Tuesday, April 03, 2007

கதவை திற...!!!! காற்று வரட்டும்..!!!!

அனானி அதர் ஆப்ஷன் பற்றி கோவி.கண்ணன் எழுதி இருக்கிறார்...என்னுடைய நேரக்கொடுமைக்கு அதை வாசிக்க மட்டும்தான் முடியும்...பின்னூட்டி என்னுடைய மறுப்பை தெரிவிக்க முடியாது...

அதனால் தனிப்பதிவாக போடுகிறேன்...அனானி அதர் ஆப்ஷன் என்ன அவ்வளவு கொடுமையானதா ? அடுத்த வேளை சோற்றை தடுத்து வயிற்றை காய விட்டுவிடும் அளவுக்கு கடுமையானதா ?

பிலாகர் கணக்கு இல்லாத பலர் வலைத்திரட்டியீல் இப்போதெல்லாம் வரக்காண்கிறோம்...அவர்கள் எல்லாம் பின்னூட்டம் போடவேண்டும் என்றா என்ன செய்வார்கள்...

அட்லீஸ்ட் மின்னஞ்சலையாவது வெளிப்படையாக கொடுக்கவேண்டும்...அதுவும் கிடையாது...அனானி ஆப்ஷனும் இல்லை, மின்னஞ்சலும் வைப்பதில்லை, மொக்கையான பல கருத்துக்களை மட்டும் கொட்டிவிட்டு போவது...கருத்து கந்தசாமி போல...எப்படி எதிர்ப்பது...

அனானி அதர் ஆப்ஷன் என்னமோ அடுத்தவரின் குடியை கெடுக்க மட்டுமே பயன்படுவது போல கோவி.கண்ணன் அய்யா அவர்கள் பதிவு எழுதி இருப்பது உண்மைக்கு புறம்பானது...எத்தனை பதிவர்களின் குடி கெட்டது என்று கோவியார் கூற முடியுமா ?

அதர் ஆப்ஷனில் யாராவது கன்னாபின்னாவென்று எழுதினார் மட்டுறுத்தப்போகிறீர்...அதிலும் மட்டுறுத்த வாய்ப்பு இல்லாத நான் எல்லாம் - மட்டுறுத்தலை நீக்கும் கட்டாயத்துக்கு தள்ளப்பட்டேனே ? இதை என்னவென்று சொல்வது ?

அதர் அனானிக்கு எதிராக மாபெரும் விழிப்புணர்ச்சி வரும் வேளையில் கோவியார் இப்படிப்பட்ட மொக்கையை எழுதி இருப்பது சமீபத்தில் 1900 ஆம் ஆண்டுக்கு கொண்டு செல்வது போல் இருக்கிறது...

அனானி அதர் ஆப்ஷன் வைக்காமல் நான் பின்னூட்ட முடியாதவர்களின் லிஸ்ட் எடுத்தால் அதில் கோவியாரும் ஒருவர்...மேலும் பல சிறந்த பதிவர்கள்...அருமையான பதிவுகளை எழுதுபவர்கள்...

தங்களது வாசலை மூடி வைத்துள்ளார்கள்...

அவர்களுக்கெல்லாம் நான் சொல்வது இதுதான்...

கதவை திற...!!!! காற்று வரட்டும்..!!!!

#########################################
THIS EMAIL MESSAGE IS FOR THE SOLE USE OF THE INTENDED RECIPIENT(S) AND MAY CONTAIN CONFIDENTIAL AND PRIVILEGED INFORMATION. ANY UNAUTHORIZED REVIEW, USE, DISCLOSURE OR DISTRIBUTION IS PROHIBITED.BEFORE OPENING ANY ATTACHMENTS PLEASE CHECK FOR VIRUSES AND DEFECTS.IF YOU ARE NOT THE INTENDED RECIPIENT, PLEASE NOTIFY US IMMEDIATELY BY REPLY E-MAIL AND DELETE THE ORIGINAL MESSAGE.
#########################################

15 comments:

Anonymous said...

பின்னூட்ட கயமை. நான் கிளம்புறேன்...பை...குட்நைட் ஆல்.

Anonymous said...

பின்னூட்டத்துக்கு அனானி ஆப்ஷனை திறந்த கோவியார் வாழ்க...!!!!

தம்பி said...

ஆதி காலந்தொட்டே அனானிகளுக்காக அரும்பாடு பட்டு வரும் ரெட்பயர் அவர்களுக்கு நன்றிகள்.

நீங்க சொல்றதும் சரிதான். ப்லாக் ஆரம்பிக்கறதுக்கு முன்னாடி நானே அனானியாதான் இருந்தேன். இப்ப ப்லாகர்னு சொல்றாங்க. இல்லாதவங்க கருத்து சொல்லணும்னா அனானி அதர் ஆப்ஷன் தேவைதான்.

வாயாடி said...

வாயைத் திற! ஏப்பம் வரட்டும்!

(வாந்தி வரட்டும்னுதான் எதுகை மோனையா எழுத நினைச்சேன். ஆனா ஏனோ சரியாப் படலை)

விடாதுகருப்பு said...

//வாயைத் திற! ஏப்பம் வரட்டும்!//

காலை திற , காற்று பிரியட்டும் ...

சந்தோஷ் aka Santhosh said...

ரவி உங்க கருத்துக்கு நான் ஒத்துப்போகிறேன். மூட்டை பூச்சிக்கு பயந்து வீட்டை கொளுத்திய கதை தான் அனானி மற்றும் அதர் ஆப்சனை மூடி வைப்பது.

VSK said...

உண்மையைச் சொல்லப்போனால், எப்படி மாற்றுவது எனக்கூடத் தெரியாமல் இருந்து வந்தேன், நேற்று வரை!

இப்ப கதவைத் திறந்தாச்சுங்கோ!

நண்பர் ஒருவர் உதவினார்.

நல்லா செங்கல் அடுக்குவார் அவர்!
:))

Anonymous said...

ரவி சார் காலத்துக்கு உங்களை மறக்க முடியாது. அனானி இல்லாத பின்னூட்டமா? இதில உள்ள கிக்கு எதில வரும் சார் சொல்லுங்க!

புள்ளிராஜா

அனானி மந்திரி said...

அனானிகளின் ராஜா! எங்கள் புள்ளி ராஜா!

மோகன்லால் said...

எண்ட அச்சன் மரிச்சு போயி..

செந்தழல் ரவி said...

வி.எஸ்.கே அவர்களே...

செங்கல் அடுக்குபவர் நம்ம கொத்தனார்...:)))))

சென்ஷி said...

// தம்பி said...
ஆதி காலந்தொட்டே அனானிகளுக்காக அரும்பாடு பட்டு வரும் ரெட்பயர் அவர்களுக்கு நன்றிகள்.

நீங்க சொல்றதும் சரிதான். ப்லாக் ஆரம்பிக்கறதுக்கு முன்னாடி நானே அனானியாதான் இருந்தேன். இப்ப ப்லாகர்னு சொல்றாங்க. இல்லாதவங்க கருத்து சொல்லணும்னா அனானி அதர் ஆப்ஷன் தேவைதான். //

ரிப்ப்ப்ப்ப்பீட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்டேஏஏஏஏஏஏ


சென்ஷி

கோபி(Gopi) said...

கதவை தெறந்தாச்சி. காத்தே வரலை. வெறும் சத்தம் மட்டும் தான் வருது.

எப்படி சத்தம் வருதா?

வ்ரும்..வ்ரும்..வ்ரும்..வ்ரும்..வ்ரும்

:-)

Anonymous said...

Very good

அய்யனார் said...

உங்கள் பின்னூட்டங்கள் செம குத்து தல ஏதாவது ஸ்பெசல் ஏற்பாடா? ..
:))))))

'ரெட்பயர்'

தம்பி கலக்கிட்ட