
பொதுவாக விமர்சனம் எழுதுபவர்களுக்கே உண்டான கெட்ட பழக்கம் ஒன்று உண்டு. படத்தை பார்க்கலாமா வேண்டாமா என்பதை ஏனோ கடைசிவரை எழுத மறந்துவிடுவார்கள்...நான் உங்களை உண்மையிலேயே சோதிக்க விரும்பவில்லை...மறந்தும் இந்த படத்துக்கு போயிராதீங்க...
மற்றபடி கொலைவெறியோடு இந்த படத்தை பற்றி தெரிந்துகொள்ள வேண்டும் அல்லது வேறு வேலை வெட்டி எதுவும் கொஞ்சநேரத்துக்கு இல்லை என்றால் மேலே படியுங்கள்...
அமெரிக்காவில் அமவுண்டு தேத்தும் சாப்ப்ட்டுவேர் எஞ்சினீயர்களுக்கு ஏனோ இந்த திடீர் கொலைவெறி..ஒரு 'தமிழ்' படத்தை எடுத்து தமிழ் கூறும் நல்லுலகத்துக்கு அருள்பாலிக்கவேண்டும் என்பது தான் அது..
கிருஷ், அனுஷா, சுரேன், குமார், ராணி, கிரிஷ் எல்ரிஜா, ஜான் மேஷா என்பவர்கள் இந்த படத்தில் நடிப்பு, இயக்கம், இசை, ஒளிப்பதிவு ஆகிய வேலைகளை செய்துள்ளார்கள்...
யார் யார் என்ன என்ன செய்துள்ளார்கள் என்பது தேவையற்றது....ஏன் தேவையற்றது என்பதற்கு பெரிதாக எந்த காரணமும் இல்லை...அவர்கள் பெரிதாக எதுவும் செய்யவில்லை எனபது தான் காரணம்...
வில்லன், தனக்கு இ.எஸ்.பி பவர் என்று ஒரு மருத்துவரை ஏமாற்றுவது எந்த பழிவாங்கும் படலத்துக்காக என்பது படத்தின் ஒன்லைனர்.
அமெச்சூர்த்தனமான கேமரா, இசை என்ற பெயரில் இ(ம்)சை, எந்த திருப்பங்களும் இல்லாத சொத்தைத்தனமான திரைக்கதை, எவ்வித எக்ஸ்ப்ரஷனும் காட்டாமல் கஞ்சி குடித்த கழுதை போன்று முகத்தை வைத்துக்கொள்ளும் நடிகர்கள் மொத்தத்தில் த்ராபையான டைரக்ஷன் என நம்மை துரத்தி துரத்தி அடிக்கிறார்கள்...
எடிட்டிங்கின் அடிப்படை கூட தெரியாமல் ஒரு எடிட்டிங், அட்லீஸ்ட் முகத்தில் உள்ள வியர்வையையாவது துடைத்துவிட்டு படம் எடுக்கமுடியாத மேக்கப் என்று மொத்தத்தில் இது சாப்ட்டுவேர் எஞ்சினீயர்களின் ஊத்திக்கொண்ட ப்ராஜக்ட்...
பாத்திர தேர்வில் இந்த அளவு கொடுமையான அவுட்புட் நான் பார்த்தவரை எந்த படத்துக்கும் கிடைத்ததில்லை...ஹீரோ, ஹீரோயின், சைடு ஆக்டர் என்று யாருக்கும் சுட்டு போட்டாலும் நடிப்பு வரவில்லை...இந்த கதையில் தமிழ் மெகா சீரியல் நடிகர்களை நடிக்கவைத்திருந்தாலே மிரட்டியிருந்திருக்கலாம்...
அமெரிக்காவில் உட்கார்ந்துகொண்டு 'கலை' தாகம் எடுத்தால் ஏதாவது பாருக்கு போய் நன்றாக குடித்து தீர்த்திருந்திருக்கலாம்....அல்லது கோடம்பாக்கத்துக்கு வந்து படத்தை தயாரிக்க மட்டுமே செய்திருக்கலாம்...எதாவது இயக்குனருக்கு, நல்ல கலைஞர்களுக்கு வாய்ப்பளித்திருந்திருக்கலாம்...
எல்லாம் வெறும் லாம் தான்...இப்படி லா(ட)ம் கட்டுவார்கள் என்று தெரிந்திருந்தால் ஓடிப்போயிருப்பேனே..மெய்ப்பொருள் என்ற அழகு தமிழ் பெயரை பார்த்து அல்லவா ஏமாந்துவிட்டேன்..? ஓக்கே அட்லீஸ் வரிவிலக்காவது கிடக்கட்டும்...
கேமிராவை ஒரு பத்தியில் தனியாக திட்டவில்லை என்றால் முதல் இருபது நிமிடத்தில் தியேட்டரை விட்டு ஓடிய என் வாய்க்கு போஜனம் கிடைக்காது...கேமிராவை நிலையாக ஒரு இடத்தில் வைத்து படம் பிடிக்கக்கூட முடியாமல் மேலும் கீழும் ஆட்டும் கேமிராமேனை க்வாண்டனாமோ பே சிறையில் ஒரு மாமாங்கம் சித்ரவதை செய்யவேண்டும்...
மெய்ப்பொருள் 'காண்பது' அறிவல்ல...
20 comments:
vazakkam pola kalakka anna
hari
நன்னி ஹரி
நானும் தெரியாம இந்தக் கருமத்த பாத்துட்டேன்...
நீங்க எப்புடிதான் இன்னும் அத ஞாயபம் வெச்சு.. எழுதி..
அண்ணே நீங்க தெயவம்னே...
Did you see - Pushkar & Kayathri's Auto (Orambo).
Which one is worst? Meyporul Or Auto?
சூப்பர் ஸ்டார் சாம் ஆண்டர்சனை விட நல்லா நடிக்கக் கூட ஆள் இருக்காங்க போல இருக்கே. ;-))
I object to ridiculing Orampo. It is a nice movie.
League of the extrodinary - JKR, Sam Anderson, Meiporul cast
//பொதுவாக விமர்சனம் எழுதுபவர்களுக்கே உண்டான கெட்ட பழக்கம் ஒன்று உண்டு. படத்தை பார்க்கலாமா வேண்டாமா என்பதை ஏனோ கடைசிவரை எழுத மறந்துவிடுவார்கள்...நான் உங்களை உண்மையிலேயே சோதிக்க விரும்பவில்லை...மறந்தும் இந்த படத்துக்கு போயிராதீங்க...//
ரவி, இந்த மாதிரி எல்லோரும் விமர்சனம் எழுதும் முன்னாடியே போவாதீங்கன்னு எழுதிட்டா மீதிப்பதிவை படிக்க வேண்டிய அவசியம் இருக்காது :-))
மெனக்கெட்டு கடைசிவரைக்கும் படிச்சு அதுக்கப்புறம் போங்கடா நீங்களும் உங்க பதிவும் சொல்றதுக்கு முன்னாடியே நீங்க எஸ்கேப் ஆகிட்டீங்க :-)
இருந்தாலும் நீங்க பட்ட அவஸ்தைகளை தெரிஞ்சுக்கறதுக்காகவே முழுசா பதிவை படிக்க வேண்டியதா போச்சு..
ஏன் ரவி உன்னை மாத்திரம் இப்படி சுத்தி சுத்தி அடிக்கிறாய்ங்க :))
ரொம்ப நன்றி ரவி.
குடுகுடுப்பை
கடைக்குட்டி நன்றி...
ஆர்யாவுக்கு ஆப்படித்த படம்தானே ? பார்த்துட்டு சொல்றேன்...
ஏய் யார் இந்த சாம் ஆண்டசன்
ஹிஹி சாம் ஆண்டர்சன தெரியாதா...
டேய் கைப்புள்ள போடாறா பதிவ..
ஆழ்மனதின் ஆசைகள்; அவ்வளவுதான்
//அமெரிக்காவில் உட்கார்ந்துகொண்டு 'கலை' தாகம் எடுத்தால் ஏதாவது பாருக்கு போய் நன்றாக குடித்து தீர்த்திருந்திருக்கலாம்....அல்லது கோடம்பாக்கத்துக்கு வந்து படத்தை தயாரிக்க மட்டுமே செய்திருக்கலாம்...எதாவது இயக்குனருக்கு, நல்ல கலைஞர்களுக்கு வாய்ப்பளித்திருந்திருக்கலாம்...
//
கரெக்ட்ஆ சொன்னிங்க பாஸ்.........
ஏதாவது வெளிநாட்டு படமா? எங்க கோட்டையூர் பாலமுருகன்ல போடலியே.
நன்றி சுரேஷ்...பழனியில இருந்து...
Post a Comment