Thursday, June 25, 2009

கேள்வி பதில் !!!!!!!!!!!!!!!!!!!!!


அம்மணியின் பெயர் கேத்தரின் ஜீட்டா ஜோன்ஸ்

கேள்வி : தங்களது முந்தைய ராக்கி ஷாவந் இடுகைக்கு முக்காடு போட்டுக்கொண்டு வந்தவர்கள் எத்தனைபேர் ? யாரையாவது சந்தேகப்படுகிறீர்களா ?

பதில் : சில ஆயிரம் பேர் வந்தனர்...கிளு கிளு குளு குளு மேட்டர் என்றாலே அப்பன் முருகன் அங்கே உண்மைத்தமிழனை அனுப்புவான். ஆனால் போண்டாவை விரும்பும் பிரபல பதிவர் ஒருவரும், காட்டில் கருங்குரங்கு ரத்தம் அருந்தி கிளுகிளுப்பாக இருக்கும் இன்னொருவர் என்று மூத்த பதிவர்களும் எட்டிப்பார்த்ததாக கவுண்டரும் முதலியாரும் சொல்கிறார்கள்...

கேள்வி : பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வை நீக்கிவிடப்போகிறார்களாமே ? யாருக்கு லாபம், யாருக்கு நட்டம் ?

பதில் : லாபம் என்று பார்த்தால் பத்தாம் வகுப்பில் இங்கிலீசு படிக்கவேண்டும் என்பதற்காகவே பதினொன்னாம் வகுப்பில் அட்டு பிகர் அருக்காணியை தொடரமுடியாமல் போன என்னைப்போன்ற தக்குறிகள், இனி ப்ளஸ் டூ வரை வாத்தியார் வீட்டு பசுமாட்டில் பால் கறந்துகொடுத்தே பாஸ் ஆகிவிடலாம். நட்டம் என்றால், எதிர்த்த வீட்டு தொப்பை கணேசன் கணக்கு வாத்தியாருக்கு. பத்தாவது வரை மட்டுமே இருக்கும் பள்ளிக்கூடத்தில் வேலைபார்க்கும் இவர் பொண்டாட்டி, டியூசன் வரும் அலமேலுவை குழந்தையை பார்த்துக்கொள்ள சொல்லிவிட்டு, பக்கத்து வீட்டில் கதை பேசும் காட்சி இனி காண கிடைக்காது. ஏற்கனவே எலிமெண்ட்ரி ஸ்கூல் வாத்தியார்களை எலிப்புழுக்கைக்கு கூட மதிக்கமாட்டேங்கிறார் என்று சேகர் வாத்தியார் புலம்பிக்கொண்டிருக்கிறார். இனி எறும்பு புழுக்கைக்கு கூட மதிக்கமாட்டானுங்க...

கேள்வி : அப்படியென்றால் கல்வி முறையில் எதாவது மாற்றம் கொண்டுவரவேண்டும் என்று விரும்புகிறீர்களா ?

பதில் : ஆமாம். டிஸ்க்ரீட் மேத்ஸ் என்ற பாடத்தை இந்திய கல்வித்திட்டத்தில் இருந்து நீக்கவேண்டும். உப்பு சப்புக்கு உதவாத பார்முலா போன்ற விஷயங்கள், தனுஷ், வாத்தியாரிடம் டஸ்ட்டர் அடிவாங்கி, தூங்கி எந்திரித்து போர்டில் போட்டு பிகர்களை அசத்த மட்டுமே இருந்தால் பரவாயில்லை. ஆனால் அவைகளை கடம் அடித்து பரிட்சையில் பாஸ் ஆகவேண்டும் என்பது உலகமகா கொடுமை. மொத்தம் எட்டுமுறை பெயில் ஆன எனக்கல்லவா தெரியும் ? என்னைப்பொருத்தவரை, படிப்பது எதற்கு ?

வேலைக்கு போவதற்க்கு தானே ? அவரவர் புத்தகங்களை வாங்கி படித்துக்கொள்ளுங்கள். தனியார் மற்றும் அரசு நிறுவனங்கள் தேர்வுகளை நடத்தட்டும். அதில் வெறும் வயது வரம்பை மட்டும் கணக்கில் கொண்டு எலிஜிபிலிட்டியை வையுங்கள். தேர்வில் பாஸ் ஆனால் நேர்முக தேர்வு, அதில் பாஸ் ஆனால் ப்ரோபஷனரி பீரியட் என்று கொண்டு செல்லுங்கள்..
அட்லீஸ்ட் வேலைக்கு போகவேண்டும் என்று நினைப்பவன் உருப்படியாக படிப்பான் இல்லையா ?

பிஸினஸ் செய்யபோகிறவன் பிஸினஸ் ஸ்கூலில் படிச்சுக்கோ. கம்பூட்டர்ல வேலை செய்ய விரும்புபவன் மூனாம் வகுப்பில் இருந்து கம்பூட்டர் படி. அப்பாடா. ஒரு கருத்தை திணிச்சாச்சு.

கேள்வி : வால்பையன் பற்றி சொல்லுங்கள் ?

பதில் : எந்த திரட்டிக்கு யார் ஓனர் என்று விசாரித்து விசாரித்து வாய் வலி வந்து குப்புற படுத்திருப்பதாக கேள்வி. ஈரோட்டில் ஏதோ ஒரு டாஸ்மாக்கில் மூனு பேருடைய அவிச்ச முட்டையை திருடி தின்னுப்புட்டு வெறும் ஓட்டை மட்டும் வைத்தாராம். பாதிக்கப்பட்ட ஒரு குடிமகன் அந்த முட்டை ஓட்டை நரநரவென கடித்தபடி அவரை தேடிக்கொண்டுள்ளாராம். அதே சமயம் ஆர்க்குட்டில் ஆறாப்பு படித்தபோது லவ்வடித்த அட்டு பிகர் சிக்கிவிட்டதாகவும், இந்த நேரத்தில் பிள்ளை தமிழ், தமிழ்120 ஆகிய திரட்டிகளில் இருந்தாவது தன்னை இஸ்டார் ஆக்கும் மின்னஞ்சல் வராதா என்று மோட்டுவளையை பார்த்தபடி உட்கார்ந்திருப்பதாக கேள்வி..

கேள்வி : திமிங்கிலிஷ் திரட்டியில் குட்டிகலாட்டா நடக்குதாமே, அதைப்பற்றி ?

பதில் : எதையும் சரியாக தவறாகவே புரிந்துகொள்ளும் கரும்பு ஜெயம் ஒருத்தர், அங்கே குட்டிகலாட்டா செய்ய முயல்கிறாராம். ஆக்சுவலி கடுமையான வயிற்று வலியும் தான் காரணம் என்று சக மச்சிகளிடம் சொன்னாலும், இந்த வயிற்று வலியை "வவுத்தெரிச்சல்" என்று கலோக்கியல் கஸினாக நாம் சொல்வோம். புதிய திரட்டி ஒன்றை நிறுவி, கடுமையான மார்க்கெட்டிங் உத்தியில் இருக்கிறாராம். அவரை திமிங்கிலிஷ் கண்டுகொள்ளவில்லை என்பது இந்த வயிற்று வலியை இன்னும் அதிகப்படுத்துகிறதாம்...

கேள்வி : ஒரு உடன்பிறப்பு உங்களை தாக்கி பதிவிட்டுள்ளாராமே ? என்ன உமது எதிர்வினை ?

பதில் : உடன்பிறப்புகள் எப்போதும் உணர்ச்சிப்பிழம்புகளாக இருப்பது அறிந்தது தானே ? அதனால் உடன்பிறப்புகளின் எதிர்வினைகளை கண்டும் காணாமலும் இருந்தாலே, உடன்பிறப்புகள் அடுத்த பணியை பார்க்க சென்றுவிடுவார்கள். அது
நட்பையும் காத்துக்கொள்ள உதவும்...

----
---
--

6 comments:

செந்தழல் ரவி said...

யாரோ இந்த பதிவுக்கு சூனியம் வைத்துள்ளார்கள். இடுகையை சேர்க்கமுடியவில்லை...

தமிழ்நெஞ்சம் said...

Aha.. May I know who is it?

//யாரோ இந்த பதிவுக்கு சூனியம் வைத்துள்ளார்கள். இடுகையை சேர்க்கமுடியவில்லை...

குடுகுடுப்பை said...

கம்பூட்டர்ல வேலை செய்ய விரும்புபவன் மூனாம் வகுப்பில் இருந்து கம்பூட்டர் படி. அப்பாடா. ஒரு கருத்தை திணிச்சாச்சு.//
கம்பியூட்டர்ல வேலை பாக்க படிச்சிருகனுமா?

குடுகுடுப்பை said...

யாரோ இந்த பதிவுக்கு சூனியம் வைத்துள்ளார்கள். இடுகையை சேர்க்கமுடியவில்லை...//

உஙகளுக்கு இது வேற தெரியுமா?

செந்தழல் ரவி said...

குடுகுடுப்பை, சூனியம் என்று சொன்னாலே அரஸ்டாமே....

சென்ஷி said...

ப்ப்ச்ச்.. ஜூடே இல்லை :((