Tuesday, April 03, 2007

இம்சை அரசியுடன் - இம்சையின் சந்திப்பு..

இம்சை அரசியின் அலுவலகத்தில் அவரை சந்திப்பதாக முடிவானது...கருப்பு+கருப்பு ட்ரெஸ்ஸில் ஆறாவது கேட்டில் இருப்பதாக தெரிவித்தார்...ஆள் சிவப்பு..ட்ரெஸ் கருப்பு...கண்டறிந்த பின்னர் புன்னகையோடு வரவேற்றார்...அவரிடம் 50 நிமிடம் பேசியதில் (மொக்கையில்) தெரிந்துகொள்ட விஷயங்கள்..

http://imsaiarasi.blogspot.com


* இட ஒதுக்கீடு பற்றி கடுமையான அறிவு வைத்துள்ளார்...

* பல்வேறு கடி நகைச்சுவை துணுக்குகளை அவ்வப்போது அள்ளிவிட்டு சிரிக்க வைக்கிறார்..

* தகவல் தொழில் நுட்ப ஊழியர்களுக்கு கழுத்துப்பட்டி ஒரு நெறிக்கும் கயிறு என்று கம்முனிஸ்டு மாதிரி பேசுகிறார்...(தீவிர இடது சாரி போல...இடது பக்கமே நின்று பேசினார்)

* குடித்த ஜூசுக்கு தான் தான் காசு கொடுப்பேன் என்று விடாப்பிடியாக உமன் எம்பவர்மெண்ட் என்ற கருத்தை நிறைவேற்றினார்..

* தான் எழுதிய கதைகள் கண்மனி / தேவி ஆகிய புத்தகங்களில் வெளிவந்திருப்பதை தெரிவித்தவர், குமுதம், ஆனந்த விகடன், ரீடர்ஸ் டையஜீன் ஆகிய இடங்களில் வர இருப்பதாக நெற்றியடியாக கூறினார்...

* தனக்கு ஏரோப்பிளேன் முதல் எலிக்காப்டர் வரை ஓட்டத்தெரியும் என்றும் குழந்தையில் இதுபோன்ற பல வாகனங்களை ஓட்டியிருப்பதாகவும் தெரிவித்தார்...பெரிய டிரைவரா வரவேண்டியது...ஹும்..

* தான் படித்த அண்ணா யூனிவர்ஸிட்டியில் மடிக்கணினியில் கோலம்போட்டதை பற்றி தெரிவித்து இது போன்ற பல ஐடியாக்களை வைத்துள்ளதாக அடித்துவிட்டார்...


***

***

***

மேலும்

***

***

***

மன்னிக்கவும்...மேலே சொன்னது எல்லாம் கற்பனை...

இம்சை அரசியை சந்தித்தது என்னவோ உண்மை...ஆனால் வெறும் ஐம்பது நொடிகள் மட்டுமே. ஒரு ஹாய் பாயுடன் கிளம்பி விட்டேன்...சகோதரியும் ஆபீசுக்கு போற அவசரம், நானும்...ஆகவே இந்த சந்திப்பை இன்று சாயங்காலம் வைத்துக்கொள்ளலாமே...அதனால் இந்த முன்னோட்ட பதிவு...

#########################################
THIS EMAIL MESSAGE IS FOR THE SOLE USE OF THE INTENDED RECIPIENT(S) AND MAY CONTAIN CONFIDENTIAL AND PRIVILEGED INFORMATION. ANY UNAUTHORIZED REVIEW, USE, DISCLOSURE OR DISTRIBUTION IS PROHIBITED.BEFORE OPENING ANY ATTACHMENTS PLEASE CHECK FOR VIRUSES AND DEFECTS.IF YOU ARE NOT THE INTENDED RECIPIENT, PLEASE NOTIFY US IMMEDIATELY BY REPLY E-MAIL AND DELETE THE ORIGINAL MESSAGE.
#########################################

14 comments:

Anonymous said...

:))))))))))))

கொடுமைய அனுபவித்தவன் said...

இது நல்ல கொடுமை..

விடாதவன் said...

யார் மாட்டினாலும் விடமாட்டீங்களா..

லூக்கே லக்கி said...

உண்மையான சந்திப்பை பதிவாக போடும்.

Anonymous said...

//
விடாதவன் said...
யார் மாட்டினாலும் விடமாட்டீங்களா.. //

விடாது இம்சை

இம்சை காதலன்

இம்சை அரசி said...

aaha! ennaiya vachu kummiya innaikku? idhellam sariye illa anna...

செல்லி said...

வாசித்துக் கொண்டு போகப் போக நல்லாயிருந்திச்சு கடைசீல இப்பிக் காலைவாரீட்டீங்கோ!
பம்மாத்துப் பதிவா?:-)))))))))))))

எனக்கு அப்பிடி ஒரு சிரிப்பு, அடக்கமுடியல.:-)).

அபி அப்பா said...

:-))))))))

ஜெஸிலா said...

இம்சையோட பெரிய இம்சையாயிருக்கே! ;-) ஏப்ரல் மாதம் முழுக்க ஏமாத்துறதா ஏதாவது யோசனையிருக்கா என்ன? ;-)

லக்கிலுக் said...

வரலாற்றுசிறப்பு மிக்க இப்பதிவை பூங்காவில் வெளியிட செந்தழலார் கொலைப்படை தீர்மானம் நிறைவேற்றுகிறது!!!

Anonymous said...

//வரலாற்றுசிறப்பு மிக்க இப்பதிவை பூங்காவில் வெளியிட செந்தழலார் கொலைப்படை தீர்மானம் நிறைவேற்றுகிறது!!!//

என்ன சொல்லவரீங்க லக்கி?, பூங்கா-ல இப்ப வரும் பதிவுகள் எல்லாம் இந்தமாதிரித்தான் அப்படிங்கறீங்களா?

பூங்காவனத்தம்மாள் said...

//என்ன சொல்லவரீங்க லக்கி?, பூங்கா-ல இப்ப வரும் பதிவுகள் எல்லாம் இந்தமாதிரித்தான் அப்படிங்கறீங்களா?//

அதனாலதேன் எங்க ரவி பூங்காவை திட்டாதீங்கடான்னு பதிவெல்லாம் போட்டாரு.

Anonymous said...

nalla irukuyya nalla iruku :)

kaapi

ஆதவன் said...

//குடித்த ஜூசுக்கு தான் தான் காசு கொடுப்பேன் என்று விடாப்பிடியாக உமன் எம்பவர்மெண்ட் என்ற கருத்தை நிறைவேற்றினார்.//
ஓசில ஜூஸ் குடிக்க இப்படி ஒரு ideaவா?? நல்லா இருக்கே.....