Friday, July 27, 2007

ச்ச்ச்ச்சும்ம்மா ஒரு நினைவுகூறல்

நீங்க இதைப்பார்த்து சிரிக்கலைன்னு மட்டும் சொல்லுங்க :)))))))))))))



மிகவும் ரசிச்சது 1



மிகவும் ரசிச்சது 2



மிகவும் ரசிச்சது 3



மிகவும் ரசிச்சது 4



மிகவும் ரசிச்சது 5

ச்ச்ச்ச்சும்மா நியாபகப்படுத்தலாமேன்னு...!!!!

ஆயிரம் படங்களிட்டாலும் அஞ்சலைக்கு ஈடாகுமா

வீக் எண்ட் ஜொள்ளு என்ற தலைப்பில் மோகனா வெளியிட்டு இருக்கும் படங்களை பார்த்திருப்பீர்கள்...

ஆயிரம்தான் படங்கள் அவர் இட்டாலும், இந்த அஞ்சலைக்கு (அஞ்சலைன்னா ஜோலி - இதான இவளோட பேரு - கொஞ்சம் லோக்கலைஸ் பண்ணிட்டேன்) ஈடாகுமா ?

நீங்க சொல்லும் வே !!!!



ஒரு படத்தை போட்டே எப்படி ஜூடான இடுகையில இடம் புடிப்பது என்று இந்த படத்தை பார்த்து நம்ப நன்பர் தீவு தெரிஞ்சுக்கட்டும்...

ஜரி நான் வெரட்டா வே ~!!!

Wednesday, July 25, 2007

உங்களை கையெடுத்து கும்பிடுறேன், இந்த பதிவை மட்டும் திறக்காதீங்க

கர்ப்பிணிகள், பலகீனமான இதயம் உள்ளவர்கள் தவிர்க்கவேண்டிய பதிவு...

உங்க வயித்து வலிக்கு நான் பொறுப்பில்லை....என்னால முடியல....சத்தியமா முடியல...தயவு செஞ்சு சொல்றேன்...இந்த டிஸ்கிரிப்ஷன் பார்த்தாவது பதிவை ஓப்பன் பன்ற முடிவை மாத்திக்கோங்க...ப்ளீஸ்....





நமது அடுக்குமொழி பூகம்பம் டி.ராஜேந்தர், தாடி இல்லாமல்...அழகாக...!!!! ( படம் பெரியதாக தெரிய படத்தின் மேல் கிளிக்கவும்...(தைரியம் இருந்தால்))

சிந்தாநதி போட்டிக்கு - செந்தழலின் பெயிண்ட் ப்ரஷ் படம்

சிந்தாநதியின் போட்டிக்கான பெயிண்ட் ப்ரஷ் படம் இங்கே இருக்கிறது...பார்த்துவிட்டு உங்கள் மார்க்குகளை அள்ளி தெளித்து இந்த முறையும் (?!) என்னையே வெற்றிபெற வைக்குமாறு கேட்டுக்கொல்கிறேன்...


கொஞ்சம் கீழே வாங்க




கொஞ்சம் கீழே வாங்க




கொஞ்சம் கீழே...



ஆங்....இந்தா இருக்கு பாருங்க...














நன்றி !!!!!!!!!!! மறக்காம பின்னூட்டத்துல உங்க கருத்தை அள்ளி தெளிச்சுட்டு (???) போங்க...

Tuesday, July 24, 2007

கொரியாவில் குங்குமம் கிடைக்கல...

இப்போ எங்க பாத்தாலும் மதுரையில திருக்குறள் கிடடக்கல, கும்மிடிப்பூண்டியில் குங்குமம் கிடைக்கல, ஆடுதுறையில் ஆனந்த விகடன் கிடைக்கல என்று அளப்பறையா போச்சு...




அதனால இப்படி ஒரு படத்தை போட்டாலாவது இந்த பிரச்சினை ஓயுமா என்று இந்த படத்தை போஸ்ட் செய்கிறேன்...இவங்களோட இ-மெயில் முகவரி கேட்டு பொட்டீக்கடைக்கிட்ட இருந்து மின்னஞ்சல் வந்தா அதை அழிப்பேன்...

குரங்குகளுடன் கொலைவெறி அணி

சில மாதம் முன்பு பொட்டீக்கடைக்கு கூட சொல்லாமல் ஒரு கொலைவெறி அவுஸ்திரேலிய பயணத்தில் சிட்னியில் மொக்கை போட்டபோது...!!!



படம் எடுத்த இடம் அவுஸ்திரேலிய சிட்னி டொரோங்கோ ஜூ...!!!



மேற்கொண்டு என்ன சொல்ல...!!! மொக்கை தான்......அதுல ஒரு மங்கியை பார்த்தவுடன் நினைவுக்கு வந்தவர்...

சொன்னா நம்ப மாட்டீங்க...

நம்ம தலை பாலபாரதி...!!!!

Saturday, July 21, 2007

கொரிய பெண்களை FTV பார்க்கச்சொல்லும் பிரதமர்

உண்மை உண்மை...!!!

கேட்பதற்கு அதிர்ச்சியாக இருக்கிறதா...என்ன சொல்ல அது தான் உண்மை...கொரிய பிரதமர் நேற்று வெளியிட்ட அறிக்கையில், கொரிய பெண்கள் பாரம்பரியமான சமையல் கலையை பற்றி தெரிந்துகொள்ளவேண்டும் என்பது பற்றியதான ஒரு நிகழ்ச்சியில் பேசிய கொரிய பிரதமர்...

கொரிய பெண்கள் எப்.டி.வி பார்த்து தங்களுடைய சமையல் திறனை வளர்த்துக்கொள்ளவேண்டும்...தீபகற்ப நாடான கொரியாவில் மீன் சமையல் என்பது மிகவும் முக்கியமாக கருத்தப்படுகிறது...அந்த நிகழ்ச்சிகளை போடும் எப்.டி.வி (அட ஆமாங்க...F டிவி ன்னா FISH TV. மீன் புடிக்கறது எப்படி, அதை வறுப்பது எப்படி என்பதற்கு ஒரு தனி டி.வி சேனல் நடத்தி தொலையறானுங்க...)...



இந்த படம் நான் எடுக்கவில்லை...இவங்களும் எங்க அலுவலகத்தில் வேலை பார்க்கவில்லை...அவர்கள் லேப்டாப் எல்.ஜி எக்ஸ்நோட் இல்லை...!!!

சரி இனிமே எல்லாரும் எப்.டி.வி பாருங்க..!!!

Friday, July 20, 2007

லக்கியின் கிழிந்த டவுஸரை ஒட்ட !!!

பின்னவீனத்துவ எதிர் அழகியல் பிராண்டல்களுக்கு எதிரான கூட்டணி கட்சிகளை தாண்டி காட்சிகளாகும் தருணம்...அய்யகோ எனக்கும் கவிதை வந்திட்டதே...!!!



பின்னவீனத்துவ படம்...பொட்டீக்கடைக்கு சமர்ப்பணம்...!!!

மெல்லுவதெல்லாம் வாயல்ல...
கில்லுவதெல்லாம் கொலையல்ல...

மியோத்ஸி புத்தோ மியோத்ஸி காஜி

விரைந்து எழுதும் விடைத்தாளும்
குரைத்து கடிக்கும் சொறிநாயும்

உருப்புட்டதாயில்ல ஒரு சரித்திரம்...வெறுப்புற்றதாயில்ல இது மாத்திரம்..

வேட்டையாடு விளையாடு விருப்பம் போல நடைபோடு வீரமாக உடையைப்போடு
நீ காசை பெற்று கிளம்பியோடு...

புதிய வானம் பழைய பூமி, இந்த மேகம் மட்டும் ஓய்ந்திருந்தா நீ காமி...

சுண்ணாம்பு வெள்ளை...சூரியன் மஞ்சள்...ஏங்கே எனது ஏஞ்சல் ?

டெலிபோன் மணி ட்ரிங் ட்ரிங்...டோர் பெல் ரிங் ரிங்...சத்தங்கள் நிசப்தங்கள்..சில சமயம் தொல்லை...பல சமயம் நாம் சொல்வது போய்த்தொலை...என்றாவது ஒருநாள் அந்த மணியும் உடைந்துபோகும்...பல கணவுகளும் நொறுங்கிபோகும்...(ஆங் இந்தா வரேன்...)

வாட்டர் பாட்டில் தீர்ந்து போகும்...
வானம் என்றாவது காய்ந்து போகுமா ?

சேனல் பிடிக்கவில்லையா சேனலை மாற்று...நொடிகளில்..
டிவி. பிடிக்கவில்லை என்றால் டி.வியை மாற்றமுடியுமா..நொடிகளில்...

காலங்கள்...!!!

காலங்களில் அவள் வசந்தம்...
காசிருந்தால் என்றுமே என் சொந்தம்...

ஒளியில் தெரிவது தேவதை மட்டுமா ?
சில தேனீக்களும் தான்...தேவதை என் சொந்தம்....தேனீக்கோ தேன் கூடுதானே சொந்தம்..
சில சர்க்கரை பருக்கைகளை விட்டுவைக்கிறேன்...தேனீயோ எறும்போ தின்றுவிட்டுபோகட்டும்..

அவுட் கொடுப்பது அம்பயரு..
அவரே அவுட்டாயிட்டாருன்னா ?

போதும் நிறுத்திக்கறேன்...(யோவ் இது கவிதை கிடையாது... இதுக்கெல்லாம் // போதும் நிறுத்திக்கறேன்....// அருமையான வரிகள் என்று பின்னூட்டம் போடக்கூடாது..)

மொக்கைப்போட்டிக்கு பதிவு போட்டாச்சா ?

ஆகா...இது போன்றதொரு அருமையான வாய்ப்பு கிடைக்குமா தமிழ் வலையுலக மொக்கை மன்னர்களுக்கு ?

வருத்தப்படாத வாலிபர் சங்கத்தின் மொக்கை போட்டியைத்தான் சொல்கிறேன்...!!!

உடனடியாக இந்த லிங்கை கொலைவெறியோடு அமுக்கு போட்டிக்கான விபரங்களை தெரிந்துகொண்டு ஒரு மொக்கை பதிவு போடவும்...

புகைப்பட போட்டியில் பரிசு இல்லை...ஆனால் இந்த மொக்கை போட்டியில் பரிசு வேறு உண்டாம்...(ஏதாவது மொக்கையான பரிசா இருக்கும் !!!)

அதனால் கொலைவெறியோடு மொக்கையில் இறங்குங்கள்...ப்ளாஷ், போட்டோஷாப் போன்ற ஜல்லி சாப்ட்வேர்களை உபயோகப்படுத்தினால் பயன் உண்டு...!!!!

வாருங்கள்...மொக்கை போடுவோம்...!!!!

Thursday, July 19, 2007

சர்வேசன் மற்றும் சீ.வி.ஆர் செய்த வரலாற்று பிழை

என்ன கொடுமை சரவணன்...ஜூலை மாத புகைப்பட போட்டியில் என்னுடைய படம் ஆட்டத்துக்கே செலக்ட் ஆவல....இது வரலாற்று பிழை....இந்த பிழைக்காக நடுவர்கள் ஆகஸ்ட் மாதம் வரை வருந்த வேண்டியிருக்கும்...

கானா பிரபா லொட்டையா ஒரு சொறிநாயை எடுத்து வெச்சிருக்கார்...அதை ஆட்டத்துல சேர்த்திருக்காங்க...யாரோ ஒருத்தர் ஒரு கிழவன் கிழவியை எழுத்திருக்காங்க...அதையும் ஆட்டத்துல சேர்த்திருக்காங்க...மொபைல் கேமாராவில் எடுக்கப்பட்ட சிறுவன் ஆட்டத்தில் இருக்கான்...இதை எல்லாம் சேர்த்த நடுவர்கள் எவ்வளவு போராட்டங்களுக்கு பிறகு எடுத்த இந்த படங்களை ஆட்டத்திலேயே சேர்க்காமல் விட்டது எந்த விதத்தில் நியாயம் ? இது அடுக்குமா ? இது நீதியா ?

நீதி கேட்டு நெடும் பயணம் புறப்படலாமா என்று யோசித்துக்கொண்டிருக்கும் இவ்வேளையில் பொடிநடையா நார்த் கொரியாவுக்கு போயிட்டேன்னா ? அங்க ஏற்கனவே நான் வேற முயற்சியில் இருக்கேன், அதனால உண்ணாவிரதம் இருக்கலாம் என்று முடிவுசெய்துள்ளேன்...

சியோல் - கஸாந்தாங் எல்.ஜி ஹுவேஸா அருகில் உள்ள யாச்சே காகே ( ஆபீஸுக்கு அருகில் உள்ள வெஜிட்டபுள் ஷாப்) அருகில் சனிக்கிழமை காலை பதினோரு மணியில் இருந்து பணிரண்டு மணிவரை உண்ணா நோன்பு இருக்க முடிவு செய்துள்ளேன்...நா.கண்ணன் போன்ற கொரிய பதிவர்கள் ஆபீசுக்கு லீவு போட்டுவிட்டு வந்து கலந்துகொள்ள வேண்டுமாய் வேண்டுகோளும் விடுக்கிறேன்...

என் புகைப்படத்தை சேர்க்கவில்லை என்றால் அதற்கு தக்க காரணத்தை நடுவர்கள் சொல்லியாக வேண்டும்...இல்லை என்றால் சர்வேசன் ஓட்டெடுப்பு நடத்தி என் பதிவை சேர்க்கலாமா இல்லையா என்று கேட்கவேண்டும்...ஏன்யா கிழவன், கிழவி, நாய், பூனை எல்லாம் ஆட்டத்தில் சேர்ப்பீங்க, நல்லதொரு பிகர் இருந்தால் சேர்க்க மாட்டீங்களா ? என்ன வயித்தெரிச்சல்பா ?

இது குறித்து - ஏற்கனவே ஸ்னாப்ஜட்ஜ் எனக்கு செய்த சிவப்பு துரோகம் குறித்து ( அதாவது என்னுடைய படத்தில் சிகப்பு கண்ணாடியில் இருந்து வரும் ஒளி முகத்தில் விழுமாறு செய்து எடுத்ததால் அது சிகப்பு துரோகம்) பதிவிட்டுள்ளேன்...கில்லியாவது பல்லிவிழாமல் வெளியிடவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்...

சமீபத்தில் கிடைத்த மாபெரும் விருது கூட எனக்கு அவ்வளவு பொருட்டல்ல, காரணம் இந்த விருதை பலமுறை பதிவர்களை கையால் பெற்றுவிட்டேன்...



இருந்தாலும், இந்த போட்டோ மேட்டரில் மிகவும் சீரியஸாக உள்ளேன்...சர்வேசன், சி.வி.ஆர் போன்றவர்கள் எந்த பிகரையாவது இதுவரை போட்டோ எடுத்திருப்பார்களா என்று எனக்கு தெரியவில்லை...அதனால் அவர்களுக்கு அந்த உழைப்பு புரியவில்லை என்று நினைக்கிறேன்...இதன் மூலம் நடுவர்களின் நடுநிலைமை கேள்விக்குறி, ஆச்சர்யக்குறி, பிராக்கெட் என்று எல்லாமும் ஆகிறது...

உடனே என்னுடைய படத்தை ஆட்டத்தில் சேர்க்கவேண்டும்...இல்லை என்றால் உண்ணா நோன்புதான்...என்று நடுவர்களை கடுமையாக எச்சரிக்கிறேன்...அதை இங்கே உச்சரிக்கிறேன்...

மூன்றாம் உலகப்போருக்கு காரணமாகப்போகும் தமிழ் பதிவர்

ஏற்கனவே இரண்டு உலகப்போர்தான் நடந்திருக்கு...அந்த வரைக்கும் எனக்கு நிச்சயமா தெரியும்...இப்போ விஷயத்துக்கு வரேன்...இந்த வார இறுதியில் கொரியாவின் டி.எம்.ஸி (DMZ) என்ற இடத்துக்கு போகிறேன்...டி.எம்.ஸி என்றால் டீ மிலிட்டரைஸுடு ஜோன்...(தமிழ்ல எப்படி சொல்றது, நன்பர்கள் உதவுங்க)..அதாவது போர் தடைசெய்யப்பட்ட இடம்...இது பற்றிய விக்கி தொகுப்பு...

கொரியா தென் கொரியா மற்றும் வட கொரியாவாக பிளவுபட்டுக்கிடப்பது அனைத்து பதிவர்களுக்கும் தெரியும் என்று நினைக்கிறேன்...

இங்கே இரண்டு நாடுகளுக்கும் இடையே அமெரிக்காவின் கட்டைப்பஞ்சாயத்தில் உருவான இடம் தான் இந்த டீ.எம்.ஸீ..



இந்த இடத்தில் இரண்டு நாடுகளும் அரசுமுறையில் விடயங்களை பரிமாறிக்கொள்ளவும், கட்டைப்பஞ்சாயத்து ஒப்பந்தங்களை நிறைவேற்றவும் கட்டடங்களை கட்டிவைத்துக்கொண்டு பாதுகாப்புக்கு நிற்கிறார்கள்...நம்ம இந்தியா பாக்கிஸ்தான் பார்டர்ல பில்டிங்ல இல்லையா...அதுமாதிரி தான்...



இது வட கொரியாவில் இருந்து எடுக்கப்பட்டது...



இது தென் கொரியாவில் இருந்து எடுக்கப்பட்ட படம்...

இரண்டு பக்கமும் ஆப்பீஸர்கள் நிக்குறாங்க பாருங்க...

இந்த வடகொரிய மக்களும் தென்கொரிய மக்களும் மொழி, கலாச்சாரம், பண்பாடு மற்றும் எல்லா விடயங்களிலும் ஒன்றுதான்...இவர்களை இப்படி பிரித்துப்போட்டது மேற்கு உலக நாடுகளின் சுயநலமும், அமெரிக்கா மற்றும் ருஷ்யாவின் பனிப்போரும் தான்...விசு படம் சம்சாரம் அது மின்சாரத்தில், விசு கோடு போடுவார் - அதுவும் அவர் வீட்டுக்கு நடுவில் கோடு போடுவார்...அது வீட்டுக்குள் இருந்தவர்கள் எடுத்த முடிவு...ஆனா இங்க பக்கத்துவீட்டுக்காரன், அப்படி கூட சொல்லமுடியாது...அடுத்த தெருவுக்காரன் போட்டிருக்கான் கோடு...ஹும்...!!!

இப்போ இந்த இரண்டு நாடுகளும் அடித்துக்கொள்கின்றன...ஒருபக்கம் தென் கொரியாவில் அமெரிக்காவின் ஆதரவில் வந்து கொட்டும் வளமை...ஜப்பானை தட்டிவைக்க நினைக்கும் அமெரிக்கா, தென் கொரியாவை வளர்த்துவிட்டு குளிர்காய்கிறது...கம்யூனிசம் வீழ்ந்து, அமெரிக்காவுடனான பனிப்போரிலும் தோற்று, உள்ளாடை நிறுவனங்களில் வேலை செய்பவர்களுக்கு கூட சம்பளம் கொடுக்க முடியாமல் உள்ளாடையையே கொடுக்கும் நிலைக்கும், அழகிகளை உலகநாடெங்கும் அனுப்பி விபச்சாரம் செய்யவிட்டும் இன்று காலத்தை ஓட்டுகிறது ருஷ்யா...மனிதகுலத்தின் மாபெரும் ஆபத்து அணு உலைகள் டெக்னாலஜி தான் மிச்சம்...அதைக்கூட இன்று கல்பாக்கத்துக்கு கூட்டி கொடுத்து துட்டு சேர்த்து ப்ரட்டு வாங்கி தின்னுகிறார் புடின்..ச்சே அதை விடுங்க...

இந்த இரண்டு நாடுகளுக்கும் ( வடகொரியா மற்றும் தென்கொரியா) இடையேயான பனிபோர் சொல்லிமாளாது...இரண்டாயிரத்து நாலாம் ஆண்டுவரை இரண்டு பக்கமும் லவுட் ஸ்பீக்கர்ல கத்தி கத்தி திட்டிக்குவானுங்களாம்...2004 ஆம் ஆண்டு ஏற்பட்ட ஒரு அக்ரீமண்ட் படித்தான் இதை நிறுத்தி இருக்கானுங்க...கொடிமரத்துல கூட ஒரு சண்டை...தென் கொரியா 98 மீட்டர் உயரத்துல ஒரு கொடி மரம் வெச்சு அதுல கொடியேத்தி இருக்கானுங்க...அதை பார்த்து கடுப்பான வட கொரியா, 160 மீட்டர் உயரத்துல உலகத்திலேயே உயரமான கொடிமரம் கட்டி அதில் கொடியேற்றி தனது அரிப்பை தீர்த்துக்கொண்டது...



உலகத்திலேயே உயரமான கொடிமரம்...

இப்போ தலைப்பை ஒருமுறை படிங்க..."மூன்றாம் உலகப்போருக்கு காரணமாகப்போகும் தமிழ் பதிவர்"...வேற யாரு...இங்க ஆணி புடுங்கிக்கொண்டிருக்கும் நான் தான்...வரும் சனிக்கிழமை இங்கே போகப்போகிறேன்...நிறுவனம் ஏற்பாடு செய்யும் டூர்...இங்க தான் மேட்டரே இருக்கு...வடகொரியாவிடம் அணுஆயுத கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை இருப்பதாக என் மேனேஜர் தலையில் அடித்து சத்தியம் செய்கிறார்...வடகொரியாவில் இருக்கும் அவரது ஒன்னுவிட்ட சித்தப்பா முந்தா நேத்து மூணு மணிக்கு போன்ல சொன்னாராம்....

நான் அங்கே போகப்போறேன் இல்லையா...அங்கே ஆணி புடுங்கிக்கொண்டிருக்கும் தென் கொரிய ஆப்பீஸர் அசமஞ்சமா இருக்கும் நேரம் பார்த்து ஏதாவது அரை செங்கல்லை எடுத்து அவன் மண்டையை பேத்துடுறேன்...திரும்பி பார்த்தான்னா வட கொரியாக்காரன் தான் அடிச்சான் அப்படீன்னு சொல்லிட்டு அப்பீட் ஆகிடுறேன்...

அவன் இவனை சுட, இவன் அவனை சுட, ஓரே குஜாலா இருக்காது...அப்புறம் என்ன, அணு ஆயுத ஏவுகணையை அனுப்பி அமெரிக்காவின் நியூஆர்லியன்ஸ், நியூஆப்புலியன்ஸ் இந்தமாதிரி ஏதாவது ஒரு ஊர் செங்கல்லை பேர்த்துட்டான்னா கூட அமெரிக்கா குண்டு போட ஆரம்பிச்சிரும்...அப்படியே பிரச்சினை பெருசாகி உலகப்போராகிடுச்சின்னா...

ஹையா ஜாலி ஜாலி...

இம்சை அரசி கேட்ட பாய் பிரண்டு

திருச்சி ஆர்.இ.சி கல்லூரியில் என்னோட ஜூனியராக படித்த இம்சை அரசி, பாய்பிரண்டு தேவையா என்று கேட்கிறார்...

எனக்கு தெரிந்த இந்த பாயை அவர் பிரண்டாக ஆக்கிக்கொள்கிறாரா என்பதை அவரே பார்த்து சொல்லட்டும்...




டிஸ்கி : வெறும் காமெடிக்காக மட்டுமே..சகோதரர்கள் கோபிக்கவேண்டாம்...

Wednesday, July 18, 2007

பாஸ்டன் பாலா செந்தழலுக்கு செய்த சிவப்பு துரோகம்

இந்த கொடுமைய நான் எங்க போய் சொல்லுவேன்...இது மாதிரி அநியாயம் நடந்தது உண்டா...என்ன கொடுமை இது...

அய்யா ஊரெல்லாம் புகைப்பட போட்டின்னு சூடு பறந்துக்கிட்டிருக்கு...பதினேழு வருஷத்துக்கு முந்தின படம், குஜராத்ல காக்கா கக்கா போன படம் ( கைப்புள்ள), பூவோட வண்டு சண்டைபோடும் படம், வீட்டுலேயே வளத்த சாமந்தி படம், வீட்டுக்கு வெளிய இருக்குற மரம் படம்னு எல்லாரும் இயற்கையை எடுத்து மொக்கை போட்டுக்கிட்டு இருக்காங்க...

நான் என்ன ஆசைப்பட்டேன்...போட்டியில கலந்துக்கிட்டு பரிசு வாங்கனும்னுதானே...ஆனா இவரு, என்னுடைய படத்தை தன்னுடைய ஸ்னாப்ஜட்ல கொசுறு வகையில வெளியிட்டு இருக்கார்...

நானும் சும்மாத்தான் கேட்குறேன்...கொசுறுன்னா இன்னா ? ஒரு கிலோ கத்திரிக்காய் வாங்கினா, கொசுறுன்னு துக்ளியூண்டு காய் ஏதாவது இருந்தா போடுவான் கடைக்காரன்...அதிலயும் அழுவுனது, ஓஞ்சது, காய்ஞ்சது இந்தமாதிரி தான் போடுவான்...இதுல வேற இன்னொரு கேவலம் என்னான்னா, ஒரு கிலோ தக்காளிக்கு ஒரு கத்திரிக்கா கூட கொசுறா போடுவான்...

இந்த பாபா என்னன்னா, என்னுடைய இந்த படத்தை கொசுறுல போட்டிருக்கார்...நீங்களே போய் நியாயம் கேளுங்க..


தலைப்பு: மாலையை மயக்கும் மதிவதனி...!!! (இயற்கை வந்துட்டுதா உள்ளாற ?)



இந்த போட்டோவுக்காக காலையில இருந்து சாயங்காலம் வரை வெயிட் பண்ணி, ட்ரெஸ் எல்லாம் சேஞ்ச் செய்ய வெச்சு, சும்மா இருந்த லேடியை மாடலிங் எல்லாம் செய்ய வெச்சு...ஹும்...எவ்ளோ உழைப்பு இருக்கு இதுக்கு பின்னால ? எந்த தைரியத்துல பாபா இப்படி செய்தார்...!!! நீங்களே நியாயம் கேளுங்க...இல்லைன்னா கண்ணகி மதுரையை குடும்ப பிரச்சினைக்காக எரிச்சமாதிரி ( இதுக்கு அழகிரிக்கும் சம்பந்தம் இல்லை) நானும் கொரியாவில ஏதாவது செய்வேன்...!!!

துபாய் வலைப்பதிவர்களின் கவனத்துக்கு: கவிதை திறனாய்வு (அய்யனார்)

எனது சமீபத்திய பின்னவீனத்துவ கவிஞர்கள் பற்றிய பதிவில் துபாய் வலைப்பதிவாளர்களை தனது கொலைவெறி பின்னவீனத்துவ கவிதைகளால் டருஜு ஆக்கி வரும் அய்யனார் பற்றி ஏன் எழுதவில்லை என்று பல பதிவர்கள் கோபித்துக்கொண்டார்கள்...

அவர்களின் ஆதங்கத்தினை போக்கும் விதமாகவும், உண்மையான மொக்கைகளை அடையாளம் கண்டு மெச்சும் விதமாகவும், கொலைவெறியுடன் இருக்கும் துபாய் வலைப்பதிவர்களை தாகசாந்தி செய்வதற்காகவும் இந்த பதிவு...

என்னுடைய கல்லூரி காலத்து தோழன் ஒருவன் இதுமாதிரிதான்...புரியாத கவிதைகளை எழுதுவதில் வல்லவன்...கடைசிவரை அவனது கவிதை நோட்டுப்புத்தகம் எனக்கு ஒரு புரியாத புதிராகவே இருந்துவந்தது...

அய்யனார் கவிதைகளில் எனக்கு பிடித்த வரிகள்

"உன் அதிர்வுகளில் குலைகிறதென் நிசப்தம்
உன் பிரசன்னத்தில் ஓடிப் பதுங்குகிறது என் நிழல்
உன் கட்டுக்களற்ற சொற்கள் நிறைக்கிறதென் துவாரங்களை
முன் தீர்மாணங்களில்லாத அடுத்தநிமிடங்கள்
தற்கொலை செய்துகொள்கின்றன

நான் எழுத வேண்டும் தோழி
தயவு செய்து இடத்தை காலி செய்"

என்ன ஒன்னு...ஒரு எழவும் புரியல...முதல் வரி உன் அதிர்வுகளில் குலைகிறதென் நிசப்தம்...குலைக்கிறதுன்னா நாய் தான...உன் பிரசன்னத்தில் ஓடி பதுங்குது நிழலா ? ஏது இந்த பிரகாஷ் ராஜ் படத்துல நடிப்பானே பிரசன்னா அவனை சொல்றீங்களா ? உன் கட்டுகளற்ற சொற்கள் ? சொல்லை எப்படி கட்டமுடியும் ? தாலி தான் கட்டமுடியும்...அடுத்த வீட்டுகாரன் பொண்டாட்டி நம்மளோட ஓடிவந்தத...அடுத்த நிமிடங்கள் தற்கொலை செய்துக்குதா ? கடிகாரத்தை தூக்கிபோட்டு உடைக்கனுமா ?

//நான் எழுத வேண்டும் தோழி
தயவு செய்து இடத்தை காலி செய்"
//

பிகரை கூட தொரத்திட்டு கவுஜ எழுதறதுக்கு நீர் என்ன அருந்ததி ராயா இல்லை இல்ல உமா மகேஸ்வரியா ? ( யாருடா இந்த உமா மகேஸ்வரி ?)

இப்போ விஷயத்துக்கு வருவோம்...என்ன சொன்னாலும் கோச்சுக்க மாட்டேங்குறாரு நம்ம அய்யனார்...அவர் ஒரு பாசக்கார பருந்து...நேசக்கார நேரு...அதனால அவரை பின்னூட்டங்கள் வழி வாழ்த்துவோம்...எப்படி ? ஒரு கவிதையின் மூலமாகத்தான்...உங்களால் முடிந்த அளவு திட்டியோ கொட்டியோ பாசத்துடனோ ஒரு கவிதைப்பின்னூட்டம் போடனும்...(ரொம்ப முக்கியம், அது கவிதையா இருக்கனும்)...

வாங்க...வரிசையா ஒடிவாங்க...பினாத்தல் சுரேஷ், அபி அப்பா, குசும்பன், மின்னுது மின்னல், தம்பி, கோபி, சென்ஷி, சேகர், லியோ சுரேஷ், மகி எல்லாரும் வாங்க...அய்யனாரை வாழ்த்தி கவுஜையாக இடுங்க பின்னூட்டம்..

Tuesday, July 17, 2007

பினாத்தல் சுரேஷ் எனக்கு செய்த கொடுமை



பினாத்தல் சுரேஷ் சிறந்த மொக்கை பதிவர் என்பது ஒரு பக்கம் இருக்கட்டும்...அவரது சமீபத்திய ப்ளாஷ் பதிவு எனக்கு தெரியாமல் இருக்கிறது...ஏதோ கட்டமும் புள்ளிகளுமாக வருகிறது...பல இடங்களில் அப்லோடிங் வசதிகள் இருக்க, எங்கள் நிறுவனத்தால் தடைசெய்யப்பட்ட மெகாஅப்லோடில் சென்று இந்த ப்ளாஷ் பதிவை வலையேற்றம் செய்த பினாத்தல் சுரேஷுக்கு கடுமையான கண்டனத்தை பதிவு செய்கிறேன்...

அதே பதிவில் தலை பினாத்தல் சுரேஷ் அவர்கள் தெரிவித்திருந்த கருத்து என்னவென்றால் துபாய் கொலைவெறி கூட்டம் கிடேசன் பார்க்கில் நடத்திய கூட்டத்துக்கு அவருக்கு கட்டம் கட்டி அழைப்பு அனுப்பவில்லை என்பதுதான்..இதையும் வன்மையாக கண்டிக்கிறேன்...கிடேசன் பார்க் போட்டோவில் அபி அப்பா மீசை எல்லாம் எடுத்து கொடுமையாக இருப்பதை கண்டு எங்கள் அலுவலக கணினி எலி ஒன்று சோதனையின் போது செத்து விழுந்தது...இது போன்ற வரலாற்று கொடுமை மீண்டும் நடக்காமல் இருக்க, எலியையே உபயோகப்படுத்தப்போவதில்லை என்ற முடிவுக்கு வந்திருக்கிறேன்...

கம்மிங் பேக் டுத பாயிண்ட்...இந்த கொடுமையை எனக்கு செய்த பினாத்தல் சுரேஷ் உட்பட இன்னும் சில பதிவர்களை வைத்து சர்வேசன் சிறந்த மொக்கை பதிவர் யார் என்ற சர்வேயையும் நடத்தவேண்டும் என்று இந்த பதிவின் மூலமாக வேண்டுகிறேன்...

புகைப்பட போட்டிக்கு - தழலின் தாய்லாந்து போட்டோக்கள்

என்னைப்பொறுத்தவரை புகைப்படத்துக்கு சப்ஜெக்ட் ரொம்ப முக்கியம்...சப்ஜெக்ட் இல்லாத போட்டோ சக்கைக்கு சமம்...ஹி ஹி எதுகை மோனை...இந்த சப்ஜெக்ட் சப்ஜெக்ட் அப்படீன்னு சொல்றேனே என்னான்னு பாக்கறீங்களா ? அது என்னான்னு சொல்ல முடியாது...அதுக்கு நீங்க பெங்களூர் வலைப்பதிவர் மீட்டிங்கு வந்து ஓசை செல்லாக்கிட்ட வகுப்பு கேட்டிருந்திருக்கனும்...

சரி விடுங்க...புகைப்பட போட்டிக்கு நான் ஒரு மூனு படம் எடுத்திருக்கேன்...நிச்சயமா பரிசு எனக்குத்தான்...என்ன கேமராவுல எடுக்காம மொபைல் கேமராவிலேயே எடுத்தேன்...சரி நீங்க படத்தை பார்த்துட்டு ஒரு உதவி செய்யுங்களேன்...புகைப்பட போட்டி எங்கே நடக்குது என்று தெரியல...நீங்க அந்த இடத்தில் இந்த பதிவுக்கு ஒரு லிங்கை தட்டி விட்டுருங்களேன்...ப்ளீஸ்...

இனி படங்கள்...மாடலாக நின்றவர் ( அதாங்க சப்ஜெக்ட்) என்னுடைய குழு உறுப்பினர் போ (Miss.Bow)...அவருக்கு நன்றி...Ghu long khu me-ah...!!! (இந்த பதிவை அவரும் பார்ப்பார் இல்லையா அதான் 'தாய்' லாங்குவேஜுல போட்டிருக்கேன்...

படம் ஒன்று...!!!



படம் இரண்டு...!!!



படம் மூன்று...!!!



புகைப்பட போட்டி...மாடலா நில்லுங்க...வாங்க நாலு எடம் போலாம் என்றவுடன் நமது சப்ஜெக்ட் பயங்கர ஜாலியாகிட்டது...என்னமோ பேஷன் டி.வி புகைப்பட போட்டியில் கலந்துக்கற மாதிரி சப்ஜெக்ட் பயங்கர மேக்கப் எல்லாம் போட்டது...சரி விடுங்க...இதுக்கு மேல புள்ளைய தமிழ்ல கலாய்க்க வாணாம்...

நான் கெலிச்சதும் பரிசை சப்ஜெட்டுக்கு தான் கொடுக்கப்போறேன்...அதனால நடுவர்கள் கொஞ்சம் விட்டுக்குடுத்து பரிசை எனக்கே தரனும்...அப்பதான் இந்த சப்ஜெக்ட்டோட மெயில் ஐடி. சேட் ஐடி. எல்லாம் தருவேன்...இல்லைன்னா கிடையாது...(தம்பி ரவி, இதுக்கு மேல வேற என்ன வேனும், நீ ஜெயுச்சிட்டடா..)

ச்ச்ச்சும்மா அதிருதில்ல...

Monday, July 16, 2007

லயன் காமிக்ஸ் எஸ்.விஜயன் அவர்களுக்கு - பகிரங்க கடிதம்

சின்ன வயதில் - ஒரு அஞ்சாப்பு படிக்கும்போதுன்னு வைத்துக்கொள்ளுங்களேன்...என்னோட அப்பா தினமும் ரெண்டு ரூபாய் கொடுப்பார்...மற்ற பிள்ளைகள் எல்லாம் எதாவது வாங்கும்போது நான் மட்டும் சும்மா இருப்பேன்...எல்லாம் எதற்கு தெரியுமா...அந்த மாத இறுதியில் வரும் லயன் முத்து காமிக்ஸ் வாங்க உபயோகிப்பேன்...

ஒரு முறை திருச்சியில் பேருந்துக்காக காத்திருந்தபோது பாக்கெட்டில் இருந்தது 100 ரூபாய்...வீட்டுக்கு போவதற்காக காத்திருக்கிறேன்...அங்கே ஒரு கடையில் லயன் முத்து காமிக்ஸ் புத்தகங்களை நீண்ட இடைவேளைக்கு பிறகு பார்த்தேன்...அத்துனை பணத்துக்கும் காமிக்ஸ் வாங்கிக்கொண்டு திரும்ப கல்லூரிக்கே நடந்து வந்தேன்...

இப்போது தகவல் தொழில்நுட்ப மென்பொருள் கூலியாக பெங்களூரில் பணியாற்றும்போதும் சரி...ஆர்வம் குறையவில்லை...ஒருமுறை சிவகாசிக்கு மணியார்டர் அனுப்பி புத்தகங்கள் வாங்கியுள்ளேன்...

என்னுடைய ஆற்றாமையை வெளிப்படுத்த இந்த பதிவு இடுகிறேன்...முதலில் இணைய தளம் மூலம் காமிக்ஸ் விற்பனை பற்றி...

பல இணைய தளங்களில் தமிழ் புத்தகங்களை விற்கிறார்கள்...( பார்க்க : வித்லோகாவின் காமதேனு) நமது லயன் இணைய தளத்திலும் புத்தகங்களை ஆன்லைனில் விற்பனை செய்யும் முறையை கொண்டு வந்தால் என்ன ?

அரதப்பழசு மணியார்டர் முறை போஸ்ட் கார்டில் ரிப்ளை செய்யும் முறையும் தேவையா ?

பெரும்பாலான நேரம் நமது லயன் காமிக்ஸ் இணைய தளமும் வேலை செய்யவில்லை...

எப்போதாவது இயங்கும்போது கூட நாம் அதில் போடும் பின்னூட்டங்கள் ஏறுமா என்பது தெரியாது...(ஏற்கனவே பல பின்னூட்டங்கள் அளித்து, தளம் வேலை செய்யாமல் எழுதியது வீண் ஆனது தான் மிச்சம்)

போகோவும், ஜெட்டிக்ஸும் சுட்டிகளின் வீட்டுக்கே சென்று அவர்களின் இதயங்களை ஆக்ரமித்து, வாசிக்கும் பழக்கத்தையே கொஞ்சம் கொஞ்சமாக அழித்துவிடும் போலிருக்கிறது...

நமது வருங்கால தலைமுறைக்கு இந்த காமிக்ஸ்களை கொண்டு சேர்க்க வேண்டும், இல்லை என்றால் ஏற்கனவே காமிக்ஸ் ரசிகர்களாக இருக்கும் வளர்ந்த குழந்தைகளோடு இந்த காமிக்ஸ் உலகம் அழிந்துபோகும்...

வாசகர் ஹாட்லைனை இணையத்தில் எழுதுங்க...இணைய தளங்களில் விளம்பரம் செய்யுங்க...இணையத்தில் புத்தகங்கள் விற்பனையை சாத்தியமாக்குங்க...இவை எல்லாம் செய்யாமல் போனால்...நினைத்து பார்க்கவே பயமாயுள்ளது...

விழிமின், எழுமின் என்று கடைசி தடவையாக சொல்லிக்கொள்கிறேன்...

இப்படியெல்லாம் சொல்வதால் நான் வெறுப்பை உமிழ்கிறேன் என்று அர்த்தம் செய்துகொள்ளவேண்டாம் மற்ற வாசகர்கள்...நமது காமிக்ஸின் இன்றைய நிலைகண்டு சொல்லொனா துயர்கொண்டு வந்த வேதனையில் எழுதும் கடிதம்...

Wednesday, July 11, 2007

மோகன்தாஸ் செய்த மாபெரும் தவறு....

மோகன்தாஸ் தன்னுடைய லேட்டஸ்ட் பதிவில் மிகப்பெரும் தவறை செய்துவிட்டார்...ஆமாங்க...

///இந்தப் பதிவெங்கேயும் கோபமான மனநிலையில் எழுதக்கூடாதென்று நினைத்து அப்படி ஒரு வார்த்தைக் கூட வந்துவிடக்கூடாதென்று எழுதியிருக்கிறேன். அப்படியும் வந்திருக்குமென்று நினைத்தால் மாப்பு. ///

இப்படி எழுதிய பத்தியில் "மாப்பு" என்ற பதத்தோடு நிறுத்திவிட்டார்...

"வெச்சிட்டான்யா ஆப்பு" என்றல்லவா முடித்திருக்கவேண்டும் ?

அதுவும் இல்லாமல் சமீபகாலமாக இந்த ஏரியாவில் திரிந்துகொண்டிருக்கும் ஆசிப் அண்ணாச்சியிடம் பெண் ஈயம் பித்தாளைக்கு எதிரான பரணி பாடும் கருத்தை சொல்லியிருக்கிறார்...

இதனை நமது அண்ணாச்சியே (அதை ஏஏன் வாயால எப்படி சொல்வேன், நீங்களே போயி பாருங்க அந்த கொடுமைய...) கேட்டிருக்கிறார் பின்னூட்டத்த...

http://imohandoss.blogspot.com/2007/07/blog-post_5847.html


அப்பாடா...எப்படியோ ஒரு ஜல்லி அடிச்சாச்சு...இது ஆறின இடுகையில் அழுகுமா இல்ல சூடான இடுகையில் ஜல்லுமா ( ஜல்லியடிக்கறது) என்பது லெப்டுல ஒதுங்க ஒதுங்கத்தான் தெரியும்...!!




#########################################
THIS EMAIL MESSAGE IS FOR THE SOLE USE OF THE INTENDED RECIPIENT(S) AND MAY CONTAIN CONFIDENTIAL AND PRIVILEGED INFORMATION. ANY UNAUTHORIZED REVIEW, USE, DISCLOSURE OR DISTRIBUTION IS PROHIBITED.BEFORE OPENING ANY ATTACHMENTS PLEASE CHECK FOR VIRUSES AND DEFECTS.IF YOU ARE NOT THE INTENDED RECIPIENT, PLEASE NOTIFY US IMMEDIATELY BY REPLY E-MAIL AND DELETE THE ORIGINAL MESSAGE.
#########################################

Monday, July 09, 2007

போலீசை தாக்கிய குலுக்கு கவிர்ச்சி நடிகை பாபிலோனா தம்பிக்கு வலை

கவர்ச்சி நடிகை பாபிலோனாவின் சித்தியும், முன்னாள் கவர்ச்சி நடிகையுமான மாயாவின் மகன் விக்கி, குடி போதையில் ரகளை செய்தபோது அவரைத் தடுக்க முயன்ற பெண் சப் இன்ஸ்பெக்டரை தாக்கி விட்டுத் தப்பினார். அவரைப் பிடிக்க போலீஸார் வலைவிரித்துள்ளனர்.

முன்னாள் குலுக்கல் நடிகை மாயா. இவர் வடபழனி சிவன் கோவில் தெருவில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பில் வசித்து வருகிறார். இவரது மகன் விக்கி.

இவர்கள் இருவரும் குடியிருப்பில் அடிக்கடி ரகளை செய்வதும், பக்கத்து வீடுகளில் இருப்பவர்களுடன் சண்டை போடுவதுமாக இருந்து வருகின்றனர். இதுதொடர்பாக சில மாதங்களுக்கு முன்பு பெரும் தகராறு ஏற்பட்டு மாயாவும், விக்கியும் கைது செய்யப்பட்டனர்.

இதுெதாடர்பாக சைதாப்பேட்டை 17வது குற்றவியல் நீதிமன்றத்தில் விசாரணை நடந்து வருகிறது.

இந்த நிலையில், விக்கி கே.கே.நகர் காமராஜர் சாலையில் உள்ள மதுக் கடை முன்பு குடிபோதையில், தனது நண்பர்களுடன் ரகளையில் ஈடுபட்டார். அப்பகுதி வழியாக போவோர் வருவோரிடம் சண்டையிலும் ஈடுபட்டார்.

அப்போது அந்த வழியாக ஜீப்பில் சப் இன்ஸ்பெக்டர் தெய்வநாயகி வந்தார். விக்கியும், அவரது நண்பர்களும் ரகளை செய்வதைப் பார்த்து அங்கு விரைந்தார்.

அப்போது விக்கியுடன், மகேஷ், ரகு ஆகியோரும் ரகளை செய்தது ெதரிய வந்தது. இதையடுத்து தெய்வநாயகியும், ஜீப் டிரைவரும் சேர்ந்து 3 பேரையும் பிடிக்க முயன்றனர். ஆனால் ரகு தப்பி விட்டார். விக்கியும், மகேஷும் மடக்கிப் பிடிக்கப்பட்டு ஜீப்பில் ஏற்றப்பட்டனர்.

தப்பி ஓடிய ரகுவைப் பிடிக்க ஜீப் டிரைவர் பின்னாலேயே ஓடினார். இதைப் பயன்படுத்திக் கொண்டு தெய்வநாயகியின் மார்பில் தாக்கி விட்டு விக்கியும், மகேஷும் தப்பி ஓடினர்.

இதையடுத்து உயரதிகாரிகளுக்கு தெய்வநாயகி தகவல் கொடுத்தார். உதவி ஆணையர் சுப்புலட்சுமி தலைமையில் போலீஸார் விரைந்து வந்தனர். தப்பி ஓடிய மகேஷைப் போலீஸார் மடக்கிப் பிடித்தனர். ஆனால் விக்கி சிக்கவில்லை.

இதையடுத்து மாயாவின் வீட்டுக்கு போலீஸார் சென்றனர். அங்கு மாயாவும் இல்லை, விக்கியும் இல்லை. பின்னர் விக்கி தங்கியிருக்கும் நடிகை பாபிலோனாவின் வீட்டுக்குப் போலீஸார் சென்றனர். ஆனால் தனது தம்பி இங்கு இல்லை என்றும் செல்வாக்கு தெரியாமல் கைது செய்யும் வேலையில் ஈடுபட வேண்டாம் என்றும் மிரட்டலாக கூறியுள்ளார்.

ஆனால் அதைப் பொருட்படுத்தாத போலீஸார் விக்கி வந்ததும் உடனடியாக சரணடையுமாறு அறிவுறுத்துமாறு கூறி விட்டுச் சென்றனர்.

இதையடுத்து தனது பாட்டியுடன் (மாயாவின் அம்மா) பாபிலோனா முதல்வர் கருணாநிதியின் வீட்டுக்குச் சென்றுள்ளார். முதல்வரைப் பார்க்க வேண்டும் என்று கூறியுள்ளார். ஆனால் வீட்டுக்குள் அவர்களை அனுமதிக்காத பாதுகாவலர்கள் அவர்களை அப்படியே திருப்பி அனுப்பி விட்டனர்.

விக்கியைக் கைது செய்ய போலீஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர். அவரைப் பிடிக்க தீவிர தேடுதல் வேட்டை நடந்து வருகிறது.

இதற்கிடையே, பக்கத்து வீட்டுக்காரர்களுடன் தகராறு செய்தது தொடர்பான வழக்கு நேற்று சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது மாயா ஆஜராகவில்லை.

இதையடுத்து விசாரணைக்கு தொடர்ந்து வராமல் இருக்கும் மாயாவைக் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு பிடிவாரண்ட் பிறப்பித்து நீதிபதி அருணாச்சலம் உத்தரவிட்டார்.

இதைத் தொடர்ந்து மாயா வீட்டுக்கு போலீஸார் சென்றனர். ஆனால் அங்கிருந்த உறவினர்கள் மாயா வெளிநாட்டுக்குப் போய் விட்டதாக கூறியுள்ளனர். இதையடுத்து அவர் திரும்பியவுடன் கைது செய்ய போலீஸார் திட்டமிட்டுள்ளனர்.

Thanks, ThatsTamil

#########################################
THIS EMAIL MESSAGE IS FOR THE SOLE USE OF THE INTENDED RECIPIENT(S) AND MAY CONTAIN CONFIDENTIAL AND PRIVILEGED INFORMATION. ANY UNAUTHORIZED REVIEW, USE, DISCLOSURE OR DISTRIBUTION IS PROHIBITED.BEFORE OPENING ANY ATTACHMENTS PLEASE CHECK FOR VIRUSES AND DEFECTS.IF YOU ARE NOT THE INTENDED RECIPIENT, PLEASE NOTIFY US IMMEDIATELY BY REPLY E-MAIL AND DELETE THE ORIGINAL MESSAGE.
#########################################

കുറച്ച് ദിവസമായിട്ടുള്ള എന്റെ മനസ്സിലെ ചിന്തയാണിത്.

"നമ്മുടെ പ്രൊഫൈലില് കഴിയുന്നത്ര കൂടുതല് വിവരങ്ങള് എന്തുകൊണ്ട് നല്കുന്നില്ല?"

കുറച്ച് ദിവസമായിട്ടുള്ള എന്റെ മനസ്സിലെ ചിന്തയാണിത്.

ഒരാളുടെ പോസ്റ്റുകള് വായിക്കുന്നതിന് മുമ്പ് ഒരു പ്രാവശ്യമെങ്കിലും ഞാനയാളുടെ പ്രൊഫൈല് നോക്കാറുണ്ട്. ഒരാളെ പരിചയപ്പെട്ടതിന് ശേഷമല്ലേ അയാളോടടുക്കേണ്ടത്. പ്രൊഫൈലല്ലേ അതിലേക്കുള്ള ഒരു വഴി.

നമ്മുടെ സീനിയേര്സില് പലരും അവരുടെ പൂര്ണ്ണ വിവരം നല്കിയിട്ടുള്ളതായി കാണുന്നു. ചിലര് അവരുടെയും കുടുമ്പാംഗങ്ങളുടേയും ഫോട്ടോ വരെ തന്നിരിക്കുന്നു. എന്നാല് നമ്മുടെ പുതിയ കൂട്ടുകാരില് ബഹുഭൂരിപക്ഷവും അനോണിയായിക്കഴിയാന് ആഗ്രഹിക്കുന്നവരാണ്. നിവൃത്തിയില്ലാത്തതുകൊണ്ട് ഒരു തൂലികാനാമമെങ്കിലും തരുന്നു. അതിനപ്പുറം അവരെപ്പറ്റി നമുക്ക് യാതൊന്നും അറിയില്ല. ഇതു മതിയോ ഒരു കൂട്ടായ്മക്ക്?

എന്റെ ചോദ്യം 'ബുലോഗ ക്ലബ്ബി' ലുള്ള മുതിര്ന്നവരേക്കാള് അതിലംഗമല്ലാത്ത ബഹുഭൂരിപക്ഷം പുതുമുഖങ്ങളോടാണ്. അതുകൊണ്ട് എന്റെയീ പോസ്റ്റ്, 'ക്ലബ്ബിന്റെ' സ്ഥലത്തല്ല എന്റെ സ്വന്തം സ്ഥലത്ത് തന്നെ പോസ്റ്റ് ചെയ്യുന്നു.

ഒരു ബ്ലോഗര് അവരെപ്പറ്റിയുള്ള കൂടുതല് വിവരങ്ങള് നല്കുവാനുള്ള പ്രയാസ്സം എന്തെല്ലാമെന്നറിയുവാന് അതിയായ തല്പര്യമുണ്ടെനിക്ക്. നാം ബൂലോഗത്തേക്ക് വരുന്നത് ആത്മാര്ത്ഥതയോടെയാണെന്ന് ബോധ്യപ്പെടുത്താനുള്ള ഒരു മാര്ഗ്ഗം കൂടിയല്ലേയീ പ്രൊഫൈലിലെ വിവരണം?.

അങ്ങനെ ചെയ്തുകഴിയുമ്പോള് നമ്മുടെ പോസ്റ്റിനോടും നാം ചെയ്യുന്ന കമന്റുകളോടും കൂടുതല് ഉത്തരവാദിത്വം പുലര്ത്താന് പ്രേരകമാവില്ലേ? അതല്ലേ വേണ്ടത്?

'
മറുമൊഴി' സംഘം അവരുടെ പുതിയ സംരംഭം തുടങ്ങിയപ്പോള്, ഏറ്റവും കുറഞ്ഞത്, ഇതിനുവേണ്ടിയൊരഭ്യര്ത്ഥനയെങ്കിലും (അനുഭവങ്ങളുടെ വെളിച്ചത്തില്) നടത്തുമെന്ന് ഞാന് പ്രതീക്ഷിച്ചു. പക്ഷേ അതുണ്ടായില്ല.

ദയവായി പ്രതികരിക്കൂ.

 

######################################### THIS EMAIL MESSAGE IS FOR THE SOLE USE OF THE INTENDED RECIPIENT(S) AND MAY CONTAIN CONFIDENTIAL AND PRIVILEGED INFORMATION. ANY UNAUTHORIZED REVIEW, USE, DISCLOSURE OR DISTRIBUTION IS PROHIBITED.BEFORE OPENING ANY ATTACHMENTS PLEASE CHECK FOR VIRUSES AND DEFECTS.IF YOU ARE NOT THE INTENDED RECIPIENT, PLEASE NOTIFY US IMMEDIATELY BY REPLY E-MAIL AND DELETE THE ORIGINAL MESSAGE. #########################################

Sunday, July 08, 2007

நயன்தாரா மற்றும் கெட்டவன்

சிம்பு நடித்து வரும் கெட்டவன் படத்தின் கதை என்னைப் பிரதிபலிக்கும் கதை என்று நயனதாரா புலம்புகிறாராம். படத்தைத் தடுத்து நிறுத்தவும் யோசித்து வருகிறாராம்.

 

Click to EnlargeClick to Enlarge

Click to EnlargClick to Enlarge

Click to EnlargClick to Enlarge

வல்லவன் படத்தின் ஆரம்பத்தில் சிம்புவுக்கும், நயனதாராவுக்கும் உருவான காதல், படம் முடிந்ததும் முறிந்து போய் விட்டது. சிம்புவின் சில சில்மிஷ செயல்களால் கடுப்பான நயனதாரா காதலும் வேண்டாம், கத்திரிக்காயும் வேண்டாம் என்று போய் விட்டார்.

அப்செட் ஆன சிம்பு சில காலம் அமெரிக்காவிலேயே டேரா போட்டு தேற்றிக் கொண்டு ஊர் திரும்பினார். வந்ததும், எங்கிருந்தாலும் வாழ்க என்று நயனதாராவை வாழ்த்தினார்.

இந்த நிலையில், கெட்டவன் என்ற படத்தில் நடிக்க ஆரம்பித்திருக்கிறார் சிம்பு. இந்தக் கதை, ஆண்களை ஏமாற்றிய பெண்களின் கதை என்று கூறியிருக்கிறார். என் கதையும் கூட என்றும் சொல்லியுள்ளார் சிம்பு.

இதனால் நயனதாரா கடுப்பாகியுள்ளாராம். தனுஷுடன் நடித்து வரும் யாரடி நீ மோகினி பட ஷூட்டிங் ஸ்பாட்டில் இதுதொடர்பாக புலம்பிக் கொண்டிருக்கிறாராம்.

இந்தப் படத்தில் என்னைப் பற்றித்தான் சித்தரிக்கவுள்ளார் சிம்பு. இதை விட மாட்டேன், நிச்சயம் படத்தைக்குத் தடை வாங்குவேன், கோர்ட்டுக்குப் போவேன் என்று கூறி வருகிறாராம் நயனதாரா.

படத்துக்கு எந்த வகையில் தடை விதிக்கலாம் என்பது குறித்து வக்கீல்கள் சிலருடனும் கலந்து பேசியுள்ளாராம் நயனதாரா.

கெட்டவன் என்ன ஆவான் என்பது தெரியவில்லை, ஆனால் என்னவோ நடக்கப் போகிறது என்பது மட்டும் நல்லாத் தெரியுது.

 

Thanks - ThatsTamil

######################################### THIS EMAIL MESSAGE IS FOR THE SOLE USE OF THE INTENDED RECIPIENT(S) AND MAY CONTAIN CONFIDENTIAL AND PRIVILEGED INFORMATION. ANY UNAUTHORIZED REVIEW, USE, DISCLOSURE OR DISTRIBUTION IS PROHIBITED.BEFORE OPENING ANY ATTACHMENTS PLEASE CHECK FOR VIRUSES AND DEFECTS.IF YOU ARE NOT THE INTENDED RECIPIENT, PLEASE NOTIFY US IMMEDIATELY BY REPLY E-MAIL AND DELETE THE ORIGINAL MESSAGE. #########################################

Friday, July 06, 2007

சிவகாசி ஜெயலட்சுமி நடிக்காதது ஏன் ?

பழனியப்பா கல்லூரி படத்தில் கிளாமர் வேடத்தில் நடிப்பதாக அறிவிக்கப்பட்ட சிவகாசி ஜெயலட்சுமி பின்னர் அப்படத்தில் நடிக்காமல் போனதற்கான காரணத்தை தயாரிப்பாளர் அன்பாலயா பிரபாகரன் விளக்கியுள்ளார்.






காக்கிகளை தனது வலையில் வீழ்த்தி மண் கவ்வ வைத்தவர் சிவகாசி ஜெயலட்சுமி. எந்த காக்கியை ஆயுதமாகக் கொண்டு ஆட்டம் காட்டினாரோ, அதே காக்கியே பின்னால் அவருக்கு வினையாகிப் போனது.

பல வழக்குகள் போடப்பட்ட சிவகாசி ஜெயலட்சுமி, ஒவ்வொரு வழக்காக விடுதலையாகி வருகிறார். இடையில் சிறையிலும் காலம் தள்ளினார். பெரும் போராட்டத்திற்குப் பின்னர் தற்போதுதான் சிவகாசி ஜெயலட்சுமிக்கு கொஞ்சம் கொஞ்சமாக நிம்மதி பிறந்து வருகிறது.

இந்த நிலையில் சமீபத்தில் மீண்டும் பரபரப்பாக பேசப்பட்டார் ஜெயலட்சுமி. ஆனால் இந்த முறை வேறு காரணத்திற்காக. அன்பாலயா பிரபாகரன் தயாரிப்பில் உருவாகும் பழனியப்பா கல்லூரி படத்தில் சிவகாசி ஜெயலட்சுமி நடிப்பதாகவும், கிளாமரான டீக்கடைக்காரப் பெண்ணாக அவர் நடிக்கவுள்ளதாகவும் செய்திகள் வெளியாகின.

ஆனால் கடைசி நேரத்தில் அந்த வேடத்தில் ஜெயலட்சுமி நடிக்கவில்லை. மாறாக, செக்ஸ் பிரளயம் ஷகீலா புக் பண்ணப்பட்டு அவர் நடித்தார். இந்த கேரக்டரில் நடிக்க விருப்பம் இல்லை என்று ஜெயலட்சுமி கூறியதால்தான் ஷகீலாவை புக் பண்ணியதாக பிரபாகரன் விளக்கியுள்ளார்.

ஜெயலட்சுமியின் விலகலுக்கு என்ன காரணம் என்று பிரபாகரனிடம் கேட்டபோது, ஜெயலட்சுமி நடிப்பது குறித்து பத்திரிக்கைகளில் வெளியான செய்திகளால்தான் அவர் நடிக்க மறுத்து விட்டார்.

ஜெயலட்சுமி கவர்ச்சியான ரோலில் நடிக்கப் போவதாக சில பத்திரிக்கைகளில் வெளியான செய்தி அவரை மிகவும் பாதித்து விட்டது. மேலும் இரட்டை அர்த்தத்துடன் கூடிய குத்துப் பாட்டுக்கு அவர் ஆடப் போவதாகவும் சிலர் செய்தி வெளியிட்டனர்.

இதையெல்லாம் பார்த்து ஜெயலட்சுமி அப்செட் ஆகி விட்டார். இந்த கேரக்டரில் தான் நடித்தால் பெயர் கெட்டு விடுமோ என்று பயந்தார். இருப்பினும் மயிலாடுதுறை அருகே திருக்கடையூரில் நடந்த முதல் நாள் ஷூட்டிங்குக்கு அவர் வந்தார்.

ஷூட்டிங்கை வேடிக்கை பார்த்தார். ஆனால் தன்னால் இந்த படத்தில் நடிக்க முடியாது என்று கூறி விட்டார். ஆனால் நான் அவரிடம் ரூ. 50 ஆயிரம் அட்வான்ஸ் தொகையைக் கொடுத்து இது நீங்கள் நினைப்பது போல ஆபாசமான கேரக்டர் அல்ல, நல்ல கேரக்டர்தான் என்று கூறி சமாதானப்படுத்தினேன். அப்போது அவர் சமாதானமானது போலத்தான் தெரிந்தது.

அவர் போகும்போது அவரது செலவுக்காக ரூ. 5,000 பணமும் கொடுத்து அனுப்பினேன். அந்த அளவுக்கு சிரமமான நிலையில் இருந்தார் ஜெயலட்சுமி. ஆனால் சில நாட்கள் கழித்து என்னிடம் திரும்பி வந்த ஜெயலட்சுமி, படத்தில் நடிக்க முடியாது என்று கூறி வாங்கிய அட்வான்ஸ் தொகையையும் திருப்பிக் கொடுத்து நாகரீகமாக விலகிக் கொண்டார் என்றார் பிரபாகரன்.

ஜெயலட்சுமி இப்போது யாரும் அணுக முடியாத தொலை தூர கிராமம் ஒன்றில் வசிப்பதாகவும், யாருடனும் அவர் பேசுவதில்லை என்றும் பிரபாகரன் கூறினார்.

இவ்வளவு பவ்யமாக இருக்கும் ஜெயலட்சுமியா, தென் மாவட்டக் காவல்துறையை பந்தாடி பயமுறுத்தினார், நம்பவே முடியலையே!

நன்றி: தட்ஸ் தமிழ்

#########################################
THIS EMAIL MESSAGE IS FOR THE SOLE USE OF THE INTENDED RECIPIENT(S) AND MAY CONTAIN CONFIDENTIAL AND PRIVILEGED INFORMATION. ANY UNAUTHORIZED REVIEW, USE, DISCLOSURE OR DISTRIBUTION IS PROHIBITED.BEFORE OPENING ANY ATTACHMENTS PLEASE CHECK FOR VIRUSES AND DEFECTS.IF YOU ARE NOT THE INTENDED RECIPIENT, PLEASE NOTIFY US IMMEDIATELY BY REPLY E-MAIL AND DELETE THE ORIGINAL MESSAGE.
#########################################

Thursday, July 05, 2007

இந்த ப்ரொக்ராமரிடம் சொல்லுங்க

http://www.subservientprogrammer.com/main.aspx

 

இவர் என்ன செய்ய வேண்டும் என்று டைப் செய்துவிட்டு காத்திருங்க....

 

அப்புறம் பாருங்க மாஜிக்...

 

 

 

######################################### THIS EMAIL MESSAGE IS FOR THE SOLE USE OF THE INTENDED RECIPIENT(S) AND MAY CONTAIN CONFIDENTIAL AND PRIVILEGED INFORMATION. ANY UNAUTHORIZED REVIEW, USE, DISCLOSURE OR DISTRIBUTION IS PROHIBITED.BEFORE OPENING ANY ATTACHMENTS PLEASE CHECK FOR VIRUSES AND DEFECTS.IF YOU ARE NOT THE INTENDED RECIPIENT, PLEASE NOTIFY US IMMEDIATELY BY REPLY E-MAIL AND DELETE THE ORIGINAL MESSAGE. #########################################