Showing posts with label ஜெமோ. Show all posts
Showing posts with label ஜெமோ. Show all posts

Tuesday, June 30, 2009

சாரு, ஜெமோ, பைத்தியக்காரன், ஜ்யோராம் சுந்தர், நர்சிம் சந்திப்பு...



முதலில் சாரு தொண்டையை கனைத்துக்கொண்டு ஆரம்பிக்கிறார்...

சாரு : ஜெயமோகன் பக்கத்து வீட்டு ஆட்டுக்குட்டியை அடித்து பிரியாணிபோட்டதால் எதிர்வீட்டு தாத்தா மண்டையை போட்டார். இது தெரிந்து மூன்றாவது வீட்டு கிழவி பாத்ரூமில் தடுக்கி விழுந்து செத்துப்போனார்.

பைத்தி: நர்சிம் வீட்டில் வைத்திருந்த பீர் பானையில் மூச்சா விட்டார் சாரு. அதனால் பிரெஞ்சு பலான படம் பார்த்துக்கொண்டிருந்த அய்யனார் அவரை நடுராத்திரியில் அடித்து துரத்தினார்.

ஜ்யோராம்: சாரு, நீங்கள் சொல்வது எனக்கு ஏற்புடையதா என்பது வேறு விஷயம். ஆனால் பைத்தியக்காரன் சொல்வது எனக்கு ஏற்புடையதில்லை. நைட்டு எங்க சரக்கு ?

நர்சிம் : சாரு, பைத்தி, ஜ்யோராம், நீங்க எல்லாரும் சொல்வது எனக்கு ஏற்புடையதல்ல. எனக்கு எது ஏற்புடையதோ அதை சொல்லுவேன். நானும் ரவுடிதான். அய்யோ நான் வாங்கித்தரமாட்டேன். வாய்க்கு குடிக்கச்சொன்னா வவுத்துக்கே குடிக்கறானுங்க...

செந்தழல் ரவி: நான் என்ன சொல்ல வரேன்னா ?

லக்கிலுக்: ரவி, இரும்படிக்கற எடத்துல ஈக்கென்ன வேலை ? வாட் ஆர் யூ டூயிங் ஹியர் ?

செந்தழல் ரவி: ச்சும்மா சண்டை நடக்குதே, வேடிக்கை பார்த்து எஞ்சாய் பண்ணலாம்னு...நான் ஈன்னா நீ என்ன ப்ப்ப்ப்ப்...

லக்கிலுக்: ஹல்லோ. ஸ்ஸ்ஸ்டாப்பிட். வாங்க நாம அப்படி ஓரமா ஒக்காந்து தேத்தன்னி குடிச்சு கிங்ஸ் புகைக்கலாம்...

சாரு: சிட்டிங்நாத் எனக்கு ஒரு கடிதம் எழுதியிருந்தார். அவர் ஒரு உதவி இயக்குனர். அந்த ஜெமோ எல்லா இயக்குனர் கால்லயும் விழறார். அதை இவர் பார்த்திருக்கார்.

பைத்தி: யாரு பார்த்தது ?

சாரு: சிட்டிங்நாத்.

பைத்தி: எப்ப ?

சாரு: முந்தா நேத்து..

பைத்தி: சிட்டிங்நாத் எந்த படத்தோட உதவி இயக்குனர் ?

சாரு: உண்மைத்தமிழனோட புனிதப்போர் குறும்படத்துல.

செந்தழல் ரவி: அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்..........

லக்கிலுக்: கிழிஞ்சது டவுசர் போ..

ஜ்யோராம் : எனக்கு அசிங்கமாயிருக்கிறது. நான் சத்தியமாக யாமம் புத்தகம் வெச்சிருக்கேன்...

செந்தழல் ரவி: அண்ணே பெட்ரூம்ல தானே வெச்சிருக்கீங்க...

ஜ்யோராம் : தம்பி நீ இண்டலிஜெண்டலி டா...எப்படி கண்டுபிடிச்ச ?

செந்தழல் ரவி : சாரு வீட்லயும் தலைக்காணி பஞ்சை எல்லாம் எடுத்து எறிஞ்சுட்டு அதை தான் வெச்சிருக்காராம். கட்டுடைக்கறாராம்.

லக்கிலுக்: என்னது கட்டடம் கட்றாங்களா ?

செந்தழல் ரவி: இல்ல சிமெண்டு போட்டு பூசுறாங்க...

ஜ்யோராம் : டேய்...உங்களை மாதிரி சிறுபத்திரிகைகள் பற்றி அறியாத தற்குறிகளை எல்லாம் இங்கே யார் கூப்பிட்டது ? பரிணாமம் தெரியுமா ? நிறப்பிரிகை தெரியுமா ? கல்குதிரை ? மண்டையனுங்களா...அப்படி ஓரமா உக்காருங்க..

சாரு: ஹே ஹேய். நான் நூறு ரூபாய் கூட இல்லாம ஆட்டோ புடிக்க முடியாம நடந்து தெருத்தெருவா ஸ்டார் ஹோட்டல் போயி தண்ணியடிக்கறேன் தெரியுமா ?

பைத்தி: ஆமாம் இவர் ரொம்ப ஏழைதான் போலிருக்கு...

சாரு: பிச்சைக்காசு 500 டாலர் கொடுக்கிறான் என்பதற்காக ஜெமோ அமெரிக்காவரைக்கும் போறாரு. நான் ஜட்டி போடுவதை நிறுத்தி முன்னூறு நாளாச்சு. அவரைக்காய் சாம்பாரில் உப்பில்லை. கழுதையோடு இப்போதெல்லாம் பேசுவதில்லை. ஹே பாபா. ஸேவ் திஸ் வேர்ல்ட். தமிழ் வாழ்க.

பைத்தியக்காரன் : சார், என்னோட பேர் பைத்தியக்காரன். ஆனா நீங்க..

சாரு: பைத்தியக்காரன்னு சொல்லுறியா ? ஹி ஹி ஹி...சட்டை போட்டிருந்தா தானே கிழிச்சிக்க முடியும் ? நான் இப்ப எல்லாம் சட்டையே போடறதில்லையே...ஹேஹேஹெ..

சுரேஷ் கண்ணன்: என்னை தவிர உலகத்தில் எவனுக்கும் அறிவில்லை. எல்லாரும் முட்டாள்கள். நானும் ரவுடிதான். ஆனா எவனும் என்னை மதிக்கமாட்டேங்கிறான். 2000 ஆம் ஆண்டுலயே நான் கால்குலேட்டர்ல ஒன்னும் பதினொன்னும் பண்ணெண்டுன்னு கூட்டினேன்.

ஜெமோ: டேய். எல்லோடும் என் இருப்பை மறந்து மறுப்பை இறுக்கறீங்களே ? என் இருப்பு இங்கே இன்றியமையாததாகிறது. என்னை எவனும் கண்டுக்க மாட்டேங்கறீங்களே ? ஜெய் ஹிந்த். பாரத் மாதா கீ ஜே.

அட்லீஸ்ட் என்ன ஒரு மலையாள கவிதையாவது சொல்ல உடுங்கடா...இவட ஞானும் உண்டு. கரலே கரலிண்ட கரலே நின்னோடொந்துச்சிரிக்கும்..கிளியே மாரச கிளியே வெருதே நின்னு கினுங்காதே...ஜிங்கிஜாங்க்...

சாரு: ஏய் இவன் இங்கதான் இருக்கான். நர்சிம். ஜ்யோராம். இந்தாளை புடிங்க. கருட புராணத்தின்படி இந்தாளை எண்ணை கொப்பறையில் போடனும்...

நர்சிம் : சாரு, ஒரு நிமிஷம் இருங்க...எண்ணை கொப்பறையில பார்ட்டிக்கு சிக்கன் வறுத்துக்கிட்டிருக்கோம். அப்புறமா போடலாம். அதுவரை இந்த ஆளுக்கிட்ட அலப்பரைய கொடுத்துக்கிட்டிருங்க. நானும் ஜ்யோராம் சுந்தரும் பைத்தியக்காரனை ரெண்டு பக்கமும் புடிச்சுக்கிறோம்..நீங்க கத்தியால குத்துங்க...

சாரு: எதுக்கு கத்தியால குத்தனும் ? என்னோட ஜீரோ டிகிரியோட லத்தீன் மொழிபெயர்ப்ப வலுக்கட்டாயமா படிக்கவைங்க. அதுவே சுத்தியால அடிச்சமாதிரி இருக்காது ?

பைத்தியக்காரன் : டேய் செந்தழல் ரவி, லக்கிலுக், காப்பாத்துங்கடா. நாகார்ஜூன் லண்டன்ல இருக்கார்....

ரவிசங்கர் : பைத்தியக்காரன். நீங்க கத்தும்போது டேய் ரவி லக்கின்னு சொன்னா அவங்க எப்படி வருவாங்க. நீங்க கத்தும்போது லகரம் குழைந்து மகரம் ஆகிடுது. அப்படி தவறான ஓசை எழுந்தா அதன் அர்த்தம் மாற வாய்ப்பு இருக்கு இல்லையா ?

லக்கிலுக்: அய்யோ இன்னொருத்தன் ஆரம்பிச்சுட்டாண்டா...மகரநெடுங்குழைகாதா ? காப்பாத்துடா...

டோண்டு: ஹைப்பர்லிங்க் வந்தது. வந்தேன். எங்கே பிராமணன் நூறாவது பகுதியில ஜெமோவை பற்றி சோ ராமசாமி என்ன சொன்னார்னா ?

செந்தழல் ரவி: அய்யோ இப்ப என்னால முடியல. லக்கி வாங்க ஓடிப்போயிடலாம்...

சாரு: மறுபடி பழிய மேட்டருக்கு வரேன். இந்த ஜெமோவோட விவாதம் செஞ்சு பேசிக்கிட்டிருந்ததால மனுஷ்ய புத்திரனுக்கு பைத்தியம் புடிச்சிருச்சு. அவர் போலீஸ்ல புகார் கொடுக்கப்போறார். உண்மையில பைத்தியம் இந்த ஜெமோ தான்..

ஜெமோ: உன்னுடைய பதில்கள் பீப்பீரியானி போல இருக்கு. நீ பீப்பீ ஊதத்தான் லாயக்கு. போயி அரச இலையை கூராக மடித்து பீப்பி செய் போ...

சாரு: நீ எல்லா உதவி இயக்குனர்கள் கால்லயும் விழுறயாமே ? உனக்கு வசனம் எழுத சான்ஸ் தந்தா அந்த படம் உருப்புட்ட மாதிரி தான். எஸ்.ராவோட பிஸ்கேட்டை தட்டி பறிச்சு புடிங்கினேயே ?

ஜெமோ: நீ பெரிய புடுங்கி...உனக்கும் அந்த பிஸ்கேட் வேனும்னு தான இவ்ளோ அலையற...ஹே பகவான்...அபு ஜந்தர் கீ மந்தர். இஸ்லியே ஏக் பந்தர். இவட நோக்குன்னு, பிராந்தன்.

சாரு: பிராந்தியா ? உன்னால அத மோந்து கூட பாக்கமுடியாது. மீசையே இல்லாத நீ எப்படி பிராந்தி குடிக்கப்போற ? கட்டுடைக்கறதே தொழிலா இருப்பவன் நான். என்னுடைய ஜீரோ டிகிரி சைனாவின் பெஸ்ட் செல்லர்.

ஜெமோ: உன்னோட புத்தகத்தால சீனாவோட குப்பைத்தொட்டி ரொம்பிடுச்சுன்னு உன்ன அரஸ்ட் பண்ண கம்யூனிஸ்ட் கவர்மெண்ட் ஆர்டர் போடும். நீ உருப்புடவே மாட்ட. காற்றில்லா வெற்றிடத்தில் நீ எவ்ளோ கூவுனாலும் கேக்காது..

சாரு: ஆமா, நான் வெற்றிடத்துல கூவுறேன், இவரு வெற்றிலைய மெல்லுறாரு. ஜீரோ டிகிரியை ஆங்கிலத்துல ஈ புக்கா வித்தவண்டா நான். உன்னுடைய அல்லக்கையை வெச்சு உனக்கு நீயே கடிதம் எழுதி அதுக்கு பதிலும் எழுதுறியே, கேவலமா இல்லையா ?

ஜெமோ: எழுத்தாளர் சங்கத்துல இருந்து உனக்கு நோட்டீஸ் வரும். உன்னிடம் போய் விவாதம் செய்கிறேனே ? உனக்கு உளச்சிக்கல்.

சாரு: உளச்சிக்கல், மலச்சிக்கல். என்னுடைய கேள்விகளுக்கு பதில் சொல்லத்தெரியாத நீ ஒரு இண்டலெக்சுவல் ப்ராஸ்ட்டிட்டுட்.

இதற்கிடையே இவர்கள் சண்டையில் சுவாரஸ்யம் தவறிப்போன ஜ்யோராம் சுந்தர், பைத்தியக்காரன், நர்சிம் மூவரும் ஒரு புல் ஓல்டு மங்குடனும், முந்திரி வறுவலுடனும் (ஸ்பான்ஸர் : நர்சிம் ) ஓரமாக உட்கார்ந்துவிடுகிறார்கள்...

லக்கிலுக் வழக்கம்போல பெப்சி பாட்டிலை முகர்ந்துவிட்டு மட்டையாக, செந்தழல் ரவி நடந்த நிகழ்வை பதிவாக்க..........அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்