have rights to do anything. but i must appreciate your work.

ரவி said...

கிள்ளி, உங்க படைப்பின் சுட்டியை கொடுங்க...

அக்கக்கா பிரிச்சு மேஞ்சு தறேன். டோண்ட் ஒர்ரி...

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

உண்மையில் நீங்கள் விமர்சனம் எழுதியது எனக்கு மகிழ்ச்சியளித்தது (அது எவ்வளவு உழைப்பைக் கேட்கும் என்பது தெரிந்ததால்!).

ஆனாலும், இப்போது நிறுத்திவிட்ட போதிலும், விருப்பப்பட்டவர்களின் சுட்டிகள் வாங்கி தனிப்பட்ட முறையில் விமர்சனங்களை வைக்கிறேன் என்பது... you are just fabulous Ravi!

வால்பையன் said...

நல்லவேளை என்னுடயது முதல் ஐம்பதுக்குள் வந்துருச்சு!
யாரிடமும் கருத்து கேட்காமல் போட்டுவிட்டேன், உங்கள் விமர்சன முயற்சி தொடங்கியதும் ஆர்வம் பொங்கிவிட்டது!

என் வரைக்கும் அம்மையார் அமைதியாக இருந்ததற்கு நன்றி!

Unknown said...

செந்தழல் ரவி,
பொறுமையாகப் படித்து அதை சோம்பல் படாமல் விமர்சிக்க சிரமம் எடுத்துக்கொண்டதற்கு வாழ்த்துக்கள்.

சில கதைகளைப் படிக்க உண்மை-
யிலேயே பொறுமை வேண்டும்.

கதையின் சில பாகங்களை மட்டும் எடுத்து விமர்சிக்கிறீர்கள்.சிலது விட்டுப்போகிற்து.

உங்கள் விமர்சனம் பற்றி என் கருத்து:-

1.ஆழம் இல்லை 2.ஒரு pattern தெரிகிற்து. 3.போதனை/நீதி/சமுதாய்ச்சாடல் இருந்தால் உங்களைக் கவருகிற்து.4.ஒவ்வொரு கதையின் prevailing moodப் பற்றி கண்டுக்கொள்ளவே இல்லை.
சில கதைகளில் மூட் ஒருமித்து வ்ராமல் ஜம்ப் அடிக்கிற்து.

5.சில கதைகளில்வட்டார வழக்கு/காமெடிகள் mishandling/abused

மயாதி said...

தல நீங்கள் செய்ய நினைத்த நல்ல விடயம் அப்படியே அரசியல் பாதை நோக்கிச் செல்லத் தொடங்கி விட்டதாய் உணர்கிறேன். ....

நீங்கள் வேண்டுமானால் யார் யாருடைய கதைகள் விமர்சிக்கப் பட வேண்டும் என்று விரும்புகிறார்களோ அவர்களுடைய கதைகளையாவது விமர்சிக்க வேண்டுகிறேன்.

உங்கள் பின்னூட்டங்களைப் பாருங்கள் நிறைய பேர் தொடர்ந்து செய்யுங்கள் என்றுதான் எழுதி இருக்கிறார்கள்.
அதே போல் நீங்கள் செய்வது பிழை என்று எழுதிய நபரின் பின்னூட்டங்களைப் பாருங்கள் அங்கேயும் அவரின் கருத்துக்கு எதிரான கருத்துக்களே நிறைய இருக்கின்றன

அப்படியானால் இங்கே நடப்பது என்ன ?

[Score: 8 out of 10 votes]
தமிழ்மணம் பரிந்துரை : 8/10

இது அந்தக் கட்டுரையின் வாக்குகள். பெரும் பான்மையானோர் விரும்புகிற ஒரு விடயத்துக்கு இவ்வளவு வாக்குகள் எப்படி வந்தன.
என்னால் காரணத்தை வெகு இலகுவாக புரிந்து கொள்ள முடிகிறது

தங்களை மேதைகளாக கற்பனை செய்து கொள்ளும் ஒரு சிலர் எல்லோரினுடைய கதையோடும் தங்கள் கதைகளும் மட்டறுக்கப் படுவதை தாழ்வாக நினைக்கிறார்கள் போல?
இந்த விடயத்தில் என்னால் ஏற்றுக் கொள்ள முடியாத கருத்து என்றாலும் , ராதா கிருஷ்ணன என்னும் அந்த பதிவரை நான் தலை வாங்குகிறேன். அவர் வெளிப்படையாக தன கருத்தை சொல்லி விட்டார். அதைப் போல அவர் கருத்தை ஆதரித்த ஒரு சிலரும் தங்கள் கருத்தை வெளிப்படையாக சொல்லி விட்டு போனவர்கள்...நான் சொல்லுவதெல்லாம் மிச்சமாய் வெளியில் எதுவும் சொல்லாமல் கள்ள ஓட்டு போட்டவர்களைப் பற்றி.

அந்த கட்டுரையின் கீழ் ஒரு நண்பர் சொல்லி இருக்கிறார் , விமர்சனத்துக்கு பயந்து ஓடுபவர்கள் ஓடட்டும், அவர்கள் தமிழுக்கு எந்த நன்மையும் படைக்க முடியாத கோழைகள் என்று. நானும் அதை முற்று முழுதாக ஏற்றுக் கொள்கிறேன்.

அதிகமானோர் தொடர்ந்து நடை பெற வேண்டும் என்ற ஒரு விடயம் ஒரு சிலரின் ( அனேகமாக சொந்த நலனாக இருக்கலாம் என்று நினைக்கிறேன். ) விருப்புக்கு ஏற்ப இடை நிறுத்தப் படுவதை என்னால் ஏற்றுக் கொள்ள முடியாது.

இறுதியாக உங்களிடம் நான் சொல்லிக் கொள்வது , வெளிப்படையாக இத்தனை பேர் தொடர்ந்து செய்யுங்கள் என்று கேட்கும் பட்சத்திலும், வெளிப்படையாக கேட்காமல் திருட்டுத் தனமாக செய்ய வேண்டாம் என்று ஓட்டுப் போட்டவர்களுக்கு அஞ்சி தொடர்ந்து செய்வதை நிறுத்தினால் , உங்களையும் ஒரு சராசரியான அரசியல் வாதி போலவே எண்ணத் தோன்றுகிறது என்னால்.


மன்னித்துக் கொள்ளுங்கள் எதையும் நேரடியாக சொல்லியே பழக்கப் பட்டவன் என்பதால் இப்படி கடுமையாக சொல்லி விட்டுப் போகிறேன்

நந்தாகுமாரன் said...

ஏங்க ரவி, இந்த revaluation என்பார்களே அது மாதிரி இன்னொரு முறை எல்லா கதைகளையும் படிச்சு மார்க் போடுங்களேன் (இதுவரை நீங்கள் படித்து விமர்சனம் எழுதிய கதைகளுக்கு மட்டும் தான்) ... புதிதாக விமர்சனம் செய்ய வேண்டாம், விமர்சனம் தொடர்ந்து எழுதுங்கள் என்று சொல்லும் என்னைப் போன்றவர்களுக்கும் பதில் சொன்ன மாதிரி இருக்கும் ...

மீண்டுமாஆஆஆ ....

Mathuvathanan Mounasamy / cowboymathu said...
This comment has been removed by the author.
ஆ.சுதா said...

என்னங்க இப்படி பண்ணிட்டீங்க...!!
அடுத்தது என்னுடைய கதைதான். ரொம்ப எதர்ரார்த்தேன் உங்கள் விமர்சனத்தை!
எனக்கு இப்ப பெரிய ஏமாற்றம்.

Mathuvathanan Mounasamy / cowboymathu said...

ரவி,

இவ்வளவு பொறுமையாக நீங்கள் விமர்சனம் செய்யவது எவ்வளவு சிறப்பாக இருந்தது... ம்ஹீம்..

அப்படியானால் போட்டிக் கதைகளுக்கு பின்னூட்டங்கள் இடுவது கூட தப்பானதே..

என்னவோ போங்க.. தொடர்ந்த விமர்சனம் செய்வீர்களானால் எனது கதையையும் எடுத்துக் கொள்ளுங்கள்.

ரவி said...

நன்றி மதுவதனன் மௌ...பின்னூட்டத்தில் தொடர்புகொள்கிறேன்...

ரவி said...

மாயாதி ரிலாக்ஸ்.....!!!!

ரவி said...

முத்து அண்ணே, பின்னூட்டத்துக்கே வரேன்...விமர்சனம் செய்ய...அங்கே எந்த தடையுமில்லை என்று நினைக்கிறேன்...

கிள்ளிவளவன் said...

Hi ravi, here the link is given, summa pirichi meyunga paarkalam...


http://santhoshcholan.blogspot.com/2009/06/blog-post_20.html

குடந்தை அன்புமணி said...

என்னுடைய கதைக்கு உங்கள் விமர்சனத்தை பின்னூட்டத்தில் எதிர்பார்க்கிறேன்!

anbuvanam.blogspot.com

ஆ.சுதா said...

செந்தழல் ரவி said...
முத்து அண்ணே, பின்னூட்டத்துக்கே வரேன்...விமர்சனம் செய்ய...அங்கே எந்த தடையுமில்லை என்று நினைக்கிறேன்...

நிச்சயம்!! ரவிண்ணா!!

மயாதி said...

சரிங்க அண்ணாச்சி!
மன்னித்துக் கொள்ளுங்கோ...

உங்கள் யதார்த்தத்தை மதிக்கிறேன் .
நன்றி

முடிந்தால் எனக்கும் ஒரு விமர்சனம் பின்னூட்டமாக சொல்லிவிட்டு போங்கள் ...